புதன், 23 நவம்பர், 2011

WHY I AM NOT A MUSLIM .. 6

WHY I AM NOT A MUSLIM .. 4 என்ற பதிவினில் குரானின் வரலாறு, அதிலுள்ள ஐயங்கள், கேள்விகள் பற்றி WHY I AM NOT A MUSLIM என்ற நூலில் இருந்த பகுதியினைக் கொடுத்திருந்தேன்,. அப்புத்தகத்தின் மற்றைய பகுதிகளைப் பார்ப்பதற்கு முன் தொடர்பு கருதி, குரானின் வரலாறு பற்றிய வேறு இரு நூல்களின் தொகுப்பை இங்கே பதிவேற்றப் போகிறேன்.

முந்திய பதிவு  god is not great என்ற  நூலிலிருந்து.

இப்போது இப்பதிவு: இஸ்லாமியத் தத்துவ இயல் - ராகுல் சாங்கிருத்யாயன் என்று நூலிலிருந்து.....


இஸ்லாமியத் தத்துவ இயல்
ராகுல் சாங்கிருத்யாயன்
நபிகளின் வாரிசுகள்:
 நபிகளின் தன்னலமற்ற லட்சியத் தோழர்களான ஆபூபக்கர் (கி.பி. 622-642),  உம்மர் ( 642-644), உஸ்மான் (644-656), அலி (656-661)-க்குப் பின்னர், ந;பிகளின் எண்ணம் கற்பனைக் கனாவாகவே முடிந்தது விட்டது.  முகமது மறைந்த 39 வருடங்களுக்குப் பிறகு, அமீர் ம்வாவியா (661-680) வின் கைக்கு ஆட்சி வந்தததிலிருந்து அவருடைய வாரிசுகள் அனைவரும் கி.பி. 1037 வ்ரையிலும் ஷாக்களைப் போலவே, கைசர்களைப் போலவே கொடுங்கோல் ஆட்சியாளர்களாக் இருந்தனர். (பக். 11)

நபிகளைப் பின்பற்றியவர்களில் முதல் சச்சரவு:
மூன்றாவது  கலீபாவான உஸ்மான் உமையா இனத் தலைவரான வாவியாவை டமாஸ்கஸ் கவர்னராக நியமித்தார்.
... வாவியா ரோமானிய ஆட்சி முறையை ஏற்றுக் கொண்டார். இதனை  நான்காம் கலீபா அலி கண்டனம் செய்தார். இதனால் இருவருக்குமிடையில் நிரந்தரப் பகைமை தோன்றிவிட்டது. அலியின் மறைவுக்குப் பின் நபிகளின் ஒரே மகளான பாத்திமாவும், அலியின் இரு புத்திரர்களான ஹஸனும், ஹுசேனும் உய்ரோடிருக்கும்வரை நிம்மதியுடன் இருக்க முடியுமா?

ம்வாவியா, ஹஸனை அவரது மனைவியின் மூலம் விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டார். ஹூசேனின் அபாயத்திலிருந்து தப்பிக்க, மகனான யஜீத் சதி செய்தான். சமாதானத்திற்கு அழைத்து, வழியில் கர்பலா என்னும் பாலைவனத்தில் ஹூசேனும் அவரது பரிவாரங்களூம் நிர்தாட்சண்யமாகக் கொலை செய்யப்பட்டனர். 

அலியும் ஹூசேனும், அவரது நண்பர்களும் நிலப்புரபுத்துவ அமைப்பைக் கடந்த முன்னேற்றத்திற்கு முயற்சி செய்யாமல் வரலாற்றுச் சக்கரங்களைப் பின்னுக்கிழுத்து மீண்டும் சிறு சிறு கூட்டங்களுக்குப் பின் இழுத்துச் செல்லப் பார்த்தனர். 

அம்முயற்சியில் அவர்கள் வெற்றி பெற்றிருந்தால், நாம் இந்தியா, ஈரான், மெஸப்படோமியா, துருக்கு, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இஸ்லாமிய கலை, இலக்கியம், தத்துவ இயல் வளர்ச்சியைக் கண்டிருக்க மாட்டோம்.  (பக்.13 - 16 )

இஸ்லாமில் கருத்து வேற்றுமை
இஸ்லாமிய உலகு அரேபியாவை விட்டு வெளி நாடுகளிலும் பரவத் துவங்கியதும், அந்நாடுகளின் கருத்துக்களுடன் மோதல் ஆரம்பமானதும் இஸ்லாமில் கருத்து வேற்றுமை தோன்றுவது தவிர்க்க முடியாததாகி விட்டது. 

நபிகள் காலத்திற்குப் பிறகு நபிகள் வாக்கியங்கள் அனைத்தும், நினைவுகளும் திரட்டுவதற்கான முயற்சி துவங்கியது. ஆனால் நபிகள் மறைந்த ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, அவற்றில் மனித அறிவு தலையிடவாரம்பித்தது. அப்பொழுது அறிவுக்கும், மத நூலுக்கும் போட்டா போட்டி பிறந்தது.

கருத்து வேற்றுமைகளின் ஆரம்பம்:
ஹலூல்:  இஸ்லாமிய வரலாற்றில் முதன் முதலாகக் கருத்து வேற்றுமை, ஏழாவது நூற்றாண்டில் இருந்த இப்ன ஸபாவால் ஏற்பட்டதென்று கூறுவர். 

இப்ன ஸபாவுக்குப் பின்னர் ஷியாவும் மற்ற பிரிவுகளும் தோன்றின. ஆனால் அக்காலத்தில் இப்பிரிவுகளின் கருத்து வேற்றுமைகளெல்லாம் தத்துவ இயலைப் பற்றியவை அல்ல; குரானைப் பற்றியும், நபிகளின் வாரிசுகளுக்குப் பக்தி செலுத்துவது அல்லது செலுத்தாததைப் பற்றியுமாகத்தான் இருந்தன.  
நபிகளின் வாரிசுகளாகும் உரிமை அவரது மகளான ஃபாத்திமாவுக்கும், அலியின் குழந்தைகளுக்கும் மட்டும் இருகிறதென்று ஷியாக்கள் கூறினர். எனினும் இவர்கள் வருங்காலத்தில் தத்துவக் கருத்து வேற்றுமைகளால் பயன் பெற்று 'மோத்ஜலா', 'ஸூபிக்கள்' என்னும் பிரிவினரிடமிருந்து எத்தனையோ விஷயங்களை ஏற்றுக் கொண்டனர். கடைசியில் அராபியருக்கும் ஈரானியருக்கும் நிகழ்ந்த மோதலில் ஷியாக்கள் நல்ல லாபமடைந்தனர். ஸஃபாவி வம்சத்தினரின் ஆட்சியில் - கி.பி. 1499 - 1536 - அவர்கள் ஷியாப் பிரிவை அரசாங்க மதமென்று பிரகடப்படுத்தினர். 


அபியூனஸ்: இவர் நபிகளின் தோழர்களில் ஒருவர். ஜீவன் செயல்படுவதில் சுதந்திரமுடையது. ஒருவேளை சுதந்திரமில்லாததாக  இருந்தால், அதற்குத் தண்டனை கிடைக்கக் கூடாது.

கடவுள் குணநலன்கள் அற்றவர்:  அல்லா குணங்களோ குறிப்பிட்ட விசேஷத் தன்மைகளோ இல்லாதவர். (ஆனால் அல்லா ரோஷக்காரன்; கோபித்துக் கொள்வான்; வெட்கமடைவான், தண்டிப்பான் என்றெல்லாம் பல வசனங்களை நம்பிக்கையாளர்கள் சொல்வதுண்டே!!?? எது சரி??) அவரும் குணங்களும், தன்மைகளும் உள்ளவரென்று எண்ணினால், அவருடன் மற்ற பொருள்களின் இருக்கையும் ஒப்புக் கொண்டாக வேண்டும். கடவுளை ஞானமும், குணங்களும் உடையவராகக் கருதினால்,கடவுள் அறிந்த பொருள்களும் எப்பொழுதுமே இருக்குமென்பதை ஓப்புக் கொள்ள வேண்டி வரும். அந்த நிலையில் இஸ்லாமின் கடவுளும், ஜீவனும் வேறல்ல என்னும் தத்துவம் அடிபட்டுப் போகும்.

உட்பொருள் வாதம்: குரானில் கூறப்பட்டவைகளுக்கெல்லாம் இரண்டு பொருள்கள் இருக்கின்றன. ஒன்று வெளிப்படையாகத் தெரிவது; மற்றொன்று உள்ளுக்குள் இருப்பது -- இந்தத் தத்துவத்தை ஈரானியர் தோற்றுவித்தனர். இச்சிந்தனையாளர்களை 'ஜிந்தீக்' என்கின்றனர். 

குரான் அனாதியானதல்ல: பாக்தாதை ஆண்ட 'மோத்ஜலி' மன்னர் குரான் தொன்று தொட்டு இருப்பது என்ற வாதத்தினை நாஸ்திகம் என்று எண்னினார். அப்படிச் சொல்பவர்களுக்கு அரசாங்கத் தண்டனையும் அளிக்கப்ப்பட்டது.(பக். 18 - 25)


இதன்பின் இந்நூலில் பலவேறு இஸ்லாமிய அறிஞர்களின் வேறுபட்ட, மாறுபட்ட இஸ்லாமிய தத்துவங்களும், பிரிவினைகளும் சொல்லப்படுகின்றன.


***********

முதல் பதிவில் Why i am not muslim என்ற நூல், அடுத்த பதிவில் "god is not great" என்ற நூல், கடைசியாக இப்பதிவில் சாங்கிருத்யாயனின் நூல் --- இம்மூன்று பதிவுகளிலும் குரானின் காலக் கட்டமைப்பு, அவைகள் தொகுக்கப்பட்ட விதம், அவைகளில் இயற்கையாக  நிகழக்கூடிய குழப்பங்கள், தொகுத்த பின் அவைகளை ஏற்றுக் கொள்வதில் வந்த வரலாற்றுக் குழப்பங்கள், மாறுபட்ட கருத்துக்கள், அரசியல் தலையீடுகள் என்று பலவற்றைக் குறிப்பிட்டுள்ளேன்.


இத்தனை குழப்பங்களையும், மனித குறைபாடுகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டால் 1400 வருடங்களாக மனிதக் கரம் படாத நூல் என்று குரானைக் கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? மத நம்பிக்கைகள், சிறுவயதிலிருந்தே சொல்லிக் கொடுக்கப்படும் பாடங்கள் என்பவற்றைத் தள்ளி வைத்து விட்டுப் பார்க்க முடிந்தால் உண்மை பட்டெனத் தெரியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக