புதன், 23 நவம்பர், 2011

WHY I AM NOT A MUSLIM? ... 10

குரானின் கோட்பாடுகள்:
பல கடவுள் தத்துவத்திலிருந்து ஏக இறைத் தத்துவம் பரிணமித்தது. அது போலவே, ஏக இறைத்தத்துவத்திலிருந்து அதிலும் மேம்பட்ட கடவுள் மறுப்பு பரிணமிக்குமா எனபதை ஆசிரியர் விவாதிக்கிறார். 
polytheism --> monotheism --> agnosticism --atheism ..?

ஏக இறைத் தத்துவத்திலும் மூட நம்பிக்கைகளுக்குக் குறைவில்லை. 
ஏக இறைத் தத்துவம் தீவிரமாக மற்ற மதங்களை எதிர்த்து நிற்கும்.
Gore Vidal:  பழங்காலத்தில் எழுதப்பட்ட பழைய ஏற்பாட்டிலிருந்து மனித நலனுக்கு எதிரான மூன்று மதங்கள் - யூதம், கிறித்துவம், இஸ்லாம் - பிறந்தன. வானத்திலிருந்து இவர்களின் கடவுள்கள் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்; கடவுள் எல்லா வல்லமையும் உடைய நம் தந்தை; இந்த வானக் கடவுள் - sky-god - மிகவும் பொறாமை பிடித்தவர். அவருக்கு முழு ஒப்படைப்பு, கீழ்ப்படிதல் அத்தியாவசிய தேவை. (116)

Jann, Jinn, Shaitans, Ifrits and Marids - இந்த 5 வகை ஆன்மீக உயிர்களைப் பற்றி குரான் பேசுகிறது. (வேடிக்கையான உறவு முறைகள் ... கற்பனைகள் ...  (117)

குரானில் கடவுளைப் பற்றிய எந்த தத்துவமும் சொல்லப்படவில்லை. கடவுள் என்பதை வெறும் நம்பிக்கையாக மட்டும் பார்க்கிறது. (118)

Dictionary of Islam: மத.நல்லிணக்கம் என்பதேஇல்லை. சிலைகளை  ஆராதிப்பவர்களுக்கு மரணம் அல்லது மத மாற்றம் என்ற இரண்டில் ஒன்றே விதி.

Schopenhauer கிறித்துவமும் இஸ்லாமும் மனித குலத்திற்குக் கொடுத்த கொடூரங்களைச் சிந்திக்கச் சொல்கிறார். முக்கியமாக, இந்தியாவில் இந்த இரு மதங்களும் - முதலில் முகமதியர்கள், இரண்டாவதாக கிறித்துவர்கள் - மனித குலத்தின் முதல் புனிதமான ( !! ) மதத்தினருக்குக் கொடுத்த அக்கிரமங்களைப் பற்றி கூறுகிறார்.இவர்களால் அழிக்கப்பட்டகோவில்களும் கடவுளர்  சிலைகளும் இன்றும் கூட அவர்களது ஏக இறைத்தத்துவத்தின் அடையாளங்களாக நிற்கின்றன. முகமது கஜினி, சகோதரர்களைக் கொன்ற ஒளரங்கஜேப் -- இவர்கள் அடையாளங்களாக நிற்கின்றனர்.(120)
இஸ்லாமில் கடவுள் என்ற தத்துவம்:
கடவுள் சர்வ வல்லமையுடையவர் என்பதுவும், மனிதனின் செயல்கள் அனைத்தும் கடவுளின் எண்ணத்துக்கு உட்பட்டவையே; மனிதனுக்கு என்று தனிக் குணம் - free will of his own - இல்லை என்பதுவும் குரானில் சொல்லப்படுகின்றன. (121)

Antony Flew:
மனிதனின் வாழ்வில் அவன் செய்யும் தவறுகளுக்கும், அதற்காக அவனுக்காகக் காத்திருக்கும் வரையறையில்லா தண்டனைக்கும் பெரும்  இடைவெளி உண்டு. குரானில் சொல்லப்படும் (பைபிளிலும் இதே கதையே! ) நரகம் மிகவும் பயங்கரமான ஒன்று; காட்டுமிராண்டித்தனமான தண்டனைகள், கஷ்டப்படுத்தி மகிழும் தன்மை எல்லாம் ஒருங்கே உள்ளன. 

Gibb
மனிதன் எப்போதும் கடவுள் மேலுள்ள பயத்தோடு வாழவேண்டும். கடவுளிடமிருந்து தன்னை தற்காத்துக் கொண்டிருக்க வேண்டும். இதுவே குரானில் முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை சொல்லியுள்ள பாடம். (127)
கடவுளின் குறைபாடுகள்:
கடவுள் மிகவும் நல்லவர்; வல்லவர்; நன்மை தருபவர் என்றெல்லாம் சொல்லி விட்டு, அவர் ஒரு எரிச்சலடையும் கொடுங்கோலனாக, திமிரும் குணம் படைத்த மனிதர்களைத் தடுக்க முடியாதவராக, கோபக்காரராக, பெருமை பிடித்தவராக, பொறாமை பிடித்தவராக காண்பிக்கப் படுகிறார்.
அவர் எல்லாம் வல்லவர்;  அப்படியாயின் அவருக்கு எதற்கு மனித குலம்? எல்லா வல்லமையும் உடையவர்; ஆயினும் அவர் எதற்காக மனிதனின் உதவியை நாடுகிறார்? இப்படிப்பட்ட கடவுள் அரேபிய நாட்டிலுள்ள ஒரு அடையாளம் இல்லாத வியாபாரி ஒருவரை ஏன் தேர்ந்தெடுத்து, அதுவும் அவரையே கடைசி நபியாக்க வேண்டும்?   எல்லாம் வல்ல கடவுளுக்கு  தான் படைத்த மனிதன் தன்னைப் போற்றி புகழ வேண்டும் என்றும, தினமும் தன்னை ஐந்து முறை தொழ வேண்டும் என்றும் என்ன தேவை? இப்படி தன்னைத் தொழுதேற்ற வேண்டும் என்ற ஆழ்ந்த நினைவு ஒரு நல்ல பண்பேயில்லை; ஆனால் அதுவே எல்லாம் வல்ல கடவுளின் ஆவல்! (128)

Palgrave :
குரானில் சொல்லப்பட்டுள்ள கடவுளைப் பற்றிக் கூறுகிறார்: கடவுள் தன் கையில் மணலெடுத்து பாதியை நரகத்தில் வீசி விடுகிறார் (These to eternal fire and I care not;); அடுத்த பாதி சுவனத்தில் (These to eternal to paradise, I care not.) எறிகிறார். இப்படியாயின், எல்லாமே முதலிலேயே, கடவுளாலேயே முடிவு செய்யப்பட்டுள்ளதா? ( .. adequate idea of predestination, or, to give it a truer name, pre-damnation, ... )
ஒரு மனிதனை எக்காலமும் அணையா நெருப்பில், சிவந்து நிற்கும் இரும்புக் கனலில், நீராக ஓடும் நெருப்பில்  விட்டெறிகிறார். அடுத்து ஒருவனை மகிழ்ச்சி நிரம்பிய, என்றும் தணியாத காமச்சூழலுக்குள் நாற்பது கன்னிப் பெண்களின் நடுவில் விடுகிறார். எல்லாம் அவரது முடிவு! He wills it!

முகமது கடவுளின் தூதன்:
The Age of Reason என்ற நூலில் Thomas Paine: தோரா - கடவுளிடமிருந்து மோஸேவிற்கு - நேருக்கு நேர் - முகம் பார்த்து.  விவிலியம் - தெய்வீக அழைப்பு.  குரான் - கடவுளிடமிருந்து -  ஜிப்ரேல் மூலமாக.
இந்த ஒவ்வொரு மதமும் அடுத்த மதக்காரர்களின் நம்பிக்கைகளை நம்புவதில்லை; நான் இந்த மூன்று மதங்களையுமே நம்பவில்லை.. 

இஸ்லாமியர்கள் மறுப்பது போலன்றி முகமது கடவுளை நேருக்கு  நேர்  பார்த்திருக்கிறார். ஆதாரம்: 53: 2-18. மற்ற நேரங்களில் ஜிப்ரேலை மட்டும் பார்க்கிறார். ஆனால் தான் பார்த்தது கடவுள் / ஜிப்ரேல் என்பது எப்படி முகமதுவிற்குத் தெரியும்? முகமதே மனத்தளவில் தவறாக புரிந்து கொண்டிருக்கக் கூடாதா? கடவுளைப் பார்த்தேன் என்று சொல்லும் பலரை மன நோயாளிகளாகத்தான் நாம் காண்கிறோம்.
(You talk to God, you're religious. 
God talks to you, you're psychotic.”Doris Egan )

(நூலாசிரியர் இதன்பின் கிறித்துவ, இஸ்லாமிய கோட்பாடுகள், ‘தெய்வப்பிறவிகள்’, படைப்பு , பரிணாமம் பற்றிப் பேசுகிறார். இவைகளிலிருந்து சிறு குறிப்புகள் மட்டும் கொடுத்துள்ளேன்.)

ஆபிரஹாமும் இஸ்மவேலும்  இணைந்து காபாவைக் கட்டியதாக ஒரு நம்பிக்கை இஸ்லாமியருக்கு. ஆனால் இதற்கான எந்த ஆதாரங்களும் - பழங்காலக் குறிப்புகள், கட்டிட அமைப்பு, வரலாற்றுக் குறிப்புகள் - இதுவரை இல்லை.  Snouck Hurgronje முகமது அரேபிய தொடர்பைக் காண்பிப்பதற்காக இந்தக் கதையைச் சொல்லியிருக்க வேண்டும். இந்த காபா அரேபிய வரலாறு, மதங்கள் இவற்றோடு தொடர்புடையதாக இருந்து வந்துள்ளது. (131)


உலகம் படைக்கப்பட்டது எட்டு நாட்களிலா (சுரா 41)? அல்லது ஆறு நாட்களிலா (சுரா 50)?

சுர 77:22-ல் மனிதன் விந்திலிருந்து உண்டாக்கப்பட்டான் என்கிறது. சுரா 21:31,  25;26.  24;44 - இவைகளில் மற்ற பொருட்கள் போல் ’முதல் நீரிலிருந்து’ 
 படைக்கப்பட்டான் என்கிறது.


Ascha :ஒவ்வொரு முறை ஏதேனும் புதிய கண்டுபிடிப்பு நடக்கும்போது இஸ்லாமியர் தங்கள் குரானுக்குள் செல்கிறார்கள் - அதில் இதைப் பற்றி ஏதேனும் சொல்லியிருக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு.


குரானில் வரும் பல வசனங்கள் உறுதியற்றதாகவும், மிகத் தவறாகவும் உள்ளன. படைப்பு எத்தனை நாட்கள் என்பது ஒரு கேள்வி - ஆறு நாட்களா / எட்டு நாட்களா? சூரியன் படைக்கப்படுவதற்கு முன் ஏது ‘பகல்’? எல்லாம் படைக்கப்படுவதற்கு முன் அல்லாவின் அரியணை ‘நீரில்’ மிதந்தது என்றால் நீர் அப்போது எங்கேயிருந்தது?


எத்தனை முயன்றாலும் பைபிள், குரான் வசனங்கள் ‘படைப்பு’ பற்றி சரியாகச் சொன்னதாகச் சொல்ல முடியாது. (137)

விபத்துகள் - அதிசயங்கள் :
7:56 - மழை - கடவுளின் அடையாளம். ஆனால் வெள்ளம், சுனாமி, நில நடுக்கம்... எப்படி இவை வருகின்றன? 57:22 - எல்லாமே சுவனத்திலுள்ள ’முதல் புத்தகத்தில்’ எழுதப்பட்டவைதான். இத்தகைய விபத்துகளில் விபச்சாரத்தில் ஈடுபடுவோர் தப்பிக்கவும், பக்திமான்கள் அகப்பட்டுக் கொள்ளவும் நடப்பது ஏன்?


Hospers :   கடவுளின் அதிசயங்கள் எங்கோ எப்போதோ நடப்பதற்குக் காரணம் என்ன? அப்படி நடப்பதென்றால் பொதுவாக, பலரும் காணும் நிகழ்வுகளாக நடக்கலாமே! போர்ச்சுகல் கிராமம் ஒன்றில் மூன்று படிக்காத சிறுவர்களுக்கு பாத்திமா மாதா காட்சி கொடுத்ததாகச் சொல்லப்பட்டது. இது நடந்தது 1917. அப்போது முதல் உலகப்போர் நடந்து கொண்டிருந்தது. இப்படி ஒரு காட்சி கொடுப்பதற்குப் பதில் நடந்து கொண்டிருந்த உலகப் போர் ஆரம்பிக்காமலோ, ஆரம்பித்த உலகப் போர் முடிவடையவோ மாதா முயற்சித்திருக்கலாமே! (144)


இதன்பின்  நூலில் ஏசுவும், கிறித்துவமும் பேசப்படுகின்றன.

 பய உணர்வு
Why I Am Not A Christian  என்ற தன் நூலில் Bertrand Russel  -- சமயங்கள்  முழுமையாக மனிதனின் பயத்தின் மேல் கட்டப்படுகின்றன. புரியாத ஒன்றின் மேலுள்ள பயம், தோல்வியின் மேலுள்ள பயம், மரணத்தின் மேலுள்ள பயம் -இந்த பயங்களே மனத்தின் ஆழத்தில் உள்ளன. இந்த பயமே கொடுமையின் பிறப்பிடமாகி விடுகிறது. இந்தக் கொடூரமும் மதமும் இணைந்தே செயல்படுகின்றன.


அழிவில்லா காலத்திற்கான தண்டனைகள் இரக்கமுள்ள, கனிவுள்ள, நல்லதே செய்யும் ஒரு கடவுளுக்கு எதிரானவை. அதுபோலவே ஒருவன் பிறக்கும் போதே அவன் மரணத்திற்குப் பின் போகுமிடம் சுவனமா, நரகமா என்பதும் கடவுளால் முன்பே தீர்ப்பிடப்படுகிறது. அப்படியானால், கடவுள் தன் படைப்புகளை இந்த நரகத்திற்காகவே படைத்துள்ளார் போலும்.(157)


குரானில் சொல்லப்படும் பல தண்டனைகள் மிகக் கொடூரமானவை. குரான் தோன்றிய காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டங்கள் இவை; அதனால்தான் குரானில் இடம் பெற்றன என்று சொல்வதெல்லாம் மதிப்பற்ற வாதங்கள். கடவுளின் வார்த்தைகள் - எப்போதும் உண்மையாகவே இருக்க வேண்டும்.
5 : 38 - திருடனின் கையை காலை வெட்டு
5 : 33 - கடவுளையோ நபியையோ எதிர்ப்பவனை சிலுவையில் அறைந்து கொல்.
4 : 15 - வழி தவறிய பெண்களுக்கு சாகும் வரை வீட்டில் சிறை.
24 : 2-4 - முறையற்ற பாலியல் குற்றத்திற்கு நூறு சவுக்கடிகள்.

ஆனால் ஐக்கிய நாட்டு சபையின் மனித உரிமைச் சட்டத்தில் எந்த மனிதனையும் சித்திரவை செய்வது, மிகக் கடும் தண்டனை அளிப்பது, மனிதத் தன்மையற்ற கடும் தண்டனைகள் தருவது தடுக்கப்படுகிறது!(158)


குரானில் வரலாற்றுத் தவறுகள் :
சுரா 40 : 38 - ஹமான் பெர்சியன் அரசர் Ahasuerus-ன் அமைச்சர். ஆனால் குரானில் இவர் மோசஸ் காலத்து பெரோவாவின் அமைச்சராகச் சொல்கிறது.


ஏசுவின் தாயான மேரியும், மோசஸ்,ஆரோன் இவர்களின் சகோதரியான மேரியும் குரானில் குழப்பப்படுகிறது.

சுரா 2 : 249, 250 - இதில் வரும் ஜாலூத்தும், கிட்டியன்(Gideon in Judg.) 7:5ல் வருபவரும் குழப்பப்பட்டிருக்கிறார்கள்.

18 : 82 - மஹா அலெக்சாண்டரும் (Alexander the Great),  ரொமான்ஸ் அலெக்சாண்டரும் (Alexander of Romance) குழப்பபட்டிருக்கிறார்கள். குரானில் சொல்லப்படும் அலெக்சாண்டர் நிச்சயமாக ஒரு மெஸிடோனியாவைச் சேர்ந்த இஸ்லாமியன் இல்லை; அதோடு, அவர்களின் நம்பிக்கைப் படி அவன் ஆபிரஹாமின் காலத்தைச் சேர்ந்தவனும் இல்லை.  (159)

குரானின் படிப்பினைகள் மனித மனத்தை, அதன் நியாய உணர்வுகளைக்  கீழாக்கும் நிலையையும், சமூக, அறிவியல், பண்பாட்டியல் இவைகளையும் கீழ்த்தரமாக்கும் தரத்தில்தான் உள்ளன. கடவுளின் வார்த்தைகள் என்பதை விடவும் இவை ஒரு இரக்கமுள்ள கடவுளின் பண்புக்கு ஒவ்வாத முரட்டு, காட்டுமிராண்டித் தனமான கொள்கைகளைத் தான் கொண்டிருக்கிறது. குரானின் வார்த்தைகளில் முகமதுவின் சேர்க்கை நிச்சயம் உண்டு என்பதை இதுவரை காண்பித்திருக்கிறோம். முகமது 7-ம் நூற்றாண்டின் பண்பாட்டைத் தான் காண்பிக்கிறார். ஆனால் இந்தப் பண்பாடுகள் இந்த நூற்றாண்டிற்கு நியாயமானதாக இல்லை.


சமயங்களும், சிறப்பாக இஸ்லாமும் :
சமயங்களைச் சாடுவது சரியில்லை; ஏனெனில் மனிதனை நல்லவனாக்குவது சமயங்களே. இப்படியெல்லாம் சொல்கிறார்கள்; ஆனால் நான் அப்படி எதையும் இதுவரை பார்க்கவில்லை - Bertrand Russel, Why I Am Not A Christian.

சமயங்கள் தவறாக இருக்கலாம்; ஆனால் அவை நம்மை நல்வழிப்படுத்த வந்த அமைப்புகள் - இப்படிச் சொல்வதும் ஒரு தவறு. ஏனெனில் இந்த சமயங்கள் மனித மனத்தைத் திரித்து, உள்ளும் புறமும் பொய்மையோடு இருக்க வைக்கிறது. அதையெல்லாம் விட முழுமையான உண்மைகளை நாம் உணர முடியாதபடி வைக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக