புதன், 23 நவம்பர், 2011

WHY I AM NOT A MUSLIM ...3

இஸ்லாமிய வரலாற்றுக் குறிப்புகள் பல மாற்றுச் சிந்தனைகளின் தொகுப்பு. முகமது புதிய கருத்துக்களாக ஏதும் கூறவில்லை. மனிதன் இறையருளைப் பெற அவனுக்கு ஏற்கெனவே இருந்த வழிமுறைகளி்ல் பெரிதாக மாற்றம் ஏற்படுத்திவிடவில்லை.

அரேபிய நபி கூறியவைகள் ஏற்கெனவே இருந்து வந்த கருத்துக்களில் உள்ள சிறப்பானவைகளின் தொகுப்பாகும். யூத, கிறித்துவ, இன்னும் பிற பாரம்பரியங்களோடு ஏற்படுத்திக் கொண்ட தொடர்பால் அவருக்குக் கிடைத்தவைகளின் தொகுப்பே அது.

*
அரேபிய சிலை ஆராதனை:

குரானின் பல பகுதிகள் ஏற்கெனவே இருந்த சமய வழிமுறைகளின் மேல் பூசப்பட்ட இஸ்லாமிய (வார்னிஷ்) பூச்சுதான். (the Islamic varnish only thinly covers a heathen substratum) சான்று: சுரா 113. (தமிழ் மொழிபெயர்ப்பு சரியாக புரியாததால் நூலிலுள்ள ஆங்கிலத்தையே தருகிறேன்.) 'I seek refuge in the Lord of the Daybreak, from the evil of what He has created; and from the evil of the night when it comes on; and from the evil of the witches who blow upon knots, and from the evil of the envious when he envies.'



*
பாகனீய அரேபிய மதத்தின் கூறுகளே மெக்காவிற்குச் செல்லும் திருயாத்திரை.
(சுரா: 2.153; 22.28-30; 5.1-4; 22-37). (35)

*
ஹஜ் யாத்திரை:

பத்தாவது நாள் -- விருந்து முடிந்த பிறகு யாத்திரைகைக்காரர்கள் தங்கள் தலைகளை மொட்டையடித்துக் கொள்வதோ, சில முடிகளை வெட்டிக் கொள்வதோ நடக்கிறது.
இந்த நிகழ்வு ஆபிரஹாம் சைத்தான்களிடமிருந்து விலகிச் சென்றதை நினைவு படுத்துவதற்காகச் செய்யப்படுகிறது.

ஓரிறை என்ற தத்துவத்திலுள்ள முகமது ஏன் இந்த பழைய மூடநம்பிக்கைகளை இஸ்லாமின் மய்யப் பொருளாக வைத்தார்? (37)

*
புனிதக் கருப்புக் கல்: (HUBAL)

இந்தக் கருப்புக் கல் வழிபாடு அரேபியாவில் பல இடங்களில் நடந்து வந்துள்ளது. (Clement of Alexandria -190-ம் ஆண்டு; Maximus Tyrius -200; Persians) (39)

*
காபா:

இஸ்லாமியக் கருத்துபடி, காபா முதலில் சுவனத்தில் உலகம் படைக்கப்படும் முன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு, அதன் பின் ஆதாமால் இங்கும் கட்டப்பட்டது. அதன் பின் வெள்ளத்தால் அழிக்கப்பட்டதை ஆப்ரஹாமால் மறுபடியும் கட்டப்பட்டது.
இந்த கதை - யூதக் கதையை - ஜெருசலேம் சொர்க்கத்திலும், உலகத்திலும் கட்டப்பட்டது என்பதற்கு ஒட்டியது. (41)

*
இஸ்லாம் பகானிய அரேபிய வழக்கங்கள் சிலவற்றை அப்படியே சுவிகரித்துக் கொண்டன: பலதார மணங்கள், அடிமைத்தனம், எளிதில் விவகார ரத்து, விருத்த சேதனம் போன்ற சமூகக் கடமைகள்.

முகமது மிகப்பழைய கெட்ட ஆவிகளைப்பற்றிய மூட நம்பிக்கைகளை வளர்த்து விட்டார். சான்றாக, முகமது கூறுகிறார்: 'இரவில் தூக்கத்திலிருந்து திடீரென விழித்தால், மும்முறை மூக்கைச் சீந்த வேண்டும்; ஏனெனில், சைத்தான் ஒவ்வொரு மனிதனின் மூக்குத் துவாரங்களில் இரவு நேரத்தில் தங்கியிருக்கும்.

தொழுகைக்கு முன் கை,கால் கழுவுவதும் தண்ணீரில் சைத்தான்கள் ஓடி விடும் என்ற கருத்து பழைய நம்பிக்கையின்பால் பட்டதே. (42)

*
ZOROASTRIANISM: (PARSISM)
*இஸ்லாம் நேரடியாக ஈரானிய மதத்தாலும், மறைமுகமாக யூத, கிறித்துவ மதங்களாலும் பாதிக்கப்பட்டுள்ளது என்பது நிச்சயம்.

*
ஆறு நாட்களில் ஆதியாகமத்தின் படி எல்லாம் படைக்கப்பட்டது என்பது அப்படியே ஜோராஸ்ட்ரியன் மதத்தில் உள்ளதே. இரு மதங்களிலுமே மனித குலம் ஒரே ஒரு தம்பதியிடமிருந்து வந்தது. ஜோராஸ்ட்ரியனில் அவர்க்ளின் பெயர்கள் மாஷ்யா - மாஷ்யானா. விவிலியத்தில் ஒரு குடும்பத்தைத் தவிர மற்ற மனிதர்கள் எல்லோருமே தண்டிக்கப்படுகிறார்கள். ஜோராஸ்ட்ரியனின் அவஸ்தாவில் வாரா மட்டும் காப்பாற்றப் படுகிறார். (43)

*புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர் Goldziher ஈரானிய மதம் இஸ்லாமை எப்படி பாதித்தன என்று எழுதியதையே நான் இங்கு அதிகமாகக் குறிப்பிடுகிறேன்.

* மனப்பாடமாக தங்கள் வேத நூலைப் படிப்பதிலும் இந்த இரு மதங்களிடையே ஒற்றுமை உண்டு.

* இஸ்லாமில் ஊழிக்காலத்தில் மனித பாவ புண்ணியங்களை எடை போடும் 'மிஸான்' / தராசு (சுரா 21:47) பெர்ஷியன் மதத்திலிருந்து எடுத்தது. (44)

* முகமதுவினால் ஒரு நாளைக்கு இரு முறை கடவுளைத் தொழ வேண்டும் என்ற கடமை கொடுக்கப்பட்டது. பின், யூதர்களின் மும்முறை வணக்கம் போல் இஸ்லாமிலும் தொழுகை மூன்று முறையாக்கப்பட்டது. ஜோராஸ்ட்ரிய மதத்தின் தாக்கத்தின்படி அதன்பின் இது ஐந்து முறையாக்கப்பட்டது.

* முகமதுவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய Ibn Hisham சல்மான் என்ற ஒரு பெர்ஷியன் எப்போதும் முகமதுவோடு இருந்து வந்தார். அவர் தன் மதக்கதைகளை முகமதுவுக்குச் சொல்லியிருக்கலாம். (45)

* இஸ்லாமிய சுவனம் இந்திய, ஈரானிய சமயக் கோட்பாடுகளுக்கு ஒட்டியே உள்ளது. ஜோராஸ்ட்ரியத்தில் மனிதன் இறந்த பிறகு ஆன்மா இறந்த உடலை மூன்று நாட்களுக்கு சுற்றி வருகிறது. அதன்பின் ஒரு அழகிய 15 வயது பெண்ணின் மூலம் சுவனத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இது இந்து மதத்தில் வரும் 'அப்ஸரஸ்கள்' போல், இந்திரனின் சபைக்கு ஆன்மா செல்வதுபோல் உள்ளது.

* இந்து சமய பழக்கம்போல் இஸ்லாமிலும் சுவனம் விவரிக்கப் படுகிறது. நல்ல ஆர்வமுள்ளவர்களுக்கு சுவனம் செல்லவும், ஹெளரிகள், அதோடுமேலும் இனி வரப்போகும் கன்னிப் பெண்கள் பற்றியெல்லாம் இந்து பழக்க வழக்கங்களிலிருந்து தொற்றிக்கொள்ளும். (47)

* இஸ்லாமிய பாரசீய இரு மதங்களிலும் பொதுவாக சில எண்களுக்கு சில 'மரியாதைகள்' உண்டு. பார்சிய மதத்தில் 33 மிக மோசமானது. அதே போல் இஸ்லாமில் 33 வான தூதர்கள் மனிதனின் புகழ் மொழிகளைச் சுவனத்திற்கு எடுத்துச் செல்கின்றன.

*JINNS, DEMONS, AND OTHER SHADOWY BEINGS:
அப்போதிருந்த மூட நம்பிக்கைகளோடு வளர்ந்த முகமதுவிற்கு பேய்களிடம் நம்பிக்கை இருந்தது. மற்ற சமையக் கடவுள்களை பேய்களோடு சேர்த்துப் பேசியுள்ளார். (சுரா 37.158)

யூதரிடமிருந்து கடன் வாங்கிய இஸ்லாம்:

Islam is nothing more or less than Judaism plus the apostleship of Mohammad.
............. S.M. Zwemer

முகமதுவிற்கு யூத வரலாறு, கதைகள், சட்டங்கள் எப்படித் தெரிந்திருக்கும்? குரானில் வரும் இரு வசனங்களிலிருந்து அவருக்கு யூத ஆசிரியர்கள் - ராபிக்கள் - இருந்திருக்கலாமென தெரிகிறது. சுரா 25:5f., யாரோ சொல்லிக்கொடுக்கும் பழையவைகளை நபி கேட்டு வருவதாக மதநம்பிக்கையற்றவர்களால் சொல்லப்படுகிறது. சுரா 16:105 - இதிலும் வேறு ஆசிரியர் இருந்திருக்கலாமென கூறுகிறது.

குரானின் முதலில் சொல்லப்பட்ட சுராக்களில் முகமது யூத சமயம், வழக்கங்கள் இவைகளின் தாக்கம் கண்டிருந்தார். அவர்களின் பல பழக்க வழக்கங்களை - (சான்றாக, தொழுகைக்கு ஜெருசலேமைத் தேர்ந்தெடுத்தது) தனதாக்கிக் கொண்டு, தானும் பழைய நபிகளின் வழியைத் தொடர்வதுபோல் காண்பித்தார். (50)

தனது அராபிய மொழியில் சொல்ல முடியாத சில சொற்களை முகமது அராமிக், சிரிய மொழிகளிலிருந்து கடனாகப் பெற்றுள்ளார். - words such as Sawt (scourge), Madina, Masjid (a place of worship), Sultan, Sullam ( a ladder), Nabi ( a prophet) (51)

சில முக்கிய இஸ்லாமியச் சமயக் கருத்துக்களை யூதத்திலிருந்து பெற்றுள்ளார்; அவற்றில் சில:

இறையாண்மை:யூதத்தின் ஒற்றை இறையாண்மை
எழுதப்பட்ட தீர்க்க தரிசனம்:
யூதர்கள் தங்கள் வேத நூல்களை அவர்களது குழந்தைகளைத் தெரிந்து கொள்ளும் அளவு தெரிந்து வைத்துள்ளார்கள் (2.141; 6:20) அதே போல் அராபியர்களுக்கும் ஒரு வேத நூல் வேண்டுமென்று முகம்து நினைத்துள்ளார்.

சுவனத்தில் எழுதப்பட்டு வைக்கப்பட்டுள்ளதின் நகலே குரான் என்பதுவும் (85:22) Pirke Aboth, v.6-ல் சொல்லப்பட்டுள்ளதின் மறுபதிப்பாகும்.

படைப்பு:
யாத்திராகமம் 20:11 என்பதில் சொல்லப்பட்டுள்ள படைப்பின் மேல்தான் முகமதுவின் ஆறு நாள் படைப்பும் சொல்லப்பட்டுள்ளது.(சுரா 1:37) ஆனால் மற்றோரிடத்தில் இரு நாட்களில் படைக்கப்பட்டதாகவும் சொல்லியுள்ளது. (41. 8-11)

ஏழு வானங்களும் ஏழு நரகங்களும்:
வானங்கள் ஏழு; நரகங்கள் எழு என்று குரானில் உள்ளது. இந்து மதத்திலும், ஜோராஸ்ட்ரியத்திலும் உண்டு.
படைப்புக்கு முன் கடவுளின் அரியணை சுவர்க்கத்தில் ஒரு நீரலைக்கு மேல் இருந்தது என்பதுவும் ஆதியாகமத்தில் உள்ளது.
சுவர்க்கத்திற்கும் நரகத்திற்கும் நடுவில் ஒரு சுவர் உள்ளது என்பதும் பொதுவானதே. (52)
தொழுகைகள் மிகுந்த ஒலியோடு இருக்கக் கூடாது. (சுரா 17:110) (அப்புறம் ஏன் அவ்வளவு சத்தமாக நாளும் பல முறை பாங்கொலி?)

இது போன்ற வேறு சில பொது நிகழ்வுகளின் நீளப் பட்டியல் ஒன்றும் கொடுக்கப் பட்டுள்ளது

2 கருத்துகள்:

  1. முகமது மிகப்பழைய கெட்ட ஆவிகளைப்பற்றிய மூட நம்பிக்கைகளை வளர்த்து விட்டார். சான்றாக, முகமது கூறுகிறார்: 'இரவில் தூக்கத்திலிருந்து திடீரென விழித்தால், மும்முறை மூக்கைச் சீந்த வேண்டும்; ஏனெனில், சைத்தான் ஒவ்வொரு மனிதனின் மூக்குத் துவாரங்களில் இரவு நேரத்தில் தங்கியிருக்கும்.

    மூடனே இது எங்கே உள்ளது என்று விளக்கு

    பதிலளிநீக்கு
  2. இந்தக் கருப்புக் கல் வழிபாடு அரேபியாவில் பல இடங்களில் நடந்து வந்துள்ளது

    மூடனே தொட்டு முத்தமிடுவது எப்படி வழிபாடு ஆகும் யாரு ஒரு விருந்தாளிக்கு பொறந்தவன் சொல்வதை கேட்டு இங்கு எழுதிகிராயே உனக்கு எங்கே போனது அறிவு , மன்னிக்கவும் அது தான் உனக்கு இல்லையே மறந்துவிட்டேன்

    பதிலளிநீக்கு