ஆடி மாதம் பிறந்துவிட்டது. கிராமங்களிலும் நகரங்களிலும் ஆங்காங்கே வீடுகளிலும் கோவில்களிலும் கூழ் ஊற்றுவதும், கரகம் தூக்குவதும், பாட்டுக்கச்சேரி(ஆபாசமான பாடல்களும் பாடப்படும்), நடன நிகழ்ச்சி (ஆபாசமான நடனங்களும் ஆடப்படும்) நடப்பதும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். பக்தி என்ற பெயரில் நடக்கும் கேளி கூத்துக்கு அளவேயில்லை.
ஆடிமாதம் மாரியம்மனுக்கு பண்டிகை நடத்துவது கிராமங்களில் தான் ஆரம்பமானது. கிராமத்து மக்கள் நகரத்து இடம் பெயர்ந்த போது மாரியம்மனும் மாரியம்மன் திருவிழாவும் இடம் பெயர்ந்து நகரத்திற்கு வந்துவிட்டது. கிராமங்களில் உழைக்கும் மக்கள் மாரி(மழை)க்கு நடத்தும் விழாவாகவும் மாரியம்மன் திருவிழா இருந்திருக்கிறது. ஆதி புராதன சமூகத்தில் தாய் வழி சமூகமே நிலவியது. அதனால் தான் புராதன மக்களின் வணக்க குறியீடாக இருந்தது அம்மன்கள். நம்மிடையே பெரும்பாலானவர்களுக்கு குல தெய்வமாக பெண் தெய்வமாகவே இருப்பதை கவனிக்க! குலதெய்வம் எனப்படும் பெண் ஒரு காலத்தில் அந்த குலத்திற்கு தலைமை வகித்தவாராயிருப்பார்.
விஷ்ணுவையும் சிவனையும் விட்டு அம்மனை வழிபடும் மக்களை பார்த்த பார்ப்பன கூட்டம் சும்மா இருக்குமா?
பழங்குடி சமூகத்தில், வேட்டையாடுவதை தொழிலாக கொண்டு வாழ்ந்த முருகனை விநாயகனுக்கு தம்பியாக, (சுப்)பிரமணியாக மாற்றியது பார்ப்பனீயக்கூட்டம். ஆனால் சுப்பிரமணி பழனியில் கோவனத்துடன் நிற்கிறாரே என்றதற்கு, கோவனத்துக்கு தனிக்கதை எழுத வேண்டுமே, அதற்கு ஞானப்பழம் கிடைக்காததால் கோவனத்துடன் சென்றுவிட்டார் என்று எழுதி திரைக்கதையை சரிசெய்தது பார்ப்பனக்கும்பல்.
வேட்டைத்தொழில் செய்த பழங்குடியின் அடையாளமாக, கட்டிய கோவனமும் வேலும் வைத்துள்ள மனித உருவமாக இருப்பதை பார்த்தால் தெரியும் (கற்பனையாக, யானைமுகம் மனித உடம்பு கொண்ட ஜந்து, மனித உருவத்தில் உள்ள முருகனுக்கு அண்ணனாம்).முருகனுக்கு காஸ்டியூம் போட்ட பார்ப்பனகும்பல் மாரியம்மனுக்கு மேக்கப் போட்டு திரைக்கதை தயாரித்தது. முருகனுக்கு பிட்டைப்போட்டது போல அம்மனுக்கும் பிட்டை போட்டது பார்ப்பன கூட்டம். அதுவும் இழிவாக!
அதாவது ஜமதக்கினி என்னும் முனிவரின் மனைவி ரேணுகாதேவி. ஒருமுறை ரேணுகா தேவி கங்கையில் நீராட செல்லும் போது அழகான கார்த்தவீரியனை பார்த்து மயங்கிவிட்டார். (மயங்கியபிறகு என்ன நடந்தது என்று என்னைக்கேட்க கூடாது). இதை தெரிந்த கணவர் தன் மகன் பரசுராமனை கூப்பிட்டு, உன் தாய் தவறிழைத்திருக்கிறாள் அதனால் அவளை கொன்றுவிடு என்று அனுப்பினான். மகனும் யார் தடுத்தும் சொல்லியும் கேளாமல் தாயை கொன்று தலையை கொண்டுவந்தான். மகன் செய்த அற்புதமான காரியத்திற்கு என்ன வரம் வேண்டும் என்றாலும் கேள் தருகிறேன் என்று தகப்பன் கேட்க, மகன் துக்கம் தாளாமல் தனக்கு தன் தாய் வேண்டும் என்று கேட்டான். முனிவர் அதற்கு இசைந்து உன் தாயின் உடம்பை கொண்டு வா. நான் பிழைப்பிக்க வைக்கிறேன் என்றார். உடம்பை தேடிச்சென்று பார்த்த போது பல முண்டங்கள் இருந்ததால் ஏதோ ஒரு உடலுடன் கொண்டுவந்தான் மகன். இதை பார்த்த முனிவர் உயிர்பிழைக்க வைத்து, பிறகு மனைவியை பார்த்து இனி நீ இங்கு இருக்க வேண்டாம். கிராமங்களுக்கு போய் வாசம் செய்து கிராம மக்களுக்கு நோய் வந்தால் பரிகாரம் செய்து கொண்டிரு என்று அனுப்பிவிட்டார். இப்படி சொல்கிறது சிவ புராணம். அதாவது பார்ப்பனர்கள் பார்வையில் நடத்தை கெட்ட பெண்ணே கிராமத்து உழைக்கும் மக்கள் வணங்கும் மாரியம்மன். உழைக்கும் மக்கள் அல்லது தாழ்த்தப்பட்ட மக்கள் வணங்குவது நடத்தைகெட்ட பெண் என்று முத்திரை குத்தியது பார்ப்பனக்கூட்டம். இது போல கலாச்சாரத்தில் ஒவ்வொன்றையும் சிதைத்து பார்ப்பன ஆதிகத்தை நிலைநாட்ட விரும்புகிறது உச்சிகுடும்பி கும்பல்.
மண்ணின் மொழியான தமிழுக்கு பார்ப்பனக்கூட்டம் இட்ட பெயர் நீச பாஷை. உழைக்கும் மக்களுக்கு இட்ட பெயர் சூத்திரர்கள், பஞ்சமர்கள், சண்டாளர்கள், தீண்டத்தகாதவர்கள்.
விலைகுறைவாக இருக்கும் மாட்டுக்கறி தீண்டத்தகாதவர்கள் உண்ணும் உணவு.
அவாள் படிக்கும் படிப்பை நாமும் படிக்கக்கூடாது. அப்படி சமச்சீர் கல்வி என்று பேசினால் சமச்சீர் கல்வி தரமற்றது.
இவ்வாறு மக்களின் கலாச்சாரத்தை சிதைத்து பார்ப்பனீய கலாச்சாரம் என்னும் சனாதனத்தை திணித்து உழைக்கும் மக்களை ஏய்த்து சுரண்டி கொழுக்கிறது பார்ப்பன கும்பல்.
கடவுள்களை, சடங்குகளை, தீயிலிட்டு பொசுக்க வேண்டும். நாம் அனைவரும் பார்ப்பனக்கலாச்சாரத்தை வேரறுக்கவேண்டும். உழைக்கும் மக்களை இழிவுபடுத்தும் பார்ப்பனக்கூட்டத்திடம் இருந்து உழைக்கும் மக்களின் கலாச்சாரத்தை மீட்டெடுக்க தொடர்ந்து போராடவேண்டும்!
- சிந்தியுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக