புதன், 23 நவம்பர், 2011

WHY I AM NOT A MUSLIM ... 12

குடியரசு, தனிமனித சுதந்திரம் இவற்றோடு
இஸ்லாம் ஒத்துப் போகுமா?


உலகம் முழுவதும் பழக்கத்திலிருக்கும் குடியரசு நம் நாட்டு மக்களுக்கு உகந்ததல்ல. முழுச் சுதந்திரமான குடியரசு நம் நாட்டுக்கு ஒத்து வராது. -- King Fahd of Saudi Arabia

மனித உரிமைகளும் இஸ்லாமும்:
Article 1: எல்லா மனிதர்களும் ஒன்று என்கிறது மனித உரிமைச் சட்டம். ஆனால் இஸ்லாமில் அவர்களின் மதக் கோட்பாட்டின் படி பெண்கள் ஆண்களுக்குக் கீழாகவே கருதப்படுகிறாள்;  நீதிமன்றத்தில் ஒரு பெண் ஒரு மனிதனின் பாதியாகவே கருதப்படுவாள்; அவளின் சுதந்திர நடமாட்டம் அனுமதிக்கப்படுவதில்லை; ஓர் இஸ்லாமியப் பெண் இஸ்லாமியரைத் தவிர வேறு யாரையும் மணம் செய்யக்கூடாது.

Article  2:  எல்லோருக்கும் ஒரே அளவு உரிமைகள் என்கிறது மனித உரிமைச் சட்டம். ஆனால் இஸ்லாமிய நாட்டில் வாழும் இஸ்லாமியரல்லாதவர்கள் கீழ் நிலையிலேயே வைக்கப்படுகின்றனர்.

Article  3:  வாழும் உரிமை பற்றிப் பேசுகிறது மனித உரிமைச் சட்டம். ஆனால் இஸ்லாமில் இஸ்லாமிய நம்பிக்கையில்லாதவர்களும், கடவுள் மறுப்பாளர்களும் இஸ்லாமிய நாட்டில் வாழத்  தகுதியற்றவர்கள். 

Article  4:  அடிமைத்தனமில்லை என்கிறது மனித உரிமைச் சட்டம். ஆனால் இஸ்லாமில் அது அனுமதிக்கப்பட்ட ஒன்று. சுரா 4:3 - பெண் அடிமைகளோடு இணைந்து வாழலாம்.  4 : 28 - பெண் அடிமைகள் திருமணம் ஆகியிருந்தாலும்  அவர்களையும் ’சேர்த்துக்’ கொள்ளலாம். (இவைகளெல்லாம் முகமது இருந்த ‘அந்தக் காலத்தை’ மனதில் வைத்து கடவுள் இட்ட கட்டளைகள் என்ற ‘தத்துவம்’ வேண்டாம். ஏனெனில், இவை ‘அல்லாவின் வார்த்தைகள்’. கடவுளின் வார்த்தைகள் எந்த இடத்திற்கும் எந்தக் காலத்திற்கும் பொருத்தமானதாக இருக்க வேண்டும். இன்றும் இந்த சட்டங்கள் சரிதானா? )

Article  5:  எந்தவித உடல் வதைப்புகளும் இருக்கக்கூடாது என்கிறது மனித உரிமைச் சட்டம். ஆனால் இஸ்லாமியச் சட்டங்களில் கைகால் வெட்டுதல், சிலுவையில் அறைந்து கொல்லுதல், கல்லாலெறிந்து கொல்லுதல், சாட்டையாலடித்தல் போன்ற தண்டனைகள் உண்டு.  இந்த தண்டனைகள் கடவுளிடமிருந்து வந்த மனிதத் தன்மையற்ற தண்டனைகள்.

Article 18 :  எண்ணத்தில், எழுத்தில், நடைமுறையில் மனிதனுக்குள்ள சுதந்திரத்தைப் பற்றிப் பேசுகிறது. ஆனால் இஸ்லாமில் தங்கள் மதங்களை மாற்றிக் கொள்ளும் அதிகாரம் சுத்தமாக இல்லை. அப்படிப்பட்டவர்கள் கொல்லப்பட வேண்டும்  என்று குரான் அதிகாரமளிக்கிறது. (174)

தேவ தூஷணம் - கடவுளை இகழ்தல் - இதற்கு மரண தண்டனை என்பது இஸ்லாம். (சமீபத்தில் பாக்கிஸ்தானில் நடந்த உண்மை இது.)

Article  23:  தனக்குப் பிடித்த வேலையைப் பார்க்கும் சுதந்திரத்தை மனித உரிமைச் சட்டம் வழங்குகிறது. ஆனால்இஸ்லாமியப் பெண்கள் தாங்கள் விரும்பும் வேலைகளைச் செய்ய அனுமதியில்லை. இஸ்லாமியரல்லாதார் இஸ்லாமிய நாடுகளில் தங்களுக்குப் பிடித்த வேலைகளைச் செய்ய அனுமதியில்லை.
சுரா 4 : 141 அல்லா நம்பிக்கையாளர்கள் மீது நம்பிக்கையற்றோர் வெற்றி பெற அனுமதிக்க மாட்டார்.
63 : 8 - கண்ணியமும் அதிகாரமும் கடவுளுக்கும், நபிக்கும், இஸ்லாமியருக்கும் மட்டுமே சொந்தமானது.

Article 26: கல்வி எல்லோரின் உரிமை என்று மனித உரிமைச் சட்டம் சொல்கிறது. ஆனால் பெண்களுக்கு சில கல்வித் துறைகள் மறுக்கப்படுகின்றன.

குடியரசும் இஸ்லாமும்:
எந்த நூலும் தவறற்றது என்று சொல்வதே மக்களாட்சிக்கும் அறிவியலுக்கும் எதிரான ஒரு வாசகம்.

இஸ்லாமில் இருப்பது போன்ற எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு நிலை குடியாட்சிக்கு எதிரான ஒன்று.
இஸ்லாமிய நம்பிக்கையற்றவர்கள், பெண்கள் - இவர்களுக்கான உரிமைகள் இஸ்லாமிய சட்டங்களில் மறுக்கப்படுகின்றன.
பெண் ஆணில் பாதியாகவும், கணவன் தன் மனைவியை அடிக்கலாம் என்பதும் எழுதப்பட்ட சட்டம்.(181) ( உங்கள் மனைவியை அடிப்பதை நிறுத்தி விட்டீர்களா என்று இஸ்லாமிய நண்பரிடம் கேட்டால், அவரின் பதில் என்னவாக  இருக்கும்! )    :) 

யூதம், கிறித்துவம் போலவே இஸ்லாமும் பகுத்தறிவுக் கேள்விகளைப் புறக்கணிக்கும். முழுவதுமாக அடிபணிவதே அவர்களது கொள்கை. (182)

A.K. Brohi என்ற இஸ்லாமிய சட்டம், சமயம் அமைச்சராக இருந்தவர் இஸ்லாமியமும் மனித உரிமைகள் என்பதைப் பற்றிக் கூறும்போது,  இன்றைய காலக்கட்டத்தில் சொல்லப்படும் மனித உரிமைகள், சுதந்திரம் என்பதற்கெல்லாம் இஸ்லாமில் இடமில்லை என்கிறார்.(184)

Islam and Liberal Denmocracy என்ற தன் நூலில் Bernard Lewis இஸ்லாம் என்பதற்கும், இஸ்லாமிய அடிப்படை வாதி என்பதற்கும் எந்த வேற்றுமையுமில்லை. (நம் பதிவர்களில் சிலர் தங்களை இஸ்லாமிய அடிப்படை வாதிகள் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்வதுண்டு. ) இஸ்லாமிய சமுதாயத்தில் இஸ்லாம் ஆழமாக அழுத்தம் பெற்றுள்ளது; அடிப்படைவாதம் என்பது இந்த அழுத்தத்தின் ஆழத்தைத்தான் சொல்கிறது. இந்த அடிப்படைவாதம் குடியாட்சியோடு ஒத்துப் போக முடியாது.(185)


Lewis மேலும் இஸ்லாமிய அரசியல் ஒரு முழு அதிகார வர்க்கமாகத்தானிருக்கும். அங்கு அடிபணியாமல் இருப்பது  பாவம், குற்றம் என்றே கருதப்படும்.  


சுரா 4: 59 & 4 : 83  கடவுளிடம் அடி பணிந்து விடு; அதே போல் தூதுவரிடமும், ஆளுமையில் இருப்பவர்களிடமும் அடி பணிந்து விடு. 

இந்தியா 1947-ல் சுதந்திரமடைந்தது. அவர்கள் தங்கள் நாட்டின் அமைப்பிற்கு எந்த சமய நூலையும் அடிப்படையாகக் கொள்ளவில்லை. ஆனால் இஸ்லாமிய நாடுகளில் துருக்கி நாடு மட்டுமே மதத்தை தன் அரசியலோடு இணைக்கவில்லை.  அந்த நாட்டின் சட்ட திட்டங்களில் ஷாரியாவிற்கு இடமில்லை. 


Islam and Human Rights என்ற நூலில்  Ann Elizabeth Mayer சூடான், பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளில் பெண்களுக்கான, இஸ்லாமியரல்லாதவருக்கான, பஹாய், அஹமதியா போன்றோருக்கான  மனித உரிமைகள் முழுவதுமாக மறுக்கப் படுகின்றன. அந்த நாட்டு நீதித்துறைகளின் தாழ்வுக்கு இஸ்லாமியமே காரணம். 

மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சிக்கு இஸ்லாம் ஒரு காரணம் என்று இஸ்லாமியர் கூறுவதுண்டு. இன்றைய  இஸ்லாமிய நாடுகளிலுள்ள வளர்ச்சியற்ற நிலையினை மறைக்கவே இந்த கூற்று.


மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சி குறித்த மாறுபட்ட கருத்தே அலெக்ஸாண்டிரியாவின் நூலகங்கள் எரிக்கப்பட்டதற்கான காரணம்.  641-ல் அலெக்ஸாண்டிரியா உமர் காலிபால் வீழ்த்தப்பட்ட போது நூலகங்களின் இந்த முழு எரிப்பு அரச ஆணையாக வந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக