புதன், 23 நவம்பர், 2011

WHY I AM NOT A MUSLIM ... 2

14 பிப். 1989-க்கு முன்னால் ..
1280-ல் பாக்தாத்தில் ஒரு யூத மருத்துவரும் தத்துவஞானியுமான Ibn Kammuna என்பவர் எழுதிய Examinations of the Three Faiths என்ற நூலில் மூன்று யூத மதங்களைப் பற்றி எழுதியவர் முகமது நபியை எவ்வாறாக ஒரு தூதராகக் கொள்வது என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்காக அவரை தீயில் எரிக்கப்பட வேண்டும் என்று எமிர் ஒரு தீர்ப்பளிக்க, ஆனால் அவர் எப்படியோ அந்த தண்டனையிலிருந்து தப்பி விட்டார். (4)

இதுபோன்ற பல எடுத்துக்காட்டுகளை நாம் நிறைய காண முடியும்.

1961-63-ல் இந்திய தூதுவராக இருந்த அமெரிக்கர் John Kenneth Galbraith தன் செல்ல பூனைக்கு 'அஹமது' என்று பெயரிட்டு வைத்திருந்தார். அதுவும் முகமதின் மற்றொரு பெயர். அந்த சமயத்தில் பெங்களூரிலிருந்து வந்த Deccan Herald 'முகமது என்ற முட்டாள்' என்று ஒரு சிறுகதை எழுத, அதனால் அந்த தினசரி அலுவலகம் எரிக்கப் பட்டது. 'சமீபத்தில்' ஷார்ஜாவில் 'The Ants That Eat Corpses' என்ற மலையாள நாடகம் முகமது பற்றிய வசனம் வந்ததால் அதை நடத்தியவர்களுக்குச் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது.

Daniel Pipes என்பவர் எழுதிய The Rushdie Affair என்ற நூலில் இதுபோன்ற பல நிகழ்வுகள் - இஸ்லாமிய எழுத்தாளர்கள், அறிஞர்கள் பலருக்கும் நேர்ந்தவைகள் - கொடுக்கப்பட்டுள்ளன.(4)

*

1937-ல் எழுதப்பட்டு, 1974-ல் மட்டுமே பதிப்பிக்கப்பட்ட Dashti என்பவரின் 'இருபத்தி மூன்று ஆண்டுகள்' ( நபி தூதுவராகச் செயல்பட்ட 23 ஆண்டுகள் ) என்ற நூல் 1980-1986 வரையிலும் ஐந்து லட்சத்திற்கும் அதிகமாக விற்கப்பட்ட அந்த நூலில் -

*
பகுத்தாயும் அறிவினை ஆதரித்து, கண்மூடித்தனமான நம்பிக்கைகளைக் கண்டிக்கிறார். அந்த வகை நம்பிக்கைகள் அறிவு மிக்கவர்களின் மூளையின் கூர்மையைக் கூட மழுக்கடிக்கின்றன.

*
குரானின் மொழிநடை பற்றிக் கூறுகையில், குரானின் வாசகங்களின் அமைப்பும் நடையழகும் மிக உயர்ந்தவை அல்ல; இதைப் போன்றோ இதைவிட மேலாகவோ இன்னொரு கடவுள் நம்பிக்கையாளர்களால் எழுத முடியக்கூடியதே. (5)

*
குரானில் நூற்றுக்கும் அதிகமாகவே தவறுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

* குரானில் புதிதாக ஏதும், அதுவரை சொல்லப்படாதவைகள் ஏதும் சொல்லப்படவில்லை.

*
இஸ்லாமில் சொல்லப்படும் கடமைகளும், சமயச் சார்புள்ளவைகளும் ஏற்கெனவே இருந்துவந்த பாகனிய அராபிய, யூத வழக்கங்களே.

*
நபியின் வழித்தோன்றல்களுக்கு கொலை செய்வதைக் கூட இஸ்லாமியக் கடமையாகக் கூறப்பட்டுள்ளது. (5)

*
Pipes என்பவர் தன் நூலில் சொல்வது: முமார் அல் கடாபி என்ற லிபியன் தலைவர்
வெளிப்படையாக குரானைப் பற்றியும், நபியையும் பற்றி் சொன்னவைகள் இதுவ்ரை சொல்லப்பட்டவைகளை விடவும் மிகவும் மோசமான கடவுள் தூஷணமாக இருக்கும். (7)

*
Farah Fada அவரது 'NO to Sharia' என்ற தன் நூலில்: சமயங்களும் அரசியலும் தனித் தனியே கையாளப்பட வேண்டும்; ஏனெனில் இஸ்லாமால் ஒரு மதச்சார்பற்ற, தற்காலத்திற்கேற்ற அரசாங்கத்தை நடத்த முடியாது. (8)

*
பிப். 14, 1989-க்குப் பிறகு ...

ஈரானிய கோமேனி கூறியவைகள்: "புகழ் பெற்ற இஸ்லாமிய அகராதி ஜிகாட் என்பதை 'முகமதின் கொள்கைகளை நம்பாதவர்களுக்கு எதிராக எழுப்பப்படும் ஒரு யுத்தம். குரானில் சொல்லப்பட்டது போல் அது ஒரு தெய்வீகக் கடமை; இஸ்லாம் பரவுவதற்கும், இஸ்லாமியரிடம் உள்ள தீமைகளை வேரறுக்கவும் பயன்படும்'.(12)

*
இப்பகுதியில் ஆசிரியர் ரஷ்டிக்கு ஆதரவாகவும்,எதிராகவும் பேசிய பலரின் கூற்றுக்களைத் தொகுத்தளிக்கிறார். இறுதிப் பத்தியில்: படைப்பைப் பொறுத்தவரையில் விவிலியமும் குரானும் ஆதாம் ஏவாள் படைக்கப்பட்டதைப் பற்றிச் சொல்கின்றன. ஆனாலும் பல கிறித்துவர்கள் அறிவியல் சொல்லும் பரிணாமக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு தங்கள் நம்பிக்கைகளில் ஆதாமும் ஏவாளும் தங்கள் முதல் பெற்றோர்கள் என்பதை ஒதுக்கி வைத்துவிட்டார்கள். விவிலியத்தில் சொல்வது போல் நம் 'முதல் பெற்றோர்கள்' என்பதை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் இஸ்லாமியர்கள் அந்த 'முதல் காலடியைக்' கூட இன்னும் எடுத்து வைக்கவில்லை. (33

1 கருத்து:

  1. குரானில் நூற்றுக்கும் அதிகமாகவே தவறுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

    can u point about any?

    பதிலளிநீக்கு