புதன், 23 நவம்பர், 2011

கடவுள் என்றொரு மாயை ... 6

CHAPTER 4: WHY THERE ALMOST CERTAINLY IS NO GOD


நூலின் இந்தப் பகுதியில் டார்வினின் பரிணாமக் கொள்கையையும், அதன் மறுப்பாக நம்பிக்கையாளர்கள் சொல்லும் intelligent design - ID - (திறன் படைத்த படைப்பமைப்பு என்று மொழிபெயர்த்துக் கொள்வோமா?)என்பதனையும் ஒப்பிட்டு டாக்கின்ஸ் விவாதிக்கிறார். அறிவியலும்,பரிணாமக் கொள்கைகளும், இயற்பியலுமாக இப்பகுதி கொஞ்சம் சிக்கலான பகுதியாக உள்ளது. இதைத் தமிழ்ப்படுத்துவதிலும், விளக்கங்கள் சொல்வதிலும் நிறைய பிரச்சனைகள் என்பதால் வெகு முக்கியமானவைகளை மட்டுமே இங்கே தருவதாக உத்தேசம்.

ஒளிச்சேர்க்கையில் 72 நுதிப் பொருட்களின் வெவ்வேறு வித மாற்றங்கள் நடைபெறுகின்றன. இதெல்லாம் (பரிணாமம் சொல்லும் chance (தற்செயல்)களால் நடந்திருக்க முடியுமா? என்ற கேள்விக்கு டாக்கின்ஸ் சொல்லும் பதில்: Design is not the only alternative to chance; Natural Selection is a better alternative. It is the only workable solution that has ever been suggested. (pp146-147)

நம்பிக்கையாளர்கள் ஒவ்வொரு அறிவியல் விளக்கத்திலும் ஏதேனும் ஒரு இடைவெளி (gap in knowledge) கிடைத்தால், அங்கு தங்கள் கடவுளைச் செருகி விடுகிறார்கள். ஆனால், அறிவியல் வளர வளர இந்த இடைவெளிகள் சுருங்கிக்கொண்டே செல்கின்றன.

பென் (Penn), டெல்லர்(Teller) இரு பெரும் மாஜிக் நிபுணர்கள். ஒருவருக்கொருவர் எதிரெதிரே நின்று அடையாளமிடப்பட்ட நிஜ குண்டுகளால் ஒருவரையொருவரை சுட்டுக் கொள்வார்கள். ஆனால் அந்த நிஜ குண்டுகளை அவர்களால் தங்கள் பற்களால் கடித்து நிறுத்திக் காண்பிப்பார்கள். துப்பாக்கிகளில் நன்கு பரிச்சயமானவர்கள் அவர்களுக்கு அருகே இருந்து் உன்னிப்பாகக் கவனித்தாலும் இது எப்படி என்பது யாருக்கும் தெரியாது. அதனால்,உடனே இது ஒரு miracle என்று கூறிவிட முடியுமா? நிச்சயமாக இதற்கு ஒரு விளக்கம் இருக்கும்;ஆனால் நமக்கு அது தெரியவில்லை; அவ்வளவே. அதைவிட்டு விட்டு இதற்கு அசாதாரணமான காரணம் சொல்வது அறிவுடைமையன்று. (pp155)

பரிணாமத்தில் நன்கு வளர்ந்திருந்தும் மனிதர்களுக்கு் முதுகு வலி, ஹெர்னியா, கருப்பை சிரமங்கள், sinus infections போன்ற மருத்துவப் பிரச்சனைகளுக்கான காரணம் நமது recurrent laryngeal nerve - இந்த நரம்பு 'தேவையின்றி' நீண்டு வளைந்து இருப்பது. பரிணாமத்தின் தேவையற்ற இந்த விளைவுக்கான காரணம்: பல ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நான்கு காலில் நடந்த உயிரிகளிலிருந்து இரண்டு காலால் நடக்கும் மனிதர்களாக மாறியதால் வந்த விளைவு.(evolutionary flaws)(pp161)

நான் படித்த வேறொரு உதாரணம் கூட உண்டு. நமக்குப் புரையேறுவதுண்டு. நம் உணவுப்பாதைக்கும், மூச்சுப் பாதைக்கும் உள்ள ஒரு தேவையற்ற தொடர்பாலேயே (glottis)இது நடக்கிறது. பின் ஏன் அந்த தொடர்பு இருக்கிறதெனில், அது பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட ஒரு தவறு. தவளைக்கு இந்த தொடர்பு பிரதானமாக இருக்கும்; ஏனெனில் அதன் சுவாசத்திற்கு ஏற்ற தகவமைப்பு அது. ஆனால் பரிமாண வளர்ச்சியில் மனிதன் வரையில் இந்த தொடர்பு வந்துள்ளது; நமக்கு அது ஒரு தொல்லை தரும் அமைப்பாகவே இன்றும் இருந்து வருகிறது.

பரிணாமம் glottis-க்கு evolutionary flaw என்று விளக்கம் தருகிறது. நம்பிக்கையாளர்கள் இதை நம்ப மறுத்தால், அவர்களின் கடவுள் தன் படைப்பில் ஏனிந்த 'தவறை'ச் செய்தது என்பதற்குக் காரணம் கூற முடியுமா?


நூலின் இந்தப் பகுதியில் கூறப்பட்டவைகளின் சாராம்சம்:

1. உலகின் பல்வேறு தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாத விஷயங்களே அறிவியலுக்கும் மனிதன் அறிவாற்றலுக்கும் சவாலாக இருந்து வருகின்றன.

2. ஒரு கடிகாரத்தைச் செய்ய அறிவுள்ள ஒரு நிபுணர் தேவை, அதைப் போலவே ஒரு மனிதக் கண், பறவையின் சிறகு - இவைகளைச் செய்யவும் ஒரு 'நிபுணர்'(Designer) தேவைதானே?

3. அப்படி ஒரு Designer hypothesis-யை ஒப்புக்கொள்ள வேண்டுமாயின் பிறகு அந்த டிசைனர் எங்கிருந்து எப்படி வந்தார் என்பது போன்ற பதிலற்ற கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியதிருக்கும். ஆனால் அறிவியல், ஒரு தூக்கி (crane)செயல்படுவது போல், மெல்ல மெல்ல இவைகளை விளக்க முடியும்.

4. இந்த 'டிசைனர் கருத்து' விளக்க முடியாததை டார்வினின் பரிணாமக் கொள்கைகளால் நன்கு விளக்க முடியும்.

5. உயிரியலுக்கு டார்வினின் கொள்கை இருப்பதுபோல் இயற்பியலுக்கு இன்னும் ஒரு கொள்கை அறிவியலுக்குக் கிடைக்கவில்லை.

6. அப்படிப்பட்ட ஒரு தீர்மானமான crane இயற்பியலுக்கு இல்லாவிடினும், இப்போது இருக்கும் அதிகத் திறமற்ற cranes மற்ற 'டிசைனர் கருத்தை' விடவும் மேலானவையே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக