புதன், 23 நவம்பர், 2011

கடவுள் என்றொரு மாயை ... 10

WHAT'S WRONG WITH RELIGION?
WHY BE SO HOSTILE?


========================================

மக்கள் எல்லோரையும் கண்ணுக்குத் தெரியாத ஒரு கடவுள் - மேலே வானத்தில் இருந்துகொண்டு் - நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிமிடத்திலும், நாளிலும் என்னென்ன செய்கிறோம் என்பதைக் கவனித்துக் கொண்டிருப்பதாக ஒரு நினைப்பை மதம் ஏற்படுத்தி விட்டது.

புலப்படாத அந்த மனிதனும் நாம் செய்யக் கூடாத பத்து கற்பனைகளை ஒரு நிரலாகத் தொகுத்து வைத்துள்ளார். அப்படி வி்லக்கப்பட்ட அந்தப் பத்துக் கட்டளைகளில் ஏதாவது ஒன்றை நீங்கள் செய்தால் அவர் ஒரு 'தனியிடம்' ஒன்றை வைத்துள்ளார்; அக்கினி மிகுந்து சூடும் புகையும் நிறைந்த, தவறுகள் செய்யும் நம்மையெல்லாம் சித்திரவதை செய்யும் அந்த இடத்திற்கு அனுப்பி, காலமெல்லாம் நாம் அங்கே கஷ்டப்படவும், எரிந்து வேதனைப் படவும், துக்கத்திலும் துயரத்திலும் நாம் முடிவில்லாத காலம் வரை அழுது துயருறவும் அனுப்பி விடுவார். .... ஆனால், அவர் உன்னை மிகவும் நேசிக்கிறார்!:) (பக்:317)

.................................ஜார்ஜ் கார்லின்

===============================================



ஏன் இவ்வளவு வேகமாக மதங்களை நீங்கள் வெறுக்க வேண்டும்? இதுவே ஒருவகை அடிப்படை நாத்திகம்தானே என்று பலர் என்னிடம் கேட்பதுண்டு.(319)

*
எந்த வேதப் புத்தகத்தையும் படித்துவிட்டு எந்தக் கேள்வியுமில்லாமல் அப்படியே நம்புவதில்லை. மாறாக, எனக்குப் பிடித்த பரிணாமக் கொள்கையை நான் எந்த வேத நூலையும் வாசித்து விட்டு நம்பாமல், உண்மையான அறிவியல் சான்றுகளைப் படித்துவிட்டு அவைகளை நம்புகிறேன்.(319)

*
சான்றுகளைப் படித்துவிட்டு அதனால் பரிணாமக் கொள்கைகளை நம்புகிறேன். நாளையே புதிய சான்று ஒன்று வந்து பரிணாமத்தை எதிர்த்தால் அப்படியே பரிணாமத்தைத் தூக்கி எறிந்து விடுவோம். இதை அப்படியே ஒரு மத அடிப்படைவாதியால் சொல்ல முடியுமா?(320)

*
எனக்கு மத அடிப்படைத்தன்மை பிடிக்கவேயில்லை; ஏனெனில் அது அறிவியலை மிகவும் துச்சமாக்குகின்றது. நம் மனதை மாற்றவோ இன்னும் புதிதாக நிறைய தெரிந்து கொள்ளலாம் என்ற எண்ணமோ இன்றி அவர்கள் இருப்பதற்கு அந்த அடிப்படைவாதமே காரணம்.(321)

*
மத மறுப்புக்குத்தான் பழைய ஏற்பாட்டில் பெரிய தண்டனை சொல்லப்பட்டிருக்கிறது. இன்றும் கூட பாகிஸ்தானின் சட்டமான Section 295-C -ல் மத மறுப்புக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.(324)

*
ஆப்கானிஸ்தானத்தில் 2006-ல் அப்துல் ரஹ்மானுக்கு கிறித்துவத்திற்கு மாறியதற்காக மரண தண்டனை கொடுக்கப்பட்டது.
இன்றும் 'விடுதலையாக்கப்பட்ட' ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய மறுப்பிற்கு உள்ள தண்டனை மரணதண்டனைதான்.(326)

இப்படியெல்லாம் மத 'ஈமானை" காத்து ரட்சிக்கணுமா? நீங்கள் 'காக்கவேண்டிய' கடவுள் அவ்வளவு பாவப்பட்ட பலஹீனமானவரா?!

*

ஆப்கானிஸ்தானத்தில் ஒருபால் சேர்க்கைக்கு (homosexuality) கொடுக்கப்படும் தண்டனை உயிரோடு புதைக்கப்படுவதாகும்.
இங்கிலாந்திலும் ஒன்றும் லேசான தண்டனை இல்லை. Alan Turing என்ற கணினியின் முதல் முன்னோடிகளில் ஒருவருக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை (1967) அவரை தற்கொலைக்குத் தள்ளியது.(327)

*
நம்பிக்கையின் பாற்பட்ட 'குணவான்களுக்கு' அடுத்தவன் என்ன செய்கிறான்; அவன் மனதில் என்ன எண்ணங்கள் ஓடுகின்றன என்று பார்ப்பதில்தான் அத்துணை விருப்பம்.(327)

*
மனிதக் கரு, மத நம்பிக்கைகளின்படி ஒரு முழு உயிர். ஆகவே கருக்கலைப்பு பெரிய 'பாவம்'. (329)

*
(கருக்கலைப்பு செய்யும் மருத்துவர்களை மதத்தின் பெயரால் கொல்லப்பட்ட கதைகளை இப்பகுதியில் விவரிக்கிறார்.)

*

ஈரானிலும், செளதியிலும் உள்ள சட்டங்களின்படி எந்த ஒரு பெண்ணும் தனியாக வீட்டை விட்டுச் செல்லக் கூடாது - ஆனால் ஒரு ஆண் கைக்குழந்தையுடன் (!) அவ்வாறு செல்லலாம். இதை வைத்து Johann Hari என்பவர் தினசரியில் எழுதியது: இஸ்லாமிய ஜிகாதிஸ்டுகளை அடக்க அவர்களது பெண்கள் போராடுவதே சரியாக இருக்கும்.(341)

*
லண்டன் வெடிகுண்டு நிகழ்ச்சிக்குப் பிறகு, Muriel Gray தினசரியில் எழுதியது: இந்தத் துயரமான, பயங்கரமான, முட்டாள்தனமான வெடி குண்டுகளுக்குக் காரணம் மதம் என்பதை மறைத்துவிட்டு, ... அரசும் ஊடகங்களும் இவைகளுக்குக் காரணம் மதங்கள் அல்ல என்பதுபோல் நடந்து கொண்டன.

இதற்குக் காரணம் முழுமையான கேள்விகளற்ற, தொட்டிலிலிருந்து சொல்லிக் கொடுக்கப்படும் கண்மூடித்தனமான நம்பிக்கைகளே காரணம். (344)

*
இந்த பயங்கரவாதங்களுக்கு ஒரு சிறு உதாரணம். பாலஸ்தீன தற்கொலைப்படையினரில் ஒருவன் பிடிக்கப்பட்ட போது அவன் (Nasra Hassan)2001-ல் The New Yorker என்ற தினசரியில் கொடுத்த பேட்டி:

"உன் இந்த முயற்சிக்குக் காரணம் என்ன?"

"எங்கள் ஆத்மாவின் இழுப்பு மேல் நோக்கியே இருக்கும். .."

"உங்களின் முயற்சி தோற்றுவிட்டால் ..?"

அப்போது நாங்கள் எங்கள் நபியை சந்தித்து, அவரோடு ஒரு துணையாளர்களாகி விடுவோம். ... எங்கள் ஜிகாதின் உறுதிமொழியின் பெயர் bayt al-ridwan. சுவனம் நபிகளுக்காகவும், வேதங்களுக்காக உயிரைத்தரும் எம்போன்றோருக்காகவும் உரித்தானது. ...
இந்த பேட்டியில் ஒளிபரப்பிய ஒரு சிறு காணொளியில், இந்த நபரும் இன்னொரு நபரும் ஒன்றிணைந்து, குரானின் மேல் கைவைத்து சபதம் எடுப்பதும், இறுதியில் அந்த இன்னொரு திட்டம் தீட்டியவர் இவனிடம் கூறுகிறார்: 'நாளை நீ சுவனத்தில் இருப்பாய்'."

டாக்கின்ஸ் கேட்கிறார்: இந்த இளைஞன் அந்த திட்டம் தீட்டியவரிடம், பின் ஏன் நீயே இதைச் செய்து, விரைவாக சுவனத்திற்குச் செல்லக் கூடாது' என்று கேட்டிருக்க வேண்டும்.
(345)


*

இப்படிப் பேசும் மக்கள் தாங்கள் பேசுவதை முழுவதும் அறிந்தே புரிந்தே பேசுகிறார்கள். இதன் மூலம் நாம் பெறும் ஒரு முக்கிய பாடம்: மதத் தீவிரத்தையல்ல, நாம் மதங்களைத்தான் சாடவேண்டும்.

மத நம்பிக்கைகள் என்பதற்காகவே மதிப்பு கொடுக்கப்பட வேண்டுமானால், ஓசாமாவின், மற்ற தற்கொலைப்படைத் தீவிரவாதிகளின் நம்பிக்கைகளுக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும்.(345)

மத நம்பிக்கைகளுக்கு நாம் கொடுக்கும் மதிப்பை நிறுத்தியே ஆக வேண்டும்.

*
இஸ்லாம் போலவே கிறித்துவமும் கேள்வி கேட்கப்படாத நம்பிக்கைகளே ஞானம் என்று போதிக்கின்றன. (346)

பத்து ஆண்டுகளுக்கு முன் Ibn Warraq என்ற இஸ்லாமில் ஆழமான அறிவுடையவரால் எழுதப்பட்ட ( இப்போது நான் வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகம் ) Why I am not a Muslim என்ற நூலில் சொல்லப்பட்டது: இஸ்லாமியர் அமைதி விரும்பும்போது கொடுக்கப்படக்கூடிய செய்திகளை குரானிலிருந்து கொடுக்க முடியும்; போரிட வேண்டுமானால் அப்போதும் குரானிலிருந்து செய்திகளைத் தர முடியும் என்கிறார். (347)

*
குரானில் வரும் அமைதியான வசனங்கள் குரானின் முன் பகுதியில் வருகின்றன; அவைகள் எல்லாமே நபி மெக்காவில் இருக்கும்போது வந்தவை. சண்டையும் வன்மையும் மிகுந்த வசனங்கள் அவர் மெதினாவுக்குச் சென்றபின் வந்தவை.

*
வளரும் பிள்ளைகளிடம் மதங்களைக் கூட கேள்வி கேட்டு வளரவேண்டும்; அப்படியே மதம் சொல்பவைகளை நம்ப வேண்டாம் என்று சொல்லி வளர்த்தால், நிச்சயமாக என்றும் இதுபோன்ற தற்கொலைப் படையாளிகள் தோன்ற மாட்டார்கள்.

*
மதங்களுக்காகத் தன் உயிரைத் தருவதற்காக சுவனம் அவர்களுக்காகக் காத்திருக்கிறது - இப்படி பிள்ளைகளுக்குச் சொல்லித் தருவது மதத் தீவிரவாதிகளல்ல; வீட்டிலிருக்கும் சாதுவான, அமைதியான பெரும்பான்மை முஸ்லீமகள்தான்.

*
வளரும் சிறு வயதிலேயே, அந்த அறியாப் பருவத்திலேயே, வளைந்து கொடுக்கும் அந்த வயதிலேயே மத நம்பிக்கைகளை ஆழமாகப் பதிப்பது மிகவும் தவறு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக