புதன், 23 நவம்பர், 2011

WHY I AM NOT A MUSLIM .. 4

முகமதின் வாழ்க்கையும் அவர் ஆரம்பித்த மதத்தின் வரலாறும் பொதுவாகவே மூன்று வழிகளில் நமக்குக் கிடைத்துள்ளது. 1. குரான்; 2. முகமதின் வாழ்க்கை வரலாறுகள்; 3. ஹாடித், இஸ்லாமிய வழக்கங்கள்.

1. குரான்:இஸ்லாமியர் வழக்கத்திற்கு மாறான பலவற்றை குரானின் வரலாற்றில் ஏற்றிச் சொல்வதுண்டு. ஆனால் அவைகள் உண்மையல்ல; the traditional accounts are "a mass of confusion, contradiction and inconsistencies". Serious scholars have called into question the authenticity of the Koran itself, நாம் அந்த விளக்கங்களை இனி காணலாம்.


அதற்கு முன் வணக்கத்துக்கரிய சில இஸ்லாமிய குறிப்பெழுத்தாளர்களின் ஒரு பட்டியல் இதோ:

MUHAMMAD IBN-JARIR AL-TABARI (a.d. 923)
Al-ZAHAWI (1117 OR 1122)
Al_ZAMAKHSHARI(1143)
Al-BAYDAWI (1286 OR 1291)
FAKHR-AL-DIN AL-RAZI (1210)
JALAL-AL-DIN AL-MAHALLI (1459)
JALAL-AL-DIN AL-SUYUTI (1505)


2. இஸ்லாமிய வாழ்க்கை வரலாறுகள்:

முகமது 632-ம் ஆண்டு இறந்தார். அவரை பற்றிய முதல் எழுத்துக் குறிப்பு Ibn Ishaq என்பவரால் 750-ம் ஆண்டு, அதாவது 120 ஆண்டுகளுக்குப் பிறகு, எழுதப்பட்டுள்ளது. (இன்றைய சமூகத் தலைவர் ஒருவரின் வாழ்க்கையை இன்று எழுதுவதற்கும், இன்னும் ஒரு நூற்றாண்டு கழித்து எழுதுவதற்கும் வேற்றுமை ஏதும் இருக்குமா, இருக்காதா?) அதைவிடவும்
Ibn Ishaq எழுதிய வரலாறு முழுவதுமாகக் கிடைக்கவில்லை. அவரது முழு நூலும் தொலைந்து போக, 834-ல் இறந்த Ibn Hisham என்பவரின் எழுதியதில் சில பகுதிகள் மட்டுமே கிடைக்கப் பெற்றன. இவைகளைத் தவிர மற்ற நூல்கள்; Annals of Al-Tabari என்பவர் Ibn Ishaq-யை மேற்கோள் காட்டி எழுதிய நூல். இதையும் சேர்த்து இன்னும் 7 நூல்கள் பட்டியலிடப்படுகின்றன.



3. ஹாடித் / ஹதீஸ்:
இவை எல்லாம் Books of Tradition - பழக்க வழக்கங்களின் நூல்கள். இவைகள் முகமது சொன்னவைகளும், செய்தவைகளும், அனுமதித்தவைகளும், அவரது முன்னிலையில் அவரது உடனிருந்தோர் சொல்லியவைகளும் ஒன்றிணைந்தவைகள். 'சுன்னா' - பழக்க வழக்கங்கள் - என்ற சொல்லும் ப்யன்படுத்தப்படுகிறது.

ஹதீஸ்
முகமதால் வாயால் சொல்லப்பட்டது. ஆனால் சுன்னா வாழ்க்கை நடத்துவதற்கான செயல்முறைகளைச் சொல்லப் பயன்பட்டது.
ஆறு வகையான ஹதீஸ் இருப்பதாக சுன்னி முஸ்லீம்கள் கருதுகிறார்கள். (67)

ஐயங்கள்:
மகமூதின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்கள் உண்மைகளிலிருந்து மிக விலகியே எழுதியுள்ளார்கள். சார்பற்ற எழுத்துக்கள் என்பது போலல்லாமல் மாறுபட்டே (tendentious fiction) எழுதியுள்ளனர். உண்மையிலேயே நடந்தைவகளை எழுதாமல் அவைகளை மாற்றி சாதகமாகவே எழுதியுள்ளனர். (68)

Goldziher - 1870 முதல் 1920 வரை இவர் இஸ்லாமைப் பற்றி எழுதியவைகள் இன்றும் பல்வேறு பல்கலைக் கழகங்களில் முழுவதுமாகப் படிக்கப்பட்டு வருகின்றன. 'ஹாடித் வளர்ந்த விதம்' என்ற அவரது ஆராய்ச்சிப் பதிவில், "இஸ்லாமியர்களால் முழுவதுமாக நம்பப்படும் பல்வேறு ஹாடித்துகள் 8-ம், 9-ம் நூற்றாண்டுகளில் மாற்றம் (forgeries) செய்யப்பட்டவைகள்; அந்த ஹாடித்துகளின் தொடர்புகள் (isnads = chains of transmitters) உண்மையானவைகள் அல்ல. (69)

மேலும் அவர், "பல ஹாடித்துகள் சமய, வரலாற்று,
சமுதாய வளர்ச்சிக்கேற்ப முதலிரு நூற்றாண்டுகளில் மாறியவை" என்கிறார்.



Goldziher-ன் எழுத்துக்களைப் புரிந்து கொள்ள வரலாற்றின் ஒரு பகுதியை இப்ன் வராஹ் தருகிறார்: நபி இறந்த பிறகு அவரின் துணையாளர்கள் நால்வர் முகமதியர்களின் தலைவர்களாகிறார்கள். அவர்களில் கடைசியானவர் நபியின் மருமகனும், cousin-ஆகவும் இருந்த அலி என்பவர். இவருக்கு அப்போதைய சிரியாவின் மேலும், அதன் கவர்னராக இருந்த மெளவியா (muawiya) மேலும் எந்த ஆளுமையும் இல்லாது போயிற்று. மெளவியாவிற்கும் அலிக்கும் சிஃபின் என்ற இடத்தில் போரொன்று நடக்கிறது. அதன்பின் 661-ல் மெளவியாவினால அலி கொல்லப்படுகிறார். உமயாத் என்ற குழுவின் முதல் கலீபாவாக மெளவியா ஆகி, 750 வரை அக்கு(டும்பத்தின்)ழுவின் அரசாட்சி நடக்கிறது. 

இந்த உமயாத்தின் ஆட்சியில் மக்களும், ஆட்சியாளர்களும் மதத்தின் மேல் எந்த வித அதிகமான ஈடுபாடுமின்றி இருந்து வந்தனர். ஆனால் ஒரு பக்திக்குழு எவ்வித குற்றவுணர்வுமின்றி புதிய பழக்க வழக்கங்களை ஏற்படுத்தினர். சமூகத்தின் நன்மைக்காகவே உண்டாக்கினார்கள்; அத்தகைய புதிய மாற்றங்களை நபியோடு எம்முறையிலும் தொடர்பு படுத்த முடியாது. ஆளும் உமயக் குழுமமும் தன்னிச்சைப்படி தனக்குத் தகுந்த, தனக்குப் பலனளிக்ககூடிய புதிய ஹாடித்துகளை உருவாக்கினார்கள். இப்புதிய ஹாடித்துகள் அலியின் புகழை இழக்கும்படியாக உருவாக்கப்பட்டன.
Goldziher
: உமயாத்துகள் மதப்போர்வைக்குள் பல மாற்றங்களைச் செய்து கொண்டு, அவைகளைச் சில மதக்குருக்கள் தாங்கிப் பிடிக்குமாறும் செய்து கொண்டார்கள்.(70)

ஹடித்துகள் மிக மிகச்சின்ன மத விஷயங்களுக்குக் கூட உருவாக்கப்பட்டன. அலி குழுமத்தின் புகழைக் குறைக்க அப்பாஸிட்கள் புதிய ஹாடித்துகளை உருவாக்கினார்கள். சான்றாக,  அலியின் தந்தை - அபு டாலிப் - ஆழ்கிணற்றின் அடியில் ஆழ்த்தப் பட்டுள்ளதை நபி கண்டதாகக் கூறியுள்ளார்கள். 

புதுப் புது ஹாடித்துகள்ஆரம்பித்து வைப்பது ஒரு வணிகம் போலவே செயல்பட்டு வந்தது.


பல போலி ஹாடித்துகள் உலவி வந்தாலும், அல்-புக்காரியால் தொகுக்கப்பட்ட ஆறு சீரான ஹாடித்துகள் கூட எல்லோரும் நினைப்பதுபோல் அறுதியான ஹாடித்துகள் கிடையாது. .. அல் புக்காரியின் ஹாடித்துகள் கூட முதலில் ஏறத்தாழ ஒரு டஜன் எண்ணிக்கையில் இருந்தன. 


பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒருவர் ஹஜாஜ், புக்காரி இவர்களின் தொகுப்பில் உள்ளவைகளில் ஏறத்தாழ 200 கேள்விக்குறியது.

Goldziher க்குப் பிறகு Joseph Schacht என்ற ஒரு பெரிய இஸ்லாமியர் (இஸ்லாமிய சட்டங்களின் மீது இவர் எழுதிய நூல்கள்   இன்றும் இஸ்லாமிய ஆராய்ச்சி நூல்களுள் பெரிதும் மதிக்கப்படுகிறது.) கூறுபவை வெகுவாக கலக்கமடையச் செய்யக் கூடியவை. 


அவைகள்: 
1. isnads - chain of transmitters நபியோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் வழிமுறைகள் எல்லாமே அப்பாஸிட் புரட்சிக்குப் பின்தான்  ஆரம்பித்தது. அப்புரட்சி நடந்தது 8-ம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் தான்.


2. சில இஸ்னாடுகள் ( isnads ) நபியோடு தொடர்பு கொண்டவையாக இருந்தாலும் பெரும்பான்மையான இஸ்னாடுகள் - தொடர்புகள் - நிச்சயமாக நபியோடு தொடர்புடையவை அல்ல. (71)


Joseph Schacht தனது நூலில் Goldziher பற்றிக் கூறியதோடு, இரண்டாமவர் கூறிய சில ஆய்வுகளைத் தருகிறார்:  மிக அதிகமான ஹாடித்துகள் எல்லோருமாலும் கருதப்படும் காலத்தில் உள்ளதல்ல; அவைகள் பெரும்பாலும் இஸ்லாம் ஆரம்பித்த முதல் நூற்றாண்டில் இயற்றப்பட்டவை. இவைகளை Schacht - This brilliant discovery became the corner-stone of all serious investigation" - முக்கிய ஆராய்ச்சிகளுக்கு எல்லைக்கோடுகளாகும் சிறந்த கண்டுபிடிப்பு - என்று கூறுகிறார். ... Schacht இவைகளையெல்லாம் 'மாற்று ஹாடித்துகள்' என்று கூறுகிறார்.


நபியின் வழிவந்தோர் கூறியவை நபியின்  தொடர்புடையவர்களிடமிருந்து (companions) வந்ததாகவும், அப்படி தொடர்புடையவர்களிடமிருந்து வந்தவை நபியிடமிருந்தே வந்ததாகவும் கருதப்பட்டன. (72)


Schacht: இஸ்லாமியச் சட்டங்கள் குரானிலிருந்து வரவில்லை; அவைகள் உமயாதுகளின் பிரபல்யமான, ஆளுமைக்கான சட்டங்களிலிருந்தே வந்தன.  

குரான் எப்படி முழு உருப் பெற்றது என்பது பலவிதமாகக் கூறப்படுவதுண்டு. அதில் அதிகமாகக் கூறப்படும் ஒன்றை இங்கு காணலாம்: 
அபு பக்கரின் ஆட்சிக் காலத்தில் (632-634)  உமர் (634-ல் இவரே கலிஃபா ஆகிறார்) குரானை மனனம் செய்திருந்த இஸ்லாமியர் பலரும் மத்திய அரேபியாவில் நடந்த யமமா யுத்தத்தில் கொல்லப்பட்டதால் கவலை கொள்கிறார்.  அதனால் Zayd ibn Thabit என்ற நபியின் துணைவரை குரான் வசனங்களை ஒருமித்துச் சேர்க்க ஆணையிடுகிறார். அவரும் அவ்வாறே தேடுகிறார்: "from peices of papyrus, flat styones, palm leaves, shoulder blades and ribs of animals. pieces of leather and wooden boards, as well as from the hearts of men" (( இவைகள் எப்படி தெளிவாக, தெளிவான தகவல்களாக இருந்திருக்க முடியும்?) இவைகள் அபு பக்கரிடம் சேர்ப்பிக்க, அவர் அதைத் உமரிடம் தர, அதன் பின் உமருக்குப் பின் அவை உமரின் மகள் ஹஃப்ஸாவிடம் தரப்படுகிறது,  (இதிலும் சிற மறுப்புகள் சொல்லப்படுவதுமுண்டு;  குரானைத் தொகுத்தது அபு பக்கரா, அலியா என்பது போன்ற கேள்விகள் உண்டு.) அதோடு இந்த குரான் மட்டுமே சரியானது என்று ஏதாவது ஒரு அத்தாட்சி வேண்டும். ஆனால் அபு பக்கரிடமிருந்து அப்படியேதும் அத்தாட்சி கொடுக்கப்படவில்லை. அதே சமயத்தில் வேறு சில குரான்களும் உண்மையான குரானாகக் கருதப்பட்டன. (73) 
பல இடங்களில் இதுவே உண்மையான குரான் என்று எழுந்த இக்குழப்பங்களால் உத்மன் (644-656) மீண்டும் Zayd ibn Thabit மூலம் உண்மையான குரானைக் கண்டு பிடிக்க முயல்கிறார். தன்னிடம் உள்ள "ஓலைகளில்" உள்ளவற்றிற்கும், உமரின் மகளிடமிருந்த பகுதிக்கும் ஒப்பீடு செய்கிறார். வாசிப்பு எளிதாக இருக்க, Zayd ibn Thabit நபியின் மொழியான குராய்ஷ் (Quraysh) மொழியை Zayd ibn Thabit எடுத்துக் கொள்கிறார். இந்தப் படிவம் உத்மனிடம் 650-ம் வருடம் சேர்ப்பிக்கப்படுகிறது. 656-ல் அவர் இறந்த பிறகு அது குஃபா, பஸ்ரா, டமாஸ்கஸ், மெக்கா போன்ற இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன. மற்ற  படிவங்கள் அழிக்கப்பட உத்தரவிடப்படுகிறது. (இந்த உத்தரவே வேறு சில மாற்றுப் படிவங்கள் அப்போது இருந்து வந்துள்ளன என்பதை ருசுப்படுத்துகிறதே!)

இன்றும் குரான் எவ்வித மாற்றமுமில்லாமல் இருந்து வந்துள்ளது என்ற கோட்பாடு மத நம்பிக்கையால் மட்டுமே எழுந்ததல்லாமல், எவ்வித வரலாற்றுச் சான்றும் இல்லாத ஒரு கருத்தாகும். (74)
Wansbrough : 8-ம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியில் இஸ்லாமியர்களைப் பற்றி எழுதப்பட்டுள்ள  நூல் Fiqh Akbar I. இந்நூலில் குரானைப்பற்றிய எத்தகவலும் இல்லை என்பது நினைத்துப் பார்க்க முடியாததாக உள்ளது.

நீண்ட நாட்களாக, பலரால் ஒருமித்த கருத்தோடு உருவானதாகவே குரான் இருக்க முடியும். (76)




இன்னொரு பதிவு "ஹதீஸும் அதன் பிரச்சனைகளும்" என்ற தலைப்பில் இப்பதிவை விடவும் முழு விவரங்களோடு செங்கொடியின் சிறகுகள் என்ற வலைப்பூவில் பதிவிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக