கிறித்துவமும் புத்தமும் அன்பைப் போதிக்கும், தனிமனித உணர்வுகளோடு தொடர்புள்ள மதங்கள். முகமதியமும், (ரஷ்ய) பொதுவுடைமைத் தத்துவமும் நடைமுறைப்படுத்தப்பட்ட, சமுதாய நோக்குள்ள, ஆன்மீகமற்ற, உலகை அடிமைப்படுத்தும் நோக்குள்ளவை. -- Bertrand Russell
Bousquet என்ற இஸ்லாமியச் சட்ட நிபுணர்,இஸ்லாமிய முழு ஆளுமைக்கு காரணங்களாக இரண்டைக் கூறுகிறார். அவை: 1. இஸ்லாமியச் சட்டம், 2. ஜிகாதின் மூலமாக உலகைத் தன்மயமாக்கலுக்கு முனையும் இஸ்லாமிய நோக்கம். முதலில் இஸ்லாமியச் சட்டத்தைப் பார்த்து விட்டு அதன்பின் ஜிகாதைப் பற்றிப் பார்க்கலாம். (163)
கிறித்துவத்தில் சீசரும், கடவுளும், அரசும் கடவுளும் தனித்தனியே பார்க்கப்படுகின்றன. (மத் 22:17) ஆனால் இந்த வேறுபாடு இஸ்லாமில் இல்லை; இரண்டும் தனித்தனியே பார்க்கப் படுவதில்லை. முகமது ஒரு சேனைத் தலைவர்; சண்டையுமிட்டார்; சமாதானமும் செய்வித்தார்; சட்டங்களை இயற்றினார்; தண்டனைகளை அளித்தார். அவர் காலத்திலிருந்தே இஸ்லாமியர் ஒரு குழுவாக, சமூகத்தையும் சமயத்தையும் ஒன்றாக இணைத்திருந்தவர்களாக இருந்தனர்.
இஸ்லாமியச் சட்டங்கள் ஷாரியா என்றழைக்கப்படுகின்றன. இவை நான்கு வகைகள்: 1. குரான்; 2. முகமதுவின் சுன்னா; 3. ijima - ஆய்வாளர்களின் தீர்ப்புகள்; 4. kiyas / qiyas - ஒப்புவமைகள் (164)
1. குரான் - கடவுளின் வார்த்தைகள். பல விஷய்ங்கள் குழப்பமான நிலையிலோ, வரலாற்றை மட்டும் தழுவியோ இருக்கும்.
2. சுன்னா : குரானை முழுமையாகப் புரிந்து கொள்ள இது ஏதுவாக இருக்கிறது. இதனை விளக்க வந்தவர்கள் - faqih - நான்கு பேர். அனைவருமே ஒத்துக் கொள்ளப் படுகிறார்கள்.
Malik ibn Abbas (795) - இவரது கோட்பாடுகளை ’முவாட்டா’ என்றழைக்கின்றனர்.
Abu Hanifa (767) - இந்திய, துருக்கிய இஸ்லாமியர் இவரைப் பின்பற்றுகின்றனர்.
Al-Shifi'i (820) - மிதவாதியாகக் கருதப்படுகிறார். இந்தோனேஷியா, எகிப்து, மலேசியா,. யேமன் - இங்கெல்லாம் இவரைப் பின்பற்றுகிறார்கள்.
Ahmad ibn Hanbal (85) - தென் அரேபியாவின் வஹாபிக்கள் இவரைப் பின்பற்றுகிறார்கள்.
IJMA : Schacht சொல்வது போல் A.D.900-க்குப் பின் இஸ்லாமியச் சட்ட திட்டங்கள் திட்டவட்டமாக்கப்பட்டன. இஸ்லாமியச் சட்டங்கள் அப்பாஸிட் காலத்தின் சமுதாய, பொருளாதார நிலைகளுக்கேற்ப அமைக்கப்பட்டன. ஆனால் பிற்காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கேற்ப அவை மாறாது தனித்து நிற்கின்றன.
KIYAS : மற்ற மூன்று கொள்கைகளோடு ஒப்பிடும்போது மிகக் குறைவான முக்கியத்துவம் வாய்ந்தது.
இஸ்லாமியச் சட்டங்கள் - அவைகள் இறைவனால் கொடுக்கப்பட்டவை என்று நம்பப்படுபவை; ஆதலால் அவை மாறிவரும், பரிணாமம் காணும் சமூக மாற்றங்களுக்கேற்ப மாறாது.
குரானும் சுன்னாவும் இஸ்லாமைக் கட்டுப் படுத்தும் சட்டங்கள். இதில் குரான் என்பது கடவுளின் வார்த்தை இல்லை என்பதை இதுவரை விளக்கியுள்ளோம்.
7 -9 வது நூற்றாண்டுகளில், யூதம், கிறித்துவம், சமாரித்துவம், ஜோராஸ்டிரியனிஸ்ம், முகமதுவிற்கு முந்திய அரேபியம் - இவை எல்லாவற்றிலிருந்தும் கடன் பெறப்பட்டவைகளே அவை. பல பொருந்தாதவைகள், முரண்பாடுகள், தவறுகள், இலக்கணப்பிழைகள் - இவையெல்லாம் நிறைந்தவைகள். அடுத்ததாக, குரானில் கொடுக்கப்படும் கட்டளைகள் இரக்கம் மிகுந்த ஒரு கடவுளிடமிருந்து வரக்கூடிய தரம் உள்ளதாக இல்லை.(169)
உலாமாக்கள் (குருமார்கள்) தங்கள் இரும்புப் பிடியிலேயே வைத்திருப்பதால்தான் இஸ்லாமிய சமூகங்களில் எவ்வித அறிவியல் வளர்ச்சிகளும் இல்லாமல் போயின. புதிய சிந்தனைகளுக்கு இடமில்லாமல் போய்விட்டது.
இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமியம் மட்டுமே இருக்கும்; அங்கு தனிமனித உரிமைகள் இருக்காது.
குரானில் சொல்லப்படும் இஸ்லாமியக் கோட்பாடுகள் மனிதர்களின் நன்முறைகளுக்கு உடன்பாடான ஒன்றல்ல.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக