புதன், 23 நவம்பர், 2011

WHY I AM NOT A MUSLIM ... 13

அராபிய படையெடுப்புகளும், இஸ்லாமிய காலனியாதிக்கமும்
எந்த வரலாற்று நூலை எடுத்தாலும் மிகக் குறுகிய காலத்தில் பாதிக்கும் மேலான நாகரீக உலகம் - கிழக்கே சிந்து நதியிலிருந்து மேற்கே அட்லாண்டிக் கடல் வரையிலும் - இஸ்லாமியப் படையெடுப்பால் ஒரே பெரிய சாம்ராஜ்யமாக இருந்ததைப் படிக்கலாம். 

ஐரோப்பிய நாடுகள் மூன்றாம் உலகம் முழுவதிலும் பல காலனிகளை உருவாக்கினார்கள் என்று கூறப்பட்டாலும், இஸ்லாமியப் படையெடுப்பால் பல வளர்ந்த நாகரீக நாடுகளும் காலனிகளாக்கப்பட்டதும், அந்த நாட்டின் கலாச்சாரம் இஸ்லாமியரால் அழித்தொழிக்கப்பட்டது என்பதையும் பலர் உணர்வதில்லை. (198)

பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வழி வழியாய் வந்த இஸ்லாம் அல்லாத தங்கள் பண்பாடுகளை இழந்தார்கள். (199)

தங்களது பெரு வெற்றிக்குப் பிறகு  இஸ்லாமியர் அல்லாதாரை தங்களுக்கு ஈடாக அவர்களால் நினைக்க முடிந்ததில்லை. இஸ்லாமியரல்லாதவர்களை தங்களை விட தாழ்ந்தவர்களாகவும், அவர்களை, பொருளாதார, சமூக,  அரசியல், ராணுவ காரியங்களில் கீழானவர்களாகவும் நடத்தினர்.  

தோற்றவர்களின் பெண்கள் அடிமைகளாக ஆக்கப்பட்டனர். அவர்களது குழந்தைகளும் கீழாக நடத்தப்பட்டனர். தோற்றவர்களோடு எந்த வித திருமணத் தொடர்பும் சமூகத்தீமையாகக் கருதப்பட்டன. (202)

சுரா 16 : 77; 30: 28 - அடிமைத்தனம் அனுமதிக்கப்பட்டதாகவும், கீழ்த்தரமாக நடத்தப்படவும் அனுமதி அளிக்கின்றன.
4 : 3; 23 : 6; 3 : 50-52; 70 : 30  -- வைப்பாட்டிகளை வைத்துக் கொள்ளுதலுக்கு அனுமதி அளிக்கின்றன.
குரானில் அடிமைகளுக்கு இரக்கம் காட்ட வேண்டுமென்பதும் குறிக்கப்படுகிறது ( ! ) ஆனாலும் முகமது தான் வென்ற போர்களில் பிடிக்கப்பட்ட பெண்களை ஏலத்தில் போகவில்லையென்றால் அவர்களைத் தனக்கு அடிமையாக்கிக் கொண்டார். 

சீனா, இந்தியா, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் போர்களில் வென்ற அடிமைகளைவியாபாரம் செய்தனர். (203)

வெற்றி பெற்ற இஸ்லாமிய வீரன் தன் வெற்றி வழியில் செல்லும் போது  ‘நம்பிக்கையற்ற’ பெண்களை எதுவும் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டான். 

20-ம் நூற்றாண்டு வரை இஸ்லாமியம் அடிமை வியாபாரத்தை மேற்கொண்டிருந்தது. அதிலும் சவுதி அரேபியாவிலும், யேமனிலும் 1950 வரையும் கூட அடிமை வியாபாரம் நடந்து வந்துள்ளது. ( காலங்கடந்த இந்த அநியாயத்திற்கும் குரானிலிருந்து ஏதாவது மேற்கோள் காண்பித்து, அப்படி நடந்ததெல்லாம் சரியே என்பரோ?! )

Brunschvig சொல்வது போல் குரானோ இஸ்லாமோ அடிமைத்தனத்திற்கு எதிரானதல்ல. அடிமைத்தனத்தை குரான் சட்டபூர்வமானது என்கிறது. 

பிரஞ்சு செய்தித்தாள் L Vie ( no. 2562; 6 Oct, 1994)-ல்  45,000 கறுப்பு ஆப்ரிக்க மக்கள் வளைகுடா நாடுகளில் வீட்டு வேலைக்காகக் கடத்தப்பட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக