புதன், 23 நவம்பர், 2011

WHY I AM NOT A MUSLIM .. 7

மிக சமயச் சார்புள்ளவர்கள் மோசமான மனிதர்களாக இருப்பார்கள் என்பது மனித இயல்புகளோடு இயைந்த பழக்கமுள்ளோருக்கு  நன்கு தெரிந்திருக்கும்."  .... Winwood Reade (1872)

1856-61-ல் இதற்கு முந்திய பதிவில் கூறிய சிறந்த இஸ்லாமிய அறிஞர்களிடமிருந்து முயிர்(Muir) என்பவர் தொகுத்த Life of Mahomet என்ற நூல் நான்கு தொகுதிகளாக வெளிவந்தன. ஆசிரியரான முயிர், முகமதுவின் வாழ்க்கையை மெக்காவில் வாழ்ந்த பருவம்; மெதினாவில் வாழ்ந்த பருவம் என்று  இரு பகுதிகளாகப் பிரிக்கிறார். இதில் முதல் பருவத்தில் முகமது மிகவும் சமய ஈர்ப்போடு  உண்மையைத் தேடும் உன்னதராகவும், ஆனால் இரண்டாம் பருவத்தில் அதிகார ஆணவத்தோடு உலக நன்மைகளுக்காகப் போராடும் மனிதராகவும் இருப்பதைக் காண்கிறார். (87)

அந்நூலில் இருந்து சில பகுதிகள்:
மெக்காவில் ஆரம்பித்த வாழ்க்கை மெதினாவில் பெருத்த அளவில் மாறுகிறது. புது வாசகங்கள் சுவர்க்கத்திலிருந்து மிகச் சாதாரணமாகவும், அரசியல் காரணங்களுக்காகவும் இறக்கப்பட்ட்டன. புதிய போர்கள் ... புதிய கட்டளைகள் ... புதியதாகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட இடங்கள் ... இவை எல்லாமே கடவுளின் கட்டளை என்ற பெயரில் நடந்தேறின. அது மட்டுமின்றி, அவரின் தனிப்பட்ட விருப்புகள் வெறுமனே ஏற்றுக் கொள்ளப்பட்டதோடு, தெய்வீக அனுமதியும் அவரது பல விருப்புகளுக்குத் தரப்பட்டன. தனிச் சட்டமாக பல மனைவியரை அவர் சேர்த்துக் கொள்ளவும் வஹி வந்தன. வளர்ப்பு மகனின் மனைவியை மணம் செய்வதற்கான உத்தரவும் இப்படி வந்தனவையே.

கடவுளின் பெயர் அவரது வாளுக்கு ஒரு தனி மகத்துவத்தை அளித்தது. கடவுளின் எதிரிகளை அழித்தொழித்து தன் புது மதத்திற்கு வலு சேர்க்க முடிந்தது. 'எங்கெங்கு இஸ்லாமை நம்பாதவர்கள் இருக்கிறார்களோ அவர்களை வெட்டுங்கள்' என்பதே இஸ்லாமின் தாரக மந்திரமானது. (87)

பலதார முறை, விவாகரத்து, அடிமைகள் வைத்திருத்தல் என்பவை சமுதாய தர்மத்தின்  வேரினையே ஆட்டியது. தனிமனித வாழ்க்கையையும், சமூகத்தின் ஒழுங்கமைப்பையும் மாற்றியது. ஆனால் பெண்களுக்கான முகத்திரை அவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்தது. அறிவுச் சுதந்திரம், தனிமனித  முடிவுகள் என்பன எல்லாமே நசுக்கப்பட்டன. (88)

Caetani, Sprenger, Margoliouth (Mohammaed and the Rise of Islam), Dr. Macdonald (Aspects of Islam),  என்பவர்களும் முகமதுவின் வாழ்க்கையைப் பற்றி எழுதுகிறார்கள்.

Margoliouth :   தேவ வார்த்தைகள் இறக்கப்பட்ட போது முகமதுவிற்கு ஏற்பட்ட வலிப்பு (fits), காதில் கேட்ட மணியொலி பற்றி இஸ்லாமிய வரலாற்றில் கூறப்பட்டுள்ளன. இதைப் பற்றி Margoliouth குறிப்பிடுகிறார். (89)

யூதர்களோடு போர்:
யூதர்கள் முகமதுவை கடவுளின் நபியாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். அவர்கள் மீது பலதடவை படையெடுக்கப்படுகிறது. அதில் முதல் மூன்று போர்க்களங்களிலும்  முகமது தோல்வியடைகிறார். அடுத்த போர்க்களம் நக்லா என்னுமிடத்தில் நடைபெறுகிறது. இப்போரில் முகமது நேரடியாக கலந்து கொள்ளவில்லை. இப்போர் மெக்காவினரின் புனித மாதத்தில், போர்கள் தடை செய்யப்பட்ட நாட்களில்  நடைபெறுகிறது. ஆனாலும் வெற்றி பெற்று, கிடைத்த கொள்ளையில் ஐந்தில் ஒரு பங்கை தனக்காக்கிக் கொள்கிறார். அதோடு நடந்ததை 'சரிக்கட்ட' புதியதாக ஒரு வரமிறங்குதல் நடக்கிறது. (சுரா: 2.217) இஸ்லாமிற்கு எதிர்ப்பிருந்தால் புனித மாததிலும் போர் நடத்தலாம் என்பதுவே அந்த புதிய வஹி. அதோடு ஒவ்வொரு போர்க்கைதிக்கும் தலைக்கு 40 வெள்ளிக்காசுகளை ஈட்டுப் பணமாகப் பெற்றுக் கொள்கிறார்.(92)

முகமதுவிற்கு எதிராகவே யூதர்கள் இருக்கிறார்கள். இந்த நிலை பாத்ர் (Badr) போர்க்களத்தில் அவர் பெற்ற வெற்றியால் மாறுகிறது. 49 மெக்காவினர் கொல்லப்ப்டுகிறார்கள். அவர்களின் தலைகள் கொய்யப்பட்டு முகமதுவின் காலடிக்கு வந்து சேர்கின்றன. முகமது, "அரேபியாவின் மிகச் சிறந்த ஒட்டகத்தை விடவும் இதுவே எனக்கு உகந்ததாக இருக்கிறது" என்று சொல்லி மகிழ்கிறார். (93)

இதன் பிறகு நடந்த சில கொடூரக் கொலைகள் பற்றியும் முயிர் கூறுகிறார். ஒருவர் Ocba. அடுத்தவர் ஒரு கவிதையாயினி - Asma bint Marwan. Aws tribe-யைச் சார்ந்தவர். இஸ்லாம் மீது நம்பிக்கையில்லாதவர். பல கவிதைகள் எழுதியுள்ளார்.  தன்னின மக்களைக் கூட கொன்று குவிக்கும் ஒரு புதியவரை எப்படி நபி என்று நம்புவது என்று அவரது கவிதை ஒன்று கேள்வியெழுப்புகிறது. (93)

தனக்கு எதிரியாக இருக்கும் இப்படிப்பட்ட ஒருவரை யார் கொல்வது என்று முகமது தன் குழுவினரிடம் கேட்கிறார். Umayr ibn Adi என்பவர் பொருப்பெடுத்துக் கொள்கிறான். அன்றிரவே கவிதையாயினியைக் கொல்ல வருகிறான். தன் சின்னக் குழந்தைகளோடு அவர் தூங்கிக் கொண்டிருகிறார்.  ஒரு கைக்குழந்தை அவளின் மார்பில் தூங்கிக் கொண்டிருக்கிறது. அந்தக் குழந்தையைத் தள்ளிவிட்டு கவிதையாயினியின் வயிற்றில் தன் கத்தியைச் சொருகி, அவரைக் கொல்கிறான்.அடுத்த நாள் முகமது மசூதியில் இஸ்லாமியரின் நடுவில் இக்கொலைக்காக Umayr ibn Ad-யைப் பாராட்டுகிறார்.

அடுத்த கொலை - Kab ibn al-Ashraf என்ற யூதர். முகமது தன்னை ஆஷ்ரபிடமிருந்து  என்னை விடுவி என்று சத்தமாகக் கடவுளிடம்  வேண்டுகிறார்.  நயவஞ்சகமாக முகமதுவின் நம்பிக்கையாளர்கள் அவரைக் கொன்று தலையை முகமதுவின் காலடியில் சமர்ப்பிக்கின்றனர். (94). இக்கொலை முடிந்ததும் முகமது, 'உங்கள் சக்திக்கு உட்பட்டிருந்தால் எந்த யூதனையும் கொல்லுங்கள்' என்கிறார்.

இன்னும் இது போன்ற பல வெறித்தாண்டவங்களை இந்த நூல் குறிப்பிடுகிறது. கொடூரமான கொலைகள், சித்திரவதைகள் இவையெல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாய் சேர்த்து நாம் முகமதுவின் குணத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். (99)

ZAYANAB  AFFAIR
ZAID என்ற தன் வளர்ப்புமகனின் மனைவியான ZAYANAB-வை எவ்வாறு திருமணம் செய்து கொள்கிறார் என்பது விவரிக்கப்படுகிறது.(அந்தக் கதையை இங்கு சொல்லாமல் விட்டு விடுவது நல்லது!)  அதிலும் அவர் தன் இன்னொரு மனைவி ஆயிஷாவின் பக்கத்திலிருக்கும்போது வஹி வருகிறது. வஹி முடிந்ததும், 'யார் ஜைனபிடம் போய் அவளை கடவுள் நபியோடு இணைத்து விட்டார் என்பதைக் கூறுவது?' என்று கேட்கிறார். இதற்குப் பதில் போல் ஆயிஷா, 'கடவுள் உங்கள் தொழுகையை வெகு உடனடியாகக் கேட்டு விட்டாரே!' என்று 'ஜோக்' அடிக்கிறார்! !

சுரா 66.15-ல் நடக்கும் 'சக்களத்தி சண்டை' பற்றியும் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. மனைவிகளோடு மட்டுமல்லாது அடிமையான மேரி என்னும் கோப்டிக் பெண்ணோடு அவரது மனைவி ஹப்சாவிற்குக் குறிக்கப்பட்ட  'நாளில்' முகமது இருந்ததால் வந்த சண்டை சச்சரவுகளை மறுபடியும் ஒரு வஹி மூலமே சமாளித்துக் கொள்கிறார். இவர்கள் சமாதானமாக இல்லாவிட்டால் அனைத்து மனைவியரையும் மொத்தமாக 'தள்ளி வைத்து விட்டு' மிகவும் கீழ்ப்படிதலுள்ள பெண்களை மறுபடி திருமணம் செய்து கொள்வேன் என்கிறார். (101)

THE SATANIC VERSES:

இப்போது பரவலாக எல்லோருக்கும் தெரிந்த இந்த சொற்களை முயிர் 1850-ல் முதல் முறையாகப் பயன்படுத்துகிறார். al-Tabari, Waqidi போன்ற அப்பழுக்கில்லாத இஸ்லாமியச் செய்திகளிலிருந்து தான் இந்த வரலாறு கிடைத்துள்ளது.

மெக்காவின் கபா அருகில் மெக்காவினைச் சார்ந்த சிறந்த பெரியவர்களோடு அமர்ந்து உரையாடும்போது முகமது  சுரா 53-ஆக இதனைக் கூறுகிறார். அப்போது ஷைத்தான் அந்தப் பெரியவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் சில வார்த்தைகளை முகமது வாய்மூலம் வரச் செய்கிறான்.

                                           These are excited Females
                                           Whose intercession verily is to be sought after.

தாங்கள் வணங்கும் தெய்வங்களைப் பற்றியும் வந்ததால் அந்த மெக்காவின் மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். அதனாலேயே இஸ்லாமியரோடு சேர்ந்து தொழுகிறார்கள். ஆனால் ஜிப்ரேல் தோன்றி, முகமதுவைக் கடிந்து கொண்டு உண்மையான வரிகளைச் சொல்கிறது.

What! shall there be male progeny unto you, and female unto Him?
That were indeed an unjust partition!
They are naught but names, which ye and your fathers have invented.

முகமது இதுபோல் சிலைவழிபாட்டுக்கு அனுசரணையாகச் சொல்லியிருப்பாரா என்ற ஐயம் இஸ்லாமியருக்கு ஏற்படுவதும், இந்த நிகழ்வு அவர்களைப் பெரிதும் கஷ்டப்படுத்தும் என்பதும் உண்மை.நம்பிக்கையான இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்பானவைகளைப் பார்க்கும்போது இந்நிகழ்வை மறுக்க இயலாது. al-Tabari போன்ற ஒரு முழு இஸ்லாமியர் இது போன்ற ஒரு நிகழ்வைக் கற்பனை செய்து சொல்லியிருப்பார் என்று நினைக்க முடியாது; அல்லது பொய்யான ஒரு தகவலைச் சேகரித்து சொல்லியிருப்பாரென்றும் சொல்ல முடியாது.

அதோடு, அபிசீனியாவிற்குத் தப்பி ஓடிய இஸ்லாமியர் மெக்காவினர் மனம் மாறி இஸ்லாமிற்கு வந்து விட்டார்கள் என்று தெரிந்து மீண்டும் திரும்பி வருகிறார்கள். இதனால் இது முகமது மறந்து சொல்லிய சொல்லல்ல; ஆனால்,   மெக்காவினரைத் தன்பக்கம் இழுக்க, திட்டமிட்டு சொல்லியதாகவே தெரிகிறது.

இந்நிகழ்வால் முகமதுவின் உண்மைத் தன்மை மீது கேள்வியெழுகிறது. ஷைத்தானே இப்படி சொல்ல வைத்தாலும், எப்படி முகமது இப்படி சொல்லியிருக்கலாம்? ஏன் கடவுளும் இப்படி ஒரு நிகழ்வு நடக்க அனுமதித்தார்? இதேபோல் முகமது வேறு சில பகுதிகளையும் மாற்றியிருக்கலாம் அல்லவா?

The peace if Hudaibiya:
 இதேபோல் இன்னொரு முறையும் முகமதுவின் செயல்கள் முறைதவறி இருந்ததாக அவரது மக்களாலேயே குற்றம் சாட்டப்பட்டார்.

மெதீனாவைத் தன் வசமாக்கியதும், அதன் பின் மெக்காவைத் தன்வசம் கொண்டுவரத் திட்டமிடுகிறார். ஆயினும் அதற்கான காலம் கனிந்து வராததால் மெக்காவினரோடு ஒரு ஒப்பந்தம் இடுகிறார். ஒப்பந்தத்தின் பெயர் ஹூடெய்பியா ஒப்பந்தம். இதன் மூலம் முகமது வரும் ஆண்டில் மெக்காவிற்குத் தாராளமாகச் செல்லலாம். அதற்குப் பதில் அவர் தன்னை ஒரு நபியாக அழைத்துக் கொள்ளக் கூடாது; இஸ்லாமியத்தைப் பரப்பவும் முயலக்கூடாது. ஆயினும் இறுதியில் இந்த ஒப்பந்தத்தை அவர் மீறவும் செய்கிறார்.

மேற்கூறியவைகளை வைத்துப் பார்க்கும்போது Dr. Margoliouth தொகுத்த Ibn Ishaq சொல்லிச் சென்ற முகமதுவின் பண்புகளைக் கீழ்க்கண்டவாறு தொகுக்க முடியும்.

Ibn Ishaq சொல்லியவைகளைப் பார்க்கும்போது முகமதுவின் குணநலன்கள் மிக அதிகமான அளவு விமர்சனத்துக்குள்ளானவை. தன் முடிவை அடைய எத்தனை வழிகளையும் அவர் எடுத்துக் கொண்டார்.  தன் சார்பாளர்களுக்கும் இதையே போதித்தார். மெக்காவினரின் நற்பண்புகளைத் தனக்கு ஏற்றாற்போல் பயன்படுத்திக் கொண்டார்; ஆனால் அதே போல் அவர்களிடம் அவர் அந்த நற்பண்புகளைக் காண்பித்ததில்லை. கொடூரக் கொலகள், மனித அழிப்புகள் எல்லாமே அவரிடம் பார்க்க முடிகிறது. மெதீனாவின் அரக்கத் தலைவனாக, போரில் வென்றவைகளைப் பங்கு போடுபவராக, இதையெல்லாம் தன் மக்களுக்குப் போதிப்பவராக இருந்துள்ளார். தான் செய்வது  அத்தனையும்  சரியென்று சொல்ல கடவுளைச் சாட்சியாக்கினார். எந்தக் கொள்கையையும் விட்டுக் கொடுத்து தன் அரசியல் சுய லாபத்தைப் பெருக்கிக் கொண்டார். வாழ்வில பல சமயங்களில் தான் ஒரு நபி என்பதையோ, தான் சொல்லும் ஒரே கடவுள் என்ற தத்துவத்தையோ விட்டு விட தயங்கியதில்லை.

மூன்றாம் இஸ்லாமிய நூற்றாண்டில் என்ன காரணங்களினாலோ    Ibn Ishaq மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டார். ஆயினும் யாரும் அவரது நூலில் அவர் முகமதுவை மதிப்பிடுவதை இதுவ்ரை தவறானதென  சொல்லவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக