சனி, 26 நவம்பர், 2011

ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் மதவெறிச் சக்திகளை நடமாடவிட்டால் ஆபத்து

மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும்.சென்னையில் தமிழர் தலைவர் விளக்கவுரை

இந்தியாவில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில்ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் பஜ்ரங்தளத்திற்கு நேரடித் தொடர்பு

தமிழர் தலைவர் பட்டியலிட்டு ஆதாரத்துடன் விளக்கம்
சென்னை, டிச. 1- இந்தியாவில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளில் மதவெறிக் கூட்டமான ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார், பஜ்ரங்தளத்திற்கு உள்ள நேரடித் தொடர்புகளை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

தமிழர் தலைவர் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
2002 ம.பி. போபாலில் குண்டு வெடிப்பு

வரிசையாகச் சில சம்பவங்களைச் சொல்லுகின்றேன். இவைகள் எல்லாம் ஆதாரப்பூர்வமான சம்பவங்கள். 2002 போபால் - மத்தியபிரதேசம் - குண்டுவெடிப்பு, அபிநவ் பாரத் - பஜ்ரங் தளத்தின் பங்கு உண்டு என்று மத்திய பிரதேசத்தினுடைய முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் சொல்லியிருக்கிறார்.

2002-ஆம் ஆண்டு மத்திய அரசாங்கத்தில் யார் இருந்தது?
உள்துறை அமைச்சராக யார் இருந்தது? அத்வானி ஜி அவர்கள் இருந்தார். அடுத்து 2003 -ஆம் ஆண்டு உமாபாரதி உத்தரவு போடுகிறார். அவர்தான் முதலமைச்சராக இருக்கிறார். குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட யாரையும் கைது செய்யக்கூடாது என உத்தரவு போடுகிறார். வன்முறையாளர்களைக் கைது செய்யக்கூடாது என உத்தரவு போடுகிறார்.


ஏதோ அதிகாரம் வந்துவிட்டதைபோல
இங்கு ஏதோ கூட்டத்தில் பேசினார்கள் என்றவுடனே, ஆகா அவரைக் கைது செய், இவரை கைது செய். இன்னும் முழு அதிகாரம் தங்கள் கையில் வராத நிலையில் ஏதோ அதிகாரமே வந்துவிட்டதைப்போல, தமிழ்நாட்டு முதலமைச்சர் யார் யாரை கைது செய்யவேண்டும் என்ற பட்டியலை நாங்கள்தான் வைத்திருக்கிறோம் - அதற்கு காப்பிரைட் வைத்திருக்கிறோம் என்று சில நண்பர்கள் சொல்லுவது வேதனையாக இருக்கிறது.

அவர்கள் நண்பர்களாக இருக்கின்ற காரணத்தால் நாங்கள் நாணப்படுகிறோமே தவிர, அதற்கு மேலே நான் சொல்லுவதற்கு விரும்பவில்லை.

2004-ஆம் ஆண்டு கத்ரியா மசூதி குண்டுவெடிப்பு
2004-ஆம் ஆண்டு புனே கத்ரியா மசூதி வெடிப்பிற்கு பஜ்ரங் தள் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தவர் ராகேஷ் தாவடேமீது வழக்கு உள்ளது. அவரே மாலேகான் குண்டுவெடிப்பிலும் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

மாலேகான் குண்டுவெடிப்பு
மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவம் இப்பொழுது வெளியே வந்திருக்கிறது. இலங்கையில் என்ன நிலை? ஜெயவர்த்தனே காலத்திலும் சரி, அதற்கு முன்னாலும் சரி, ஒரு உதாரணத்தைச் சொல்லுகின்றேன். என்ன செய்வார்கள் என்றால், யாரையாவது கொல்லுவார்கள்! சிங்கள அரசே முன்னின்று சிங்களர்களைக் கொன்று விடுவார்கள்.

புலிகள்மீது பழியைப் போடுவார்கள்
கொன்றுவிட்டு அந்தப் பிணத்தைப் போட்டுவைத்து விட்டு அதற்குப் பக்கத்திலே விடுதலைப் புலிகளினுடைய அறிக்கைகள், நோட்டீசுகளை இரண்டு, மூன்று வாசகங்களைப் போட்டு வைத்து விடுவார்கள். உடனே செய்தியை எப்படிக் கொடுப் பார்கள் என்றால், விடுதலைப்புலிகள் ஈவு இரக்கமின்றி இவர்களைக் கொன்றுவிட்டார்கள் என்று அந்தச் செய்தியைப் பரப்புவார்கள்.

இப்படி ஒரு புதுக் கண்டுபிடிப்பு
அதுமாதிரி இஸ்லாமிய மக்கள்மீது பழிதூற்ற வேண்டும். புதிதாக ஒரு ஒலி முழக்கத்தை எழுப்புகிறார்கள் - கண்டுபிடித்திருக்கிறார்கள். எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் இல்லை, ஆனால் தீவிரவாதிகள் எல்லோரும் முஸ்லிம்களே! என்னய்யா அர்த்தம் இது?

ஒன்று இரண்டு தவறு நடக்கலாம். எந்த மதத்துக்காரன் தவறு செய்தாலும் விட்டுவிடுங்கள் என்று சொல்லுவது நம்முடைய நோக்கமல்ல.

தவறு செய்தால் திருத்தப்பட்ட வேண்டியவன். ஆனால், அதே நேரத்தில் காந்தியாரைக் கொன்ற கூட்டம் - அவர்களுடைய மத வெறியின் தத்துவமென்ன? எண்ணிப் பார்க்க வேண்டாமா?

வழக்கின் ஆதாரப்பூர்வ ஆவணங்கள் எங்கே?
அந்த வழக்காவது முதலிலே ஒழுங்காக நடந்ததா? அந்த வழக்கினுடைய ஆதாரப்பூர்வமான ஆவணங்கள் பறிபோய் விடவில்லையா?

வழக்கு சரியானபடி நடத்தப்படவில்லை! இதெல்லாம் பழைய கதை. இந்த நிலையிலே வேண்டுமென்றே திசை திருப்புவதற்காக சொல்லுகின்றார்கள்.

2006-ஆம் ஆண்டு நான்டெட் குண்டு வெடிப்பு

2006-ஆம் ஆண்டு நான்டெட் குண்டு வெடிப்பு நடக்கிறது. குண்டு தயாரிக்கும்பொழுது இரண்டுபேர் இறந்தார்கள். வேறு விதமாக சாயம் கொடுத்து அந்த செய்தியைக் கொடுத்தார்கள்.

ஆர்,டி.எக்ஸ். வெடி மருந்து பொருட்கள் சப்ளை
இறந்தவர்கள் இரண்டுபேரும் பஜ்ரங்தளத்துக்காரர்கள் - அதிலே சம்பந்தப்பட்டவர்கள். ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்து பொருள்களை சப்ளை செய்தவர்கள். புரோகித்திற்கு சம்பந்தம் இருக்கிறது என்று சொல்லக்கூடிய அளவிற்கு பல்வேறு செய்திகள் கிளப்ப கிளப்ப வந்து கொண்டிருக்கின்றன.


புதை பொருள்கள்போல வெளியே வந்து கொண்டிருக்கிறன. இராணுவத்திலே இருக்கக் கூடிய ஒருவன் இராணுவத்தையே பயன்படுத்தி காஷ்மீருக்குப் போய் இன்னும் கேட்டால் இதைத் தோண்டினால் எதுவரைக்கும் வரும் என்று சொன்னால் மேனாள் காஷ்மீர் கவர்னராக இருந்த சின்காவும் விசாரிக்கப்பட வேண்டும். அங்கே அமர்நாத் கிளர்ச்சி. அவ்வளவு வளர்வதற்கு காரணம் என்ன?

காஷ்மீர் ஆளுநர் மாற்றப்பட்ட பிறகுதான்
அந்த கவர்னர் மாற்றப்பட்ட பிறகுதான் நிலைமை சீரானது. பொதுவாக ஒரு அரசாங்கம் மாறினால் கவர்னர்கள் மாற்றப் படுவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலை அந்த அரசியல் முறைகள் கூட கடைப்பிடிக்க முடியாத நிலை. பிறகு மாற்றப்பட்ட சூழல் ஏற்பட்டது. சாதாரணமாக ஏதோ பட்டாசு வெடித்தான், செத்துப்போய்விட்டான் என்று சிவகாசி பட்டாசு வெடித்த மாதிரி செய்திகளை மழுப்பிவிட்டார்கள்.

மீடியாக்கள் அவர்கள் கையில்
ஏனென்றால் அவர்களுக்கு என்ன வசதி என்றால் மீடியாக்கள் அவர்கள் கையிலே இருக்கின்றன. பத்திரிகை அவர்களுடைய கையிலே இருக்கிறது. இன்னும் கேட்டால் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் நடைபெறுகிறது. ஆனால் அரசாங்க அதிகாரிகள் ஏற்கெனவே பா.ஜ.க. ஆட்சியிலே போடப்பட்டவர்கள்.

இராணுவத்துறையில் ஊடுருவல்
இராணுவத் துறையிலே ஊருடுவல் செய்யப்பட்டவர்கள். வெளியுறவுத்துறையிலே போனவர்கள், மற்ற மற்ற இடங்களிலே இருக்கக் கூடியவர்கள் என்பதுதான் எதார்த்தமான உண்மை. எனவே கட்சி வெற்றிபெற்றிருக்கிறது. அரசு மாறியிருக்கிறது. ஆனால், அரசு அதிகாரிகளிலே பலர் ஆர்.எஸ்.எஸ்.சினுடைய மிக முக்கியமான அனுதாபிகளாக, ஆதரவாளர்களாகத்தான் இன்னமும் பெரிய அளவிலே இருந்துகொண்டிருக்கிறார்கள் என்பது மற்றொரு மறுக்கப்பட முடியாத உண்மை.

2008-இல் குற்றப்பத்திரிகை தாக்கல்
அடுத்து 25-3-2008-இல்தான் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 2006 பஞ்சமார்ஹி மத்தியப் பிரதேசம் லெப்டினன்ட் கர்னல் புரோகித் - அபிநவ் பாரத் உறுப்பினர்களுக்குப் பயிற்சி கொடுத்தார்.

இதிலே பணம் வசூல் பண்ணுகிறார்கள். அதுமட்டுமல்ல, மோசடிக் குற்றம் வேறு, ஹவாலா பணம் வந்திருக்கிறது - ஹவாலா குற்றமிருக்கிறது.

இப்ராகீம் - கொட்டை எழுத்தில்
புரோகித் - சம்பந்தம் இல்லை

அப்துல்காதரா? அலாவுதீனா? இப்ராகீமா? கைது செய்யப் பட்டார் என்று கொட்டை எழுத்தில் செய்தி போடுவார்கள். அதே நேரத்தில் அபிநவ் பாரத்தைச் சேர்ந்த புரோகித் என்று சொன்னால், அவருக்கு சம்பந்தம் இல்லை என்று மறைத்து விடுவார்கள்.

The conspiracy of Silence என்ற வார்த்தையை ரொம்ப ஆழமாக அம்பேத்கர் அவர்கள் பயன்படுத்தினார். பத்திரிகை களில் அவர்களுக்கு வேண்டாத விசயங்களை ரொம்ப சுபலமாக மறைத்துவிடுவார்கள். அதைத்தான் ஆங்கிலத்தில் அற்புதமான வார்த்தையாக அம்பேத்கர் அவர்கள் பயன்படுத்தினார்கள். அந்த மதவெறி அமைப்புகளில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிதான் இதுவரையில் சேர்ந்தான்.

இராணுவத்தில் லெப்டினென்ட் கர்னல் துரை
ஆனால், இவை இராணுவத்தில் இருந்துகொண்டே இந்தப் பணியை செய்வதற்குத்தான் அவர் லெப்டினென்ட் கர்னல் வரைக்கும் போயிருக்கிறான். இப்பொழுது இராணுவத்தில் விசாரணை வைத்தால் இன்னும் எத்தனைபேர் இப்படி இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. காரணம் என்னவென்றால், அதற்கு ஆதரவான அரசாங்கம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆகவே அவர்களுக்கு ரொம்ப வசதியாக சாலை போட்ட மாதிரி ஆகிவிட்டது. பச்சைக் கொடி காட்டியமாதிரி ஆக்கிவிட்டார்கள்.

2006-ஆம் ஆண்டு கான்பூர் வெடிவிபத்து
2006 - கான்பூர் வெடிவிபத்து - பஜ்ரங்தளத்தைச் சேர்ந்த இரண்டுபேர் இறந்தனர். விசாரணை முடித்துக் கொள்ளப் பட்டது. தற்போது மீண்டும் தொடர்கிறது. அதேபோல 2006 பக்ரீத் அன்று குஜராத் மோடாசா குண்டுவெடிப்பில் ஒரு சிறுவன் சாவு.

குற்றவாளிகள் விடுவிடுப்பு
குஜராத் காவல்துறை பிரக்யாசிங் தாக்கூரையும் கூட்டாளி களையும் ஒன்றும் செய்யாமல் நுஒடிநேசயவந செய்துவிட்டது. அதாவது அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள் என்று சொல்லப் பட்டது. ஏனென்றால் மோடி அரசாங்கத்தை நடத்துகிறவர் காவல்துறையை கையில் வைத்திருப்பவர். viduthalai/20081201/

சென்னை, டிச. 2- மத தீவிரவாத சக்திகளான ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார்க் கும்பலை நாட்டில் நடமாட விடாதீர்கள். இதில் கட்சி வேற்றுமை இருக்கக் கூடாது. மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
சாமியார் பெயரை மாற்றிக் கொண்டு

சாமியார் என்றாலே போலிதான். இதில் போலிச் சாமியார் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை. சாமியார் ஆசிரமம் நடத்துவதாக சொல்லிக்கொண்டு பெயரை மாற்றிக் கொள் கின்றான். யார் மகந்த் என்று கேட்டால் அமிர்தானந்த். நம்ம ஊர் மஞ்சக்குடி அய்யர் எப்படி தயானந்த சரஸ்வதி ஆனார்கள் பாருங்கள் - அதுமாதிரி - இவர் யார்?
தயானந்த பாண்டே

வடநாட்டுப் பார்ப்பனர். இவருடைய பெயர் என்னவென்று சொன்னால் தயானந்த பாண்டே. பாண்டே என்றாலே வட நாட்டிலே பீகாரிலே பார்ப்பான் என்று அர்த்தம். தயானந்த பாண்டே திடீரென்று மகந்த் அமிர்தானந்த் ஆகிவிட்டார். அவர் எப்படி ஆனார் என்று இன்றைய விடுதலையைப் பார்த்தீர் களேயானால், நம்முடைய கவிஞர் அவர்கள் அருமையாக எழுதியிருக்கின்றார் - ஒற்றைப் பத்தியிலே.

சாமியாரின் வளமான தொழில்
சங்கராச்சாரியாரின் விலை என்ன? எட்டு ஆண்டு களுக்கு முன்னாலே இந்திய இராணுவத்தில் விமானப் படையில் பணியாற்றியவர். அதன் பிறகு வாரணாசி - காசிக்கு வந்தார். சாமியார் தொழில் வளமான தொழில் என்பதை உணர்ந்தார். சபலம் தட்டியது. இண்டஸ்ட்ரிலேயே முதல் போடாத இண்டஸ்ட்ரி ஒன்று உண்டு என்று சொன்னால் - அது சாமியார் இண்டஸ்ட்ரிதான் (கைதட்டல்).

ஒன்றுமில்லை. காவிபோட வேண்டும், காவிக்கு வழியில்லை என்றால், வடநாடாக இருந்தால் கோவணம், கோவணமும் கிடைக்கவில்லையென்றால் - உச்சக் கட்டம் - நிர்வாண சாமியார் (கைதட்டல்). வாரணாசியில் ஏகப்பட்ட சங்கராச்சாரியார்கள் அங்கு இருக்கின்றார்கள். பெரிய போட்டி. சங்கராச்சாரியார் பதவியை இவர் விலைக்கு வாங்கினார். சங்கராச்சாரி பதவி ரூபாய் 15 லட்சத்திற்கு

வாரணாசியில் உள்ள ஒரு மடத்திற்கு ரூபாய் 15 லட்சத்திற்கு கொடுத்து அந்த மடத்தின் சங்கராச்சாரியார் பதவியை விலைக்கு வாங்கிவிட்டார். சங்கராச்சாரி பதவி என்பது ஏலம் போடுகின்ற பதவி அல்ல. இவரெல்லாம் கடவுளோடு பேசினாரென்றும், தானே கடவுள் என்றும் சொல்லக் கூடிய அளவிற்கு இருக்கக் கூடியவர்கள். இந்த செய்தியை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளவேண்டும்.

2007 ஆம் ஆண்டு மே மாதம் அய்தராபாத்தில் மெக்கா மசூதி குண்டுவெடித்தது. 2007 அக்டோபர் குவாஜா மொய்கவதீன் சிஷ்டி தர்கா அஜ்மீர் குண்டு வெடித்தது. 2008 மாலேகாவ்ன் குண்டு வெடிப்பு. ஆறுபேர் சாவு.

90 பேர் படுகாயம். சாத்வி பிரக்யா சிங் தாகூருக்கு மோட்டார் சைக்கிள் சொந்தம்.

மோட்டர் சைக்கிள் இல்லை என்றால் துப்பு துலங்கியிருக்காது
அந்த மோட்டார் சைக்கிள் இல்லையென்றால் இந்த துப்புவே வெளியே வந்திருக்காது.

பிரக்யா சிங்தாகூருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை சுனில் ஜோஷி என்பவருக்கு 2004-ல் கொடுத்தார். அவர் இறந்தபின் கல்சங்கரா என்பவர் அதைப் பயன்படுத்தி குண்டு வைத்தார். இந்து மிலிட்டரி ஸ்கூல் என்று நடத்துகிறார்கள். நாம் யாராவது முஸ்லிம் மிலிட்டரி ஸ்கூல் நடத்தினால் அனுமதிப்பார்களா? அதை விடுவார்களா?

இந்து மிலிட்டரி ஸ்கூல்
ஆனால், இந்து மிலிட்டரி ஸ்கூல் நடத்தி நூற்றுக் கணக்கில் வன்முறையாளர்களை, தீவிரவாதிகளை பயங்கரவாதிகளை, மதவெறியர்களை உருவாக்கி அனுப்புகிறார்கள் என்று சொன்னால், அது சாதாரணமா?

அது மட்டுமல்ல, பிரக்யாசிங் தாக்கூர், லெப்டினென்ட் கர்னல் சிறீகாந்த் பிரசாத் புரோகித், தயானந்த் பாண்டே (சங்கராச்சாரியார்) உள்பட பத்துப்பேர் கைது செய்யப்பட்டனர். நண்பர்களே, இந்த நேரத்திலே செய்தி முதலில் ஒன்று, இரண்டு என்று வந்தவுடனே இதை சாதாரணமாகக் கண்டு பிடிக்க மாட்டார்கள் என்று நினைத்தார்கள்.

முதலில் வீரம் பேசியவர்கள்
செய்தி நிறைய வந்தவுடனே என்ன சூழ்நிலை? இனிமேல் தாக்குப் பிடிக்க முடியாது என்று சொன்னவுடனே முதலில் வீரம் பேசினார்கள். தீவிரவாதமா? ஆகா, யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பேசினார்கள்.
உண்மைகளை விசாரிக்கும் குழு

இப்பொழுது அடுத்தபடியாக அத்வானி சொல்லுகின்றார் - அதெல்லாம் சங்பரிவார்க்கும் அதற்கும் சம்பந்தமில்லை. அடுத்து பி.ஜே.பி.யினுடைய தலைவர் ராஜ்நாத் சிங் சொல்லுகின்றார் - அவர்கள் எல்லாம் நிரபராதிகள். உடனே இதைப்பற்றி காவல்துறை எடுத்து விசாரிக்கிறது.

விசாரிக்கிறபொழுது உண்மைகளை வரவழைக்கிறார்கள். இன்னும் கேட்டால் உண்மையைக் கண்டறியக் கூடிய பரி சோதனைகளை எல்லாம் நடத்துகின்றார்கள். இவ்வளவும் செய்த பிற்பாடு அவர்கள் உண்மையை வரவழைக்க முயன்ற நேரத்திலே பல தகவல்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்புபடுத்தி வந்து கொண்டிருக்கின்றன. இந்த விசாரணையைத் தடை செய்ய வேண்டும் என்கிற அளவிற்குப் போகிறார்கள்.

அதுமட்டுமல்ல, இதை நிறுத்த வேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கின்றார்கள். எந்த அளவுக்கு என்றால், இப்படி நிறைய செய்திகளை சொல்லலாம். ஒன்றே ஒன்றைநான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
மிலிட்டரியைக் கொச்சைப்படுத்தாதீர்கள் என்றுபி.ஜே.பி. யினர் சொல்லுகின்றார்கள்.

நீங்கள் மிலிட்டரியை யும், மிலிட்டரி அதிகாரிகளையும் கொச்சைப்படுத்தாதீர்கள் என்று நடைமுறையில் என்ன செய்திருக்கின்றார்கள்?.

ரிட்டை யர் கூறுகிறார்கள் ரிட்டையர் ஆனவன் அங்கு அதிகாரத்தைப் பயன்படுத்தியிருக்கின்றான். துப்பாக்கியைப் பயன்படுத்தியிருக்கின்றான். இன்னும் வரிசையாகச் சொல்லவேண்டுமானால், ஏராளமான செய்திகள் இருக்கின்றன. ஒரு நாவல் படிக்கிற மாதிரி அவ்வளவு சுவையாக இருக்கிறது. பரபரப்போடு அவ்வளவு செய்திகள் இருக்கின்றன.

இரண்டு நாட்களுக்கு முன்னாலே டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் எழுதியிருந்தார்கள். இன்றைக்கு காலையிலே வந்திருக்கின்ற டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் கூட எழுதியிருக் கின்றார்கள். அதை எடுத்துச் சொல்லுகின்றார்.

Mind your words B.J.P leaders should not shoot off their mouths.

நல்ல அறிவுரையை ஜாடையாக சொல்லுகின்றார். நீ போய் முட்டாள்தனமாக உளறிவிடாதே. நிறைய விஷயம் வர இருக்கிறது. அதனால் நீ ஜாக்கிரதையாக இரு. வாயைப் பொத்திக்கொண்டிரு. நீ வெளியே வந்து சொல்ல ஆரம்பித்தால் எல்லாம்போய் விடும். பல தகவல்கள் இன்னும் வெளியே வர இருக்கின்றன என்று அவர்களுக்கு உதவி பண்ணுவதற்காகத்தான் ரொம்பத் தெளிவாகச் சொன்னார்.

இங்கே இதைத் தொடர்ந்தால் உள்நாட்டு யுத்தம் வரும் என்று பேசக் கூடிய அளவுக்கு இருந்தால் இப்படி பேசியவர் வெளியே இருக்கலாமா? தயவு செய்து நினைத்துப் பார்க்க வேண்டும் (கைதட்டல்).

மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதே. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பதைப்போல தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் என்று சொல்வதா? அல்லது இஸ்லாமியர்கள் என்று சொல்லுவதா? அல்லது கிறித்தவர்கள் என்று சொல்லுவதா?
இராணுவத்தைக் கைக் கொள்வார்களாம்?

ஆகவே உள்நாட்டு யுத்தத்தையே நாங்கள் நடத்துவோம். நாங்கள் தீவிரவாதத்தை நடத்துவோம். நாங்கள் இராணு வத்தையே கைக் கொள்வோம். நாங்கள் எல்லாம் வெடிகுண்டு களுக்கு ஏற்பாடு செய்வோம். அந்தப் பழியை இஸ்லாமியர்கள் மீதோ, கிறித்தவர்கள் மீதோ, சிறுபான்மையினர்மீதோ அல்லது மற்றவர்கள் மீதோ போடுவோம் - நடவடிக்கை எடுக்கக் கூடாது.

கேட்டால் உள்நாட்டு யுத்தம் வரக்கூடிய அளவிற்கு அவர்கள் துணிந்திருக்கின்றார்கள் என்றால் அதை அனுமதிக்கலாமா? அங்கு இருக்கிறதோ - இல்லையோ தமிழ்நாடு அதற்கு வழிகாட்ட வேண்டாமா?
கலைஞர் வகுத்த வியூகம்

நாற்பதும் கலைஞர் அவர்கள் வகுத்த வியூகத்தினாலே நாற்பது தொகுதிகளிலும் வெற்றபெற்ற காரணத்தினால்தான் மத்தியிலே மதவெறி ஆட்சி இல்லாமல் ஆக்கப்பட்டது. அதை நன்றாக நினைவிலே வைத்துக் கொள்ளவேண்டும். இதற்கு நாம் எப்படி பதில் சொல்லப்போகிறோம் என்று சொல்லும்பொழுது இந்த உணர்வை முன்னிலைப்படுத்த வேண்டும்.

அடுத்த தலைமுறை மிக முக்கியம். அடுத்த தேர்தல் என்பதை விட அந்த தேர்தல் அடுத்த தலைமுறையை உருவாக்குவதற்கு பாதுகாப்பதற்கு எப்படி இருக்கவேண்டும் என்பதை எல்லோரும் நினைக்கவேண்டும்.
ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவாரை எதிர்க்க வேண்டும்

ஆகவேதான் இப்படிப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் பயங்கரவாதத்திற்கு வெளிப்படையாக இவைகள் எல்லா செய்திகளையும் எடுத்துச் சொல்லி, மக்கள் மத்தியிலே இதைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய கடமை நமக்குண்டு. ஆர்.எஸ்.எஸ்.சை மதவெறியை எதிர்க்கிறோம் என்று சொல்லக் கூடிய அத்துணை கட்சிக்காரர்களுக்கும் உண்டு. காங்கிரஸ் நண்பர்கள் இதை செய்யவேண்டும். கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டும். மற்றவர்களும் இதை செய்யவேண்டும்.

அரசியல் பணி வேறு - நாட்டுப் பணிவேறு
அரசியலிலே எந்த அணிகள் என்பதெல்லாம் இருக்கட்டும். ஆனால், இது நாட்டினுடைய பிணிகள். எனவே இதை சொல்லுகிற நேரத்திலே இதை ஒட்டு மொத்தமாகக் குரல் கொடுத்து எல்லாம் சேர்ந்து குரல் கொடுக்க நீங்கள் வராவிட்டால்கூட, ஒருவேளை இவர்களோடு சேர்ந்தால் அவர்கள் கோபித்துக் கொண்டு அணி சேராமல் போய்விடுவார் களோ என்பதற்காக நீங்கள் நினைக்காவிட்டாலும் பரவா யில்லை.

இந்தச் சக்திகளை நடமாட விடாதீர்கள்!
தயவு செய்து இந்தச் சம்பவங்களை நீங்கள் வெளியே கொண்டு வாருங்கள். மக்கள் மத்தியிலே சொல்லுங்கள். அழுத்தமும் கொடுங்கள். உரிய தண்டனை கொடுங்கள். இவைகளை - இந்தச் சக்திகளை நடமாட விடாதீர்கள்.

அதன்மூலமாக அமைதிப் பூங்காவாக இருக்கின்ற நாட்டை அமளிக்காடாக ஆக்குவதற்கு உள்நாட்டு யுத்தத்தை நடத்துவோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வாஜ்பேயிகளும், அத்வானிகளும், இந்த நாட்டிலே இருக்கின்ற பார்ப்பன ஏடுகளும், மற்றவர்களும் வருகிறார்கள் என்று சொன்னால், அதற்கு துளியும் இடம் கொடுக்காத அளவிற்கு தமிழ்நாடு அதற்குத் தயாராகட்டும், தயாராகட்டும் என்று சொல்லி முடிக்கின்றேன்.

- இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
viduthalai/20081202/

மாலேகான் வழக்கில் கவனம் தேவை!

இந்தியத் துணைக்கண்டத்துக்குள் தீய சக்திகளால் வன் முறைக்குப் பயன்படுத்தப்படும் களம் பெரும்பாலும் மகாராட்டிர மாநிலம் - மும்பையாகத்தானிருந்து வருகிறது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மும்பையில்தான் கலவரம் வெடித்தது. 17 இடங்களில் குண்டுவெடித்ததில் 300 பேர் பலியானார்கள் (1993 மார்ச், 12).

மும்பையில் மட்டும் அடிக்கடி வன்முறைகள் வெடிப்பதற்கு முக்கிய காரணம் இருக்கவேண்டும்; அதுகுறித்து புலனாய்வுத் துறை ஆழமாக ஆய்வு செய்யக் கடமைப்பட்டுள்ளது.

மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட காந்தியார் அவர்களைப் படுகொலை செய்த அமைப்பின் உற்பத்தி கேந்திரம் அதுதான். வன்முறையை மட்டுமே சுவாசித்துக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். தாய் வீடும் அதுதான்.

மண்ணின் மைந்தர் என்ற பெயரில் வெளி மாநிலத்தவர் களைத் தாக்குவது - கொல்வது - வணிக நிறுவனங்களைத் தாக்கி அழிப்பது - தீ வைப்பது எல்லாமே பெரும்பாலும் அங்கு தான் நடைபெறுகிறது.

மகாராட்டிர மாநிலம் மாலேகான் பகுதியில் இப்பொழுது குண்டுவெடித்ததே (செப்டம்பர் 29) அதே இடத்தில் 2006 செப்டம்பர் 6 இல் குண்டு வெடித்து 40 பேர் கொல்லப்பட்டனர் என்பதும் நினைவுகூரத் தக்கதாகும்.

தனியார் இராணுவக்கல்லூரி நடத்தி இந்துத்துவா தீவிரவாதி களை உற்பத்தி செய்து கொண்டிருப்பதும் அந்த வட்டாரம்தான்.

இந்துத்துவாவின் இத்தகு தீய நடவடிக்கைகள் மற்றவர்களை ஈர்த்திருப்பதற்கும் கூடுதல் வாய்ப்பு உண்டு என்பதை மறுக்க முடியுமா?

1993 இல் மும்பையில் வெடித்த கலவரத்திற்கு சிவசேனா - அதன் நிறுவனர் பால்தாக்கரே உள்ளிட்டோர் முக்கிய முனைப்புச் சக்திகளாகவிருந்ததை நீதிபதி சிறீ கிருஷ்ணா ஆணையம் அறிக்கையாக அதிகாரப்பூர்வமாக அளித்த பிறகும்கூட, அதன்மீது ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடவில்லை அரசுகள்.

1992 டிசம்பர் 6 ஆம் தேதி - அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளைத் தேர்வு செய்து 450 ஆண்டுகால வரலாறு படைத்த முசுலிம் சிறுபான்மையினரின் வழிபாட்டு இடத்தை ஒரு பட்டப் பகலில் இடித்து நொறுக்கிய குற்றவாளிகள் கொஞ்சம்கூட அச்சம் இல்லாமலும், வெட்கம் இல்லாமலும் ராஜநடை போட்டுத் திரிகிறார்கள்.

அந்த இடிப்புக் காரணமாக நாடு தழுவிய அளவில் 900 பேர் வன்முறை நடவடிக்கைகளால் கொல்லப்பட்டனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை அண்மைக்காலத்தில் வன் முறைகள் வெடித்துக் கிளம்புவதற்கான பொறுப்பை ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் உள்ளிட்ட (அரசியல் கட்சி பி.ஜே.பி.) கூட்டம் ஏற்றுக்கொண்டுதான் தீரவேண்டும்.
இன்றைக்கும்கூட பெண்கள் உள்பட துப்பாக்கிச்சுடும் பயிற்சியினை ஆர்.எஸ்.எஸ். அளித்துக்கொண்டுதானிருக்கிறது.

சிறுபான்மை மக்களை வன்முறையில் படுகொலை செய்ய விசுவ இந்துபரிசத் திரிசூலங்களை வெளிப்படையாக வழங்கிக் கொண்டுதானிருக்கிறது.

இத்தகையவர்கள் ஆயிரம் பேர் இந்திய இராணுவத்தில் ஊடுரு வியிருக்கின்றனர் என்கிற தகவல்களும் ஏடுகளில் இடம்பெறுகின்றன.

இப்படி வன்முறையில் ஈடுபடும் இந்துத்துவாவைச் சேர்ந்தவர் மீது எந்தவித விசாரணையும் கூடவே கூடாது என்று பி.ஜே.பி. - சங் பரிவார்த்தலைவர்கள் மிகவும் வெளிப்படையாகவே அறிவிக்கிறார்கள். இதன்மூலம் சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒரு கூட்டம் நாட்டில் இருப்பது தெரிய வருகிறது. இவர்கள் மத்திய ஆட்சியிலும் இருந்தனர். பல மாநிலங்களிலும் ஆட்சியைக் கையில் வைத்துக் கொண்டுள்ளனர்.

அடுத்த பிரதமர் என்று (பாபர் மசூதி இடிப்பு வழக்குக் குற்றப் பத்திரிகையில் முதல் குற்றவாளி) எல்.கே. அத்வானியை பி.ஜே.பி. அறிவித்திருக்கிறது.
இப்படிப்பட்ட ஒரு நாட்டில் வன்முறைகள் நாளும் வெடிக்காதா? மக்கள் மத்தியிலே வன்முறை என்பது அங்கீகரிக்கப்பட்ட ஒன்றுதான் என்ற மனோபாவம் செழித்து வளராதா?

அந்நிய வன்முறைச் சக்திகளை எந்த எல்லைக்கும் சென்று அழிக்கவேண்டியது என்பதிலே இன்னொரு கருத்துக்கு இடம் இல்லை. அதேநேரத்தில், நம் நாட்டுக்குள்ளேயே வன்முறையை இயக்கமாக நடத்தும் சக்திகளை வேரும் வேரடி மண்ணோடும் அழிக்கவேண்டுமா - வேண்டாமா?
தாஜ் உள்ளிட்ட 5 நட்சத்திர தங்கும் விடுதிகளில் பெரும் வன்முறை வெடித்தது என்பதற்காக மாலேகான் பற்றிய நடவடிக்கைகளை ஓரம் கட்டி வைத்துவிடக் கூடாது.

மாலேகான் குண்டுவெடிப்புச் சதிகாரர்களைக் கைது செய்த திலும், புலன் விசாரணையிலும் மிக முக்கியமான பங்கு வகித்த காவல்துறை அதிகாரி ஹேமந்த் கார்கர் (தீவிரவாத எதிர்ப்புப் படையின் தலைவர்) மும்பைக் குண்டுவெடிப்பில் பலியானார் என்பது அதிர்ச்சிக்குரியதாகும். இந்த நிலையில், மாலேகான் வழக்கு விசாரணையும், குற்றப் பத்திரிகை தாக்கலும் பலகீனமாக ஆகிவிடக்கூடாது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக