புதன், 23 நவம்பர், 2011

WHY I AM NOT A MUSLIM ...9

அராபிய மொழியாக்கம்:அறிஞர் நோல்டெக் (Noldeke) குரானிலுள்ள அராபிய மொழி பற்றிச் சொல்லும் சில கருத்துக்கள்:

குரானின் மொழி நடையில் உள்ள குறைபாடுகளைப் பற்றி பலவும் சொல்லியுள்ளார் ---

* சொல்லப்படும் கருத்துக்க்களில் உள்ள தொடர்பின்மை
* சொற்றொடர்களின் அமைப்பு மொழி வளத்தை மிகக் குறைக்கின்றன.
* சொற்றொடர்கள் 'when', 'on the day when' போன்ற சொற்களோடு ஆரம்பிப்பதால், ஒவ்வொரு சொற்றொடருக்கும் ஏற்றாற்போல் சில ellipsis-களைச் சேர்க்க வேண்டியதுள்ளது.
* சொல்லாக்கம் மிகவும் குறைபாடுகளுள்ளது; ஒரே வார்த்தைகள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன. சான்றாக, xviii-யில் 'till that' என்ற சொல் 8 முறை திருப்பித் திருப்பி வந்துள்ளன.
* மொழி நடையின் சிறப்பு சுத்தமாக முகமதுவிடம் இல்லை. (Mahomet in short, is not in any sense a master of style.) (110)

Ali Dashti சொல்லும் சில இலக்கணப் பிழைகள்:
* 4 :162 - இதிலுள்ள performers;
* 49 : 9 - வினைச்சொல்லில் உள்ள ஒருமை / பன்மை தவறு
* 20 : 63- hadhane

இந்த சில சான்றுகள் மூலம் Ali Dashti குரானில் நூற்றுக்கு மேற்பட்ட மொழியியல் தவறுகள் இருப்பதாகக் காண்பித்துள்ளார். (112)


விடுபட்ட / சேர்க்கப்பட்ட வசனங்கள்:

முகமதுவின் மனைவியான ஆயிஷாவின் கூற்றுப்படி முறைகேடான பாலியல தவறுகளுக்குக் கல்லால் அடித்துக் கொல்லும் சட்டம் பற்றிய வசனம் குரானில் இருந்திருக்கிறது. ஆனால் அது நீக்கப்பட்டு விட்டது. இப்போதுள்ள குரானில் நூறு சவுக்கடிகள் என்பதே தண்டனையாகச் சொல்லப்பட்டிருந்தாலும் முதலிலிருந்த கலிபாக்களும் இந்தக் கல்லால் எறியும் தண்டனையைத் தான் அமுல் படுத்தியுள்ளார்கள். இன்றுமே சவுக்கடிகளே தண்டனை என்றாலும் கல்லால் அடித்துக் கொல்லும் முறையை இஸ்லாமியர் கைக்கொள்வது ஏனென்று தெரியவில்லை.

அரசியல் காரணங்களால் உத்மன் அலிக்குச் சாதகமான பல வசனங்களை நீக்கியதாக Shiities கூறுகின்றனர்.

நபியே சில வசனங்களை மறந்திருக்கலாம்; அவரோடு இருந்தவர்கள் அதேபோல் சிலவற்றை மறந்திருக்கலாம்; படியெடுத்தவர்கள் சிலவற்றை மறந்திருக்கலாம். ’சாத்தானின் வசனங்கள்’ முகமதுவினால் மறைக்கப்பட்ட / மாற்றப்பட்ட வசனங்கள் தானே.

மேற்கத்திய அறிஞர்கள் மட்டுமல்ல இஸ்லாமிய அறிஞர்களுமே சில வசனங்களின் உண்மைத்துவத்தைக் கேள்வி கேட்பதுண்டு. கலிபா அலியைப் பின்பற்றிய பல Kharijites குரானில் வரும் ஜோசப்பின் கதை மிகவும் விரசமாகவும், குரானில் இருக்கத் தகுதியில்லாத வசனமாகவும் இருப்பதாகக் கூறுவர்.

மற்றும் பலர் குரானில் சில வசனங்கள் பின்னாளில் சேர்க்கப்பட்டுள்ளவை என்றும் சொல்வதுண்டு. 42: 36-38 வசனங்கள் உத்மனைச் சிறப்பிக்கவும், அலியைத் தாழ்த்தவும் சேர்க்கப்பட்டதாக உள்ளது.

சில இடங்களில் இரு சின்ன வசனங்களை இணைக்கவோ, இசைக்காகவோ சேர்க்கப்பட்ட வசனங்களுமுண்டு.(112)

Bell & Watt - இவ்விருவரும் குரானின் நடையிலுள்ள வேற்றுமைகள் இந்த பிற்சேர்க்கை / பிற்கழிவுகளால் ஆனது என்கிறார்கள்.

Chrisitian al-Kindi 830-ம் ஆண்டிலேயே குரானில் இத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்கிறார். வரலாறு மாற்றப்பட்டிருப்பதுவும், முறையற்று இருப்பதையும் வைத்துப் பார்க்கையில் பலரின் இடைச்செருகல் இருப்பதாகக் கூறியுள்ளார்.

சான்றுகள்:
• 20:15. ஓசையில் முற்றிலும் மாறுபட்ட இந்த வசனம் இந்த சுராவில் உள்ள மற்ற வசனங்களிலிருந்து பெரிதும் மாறுபட்டு நிற்கின்றது.
• 78:1-5 - இந்த வசனம் நிச்சயமாக ஒரு இடைச்செருகல்; ஏனெனில் அவை மற்ற சுராவோடு ஒத்துப் போவதில்லை.
• இதே சுராவில் வசனங்கள் 33-ம் 34-ம் வசனங்கள் 32க்கும் 35க்கும் இடையில் செருகப்பட்ட வசனங்களாக இருக்க வேண்டும். 32-35-க்கும் உள்ள தொடர்பு இந்த இடைச்செருகலால் தடைபடுகிறது.
• 74வது சுராவில் உள்ள 31வது வசனம் ஒரு இடைச்செருகலாக இருக்க வேண்டும். ஏனெனில், அந்த வசனம் மற்றைய வசனங்களை விட மிக நீளமானதாகவும், நடையில் மாறுபட்டதாகவும் உள்ளது.
• சுரா 50-ல் உள்ள வசனங்கள் 24-32 ஒரு இடைச்செருகலே. அந்த வசனங்கள் தேவையில்லாத இடத்தில் அமைந்துள்ளன.

* 12 இடங்களில் சில விளக்கங்கள் வசனங்களோடு இணைந்து வந்துள்ளன. இவை பிற்காலச் சேர்க்கைகள். இவைகளில் சொல்லப்படும் விளக்கங்கள் வசனங்களில் உள்ள வார்த்தைகளின் பொருளிலிருந்து மாறுபட்டுள்ளன. (.. the 'definitions' do not correspond to the original meaning of the word or phrase.) இதற்குச் சான்றாக Bell & Watt கொடுக்கும் சான்று:
101:9-11-வில் hawiya என்ற சொல்லுக்கு ‘நரகம்’ என்ற பொருள் தரப்படுகிறது. ஆனால் அந்த சொல்லின் உண்மையான பொருள்: ‘குழந்தையற்ற நிலை’ என்பதாகும்.

இந்த மாற்றங்கள் எல்லாம் எவ்வளவு சிறிதாக இருந்தாலும் இஸ்லாமியக் கொள்கைகளுக்கு இவை மிகவும் முரணானவை. ஏனெனில் இந்த வசனங்கள் அல்லாவினால் மதினாவிலோ மக்காவிலோ முகமதுவிற்குக் கூறப்பட்டவை என்கிறார்கள் இஸ்லாமியர்கள்
. (113)

இதில் இன்னொரு interesting வரலாற்றுப் பின்னணி ஒன்றும் உண்டு.
Abd Allah b.Sa'd Abi Sarh - இவர் மதினாவில் குரானை எழுதப் பணிக்கப்பட்டவர். அவ்வாறு எழுதும்போது இவர் முகமதுவின் அனுமதியின் பேரில் வசனங்களின் கடைசிச் சொற்களை மாற்றி எழுதுவதுண்டு. உதாரணமாக, முகமது 'And God a mighty and wise' என்று சொன்னதை 'knowing and wise' என்று மாற்றி எழுதலாமா என்று கேட்டு, அதற்கு முகமது அனுமதி தரவே அவர் அவ்வாறு மாற்றி எழுதினார்.

அல்லாவின் வார்த்தைகளை தன்னைப் போன்ற ஒரு சாதாரண மனிதன் இவ்வாறு மாற்றி மாற்றி எழுதலாமா என்ற கேள்வியை எழுப்பி, அதனால் மதம் மாறி, மெக்காவிற்குச் சென்று Qorayshites- களிடம் சென்று விட்டார். இதனால் கோபம் கொண்ட முகமது மெக்காவைக் கைப்பற்றியதும் அவரைக் கொல்ல ஆணையிடுகிறார். ஆனால் உத்மனின் சிபாரிசால் அவர் அதிலிருந்து தப்பிவிட்டார்.

நீக்கப்பட்ட பகுதிகள்:
Self-Contradictions of the Bible என்ற நூலை William Henry Burr என்பவர் எழுதியுள்ளார். அந்த மாற்றங்களை விடவும் குரானில் இன்னும் பல மாற்றங்கள் உண்டு. ஆனால் இவைகளைச் சமாளிக்க அல்லாவே ஒரு வசனம் கொடுத்துள்ளார். 2: 106 - எந்த ஒரு வசனத்தையாவது நாம் அகற்றி விட்டால் அல்லது மறக்கச் செய்து விட்டால் (அல்லாவுக்கே மறந்துவிடுமா ...!!) (அதற்குப் பதிலாக) அதனினும் சிறந்த அல்லது அதே போன்ற வேறு வசனத்தை நாம் கொண்டு வருகிறோம். (இது அல்லா சொன்னது என்பதைவிட முகமது சொல்வது போல் எனக்குத் தெரிகிறது! ஒரு adjustment மாதிரி!)

al-Suyuti என்பவர் இதுபோன்ற எடுக்கப்பட்ட பகுதிகள் ஏறத்தாழ 500 வரை இருக்குமென்கிறார். இவர் சுரா 2-ல் 240வது வசனம் 234வது வசனத்தை supersede செய்து விடுகிறது. (234 - விதவைகள் நான்கு மாதம் 10 நாட்கள் தாமாகக் காத்திருக்க வேண்டும். 240 - விதவைகள் ஓராண்டுவரை வீட்டை விட்டு வெளியேற்றப்படாமல் இருக்க வேண்டும்.)  

குரானின் சுராக்கள் கால வாரியாக அட்டவணைப் படுத்தப்படவில்லை. நீள சுராக்கள் முதலில் வருவதாக அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.  சில மேற்கத்திய கால வரைமுறை முயற்சிக்கப்பட்டு முகமது மெக்காவில் மெதீனாவில் இருந்த போது வந்த வசனங்கள் என்று இரு கூறாகப் பிரிக்கப்பட்டுள்ளன. (114)

இஸ்லாமியர்கள் ஒரு சிக்கலில் இருந்து விடுபட நினைத்து இன்னொரு சிக்கலில் மாட்டிக் கொள்வதுண்டு. எல்லா ஆற்றலுமுள்ள, எங்குமிருக்கும், எல்லா வல்லமையும் பெற்றிருக்கும் கடவுள் அவரது கட்டளைகளையே மீண்டும் மீண்டும் மறு பரிசீலனை செய்யும்படியாகவா இருக்கும்? ஒரு கட்டளையைக் கொடுத்து விட்டு, பின் அதையே மறு பரிசீலனை செய்யவா வேண்டும்? அறிவு நிறைந்த அல்லா ஏன் முதல் தடவையே  அதைச் சரியாகச் சொல்லவில்லை? முதல் முறையே ஏன் முறையான வசனத்தைத் தரவில்லை?


Dashti சொல்கிறார்:   அந்தக் காலத்திலேயே குரானைக் கேலி செய்தவர்கள் உண்டு போலும். சிலர் இதுபோன்ற கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள். அதற்குப் பதிலாக 16: 103, 104-ல்- (103)  ”ஒரு மனிதரே இதனை அவருக்குக் கற்றுக் கொடுக்கின்றனர்” என்று இவர்கள் கூறுவதைத் திண்ணமாக நாம் அறிவோம். ஆனால் உண்மையில் இவர்கள் சுட்டுக் காட்டுகின்ற மனிதருடைய மொழி வேற்று மொழி; இதுவோ தெளிவான அரபி மொழியாகும். (இந்த மொழியில் உள்ள பிழைகளையும் பலர் சுட்டிக் காண்பித்ததாகி விட்டதே!)  (104) எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை ஏற்றுக்  கொளவதில்லையோ அவர்களுக்கு நேரிய வழியை அடையும்பேற்றினை அல்லாஹ் ஒரு போதும் வழங்குவதில்லை. மேலும் அத்தகையோருக்குத் துன்புறுத்தும் வேதனைதான் இருக்கிறது. (Sounds  more like an arm-twisting! பயங்கர பயமுறுத்தலாக அல்லவா உள்ளது.) இந்த இரு வசனங்களிலும் உள்ள  முரண்பாடுகள் தெளிவாக உள்ளன.  கடவுளிடம் இருந்து வரும் வார்த்தைகளென்றால் அங்கு எப்படி மானிட அறிவுக் குறைபாடுகள் இருக்கும்?

குரான் கடவுளின் வார்த்தைகள்; ஒரு போதும் மாறாதது; அதன் மூலம் சுவனத்தில் இருக்கின்றது - இது போன்ற நம்பிக்கைகளை விடுபட்ட இந்த வசனங்கள் கேலிக்குரியதாக மாற்றுகின்றன.

Muir இதுபோன்ற நீக்கப்பட்ட பகுதிகள் 200 வரை இருக்குமென்கிறார். குரானில் மூன்று விழுக்காடு  போலியானவை என்கிறார். இதற்கான இன்னொரு சான்று:  2:219 மூலம் மது அருந்தக் கூடாது என்பது தெளிவாகிறது. ஆனால் 16:67 -ல் கூறப்படும் ‘போதைப் பொருள்’ ஒரு கேள்வியை எழுப்புகிறது. ஆனால் யூசுப் அலி இது மெக்காவில் முகமது இருந்த போது வந்த வசனம்; குடி தவறு என்பது மெதீனாவிற்கு வந்த பின்னே முடிவானது என்கிறார்.

இந்தக் கால வேறுபாடுகள் பலமுறை குரானை நம்புவர்களுக்கு உதவியாக இருந்து விடுகின்றன. மெக்காவில் சாத்வீகத்தைப் போதிக்கும் குரான், மெதீனாவிற்கு வந்த பின் மிகவும் கொடூரமாகி, கொல்லுதல், தலையை வெட்டுதல், முடமாக்குதல் போன்றவைகளைப் போதிக்கின்றன.  ’ ... இணை வைப்போரை நீங்கள் எங்கு கண்டாலும் கொன்று விடுங்கள்’  என்ற 9:5 வசனம் அதற்கு முன் சொல்லப்பட்ட சாத்வீகமான, காழ்ப்பை எதிர்க்கும், பொறுமையை கற்பிக்கும் 124 வசனங்களை ‘காலியாக்கி’ விடுகின்றன.


எனது தனிக் குறிப்பு :

23 ஆண்டுகளாக வஹி மூலம் முகமதுவிற்கு அல்லா வசனங்களை இறக்குகின்றார். அவை முகமதுவின் காலத்திற்குப் பிறகு வசனங்களின் ‘நீளங்களை’ மட்டும் வைத்து பல்வேறு பகுதிகளாக, அத்தியாயங்களாகத் தொகுக்கப்பட்டன.

அல்லா ஏன் 23 ஆண்டுகள்  எடுத்துக் கொண்டார்? 
சரியான ஒரு படிப்பாளி மூலம் அவ்வப்போது அந்த 28 ஆண்டுகளில் நேரடியாக எழுதியிருக்கும்படி வசனங்களை இறக்கியிருக்கலாமே!
சுவனத்தில் உள்ள மூல நூலின் நகலைக் கூட தந்து விட வேண்டியதுதானே. -- இப்படியும் சில கேள்விகளைக் கேட்கலாம். ஆனால், இதெல்லாம் ‘கடவுளின் திருவிளையாடல்’; இதற்கெல்லாம் பதில் இல்லை என்பதால் ...



 இதில் உள்ள ஒரு ‘தத்துவம்’ புரிபடவில்லை. கால வாரியாகவோ, பொருள் தொடர்பானவைகளையோ தனித்தனியாகப் பிரித்து அட்டவணையிட்டிருந்தால் அதில் ஒரு பொருள் உண்டு. இது எந்த முறையுமில்லாமல் வெறும் நீளத்தை மட்டும் வைத்து சுராக்களைப் பிரித்தைப் பார்க்கும்போது, 1400 வருடமாக மாறாத நூல் என்பதோ, இதெல்லாம் அல்லா கொடுத்தபடி ‘அப்படியே’ இருக்கிறது என்பதும் பொருளற்றுப் போகிறது. அல்லா கொடுத்த அதே முறையில்தானே தொகுக்கப்பட வேண்டும்?

2ம் சுராவில் 23ம் வசனம் - ’சந்தேகத்தில் நீங்கள் இருப்பீர்களானால், இதைப் போன்ற ஒரே ஓர் அத்தியாயத்தையேனும் உருவாக்கிக் கொண்டு வாருங்கள்’ என்கிறார் அல்லா.(குரானின் மொழியின் உயர்வு பற்றிப் பேசும்போது  இஸ்லாமியர்கள் இந்த வசனத்தை அடிக்கடி மேற்கோள் காட்டுவதுண்டு; ஆனால் குரானின் மொழியிலும், இலக்கணத்திலும், மொழியியலிலும் உள்ள தவறுகளையும், நீக்கங்களையும், சேர்க்கைகளையும் இந்தப் பதிவில் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளேன். ) கடவுள் தான் படைத்த மனிதர்களிடம் இப்படி ஒரு ’சவால்’ கொடுப்பதைப் பார்க்க ஆச்சரியமாக மட்டுமல்ல, ஒரு கடவுளின் வார்த்தைகளில் இப்படி வருவது நம்பிக்கைகளை அழிக்கும் ஒரு செயலாகவே இருக்கிறது. படித்துப் பட்டம் பெற்ற ஒரு முதியவன் படிக்காத ஒரு சின்ன பிள்ளையைப்  போட்டிக்கு அழைக்கும் வேடிக்கை போலுள்ளது இது!


இந்த சுராவிலேயேயும் இன்னும் மிகப் பல இடங்களிலும் வரும் வசனங்களில் அல்லா தன்னையே மிகவும் பெருமைப்படுத்தும் இடங்கள் பலவும் உண்டு. 
சான்றாக, 1.2 - ‘அவன் மாபெருங் கருணையாளனாகவும், தனிப்பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான்’. இதுபோல் பல இடங்களில் தன் ‘மகத்துவத்தை’ பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கும் வசனங்கள் ஏராளம். நான் கோபக்காரன், வெட்கப்படுகிறேன் போன்ற வசனங்கள் கூட பரவாயில்லை. ஆனால் (நம்மூர் அரசியல்வாதிகளை விடவும் மோசமாக) தன் மீது கடவுளே தனக்குத் தானே ஏனிப்படி ‘புகழாரங்களைச் சாத்திக்கொள்ள’ வேண்டும்?

தன்னைப் பின்பற்ற வேண்டும் என்ற குறிக்கோளோடு மனிதனுக்கு தன் வேதத்தைத் தரும் இறைவன் எப்படி தன்னையே இப்படி பெருமைப்படுத்திக் கொள்வான்?

ஒவ்வொரு முறையும் கடவுள் தன்னையே இப்படிப் ‘புகழ்ந்து’ கொள்வது இயல்பான ஒன்றா? ஒரு வேளை நபி ஒருவர் கடவுளை இப்படிப் புகழ்கிறார் என்றால் அது சரியாகத் தோன்றலாம் ... ஆனால் அல்லாவே தன்னைப் பற்றி இப்படி வசனம் தருவது, அதுவும் அடிக்கடி தருவது .... வேடிக்கைதான்! இந்த வசனங்களை மட்டும் தொகுத்து அதை மட்டும் வாசித்தாலே வேதநூல் என்ற உயரெண்ணம் கூட  மாறிவிடும்.

இதுபோன்று சொல்வது எல்லாமே படர்க்கையில் உள்ளன. கொஞ்சமும் இது பொருத்தமாகத் தெரியவில்லை. முகமதுவே இப்படி அல்லாவைப் புகழ்கிறார் என்றால் அது சரி. ஆனால், இல்லை .. இல்லை .. அல்லாதான் தன்னைப் பற்றி இப்படியெல்லாம் புகழ்ந்து கொள்கிறார் என்றால் ....  அறிவுக்குப் பொருத்தமாக இல்லை.

//2.244 - (முஸ்லீம்களே!) அல்லாஹ்வின் வழியில் போர் புரியுங்கள்.// இதை வாசித்ததும் கொஞ்சம் அச்சமாக இருந்தது. அல்லாவே அழைக்கிறார் .... போருக்கு!! 
இந்த சுராவில் படைப்பு, இறுதி நாள், மோசேவிற்குக் கொடுத்த அருட்கொடைகள்,   திருமணம், தலாக், விதவை, விதவைகள் வாழ்க்கை என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கும் அல்லா 244-வது வசனத்தில் திடீரென்று போருக்கு அழைக்கிறார். ஏனிந்த கொடும் வன்முறை?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக