செவ்வாய், 29 நவம்பர், 2011

ஓ! கோயிலுக்குச் செல்லும் குணாளர்களே!

தீபாவளி கதையோடு கங்கையை இணைத்து மூக்கு, கை வைத்து பல-வற்றை அவிழ்த்துக் கொட்டுகிறார்கள்.
கங்கா ஸ்நானம் ஆயிற்றா?


தீபாவளியன்று அருள் உபதேசம் செய்துவந்த சங்கராச்சாரியார்கள் கங்கா ஸ்நானம் ஆயிற்றா? என்றும் கேட் கிறார்கள். தீபாவளி அன்று அதிகாலையில் கங்கா ஸ்நானம் செய்வது உத்தமம். அப்போது தண்ணீரில் கங்கையும், எண்ணெய்யில் லட்சுமியும், சிகைக்-காயில் சரஸ்வதியும், குங்குமத்தில் கவுரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடையில் மகாவிஷ்ணுவும் குடியிருப்பது அய்திகம்.
(ராணி 31.10.2010, பக்கம் 94)
தண்ணீரில் கங்கை, எண்ணெய்யில் லட்சுமி என பல வகைகளில் கதை விடுகிறார்களே, இவற்றை எப்படி நம்புவது, இப்படிக் கூறுவதற்கு ஆதாரம், நிரூபணம் ஏதாவது உண்டா? என்று யாரேனும் கேள்வி கேட்டு விடுவார்களே என்று பயந்து, கடைசி-யாக இது அய்திகம் என்று முடித்துக் கொள்வார்கள். சில நேரங்களில் இது நம்பிக்கை என்று முற்றுப் புள்ளியும் வைத்து விடுவார்கள். அய்திகம், நம்பிக்கை என்று சொல்லிவிட்டால் அதற்குமேல் யாரையும் யாரும் கேள்வி கேட்க முடியாதாம். அறிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இடம் இது. அரசியல் விஷயங்களில் முடிபிளந்து எழுதும் சோ போன்ற ஆசாமிகளும், கல்கிகளும் இதுபோன்ற விஷயங்களில் விவாதம் செய்ய வக்கற்ற நிலையில் அய்திகம் என்று மங்களம் பாடி முடித்துக்கொள்ளுகிறார்கள்.
கங்கைக்கும், தீபாவளிக்கும் என்ன சம்பந்தம்?
சரி, கங்கைக்கும் தீபாவளிக்கும் என்ன சம்பந்தம்? நியாயமான கேள்வி-தான். இதுபற்றி தினமலர் _ ஆன்மிக மலர் (30.10.2010) ஒரு கதையை அவிழ்த்-துவிடுகிறது.
தீபாவளி கதாநாயகனான நரகாசுரன் சத்யபாமாவின் உதவியுடன் கிருஷ்ண-ரால் கொல்லப்பட்டான். ஆனால், கங்கையோ சிவனின் தலையில் இருந்து-வந்த நதி. எனவே, தீபாவளியன்று அநியாயத்தை அழித்த கிருஷ்ணனையும், பாமாவையும் வழிபடுவது சரி. ஆனால், சிவனுடன் சம்பந்தப்படுத்தி, கங்கையில் ஸ்நானம் செய்ய வேண்டியது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
பகவான் விஷ்ணு, வாமன அவதாரம் எடுத்து மகாபலியை ஆட்கொள்வதற்காக உலகளந்தார். அவர், தன் பாதத்தை மேல் லோகத்துக்கு தூக்கியவுடன், பிரம்மா அந்தப் பாதங்களுக்குத் தன் கமண்டல நீரால் அபிஷேகம் செய்தார். அது ஆகாய கங்கையாகக் கொட்டியது. அது அப்படியே பூமியில் விழுந்தால் உலகம் தாங்காது என்பதால், சிவன் அதைத் தன் தலையில் தாங்கினார். பின்னர், பகீரதனின் கோரிக்கைக்கு இணங்க பூமி தாங்கும் வேகத்தில் இங்கு அனுப்பி வைத்தார். புனித நீர் எதுவாயினும் அது கங்கையே ஆகும்.
நம் வீட்டுக் குடத்தில் புனித நீரிட்டு, நூல் சுற்றி மந்திரங்களை ஓதும்போது கங்கை அதற்குள் ஆவாஹனம் ஆகிவிடுகிறது. எனவே, விஷ்ணுவுக்கும், சிவனுக்கும் கங்கை தீர்த்தம் சம்பந்தப்-படுகிறது. ஆக, பிரம்மா, சிவன், விஷ்ணு என்ற முப்பெரும் தெய்வங்களுக்கும் சம்பந்தப்பட்ட கங்கை நதியை நம் வீட்டுத் தண்ணீரில் ஆவாஹனம் செய்து தீபாவளியன்று நாம் கங்கா ஸ்நானம் செய்கிறோம்.
(தினமலர், 30.10.2010)
ஆக, கங்கை என்பது பிரம்மா, சிவன், விஷ்ணு என்ற முப்பெரும் தெய்வங்-களுக்கும் சம்பந்தப்பட்டதாம்.
கங்கையின் புனிதம் இதுதானா?
சரி, சிவன் தன் தலையில் குடியமர்த்-தியுள்ள இந்தப் புனித கங்கையின் உண்மையான நிலை என்ன?
புனிதம் என்றால் தெய்வீகத் தன்மை-யோடு முடிந்துவிட வேண்டியதுதானா? அதன் அழுக்கும், அசுத்தமும், சாக்-கடையைவிட மோசமான நிலையும் _ நோய் பரப்பும் தீங்கும் இந்தத் தெய்வீகப் புனிதத் தன்மையோடு ஒத்துப் போகிறதா? கங்கை நதி 2525 கி.மீ. தூரம் பாய்-கிறது. காசியில் மட்டும் நாள் ஒன்றுக்கு 20 மில்லியன் காலன் சாக் கடை கங்கையில் கலக்கிறது. நாள் தோறும் கங்கைக் கரையில் 400 பிணங் கள் எரிக்கப்பட்டு கங்கை நதியில் கலக் கப்-படுகின்றன. 9000 கிழட்டுப் பசுக்கள் கங்கையில் வீசி எறியப்படுகின்றன.


காசியில் 2 லட்சம் மக்கள் பட்டுத்-தொழிலில் ஈடுபடுகின்றனர். இத்-தொழில் சம்பந்தப்பட்ட இரசாயனக் கழிவு முழுவதும் கங்கையில்தான் சங்கமம் ஆகிறது.
1927, 1963, 1970 ஆகிய ஆண்டுகளில் காசியிலும், அதன் சுற்றுப் புறங்களிலும் மிகக் கொடுமையான தொற்றுநோய்கள் மக்களை விழுங்கின.
இந்திய அரசு ஒரு முக்கிய புள்ளி விவரத்தைத் தந்தது. இந்தியாவில் குழந்தை மரணம் 1000த்துக்கு 94 ஆகும். ஆனால், காசியிலும், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் 1000த்துக்கு 133 ஆகும். இதற்குக் காரணம் கங்கைப் புனித மாதாவின் கைங்கர்யம்தான். டாக்டர் ஹஷ்பி என்பார் இதுகுறித்துத் தெரிவித்த தகவல்களை விடுதலை வெளியிட்டதுண்டு. (6.7.1985)
இந்தப் புனித கங்கை ஓடும் நதி தீரத்திலே என்னென்னவெல்லாம் நடக்-கிறது? எழுதிட எழுதுகோலே கூசு-கிறது. இரவு முழுவதும் பீர் பாட்டில்-கள் உடைகின்றன. கூத்தும் கும்மாளமும்தான் (தனியாக பெட்டிச் செய்தி காண்க)
ஹரித்துவார், ரிஷிகேஷ், காசி என்னும் புண்ணியத் தலங்களிலும் கங்கைக்கரை ஓரமாக உள்ள வேறு பல கடவுள் நகரங்களிலும் எப்படியெல்லாம் தலைவிரித்தாடுகிறது என்று சொல்லுவது விடுதலை நாளேடு அல்ல. எய்ட்ஸ் நோய் பரவும் கங்கை தீரம்!
U. P. TEMPLE TOWNS UNDER AIDS THREAT என்று தலைப்பிட்டு விலா-வாரியான செய்திகளை நேரில் சென்று ஆய்வு செய்து வெளியிட்டு இருப்பது THE PIONEER (21.7.1997)
இவ்வளவு கசுமாலங்கள் களி கூத்-தடிக்கும் கங்கை நதிக்குத் தெய்வீக முலாம் பூசுகிறார்கள், சிவபெருமான் தலையில் குடியிருக்கும் தேவி என்று கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்கள் என்றால் இவர்களின் பக்தியையும், புத்தியையும் எந்தச் சாக்கடையில் கொண்டு போய்த்தான் கொட்டுவது!
கங்கை நீர் எவ்வளவு நாளானாலும் கெடாமல் இருக்கும் அதிசயம் எப்படி நிகழ்கிறது? கங்கை நீரின் பரிசுத்தத்தைப் பரிசோதித்தவர்கள் ஓர் உண்மையைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அது _ கங்கை ஒரு தெய்வ நதி. மனமுருகி வேண்டுவோரின் புறஅழுக்குகள் மட்டுமின்றி, அக அழுக்குகளையும் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவ அசுத்தங்களையும் போக்கும் தெய்வீக நதி.
(தினகரன் ஆன்மிக மலர், 30.10.2010 பக்கம் 5)
அப்பட்டமாக நேரில் ஆய்வு செய்து தந்த தகவல்கள் _ அரசே தந்த அறிக்கை _ இவ்வளவையும் மீறி ஏடுகளால் புளுகப்படுகிறது.
தந்தை பெரியார் கூறுகிறார்
மதங்களுக்கு ஜீவ நாடியாய் இருந்து வருவது பணமும், பிரச்சாரமுமே யல்லாமல், அவற்றின் தெய்வீகத் தன்மையோ, உயர்ந்த குணமோ என்று எதையும், யாரும் சொல்லிவிட முடியாது (குடிஅரசு , 8.10.1933) என்று சொல்லும் தத்துவ ஞானி தந்தை பெரியார் அவர்களின் உரையை இந்த இடத்தில் உரைத்துப் பார்த்துக்கொள்வது நல்லது.
அரூபிக்குத் கோயில்கள் ஏன்?
கண்ணுக்குத் தெரியாதவர் கடவுள் என்றும், உருவமற்ற அரூபி என்றும் கூறிக்கொண்டு கோயில் கட்டுவதும், கடவுளுக்கு உருவம் கொடுத்து, கர்ப்பக்கிரகம் என்று கோயிலில் ஒரு இடத்திற்கு நாமகரணம் சூட்டி மூலவிக்கிரகம், மூர்த்தி என்று சிலைகளை அடித்து வைப்பதும் முரண்பாட்டின் மொத்த குத்தகைக்கும் பிறந்த பிள்ளையல்லவா?
சிலையான கடவுளுக்கு மனிதர்-களுக்குக் கொடுப்பது போலவே ஒரு பெயரையும் சூட்டி, அந்தக் கடவுளுக்கு மனைவி, கூத்தியார், பிள்ளைக்குட்டிகள் என்று விரிவாக்கிவிட்டார்களே!
அதோடாவது விட்டார்களா? அந்தக் கடவுள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டது; கொலை செய்தது; தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்தவனுக்கு மோட்சம் கொடுத்தது.
பக்தனைச் சோதிக்கப் பிள்ளைக் கறியைக் கேட்டு உண்டது; பக்தனின் மனைவியைத் தன்னிடம் அனுப்புமாறு கூறிச் சோதித்தது; நிர்வாணமாகக் கூத்தாடியது; ரிஷிபத்தினிகளைக் கற்பழித்தது; அதனால் முனிவர்களால் சாபம் அளிக்கப்பட்டு தனது சிசுனம் (ஆண்குறி) அறுந்து விழ நேர்ந்தது; மாதா, பிதா, குரு, தெய்வம் என்று ஒரு பக்கத்தில் உபதேசித்துக்கொண்டு குரு பத்தினியை சீடன் சந்திரன் எனும் கடவுள் கற்பழித்தான் என்பதெல்லாம் எந்த வகையைச் சார்ந்தவை?
சுரண்டல் வேலை
உருவமற்றவன், அரூபி என்று ஒரு பக்கத்தில் சொல்லி, இன்னொரு பக்கத்தில் இப்படியெல்லாம் கழிசடைத்-தனமாக கோயில்களையும், கடவுள்-களையும், புராணங்களையும் கற்பித்து மக்களிடம் பக்திப் போதையைத் திணித்து, அதன் காரணமாக அவர்களின் அறிவை நாசப்படுத்தி, பொருளைச் சுரண்டி, காலத்தையும் கரியாகச் செய்வது என்றால் இந்த சமாச்சாரங்களை முற்றிலும் நாசமாக்கி மக்களை மீட்பது என்ற பணியில் ஒருவர் இறங்கினார் என்றால் அவரை-விட மாபெரும் யுத்தவீரன், சுத்த வீரன் யாராகத்தான் இருக்க முடியும்? ஓர் அமைப்பு ஈடுபட்டது _ ஈடுபட்டு வரு-கிறது என்றால் அந்த அமைப்பைத்-தானே கடமை உணர்ச்சியும், யோக்-கியப் பொறுப்புணர்ச்சியும் உள்ள ஒன்று என்ற உறுதியாகக் கருதமுடியும்?
ஆம், தந்தை பெரியார்தான் அந்த மாபெரும் வீரர் _ திராவிடர் கழகம்தான் அந்த அமைப்பு.
கடவுளுக்கு உருவம் - ஏன்?
கடவுளுக்கு உருவம் கற்பித்ததற்குச் சிலர் காரணங்கள் சொல்ல முந்திக் கொண்டு வருகிறார்கள். இப்பொழுதெல்லாம் சாத்திரங்களிலும், புராணங்களிலும் சொல்லியபடி கடவுள்களைக் காப்பாற்ற முடிவதில்லை _ மக்கள் மத்தியில் விழிப்புணர்வு முளைத்தது ஒரு காரணம். புதிது புதிதாக அறிவியல் ரீதியாகக் காரணங்களை சாமர்த்தியமாகக் கூறிட முனைகிறார்கள்.
ஒரு எழுத்தாளர் கூறும் காரணம் இதோ:
உருவம் எதற்கு?
மனத்தை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் குறைந்த மக்களுக்காகவே, உருவ வழிபாட்டு முறையை ஆகமங்கள் அறிமுகம் செய்தன. ஒரு வடிவம் இல்-லாமல் கடவுளை எவ்வாறு தியானிப்-பது? கடவுளுக்கு ஒரு வடிவம் கொடுக்-காவிட்டால், தியானம் செய்யும் மனத்தை எங்கே நிலைநிறுத்துவது? தியானம் செய்யும் இலக்கு ஒன்று இல்லாவிட்டால், மனம் எளிதில் நழுவிவிடும். அல்லது நீள்துயில் நிலையில் ஆழ்ந்துவிடும் என்று மனத்தால் தொகுத்துரைக்க முடியாத பரம்பொருளிடம் மனத்தை நிலைபெறச் செய்ய, ஒரு உருவச் சிலை தேவைப்-படுகிறது என்பது தெளிவாகிறது.
தமிழ் இலக்கியங்களில் வைணவம் என்ற நூலில் இந்திரா பார்த்தசாரதி.
(கல்கி _ 4.10.2009)
இப்படி உருவமற்றதாகக் கூறப்படும் கடவுளுக்கு உருவம் கற்பித்து, கார-ணங்களைத் திணித்ததன் விளைவுதான் _ பக்தி என்பது வியாபாரம் ஆன-தற்கும், வியாபாரம் என்ற நிலையை எட்டிய பிறகு பித்தலாட்டப் பிரச்-சாரங்கள் மலிந்ததற்கும் முக்கிய காரணம் ஆகிவிட்டன.
போட்டி வியாபாரம்
ஒவ்வொரு ஊரிலும் உள்ள ஒவ்-வொரு கோயிலுக்கும் தல புராணங்கள் எழுதிக் குவிக்க ஆரம்பித்துவிட்டனர். சோப் டூத்பேஸ்ட் துணிக்கடைகள் வியாபார விளம்பரம் போல போட்டிக் கடைகளாகக் கோயில்கள் ஆக்கப்-பட்டுவிட்டன.
இவற்றின் கைக்கருவிகளாக ஏடு-களும், இதழ்களும், தொலைக்காட்சிகள் முதலிய ஊடகங்களும் இருப்பது எத்-தகைய வெட்கக்கேடு _ ஆபாசம் _ அநா-கரிகம் _ அறிவு நாணயமற்ற தன்மை.
பார்ப்பனர்கள் பகுத்தறிவு பேசி இருக்கமாட்டார்களா?
இந்தக் கோயில் அமைப்புகள் பார்ப்பனர்களுக்குப் பயன்படாத-வைகளாக இருந்திருக்குமேயானால், இந்நேரம் பார்ப்பனர்களே பகுத்தறிவு பேச ஆரம்பித்து இருப்பார்களே _ இந்த ஊடகங்களும் வேறு திசைகளில் எழுதுகோலைப் பிடித்திருக்குமே! கடவுள் சிலைகள் உருவானது குறித்து பிரபல கல்வெட்டு ஆய்வாளர் _ எழுத்தாளர் தொ.மு.பாஸ்கரத் தொண்டமான் என்ன சொல்லுகிறார்?
இறைவனுக்குப் பல்வேறு உருவங்-களையும், அந்தந்த உருவங்களுக்கேற்ற முறையில் கதைகளையும் கற்பனை பண்ணியிருக்கிறார்கள் அன்றைய தமிழர்கள். ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்றுமிலாத இறைவன், இப்படித்தான் ஆயிரம் திருநாமங்களுடனும், இன்னும் எண்ணற்ற உருவங்களுடனும் உருவாகி-யிருக்கிறான் _ மனிதனது கற்பனை-யிலே.
இப்படி கற்பனை செய்ததையெல்-லாம், கல்லிலும், செம்பிலும் வடித்-தெடுக்கிறார்கள் நம் நாட்டுச் சிற்பிகள். அப்படி அவர்கள் உருவாக்கிய சிற்ப வடிவங்களே இன்று நமது தமிழ்நாட்டுக் கோயில்களில் எல்லாம் நிறைந்திருக்கின்றன.
தொ. மு. பாஸ்கரத் தொண்டமான் கூறிய இந்தக் கருத்தும் அதே கல்கியில்தான் வெளிவந்தது.
கடவுளே கற்பனைதான் என்பது ஒருபுறம் இருந்தாலும் அதனை மறுக்கும் மெய்யன்பர்கள்கூட, கோயி-லுக்குள் குடியமர்த்தப்பட்டிருக்கும் கடவுள்கள் கற்பனை என்பதை ஒப்புக்கொள்ளவே செய்கிறார்கள்.
பெரியாருடன் ஒத்துப்போகும் பக்தர்கள்
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்று தந்தை பெரியாரோடு _ அவன் முட்டாள் அல்ல என்று சொல்லிக் கொள்ளும் மெய்யன்பர்களும்கூட ஒரு இடத்தில் ஒத்துப்போவதைக் காண-முடிகிறது. அதுதான் கடவுள் கற்பிக்கப்பட்டது என்பதாகும்.
மனிதனைக் கடவுள்தான் படைத்-தான் என்பது மதவாதம். இல்லை, இல்லை, கடவுளைப் படைத்தவன் மனிதன்தான் என்பது அறிவியல் வழிப்பட்ட பகுத்தறிவு வாதமாகும்.
கணபதி ஸ்தபதி என்ன கூறுகிறார்?
இதுகுறித்து, புகழ்பெற்ற குமரி முனையில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலையை வடித்த சிற்பி கணபதி ஸ்தபதி கூறுவதைக் கருத்தில் கொள்ளவேண்டும். அதுவும் கல்கியில்தான் வெளிவந்துள்ளது.
ஒரு கடவுள் சிலையை வடிவமைக்-கிறதுன்னா சும்மாவா? யார் பார்த்-திருக்கிறாங்க கடவுளை? அவர் எப்படி இருப்பார்னு யாருக்குத் தெரியும்? எங்களால மட்டும் எப்படி அத்தனை தத்ரூபமா ஒரு கல்லுல அவரைக் கொண்டு வர முடியுது? கோயிலுக்குப் போன உடனே அந்தச் சிலையைப் பார்த்து ஏன் அத்தனைப் பரவசப்-படறீங்க?
நீங்க, அனுபவிக்கிற பரவசத்தை, பக்தியைக் கொண்டுவரணும்னா ஒரு கல்லு சிலையா மாறணும். அந்தக் கல்லுக்கு உயிர் வரணும். அப்பத்தான் கையைக் கூப்பி வணங்க முடியும். அந்த உயிரை யாரு கொடுக்குறாங்க? நாங்கதானே? எங்ககிட்ட அப்படி என்னதான் வித்தை இருக்குன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா?
- (பிரபல சிற்பி கணபதி ஸ்தபதி , கல்கி 11.6.2006)
இவர் என்ன சொல்கிறார்? கல்லைக் கடவுளாய்க் காட்டியது சிற்பியின் கையில்தான் இருக்கு என்கிறார். இதன் பொருள் என்ன? சிற்பி என்கிற மனிதன்-தான் கடவுளை உருவாக்கினான் என்-தை ஒப்புக் கொள்ள என்ன தயக்கம்?
சரி, கோயிலை உண்டாக்கியாயிற்று _ கர்ப்பக் கிரகத்தில் ஒரு சிலையைக் கொண்டுபோய் உட்கார வைத்தாயிற்று _ அதுவரை எந்த ஒரு துரும்பையும் அசைக்காத பார்ப்பான் கும்பாபிஷேகம் செய்ய வந்துவிட்டான். கர்ப்பக்கிரகத்-துக்கு வெளியில் இரும்புக் கம்பியையும் போட்டுவிட்டான். பார்ப்பன அர்ச்ச-கனைத் தவிர மற்றவர்கள் யாரும் அதைத் தாண்டி உள்ளே வரக்கூடாது என்று சாஸ்திர வேலியும் போட்டா-யிற்று. தமிழனுக்கும் உள்ளே இட-மில்லை _ தமிழுக்கும் வேலை இல்லை. எல்லாம் சமஸ்கிருதமயம்தான்.
சுருக்கமாகச் சொல்லவேண்டு-மானால், கோயில், பக்தி, அர்ச்சனை உள்ளிட்ட அத்தனையும் பார்ப்பன-மயமாக்கப்பட்டுவிட்டன. கோயில் கட்ட பணம்கொடுத்த, உடல் உழைப்பு கொடுத்த சிலையைச் செய்த அத்தனைத் தமிழர்களையும் சூத்திரர்களாக, தேவடியாள் மக்களாக அதிகாரப்பூர்வ மாக முத்திரையும் குத்தியாயிற்று -_ இளிச்சவாயர்களாக ஆக்கியாயிற்று.
கும்பிடும் முட்டாள்களே!
இவ்வளவும் நடந்தது. இந்தக் கோயில் சிலைகளை கும்பிடுகிறார்களே, தண்டம் போடுகிறார்களே, காணிக்கை செலுத்துகிறார்களே, படையல் போடுகிறார்களே, பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்கிறார்களே _ இவையெல்லாம் பக்தி மார்க்கத்தில் எந்தத் தரத்தில் வைக்கப்படுகிறது?
உத்தர கீதை
அக்நீரதே லோத் விஜாதீ நாம்
முநிநாம் ஹிருதிதைவதம்
பர்மாஸ்வ பாபுத்தா நாம்
ஸர்வத்ர ஸ மதர் சிந
பொருள்: துவிஜர்களுக்கு அதாவது இரு பிறப்பாளர் எனப்படும் பார்ப்பனர் களுக்குத் தெய்வம் அக்னியில். முனிவர் களுக்குத் தெய்வம் இருதயத்தில். புத்தி குறைந்தவர்களுக்குத் தெய்வம் சிலை யில். சம பார்வை உடையவர்களுக்கு எங்கும் தெய்வம்.
ஸ்கந்த புராணம்: ஞான யோக காண்டம்
நாடி சத்திராத்தியம் தீரத்தே தாதையக்ஞே
காஷ்டே பாஷாண கேபதா
சிவம் பஸ்யதி
மூடத்மாசி லோதே ஹெபர் திஷ்டித
மூடாத்மாக்கள் தீர்த்தத்திலும், தாளத்திலும், தபசிலும், யக்ஞத்திலும், கட்டையிலும், கல்லிலும் சிவம் இருப்ப தாக நினைக்கிறார்கள். சிவமோ தமக்குள்ளேயே இருக்கிறார்.
சாக தபவ சன சுலோகா
அபஸு தேவாப நீஷ நாம்
காஷ்ட லோஷ்ட்டேஷு மூடாநாம்
யுக்தஸ் யாத்ம நிதேவதா
சாதாரண மனிதர்களுக்குத் தெய்வம் நீரில். சற்றுத் தெளிந்தவர்களுக்குத் தெய்வம் ஆகாசத்தில். முட்டாள் களுக்குத் தெய்வம் கல்லிலும், கட்டையிலும். யோகிகளுக்குத் தெய்வம் அவர்களுக்குள்ளே.
உத்தர கீதையும், ஸ்கந்த புராணமும் என்ன கூறுகின்றன?
முட்டாள்கள் கும்பிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடம்தான் கோயில்களுக்குள் இருக்கும் சாமி சிலைகள்.
கோயிலுக்குச் சென்று சங்கராச் சாரியார் விட்டாலும் சரி சாயிபாபா கும்பிட்டாலும் சரி, அமைச்சர்கள் கும்பிட்டாலும் சரி ஒரு மண்டலம் விரதம் இருந்து சபரிமலை சென்று கும்பிட்டாலும் சரி அத்தனைப் பேரும் முட்டாள்கள் தான் என்று நாம் சொல்லவில்லை. சாத்திரங்கள் சொல் லுகின்றன.
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
பரப்பியவன் அயோக்கியன்
வணங்குகிறவன் காட்டுமிராண்டி
_ என்று தந்தை பெரியார் சொன் னால் கோபிக்கும் குணாளர்களே! சாத்திரமும் அப்படித்தானே சொல் லுகிறது? என்ன செய்வதாக உத்தேசம்?
சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!! சிந்தியுங்கள்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக