பாகிஸ்தானில் விஸ்கி ஒன்றும் கிடைக்காத பொருளில்லை. விஸ்கி ஒரு வேளை உலோகத் தம்ளர்களிலோ, அல்லது தேநீர் குவளையிலிருந்து தேநீர் கப்புக்கோ ஊற்றப்படலாம். விலையும் இரு மடங்கு இருக்கும். ஆனாலும் அங்கே சாப்பிடுவது பாவம் என்பதால் சுவையும் இரட்டிப்பாகவே இருக்கிறது.”
.....குஷ்வந்த் சிங்.
குஷ்வந்த் சிங்கின் பாகிஸ்தான் பயணத்தின் போது முதல் நாள் தொலைக்காட்சியில் ஒரு அமைச்சர் மூன்று முல்லாக்களோடு விவாதித்ததைப் பார்த்தார். அடுத்த நாள் அதே அமைச்சர் குஷ்வந்தை ஒரு கூட்டத்தில் வரவேற்றுப் பேசினார்; அடுத்து பேசிய குஷ்வந்த் தான் நேற்று பார்த்த தொலைக்காட்சியைப் பற்றிக் கூறிவிட்டு, அந்த அமைச்சரிடம் அடுத்த முறை முல்லாக்களோடு விவாதம் செய்யும் போது இந்தக் கவிதையை வாசியுங்கள் என்றிருக்கிறார்.
முல்லா, உங்கள் தொழுகைக்கு சக்தி உண்டென்றால்
அந்த மசூதியை சிறிது அசையுங்கள் பார்ப்போம்.
முடியாவிட்டால், இரண்டு ’லார்ஜ்’ எடுத்துக் கொள்ளுங்கள்;
இப்போது மசூதியே ஆடுவதைப் பார்ப்பீர்கள்!
கூட்டத்தினரின் பலத்த சிரிப்புக்கிடையே அமைச்சர் குஷ்வந்த் சிங்கின் காதில் மெல்ல, 'இந்த முல்லாக்களை கொஞ்சம் விட்டால் போதும்; பெண்களுக்கு முழு பர்க்கா போட்டு ஹாக்கி விளையாட வைத்து விடுவார்கள்’, என்றாராம்.
முகமது முதலில் மதுவைப் பற்றி கடும் எதிர்ப்பு இல்லாதிருந்திருக்கிறார். ஆனால் அவரைத் தொடர்ந்தவர்கள் பலரிடமும் மதுவின் வேட்கை இருந்ததால் தன்னுடைய எதிர்ப்பை முதலில் சாதாரணமாகவும் (2 : 216; 4 : 46;) அதன் பிறகு உறுதியாகவும் (5 : 90) வெளிப்படுத்தினார்.
KHAMRIYYA - WINE POEMS :இஸ்லாமின் வரவிற்கு முன்பே அராபிய மொழிக் கவிஞர்கள் பல ‘நீராடும்’ கவிதைகள் பாடியுள்ளனர். இக்கவிதைகள் அரபு மொழியில் KHAMRIYYA என்றழைக்கப்படுகின்றன. இஸ்லாம் வேரூன்றிய பின்னும் இவ்வகைக் கவிதைகள் வருவதை அரசியலாளர்களால் - உம்மயாதுகளால் - தவிர்க்க முடியாது போயிற்று. அபு நுவாஸ் (Abu Nuwas - 762-814) என்ற கவிஞரின் கவிதைகள் குரானை எதிர்ப்பதுபோன்ற தொனியுடனேயே எழுதப்பட்டன.
அவரின் கவிதை ஒன்று:
எவ்வளவு பாவம் செய்ய முடியுமோ அவைகளைச் செய்து விடு.
பன்றி இஸ்லாமில் மிகவும் ’அருவருக்கதக்க’ விலங்கு என்று கருதப்படுகிறது. காரணம் ஏதும் இதற்காகக் கொடுக்கப்படவில்லை. இஸ்லாமியரிடம் கேட்டால் ’குரானில் சொல்லப்பட்டு விட்டது; அது போதும்’ என்ற பதிலே வரும். உடலுக்குத் தீங்கு தரும் ஒட்டுண்ணிகள் விலக்கப்பட்ட பன்றிகளில் மட்டுமல்ல, பயன்படுத்தப்படும் ஆடு, மாடு, கோழிகளிலும் உண்டு. இஸ்லாமிற்கு முன் பன்றிகள் அராபிய நாட்டில் இருந்ததில்லை. இருப்பினும் ஏன் முகமது அவைகளை விலக்கினார். யூதர்கள், சமாரியர்களின் வழக்கத்தைக் கடைப்பிடித்தல் ஒரு காரணமாக இருக்கலாம். (335)
சைனாவில் உள்ள இஸ்லாமியர் பன்றிக் கறி உண்ணுவதுண்டு. அவர்கள் pork என்று அதனைச் சொல்லாமல் mutton என்று சொல்வது வழக்கம்.
--------------------------------
ஓரினச் சேர்ககைக்கு இஸ்லாம் பெருந்தடை ஏதும் விதிப்பதில்லை. பாபர் (1483-1530) ஒரு பையன் மீது கொண்ட காதலைத் தன் வாழ்க்கைக் குறிப்பில் எழுதியுள்ளார். (340)
குரானிலும் 52:24, 56:17, 76:19 - சுவனத்தில் பையன்களால் நீங்கள் கவனிக்கப் படுவீர்கள் என்பதற்கான பொருள், அவர்கள் உங்களுக்கு ஏவல் செய்ய என்பதுவா, பாலின இன்பத்திற்காகவா என்பது ஒரு கேள்வியே
முகமது முதலில் மதுவைப் பற்றி கடும் எதிர்ப்பு இல்லாதிருந்திருக்கிறார். ஆனால் அவரைத் தொடர்ந்தவர்கள் பலரிடமும் மதுவின் வேட்கை இருந்ததால் தன்னுடைய எதிர்ப்பை முதலில் சாதாரணமாகவும் (2 : 216; 4 : 46;) அதன் பிறகு உறுதியாகவும் (5 : 90) வெளிப்படுத்தினார்.
KHAMRIYYA - WINE POEMS :இஸ்லாமின் வரவிற்கு முன்பே அராபிய மொழிக் கவிஞர்கள் பல ‘நீராடும்’ கவிதைகள் பாடியுள்ளனர். இக்கவிதைகள் அரபு மொழியில் KHAMRIYYA என்றழைக்கப்படுகின்றன. இஸ்லாம் வேரூன்றிய பின்னும் இவ்வகைக் கவிதைகள் வருவதை அரசியலாளர்களால் - உம்மயாதுகளால் - தவிர்க்க முடியாது போயிற்று. அபு நுவாஸ் (Abu Nuwas - 762-814) என்ற கவிஞரின் கவிதைகள் குரானை எதிர்ப்பதுபோன்ற தொனியுடனேயே எழுதப்பட்டன.
அவரின் கவிதை ஒன்று:
எவ்வளவு பாவம் செய்ய முடியுமோ அவைகளைச் செய்து விடு.
கடவுள் நிச்சயம் உன்னை மன்னித்து விடுவார்.
அந்தி நாள் வரும்போது மன்னிப்பு நிச்சயம் கிடைக்கும்
இல்லையெனில் நரகத்தின் பயத்தில் நீ செய்யாமல்
விட்டுப் போன ’பாவங்களுக்காக’ மிகவும் வருந்துவாய்.
------------------------பன்றி இஸ்லாமில் மிகவும் ’அருவருக்கதக்க’ விலங்கு என்று கருதப்படுகிறது. காரணம் ஏதும் இதற்காகக் கொடுக்கப்படவில்லை. இஸ்லாமியரிடம் கேட்டால் ’குரானில் சொல்லப்பட்டு விட்டது; அது போதும்’ என்ற பதிலே வரும். உடலுக்குத் தீங்கு தரும் ஒட்டுண்ணிகள் விலக்கப்பட்ட பன்றிகளில் மட்டுமல்ல, பயன்படுத்தப்படும் ஆடு, மாடு, கோழிகளிலும் உண்டு. இஸ்லாமிற்கு முன் பன்றிகள் அராபிய நாட்டில் இருந்ததில்லை. இருப்பினும் ஏன் முகமது அவைகளை விலக்கினார். யூதர்கள், சமாரியர்களின் வழக்கத்தைக் கடைப்பிடித்தல் ஒரு காரணமாக இருக்கலாம். (335)
சைனாவில் உள்ள இஸ்லாமியர் பன்றிக் கறி உண்ணுவதுண்டு. அவர்கள் pork என்று அதனைச் சொல்லாமல் mutton என்று சொல்வது வழக்கம்.
--------------------------------
ஓரினச் சேர்ககைக்கு இஸ்லாம் பெருந்தடை ஏதும் விதிப்பதில்லை. பாபர் (1483-1530) ஒரு பையன் மீது கொண்ட காதலைத் தன் வாழ்க்கைக் குறிப்பில் எழுதியுள்ளார். (340)
குரானிலும் 52:24, 56:17, 76:19 - சுவனத்தில் பையன்களால் நீங்கள் கவனிக்கப் படுவீர்கள் என்பதற்கான பொருள், அவர்கள் உங்களுக்கு ஏவல் செய்ய என்பதுவா, பாலின இன்பத்திற்காகவா என்பது ஒரு கேள்வியே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக