புதன், 23 நவம்பர், 2011

WHY I AM NOT A MUSLIM ... 14

அரேபியரின் வீர சாகசங்களும்
இஸ்லாமியரல்லாத மக்களின் நிலையும்

குரானில் கிறித்துவர்களும் யூதர்களும்:
5 : 51 - நம்பிக்கையாளர்களே! யூதர்களையும், கிறித்துவர்களையும் நண்பராகக் கொள்ளாதீர்கள். (அட! ஒரு கடவுள் தன்னை நம்புகிறவர்களுக்குக் கொடுக்கிற அறிவுரை இப்படியும் கூட இருக்குமா? அடக் கடவுளே!! )

5 : 56 - 64 - உங்களுக்கு முன் வசனங்களைப் பெற்ற யூதர்களையும், கிறித்துவர்களையும், நம்பாதவர்களையும் உங்கள் நண்பராக்கிக் கொள்ளாதீர்கள். (216)

600 - 900 Banu Qurayza மக்களையும், வரலாறுகளில் மறைக்கப்படும் Nadir-களைக் கொன்ற விவரங்களும் எவ்வித இரக்கமோ நற்பண்போ வெளிப்படாத முகமதுவைக் காண்பிக்கின்றன.

முகமது Khaybar-ன் பாலைவனப் பசுஞ்சோலைகளில் யூதர்களை எதிர்த்து 628-ம் ஆண்டு நடத்திய போரில் வென்று அதன் தலைவனைக் கொடுமைப்படுத்தி மறைத்து வைக்கப்பட்ட செல்வங்களைக் கொள்ளையடித்த பின், அந்த யூதர்களோடு ஓர் உடன்படிக்கை செய்கிறார். தோல்வியடைந்த யூதர்கள் தங்கள் நிலங்களில் தாங்களே சாகுபடி செய்யலாம். ஆனால் விளைந்ததில் சரி பாதியை முகமதுவிடம் ஒப்படைத்து விட வேண்டும். ஆனாலும் இந்த ஒப்பந்தத்தை எப்போது வேண்டுமானாலும் முகமது முறித்துக் கொள்ளலாம். இந்த ஒப்பந்தத்தின் பெயர் ‘திம்மா’. இந்த ஒப்பந்தத்தை ஒத்துக் கொண்டோர் ‘திம்மிகள்’. எல்லா இஸ்லாமியரல்லாதவர் இந்த ஒப்பந்தத்தின் மூலம் இஸ்லாமியரின் உயர்வை ஒத்துக் கொள்பவர்களாகவும், இஸ்லாமியரின் பாதுகாப்பிற்குக் கீழ் வருபவர்களாகவும் கருத்தப்பட்டார்கள். ( தமிழ்ப்பட தண்டல் வசூல்காரர்கள் மாதிரி போலும் !! )

இரண்டாம் கலிபாவான உமர் இந்த திம்மி சட்டத்தை 640-ல் முறித்து, யூதர்களையும், கிறித்துவர்களையும் ஹிஜாஸ் (மெக்கா, மெதீனாவைச் சார்ந்த இடங்கள்) பகுதியிலிருந்து வெளியேற்றுகிறார். இதற்காக அவர் முகமதுவின் புகழ் வாயந்த வாசகமான ‘அரேபிய தீபகற்பகத்துக்குள் இரு மதங்கள் இணைந்திருக்க முடியாது’ என்பதை மேற்கோளிடுகிறார். ( இந்தக் கொள்கைகளைத்தான் இன்றும் இஸ்லாமிய நாடுகள் பின்பற்றுகிறார்கள் போலும். அடுத்த நாட்டில் அவர்களின் உரிமைகளை நிலை நாட்டும் இஸ்லாமியர் தங்கள் நாட்டில் அந்நிய நாட்டினருக்கு எந்த வித உரிமையையும் இதனால்தான் அளிப்பதில்லை.) இதனால்தான் இன்றும் சவுதி அரேபியாவில் மற்ற மதங்களுக்கு எந்த இடமும்இல்லை. ( நல்ல நியாயம்யா இது

JIHAD :

 இஸ்லாமின் முழு ஆளுமை அவர்களது ஜிகாட் -  புனிதப் போர் -  என்ற தத்துவத்தில்தான் நன்கு தெரியும். முழு உலகையும் வென்று அல்லாவின் சட்டத்திற்குள் கொண்டுவருவதே அவர்களின் நோக்கம். இந்த மார்க்கம் மட்டுமே ஆன்மா உய்விப்பதற்கான வழி. 

ஜிகாட் என்பது ஒரு தெய்வீக உத்தரவு. இஸ்லாமைப் பரப்புவதற்கென்றே ஆன ஓர் ஆணை.. இஸ்லாமியர்கள் கடுமையாக முயற்சிக்க வேண்டும். தெய்வத்தின் பெயரில் அது உழைப்பின் மூலமாகவோ, போரிடுவதாலோ, எதிரிகளைக் கொல்வதாலோ இருக்கலாம்.

9 : 5-6 - ... இறைவனுக்கு இணைவைப்போரை நீங்கள் எங்கு கண்டாலும் கொன்று விடுங்கள்; மேலும் அவர்களைச் சிறைப்பிடியுங்கள்;  அவர்களை முற்றுகையிடுங்கள்; ......

4 : 76  - ஷைத்தானின் தோழர்களுடன் போர் புரியுங்கள்.

8 : 12 -  ...நிராகரிப்பாளர்களின் உள்ளங்களில் பீதியை ஏற்படுத்தி விடுகின்றேன்.  
 எனவே,. நீங்கள் அவர்களுடைய பிடரிகளில் தாக்குங்கள். அவர்களின் ஒவ்வொரு விரல் மூட்டுகளிலும் அடியுங்கள்.

8 ; 39-42 -  குழப்பம் இல்லா தொழிந்து தீன் முழுவதும் அல்லாஹ்வுக்கே உரித்தானதாகும் வரை நீங்கள் இந்நிராகரிப்பாளர்களுடன் போர் புரியுங்கள். .. அவர்கள் புறக்கணித்தால், அல்லாஹ் உங்கள் பாதுகாவலனாக இருக்கின்றான் .... 

ஒரு இஸ்லாமியன் இதுபோன்று நம்பிக்கையற்றவர்களின் மீது தொடுக்கும் போரில் விலகி நின்றால் அவன் மிகப்பெரிய பாவத்தைச் செய்கிறான். அவன் நிச்சயமாக நரகத்தில் வறுத்தெடுக்கப்படுவான். (217)

8 : 15-16 -  ... நீங்கள் படையாகத் திரண்டு சென்று இறை நிராகரிப்பவர்களுடன் போரிட நேர்ந்தால், அவர்களுக்குப் புறமுதுகு காட்டி ஓடாதீர்கள். ... அந்நாளில் புறமுதுகு காட்டி ஓடினால், ... திண்ணமாக அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி விடுவர். 

9 : 39 -  நீங்கள் இறை வழியில் புறப்படவில்லையாயின், அல்லாஹ் உங்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை அளிப்பான்.

4 : 74 -  இவ்வுலக வாழ்வை விற்று மறுமையைப் பெற விரும்புவோர் அல்லாஹ்வின் வ்ழையில் போர் புரியட்டும். பிறகு யார் அல்லாஹ்வின் வழியில் போர் புரிந்து கொல்லப்பட்டாலும் சரி, அல்லது வெற்றி பெற்றாலும் சரி, அவருக்கு உறுதியாக மகத்தான கூலியை நாம் வழங்குவோம். 

மேற்கூறிய மேற்கோள்களிலிருந்து குரானில் இவைகளெல்லாம் உருவகமாகச் சொல்லப்பட்டதல்ல; ஆனால் உண்மையிலேயே போர்ர்களங்கள் பற்றித்தான் பேசுகிறது.

இப்படிப்பட்ட ரத்த வெறியடிக்கும் வசனங்கள் ஒரு சமயத்தின் தூய புத்தகத்தில் இருப்பதைப் பார்க்கும் போது அது மிக  அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

மனித குலமே இரு வகையாக உள்ளன. ஒன்று, இஸ்லாமிய சமூகத்தினரால் ஆனது. இவர்கள் எல்லோரும்  உம்மா; இவர்களுக்கு ‘இஸ்லாமிய உலகம்’ சொந்தமானது.(Dar al-Islam - Land of Islam).  மற்ற இனம் இஸ்லாமியரல்லாதவர்கள்; இவர்களுக்கான பெயர்: ஹர்பி (Harbi ) இவர்களின் இடம் போர்க்களத்தின் இடம். (Dar al-Harb - Land of Warfare) (218)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக