புதன், 23 நவம்பர், 2011

WHY I AM NOT A MUSLIM ... 1

 

357. WHY I AM NOT A MUSLIM ... 1

*

ஏனைய பதிவுகள்:

*







*

WHY I AM NOT A MUSLIM
நூலாசிரியர்: IBN WARRAQ
PROMETHEUS BOOKS
59. John Glenn Drive
Amherst,
New York

1995




*
R. JOSEPH HOFFMANN
WESTMINISTER COLLEGE, OXFORD
என்பவர் எழுதிய முன்னுரையிலிருந்து ....


*

இந்த நூல் ஒரு நீண்ட பயணம் பற்றியது; அந்தப் பயணம், இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்து அதன் நம்பிக்கைகளில் ஊறி, அதன்பின் ஒரு சிலரால் 'வெள்ளைக்காரத்தனம்' என்று சொல்லப்படும் மேற்கத்திய 'திறந்த மதம்' என்ற அமைப்பில் வாழ்ந்து, அந்த வாழ்க்கையால் பிறந்த ஐயங்களின் ஊடே பயணித்து, இறுதியில் மத மறுப்பு என்னும் புள்ளியைப் பெற்ற பயணம்.

*
இது போன்ற பயணங்கள் எல்லாமே மிகவும் தனிமைப் படுத்தப்பட்ட பயணங்களே!

*
இந்த 'மதப் பயணங்களில்' செல்பவர்கள் தாங்கள் சொல்வதையெல்லாம் கண்ணுக்குத் தெரியாத ஒரு குழு தன்னைச் செவி மடுப்பதாகவும், புரிந்து கொள்வதாகவும் நம்புகிறார்கள்.



*
DEDICATION
மதப் பாசிஸத்தையும் மீறி
நான் பெற்ற
என் தாய், மனைவி, சகோதரி, என் மகள்கள்
அவர்களுக்காக ...

*

ஆசிரியரின்
முன்னுரையிலிருந்து ...


*

இன்று தன்னை ஒரு இஸ்லாமிய நாடாகச் சொல்லிக்கொள்ளும் நாட்டில் நான் ஒரு இஸ்லாமியனாகப் பிறந்து வளர்ந்தேன்.


*
என் தாய்நாட்டின் மொழியைக் கற்றுக் கொள்வதற்கு முன்பே நான் அராபிய மொழியில் எதுவும் புரிந்து கொள்ளாமலேயே குரானை வாசிக்கக் கற்றுக் கொண்டேன். ஆயிரக்கணக்கான முஸ்லீம் குழந்தைகளுக்கு உரிய விஷயம்தான் இது.

*

சிந்திக்க ஆரம்பித்த போது மதங்கள் என் மீது ஏற்றி வைத்தவைகளை நான் ஒதுக்க ஆரம்பித்தேன். இப்போது நான் என்னைப் பற்றி நினப்பதெல்லாம், நான் ஒரு சமயத் தொடர்பில்லாத, மனித நேயம் மட்டும் கொண்டவன். எல்லா மதங்களுமே மனம் பிறழ்ந்தவர்களின் கனவுகள்; ஆய்வில் புறந்தள்ளப்பட வேண்டிய, எங்கும் எளிதாகப் பரவும் கனவுகள்தான் அவை.


*

நான் இதுவரை எந்த ஒரு நூலும் எழுதியதில்லை. ஆனால் ஷல்மான் ருஷ்டி விவகாரத்திற்குப் பிறகுதான் இந்த நூலை எழுத வேண்டும் என்ற முயற்சி எனது மனத்தில் தோன்றியது. 1930-களில் பெரும்போருக்குப் பிறகு நாஸிஸம்,கம்யூனிசம், சுதந்திரப் போராட்டங்கள், சனநாயக அமைப்புகள், காலனிய எதிர்ப்பு போன்ற பல மாற்றங்களில் தாங்கள் எவ்வாறு பங்கெடுத்திருப்போம் என்ற நிலைப்பாடு என் வயதினருக்கு வழக்கமாக எழுவதுண்டு. இதுபோன்ற பெரிய நிலைப்பாடுகளில் நாம் எந்தப் பக்கம் இருந்திருப்போம் என்ற கேள்வி எப்போதும் எழுவதுண்டு. சல்மான் ருஷ்டி விஷயமும், இஸ்லாம் பரவும் விஷயமும் எனக்கு அத்தகைய ஒரு நிலைப்பாடை நான் எடுக்க வேண்டும் என்ற சூழலைத் தந்தன. அந்தச் சூழலில் விளைந்ததுதான் இந்த நூல். அந்த விஷய்ங்களில் என் நிலைப்பாட்டை சொல்வதே இந்த நூல்தான்.

1930-களின் நிலைப்பாடை எடுக்க முடியாதவர்கள் இன்று இரு விஷயங்களில் - ஒன்று சல்மான் ருஷ்டி பிரச்சனை, இன்னொன்று போர் மேகங்கள் குவிந்து கிடைக்கும் அல்ஜீரியா, சூடான், ஈரான், செளதி அரேபியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அல்லலுறும் இஸ்லாமியர், இஸ்லாமியப் பெண்கள், இஸ்லாமிய அறிஞர்கள், எழுத்தாளர்கள், சாதாரண மக்கள் - இந்த இரு விஷயங்களில் தத்தம் முடிவை எடுக்க வேண்டிய நிலையை அடைந்துள்ளனர். இந்த நூல் எனது அத்தகைய முயற்சியின் ஒரு போர்க்கால நடவடிக்கையே. இப்படியெல்லாம் ஒரு நூலை எழுத வேண்டுமா என்ற நினைப்பு எனக்கு வரும்போதெல்லாம் கடவுளின் பெயராலும் இஸ்லாத்தின் பெயராலும் அல்ஜீரியாவிலும், ஈரானிலும், துருக்கியிலும், சூடானிலும் நடக்கும் கொலைவெறிகள் என்னை இந்த நூலை விரைந்து முடிக்கத் தூண்டின.

*

இஸ்லாமுக்கு தோழர்களாக உருவெடுத்த மேற்கத்திய பத்திரிகையாளர்கள், அறிஞர்கள், கம்யூனிசத்திலிருந்து மனம் மாறியோர் என்று பலரும் கொஞ்சமும் பொருந்தாத, மேட்டிமைத்தனமான, சினம் தூண்ட வைக்கும் விதமாக இஸ்லாமுக்குப் பரிந்து பேச ஆரம்பித்தார்கள். ஆனால் மிக தைரியமான சில இஸ்லாமியர்கள் தொடர்ந்து சல்மானை ஆதரித்து வந்தனர். எகிப்தின் Rose al - Yousef என்ற பத்திரிகை 1994 ஜனவரி மாதம் Satanic Verses-லிருந்து சில பகுதிகளை தங்கள் பக்கங்களில் எழுதினார்கள்.

இந்த நூலுமே இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளைத் தீவிரமாக ஆராய்ந்து, சில நியாயமான எண்ணங்களை எழுப்பி, முழு நம்பிக்கையோடு இருக்கும் இஸ்லாமியக் கொள்கைகள் மீது ஒரு துளி ஐயத்தை எழுப்புவதுமாகும். இந்த நோக்கிற்காக குற்றம் சாட்டப்பட உள்ள நிலையில், நான் ஒரு மேற்கோளை மட்டும் உங்கள் முன் வைக்கிறேன்.

John Stuart Mill: 'நாம் மூடி மறைக்க விரும்பும் ஒரு செய்தி தவறானது என்று முன்கூட்டியே நாம் முடிவு செய்ய முடியாது; அப்படியே அது உண்மையாக இருந்தாலும் அப்படி மூடி மறைப்பது தவறானதே'.








---------
ACKNOWLEDGMENTS அதிலிருந்து சில பகுதிகள்

*
நான் ஒன்றும் பெரிய அறிஞனோ, ஆராய்ச்சியாளனோ இல்லை. நான் எழுதுவதெல்லாமே என் சொந்த சரக்கு என்றும் சொல்லப்போவதில்லை. நான் கையாண்டிருப்பது எல்லாமே மெத்த படித்த அறிஞர்களின் கருத்துக்களே. அவைகளை வாசித்து, எல்லோருக்கும் புரியும்படிக்கு எளிதாக்கி இங்கே அளித்துள்ளேன். ஒன்று முழுவதுமாக அவர்களது எழுத்துக்களைத் தந்திருப்பேன்; இல்லை, அதை அவர்களது பெயர்களோடு என்னால் முடிந்தவாறு எளிதாக்கித் தந்திருப்பேன். நிச்சயமாக இந்த நூல் என் படைப்பல்ல.’முழுவதும் காப்பியடிக்கப்பட்ட ஒரு நூல்’ என்று யாரும் இந்நூலைப் பற்றிச் சொன்னால், அதை முழு மனதோடு ஒப்புக்கொள்வேன். அதில் எனக்கு எந்த வருத்தமுமில்லை.
*

Encyclopedia of Islam-ன் முதலிரு பதிப்புகளைப் பயன்படுத்தியுள்ளேன். அதிலும் முதல் பதிப்பே சிறிது ‘திறந்த புத்தகமாக’ இருப்பதாகக் கருதியதால் அதையே மிகுதியாகப் பயன்படுத்தியுள்ளேன். ஏனெனில், இரண்டாவது பதிப்பில் அரசியல், சமயக் குறுக்கீடுகளால் கருத்துக்களும், சொற்களும் தங்கள் முனைப்பை அதிகம் இழந்துவிட்டிருக்கின்றன. The Dictionary of Islam – இதிலும் முதலாம் பதிப்பே மிக்க பயனுள்ளதாயிருந்தது – அதே காரணங்களுக்காக!


முன்னுரையிலிருந்து
சில பகுதி
கள்

*
இந்த நூலை வாசிக்கும்போது சிலவற்றை நினைவில் கொள்ள வேண்டும். ஒரு கோட்பாட்டிற்கும், அதன் செயல் முறைக்கும் உள்ள வேற்றுமைகள்; இஸ்லாமியர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள், ஆனால் உண்மையில் அவர்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும்; அவர்கள் எதை நம்பி எப்படியிருக்க வேண்டுமோ அப்படியில்லாமல் அவர்கள் நம்பிக்கைகளும் அதைக் கடைப்பிடிப்பதில் உள்ள வேற்றுமைகளும் – இந்த வேறுபாடுகள் எல்லாவற்றையும் நினைவில் கொள்ள வேண்டும்.

*
நாம் இஸ்லாம் 1, இஸ்லாம் 2, இஸ்லாம் 3 என்ற மூன்று வித இஸ்லாமைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாம் 1 -- நபியால் சொல்லிக்கொடுக்கப்பட்ட வேதம்.
இஸ்லாம் 2 -- ஹடித், ஷாரியத், இஸ்லாமியச் சட்ட திட்டங்கள் இவைகளின்படி மதாச்சாரியார்களால் புரிந்துகொள்ளப்பட்ட, வளர்த்தெடுக்கப்பட்ட, விளக்கப்பட்ட இஸ்லாம்.
இஸ்லாம் 3 -- இஸ்லாமிய நாகரீகம்; அதாவது இன்று முஸ்லீமகளால் உண்மையில் கடைப்பிடிக்கப்படும் இஸ்லாம்.

*
இந்த நூலில் இஸ்லாம் 1 & 2 மூலம் சொல்லப்படுவதற்குத் தொடர்பில்லாமலேயே இஸ்லாம் 3 அல்லது இஸ்லாமிய நாகரீகம் உயர வளர்ந்து நிலைபெற்றது என்பது தெளிவாகும்.இஸ்லாமிய தத்துவார்த்தங்கள், இஸ்லாமிய அறிவியல், இஸ்லாமிய இலக்கியப் படைப்புகள், இஸ்லாமிய கலை நுட்பங்கள் - இவை எல்லாமே இஸ்லாம் 1 & 2-களின் அடிப்படை இல்லாமலேயே வளர்ந்து செழித்தன. இஸ்லாமிய இலக்கியப் பாடல்களை எடுத்துக் கொள்ளுங்களேன். நபி தன் முதல் கால கட்டத்தில் இத்தகைய பாடல்களுக்கு எதிரானவராக இருந்தார். சுரா 26:224-ல் 'மனம்போனபடி இருப்பவர்கள் மட்டுமே இத்தகைய பாடல்களை நோக்கிச் செல்பவர்களாக இருப்பார்கள்' என்கிறார். மிஷ்கத் என்ற பழக்க வழக்கங்கள் என்ற பகுதியில் நபி, 'வயிறு முட்ட இப்படிப்பட்ட பாடல்களோடு இருப்பதைவிட சீழ்பிடித்த வயிற்றோடு இருப்பது சிறந்தது' என்கிறார். இத்தகையக் கருத்துக்களோடு உள்ள இஸ்லாம் 1 & 2 - இவைகளை பின்பற்றுவது மட்டுமே இருந்திருந்தால் அபு நுவாஸ் போன்று ஒயினைப் பாராட்டும் இலக்கியங்களையோ, மற்றும் அதிகமாக உள்ள ஒயினைப் புகழும் அராபிய இலக்கியங்களைக் காண முடிந்திருக்காது.
*

இஸ்லாமிய கலைகளைப் பொறுத்தவரை இஸ்லாமிய அருட்பொருள் சொல்லகராதியில் (மி்ஷ்கத், 7, ch, 1, pt.1) ஓவியக்காரர்களும், மனித, மிருகங்களை வரைபவர்கள் எல்லோரும் சட்டத்திற்குப் புறம்பானவர்களாக நபி சொன்னதாக உள்ளது.
*

Ettinghausen எழுதிய Introduction to Arab Painting என்ற நூலில் இஸ்லாமிய ஹாடித்களில் ஓவியக்காரர்கள் மிகுந்த அளவு கண்டிக்கப்படுகிறார்கள். அவர்கள் நம்மையெல்லாம் உருவாக்கிய கடவுளோடு படைப்பில் போட்டியிடுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அந்நூலாசிரியர் மேலும், 'வேத நூல்களின்படி அத்தகைய ஓவியங்களுக்கு இடமே தரவில்லை'. நல்ல வேளையாக இத்தகைய பழைய இஸ்லாமியரின் வழக்கத்தை மீறி, புதிதாக மாறிய இஸ்லாமியர்கள் இந்தத் தடையை மீறியதால்தான் நமக்கு மிக அழகான பெர்ஷியன், மொகல் சின்னச் சித்திரங்கள் பலவும் கிடைத்தன.
*

கலை நுணுக்கங்கள், தத்துவங்கள், அறிவியல் முன்னேற்றங்கள் எல்லாமே அரேபியாவில் இல்லாது போயின. எப்படியோ இலக்கியப் பாடல்கள் மட்டும் சிறிதளவாவது வந்தன.
*

Byzantine and Sassaninian art - இவைகள்தவிர வேறு எந்த அரேபிய கலைகளும் வளராது போயின.
*

பெண்கள், காஃபிர்கள், நம்பிக்கையற்றவர்கள், மதத்தைக் கேள்விக்குட்படுத்துபவர்கள், ஆண்-பெண் அடிமைகள் நடத்தப்படும் முறைகள் பேச்சளவிலும் செயலளவிலும் மிகவும் கீழான நிலையில் இருந்தன. இதற்குக் காரணம் குரானும், இஸ்லாமிய தீர்ப்பாளர்களால் சொல்லப்பட்ட விளக்கங்களுமே காரணம்.
*

இஸ்லாமிய சட்ட திட்டங்கள் முழுமையாக மனிதனைக் கட்டுப் படுத்தும் சட்டங்கள்; மனிதன் பிறப்பிலிருந்து சாகும் வரை உள்ள ஒவ்வொரு விஷயத்தையும் கட்டுப் படுத்தும் சட்டங்கள்.
*

பல நேரங்களில் இஸ்லாமிய ஷாரியாவைவிடவும் இஸ்லாமியப் பழக்கங்கள் கடுமையானவை. விருத்த சேதனம் (ஆண்குறியின் முன்தோலை எடுத்தல்) குரானில் சொல்லப்படாத ஒன்று. ஆனால் தொடர்ந்து, கட்டாயமாக இது நடைபெற்று வருகிறது. இதைப் பெண்களுக்குமாக சில இஸ்லாமிய நாடுகளில் நடந்தேறுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக