செவ்வாய், 22 நவம்பர், 2011

குரான் வசனங்கள் முகமதுவின் உளறலே - 7 (கடவுளின் உருவம்)

  குலாம் என்னும் முஸ்லிமின் தளத்தில் நாத்திகர்களுக்கு பதில் கூறுவதாக நினைத்துக்கொண்டு கடவுளின் "பிறப்பும்.- இருப்பும்."  என்ற தலைப்பில் ஒரு பதிவிட்டிருக்கிறார். 


//கடவுளின் பிறப்பு..?

இறை நம்பிக்கையாளர்கள் வணங்கும் கடவுள் என்பவர் சர்வ வல்லமை பெற்றவராக -இணைத்துணை இல்லாதவராக - குறிப்பாய் யாராலும் பெற்றெக்கப்படாதவராக இருக்கவேண்டும் இதை இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால் எந்த ஒன்றின் மூலமும் உருவாக்காத அல்லது எந்த ஒரு மூலத்திலிருந்தும் உருவாகதாக ஒன்றாக இருக்கவேண்டும்.

     அதாவது உயிரினங்களின் சிந்தையில் உதிக்கும் எண்ணம் கடந்து கடவுள் என்பவர் தோன்றி இருக்கவேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அவரை மனித பகுத்தறிவு கடவுளாக அதை / அவரை ஏற்றுக்கொள்ளும். மேலும் இந்நிலை மட்டுமே படைப்பினங்களை படைக்கும் நிகரற்ற தனித்தன்மை வாய்ந்த ஒரு படைப்பாளர் என்பவராகவும் அதை /அவரை காட்டும்.   கடவுளை என்பதை /என்பவரை ஏற்றுக்கொள்ளும் நிலை இப்படியிருக்க படைப்பினங்களுக்கு உரிய செய்கைகளை உயரிய படைப்பாளனோடு எப்படி பொருத்த முடியும். ?


மேற்கண்ட கேள்விகளை உற்று நோக்கினால்... இக்கேள்வியே நியாயமற்றது என்பதை விட அர்த்தமற்றது என்பது தெளிவாய் புரியும்
        கடவுளை படைத்தது என்று ஒன்று இருந்தால் கடவுள் என்பவர் படைப்பாளன் அல்ல மாறாக படைக்கப்பட்டவர் என்ற நிலையை அடைவார். அந்நிலையில் எப்படி படைக்கப்பட்ட ஒன்று கடவுளாக இருக்க முடியும்.? அதுமட்டுமில்லாமல் கடவுளை படைக்கும் அதுவல்லவா "பெரிய"கடவுளாகி விடும். இந்நிலையிலும் மீண்டும் அதேக்கேள்வி இங்கேயும் தொடரத்தான் செய்யும். அந்த பெரிய கடவுளை படைத்தது யார் என்று..?     ஆரம்பமும் இறுதியுமாக இருக்கும் இயங்கும்,  யாராலும் உருவாக்க முடியாத கடவுள் என்பவரை உருவாக்கியது யார்..? -என்று முரண்பாட்டில் மூழ்கிய ஒரு கேள்வியை முன்னிருத்தினால் எப்படி சரியான பதிலை தர முடியும். ஆக இங்கு சரியான பதில் தரவில்லையென்பதை விட சரியான பதில் தரும் பெறும் வகையில் கேள்வி அமைக்கப்படவில்லையென்பதே சரி..!  //

 நாத்திகர்கள் கேட்கும் கேள்வியே தவறு என்று சொல்கிறார். இது தான் இஸ்லாமிய மூளை. (இவர்களுக்கு மட்டும் அல்லா தனியாக செய்வான் போல)   
படைப்பை பற்றிய அறிவு அல்லாவுக்கு எந்த அளவு இருக்கிறது என்று பார்த்தால்,  மனிதனுக்கு எந்த அளவு தெரியுமோ அந்த அளவு தான்.   
  6:101அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

இந்த குரான் வசனத்தில் அல்லா உளறுவது , கடவுளுக்கு மனைவி எவரும் இல்லாதிருக்க எப்படி பிள்ளை இருக்க முடியும் என்று புத்திசாலித்தனமாக கேள்வி கேட்கிறான். இந்த கேள்விக்கு முன் , வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தான் என்று வேறு கூறிக்கொள்கிறான். அப்படி இருக்கும் போது. அவனுக்கு பிள்ளை வேண்டுமானால் மனைவி இல்லாமலே படைத்துக்கொள்ள முடியுமே! எதற்கு மனைவி வேண்டும். அதாவது அல்லாவின்(முகமதுவின்) மூளைக்கு எட்டியது அவ்வளவு தான். கடவுளானாலும் மனைவி மூலம் தான் குழந்தை பெறமுடியும் என்று கூறுகிறான்.  இந்த கேள்வியினால், அவன் சொல்வதின் மூலமாக தெரிவது , அல்லா என்பவனால் எல்லாவற்றையும் செய்ய முடியாது.(மனைவியை படுக்கவைக்காமல் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது)

  அல்லாவின் கூற்றுப்படி பார்த்தால் , அல்லா யார் மூலம் பிறந்தான் என்ற கேள்வி யாருக்கும் வரும். அதை எப்படி தவறு என்று சொல்ல முடியும்? 

//
குலாம் சொல்வது...
கடவுளின் இருப்பு..?
  கடவுளின் இருப்பு -மனித சமூகங்களுக்கு தெரியும் வகையில் அமைய வேண்டும் என்பது நியாயமான சிந்தனையா...? பார்ப்போம்

ஏனெனில் நமக்கு தென்படும் ஒன்றின் இருப்பை கண்டிப்பாக வரையறை செய்ய முடியும். ஆக வரையறை செய்ய முடிந்த ஒன்றை கடவுளாக ஏற்றுக்கொண்டால் அதை சர்வ சக்தி பெற்றதாக எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். ஆக வரையறை செய்ய முடியாத ஒரு உயரிய சக்தி மட்டுமே கடவுளாக இருக்க முடியும் என்பது பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளும் வாதம்.//

ஆக நம்ம குலாம் சொல்வது ,வரையறை செய்ய முடியதவன் தான் கடவுள். அதாவது இஸ்லாமின் படி பார்த்தால் அல்லா. ஆனால் நம்ம பி.ஜே, அல்லாவுக்கு உருவம் இருக்கிறது என்று குரானிலிருந்தே ஆதாரம் காட்டி அதை நிருபித்தும் இருக்கிறார். அல்லாவுக்கு கை, கால்,கண் எல்லாம் இருக்கிறது , அல்லாவின் உருவம் மனிதர்களை போலத்தான் என்று கூறுகிறார்.

மேலும் 

39:75. இன்னும், மலக்குகள் தங்கள் இறைவனைப் புகழ்ந்து தஸ்பீஹு செய்த வண்ணம் அர்ஷை சூழந்து நிற்பதை நீர் காண்பீர்; அப்பொழுது, அவர்களுக்கிடையே சத்தியத்தை கொண்டு தீர்ப்பளிக்கப்படும். “அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்று (யாவராலும்) கூறப்படும்.


69:17இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள்; அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள்.

”அர்ஷை சூழந்து நிற்பதை நீர் காண்பீர்” அல்லாவை பார்க்க முடியும்.

இந்த இரண்டு குரான் வசங்களையும் எடுத்துக்கொண்டால் , அல்லா நார்காலியில் உட்கார்ந்து இருப்பான் என்று தானே உளறிக்கொள்கிறான். அப்படி என்றால் அவன் நார்காலியின் வரையறைக்கு உட்பட்டவன். அது மட்டுமல்லாது அவன் ஒரு இடத்தில் இருப்பவன் என்று ஆகிறது.  அதுவும் அல்லாவை எட்டு பேர் சேர்ந்து தூக்கிக்கொண்டு இருப்பார்கள் என்றால் , அல்லாவின் எடையும் வரையறைக்குள் வருகிறது.  அது மட்டுமல்ல அல்லா நார்காலியில் உட்கார்ந்து இருப்பதால் அவனுக்கு ,இருப்பதற்கு இடமும் அவசியம் என்று ஆகிறது . அப்படி பார்த்தால் இந்த உலகத்தைப்படைக்கும் முன் அவன் எங்கே இருந்தான் என்ற கேள்வியும் வருகின்றது.  

55:37. எனவே, (கியாமத் வரும் நேரம்) அப்பொழுது வானம் பிளந்து, ரோஜாவின் (நிறம் போலாகி) எண்ணெய் போலாகிவிடும்.

இந்த உலகம் அழியும் போது, வானம் இரண்டாக பிளக்கும் போது அல்லா நார்காலியுடன் கீழே விழுந்து விடமாட்டானா?  இல்லை வானம் என்பது வேறு , அல்லா இருக்கும் இடம் வேறா? (இந்த வானத்தைப்பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்)

   உருவத்தை வைத்து வணங்காதீர்கள் என்று கூறும் அல்லாவுக்கே உருவம் இருக்கிறது.   உருவம் வைத்து வணங்குபவர்கள் தன்னைத்தான் வணங்குகிறார்கள் என்று அறியக்கூடிய அறிவு கூட இல்லாத அல்லா எப்படி கடவுளாக இருக்க முடியும்?

இது எல்லாமே முகமதுவின் உளறலே.   ஆனால் இது எதுவும் மூளைசெத்துப்போன முஸ்லிம்களின் மண்டையில் ஏறாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக