இஸ்லாமியரின் போர் வெற்றிகள்:
(AN APOLOGY:
நூலின் இந்தப் பகுதியை விளக்கமாகச் சொல்லாமல் சில செய்திகளைத் தவிர்த்து விடலாமென நினைத்தேன். ஏனெனில் அவை அவ்வளவு குரூரமானவை.
நூலின் இந்தப் பகுதியை விளக்கமாகச் சொல்லாமல் சில செய்திகளைத் தவிர்த்து விடலாமென நினைத்தேன். ஏனெனில் அவை அவ்வளவு குரூரமானவை.
இஸ்லாம் என்ற சொல்லுக்கே ”அமைதி” என்பதுதான் பொருள்; முகமதுவிற்கு வந்த எதிர்ப்பினால் மட்டுமே அவர் பல போர்களை நடத்தினார்; ஒரு மனிதனைக் கூட கொல்வதற்கு எங்கள் மதம் சொல்லவில்லை; -- இப்படியெல்லாம் இஸ்லாமிய நம்பிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் சொல்லிவருவதாலும், அதில் அவர்கள் மிகவும் ஆழ்ந்த நம்பிக்கைகளோடு இருப்பதாலும், (ஒரு வேளை அவர்கள் பார்க்க மறந்து போன,) நம்பிக்கையற்றவர்களின் பார்வையில் அவர்களது மத நூல் என்ன சொல்கிறது என்பதையும், ஏன் ’இஸ்லாம் கத்தியால் பரப்பப்பட்டது’ என்பது அடிக்கடிசொல்ல்ப்படும் வார்த்தையாக உள்ளது என்பதையும் அவர்களுக்குக் காண்பிக்கவே இந்தப் பகுதியையும் மற்ற பகுதிகள் போலவே கருதி, அதன் முக்கிய பகுதிகளை இங்கு தருகிறேன்.)
நம் தமிழ்ப் பதிவர்களின் மத்தியில் இருக்கும் மற்றொரு எண்ணமும் என்னை இப்பகுதியின் முக்கியத்துவத்தைக் குறைக்க இடம் கொடுக்கவில்லை. இஸ்லாமிய மன்னர்கள் நம் நாட்டின் மீது படையெடுத்து வந்த அயல்நாட்டு அரசர்கள். நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் போல் இவர்களும் அந்நிய நாட்டு ஆக்கிரமிப்பாளர்கள். ஆங்கிலேயன் நம்மை அடிமைப்படுத்தினான் என்பதால் நமக்கு கிறித்துவத்தின் மேல் (ஓரளவு) வெறுப்பில்லை. அதே போல் எந்த கிறித்துவனும் மதச் சார்பினால் ஆங்கிலேயன் புகழை ஓதுவதில்லை. அவன் என்னை அடிமைப்படுத்தியவன் என்ற உணர்வே எல்லோரிடமும் - கிறித்துவரிடமும் சேர்த்து - உண்டு. மதத்தையும் அரசியலையும் எப்போது இணைத்தே வைத்திருக்கும் இஸ்லாமிய தத்துவம், கிறித்துவத்தில் (இப்போதைக்கு) இல்லை. (சில நாடுகளில் கிறித்துவம்- இஸ்லாம்; கத்தோலிக்கர் - பிரிவினைக்காரர்கள் இவர்களிடையே தகராறும் உண்டு.) ஆகவே ஒரு ஆங்கிலேயனை, அவனது ஆட்சியை எதிர்த்துப் பேசினால் அவன் ஒரு ஆங்கிலேயனாகத்தான் பார்க்கப்படுகிறான். ஒரு கிறித்துவனாக அல்ல.
ஆனால் இஸ்லாமிய மன்னர்களை நம் இஸ்லாமியப் பதிவர்கள் புகழ்ந்தேற்றுவது வேதனையான ஒன்று. ஒளரங்கஜேப் தனி மத வரி விதித்தானே என்றால் அதற்குப் பதில் ’அவன் ஆள்வதற்கு வரி விதித்தான். ஆகவே ஒவ்வொரு குடிமகனும் அந்த வரியைச் செலுத்துவது கடமை’ என்றொரு விவாதம். அவன் ஒரு ஆக்கிரமிப்பாளன்; அவனுக்கு நான் ஏன் வரி செலுத்த வேண்டும் என்பதை அவர்களுக்கு என்னால் புரிய வைக்க முடியவில்லை. (கட்டபொம்மன் வசனம் அவர்களுக்கு நினைவில் இருக்குமோ என்னவோ!) அவனுக்கு வரி செலுத்தாதது தவறு என்கிறார்கள். இவர்களைப் பொருத்தவரை, காந்தி உப்புசத்தியாகிரகம் செய்தாரே, அதுவே தவறு. ஆங்கிலேயன் போட்ட உப்பு வ்ரியை நாம் கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும்; ஏனெனில் அவன் நம் நாட்டை ஆள்வதற்காகத்தானே வரி கேட்கிறான்!!
இன்னொரு ‘அழகான’ விவாதம் கடையேறியது. இஸ்லாமியர் 700 ஆண்டுகளாக நம்மை ஆண்டு கொண்டிருந்திருக்கிறார்கள். ஆனால் ஆங்கிலேயர் அதன் பின் வெறும் 200 ஆண்டுகள் தான் நம்மை ஆண்டனர். நாம் 200 வருடம் ஆண்ட ஆங்கிலேயரை விரட்டி விட்டோம். ஆனால் 700 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய அரசர்களை நாம் விரட்டவேயில்லை. அதாவது, நமக்கு இஸ்லாமிய அரசர்கள் மேல் ”அம்புட்டு அம்பு அன்பு” ! இந்த விவாதத்திற்கு என்ன பதில் சொல்லி அவர்களுக்குப் புரிய வைப்பது என்பது எனக்குப் புரியவில்லை.
இதில் நம் வரலாற்று நூல்களில் சில இஸ்லாமிய மன்னர்களைப் பற்றித் தவறான செய்திகள் இருப்பதாகவும் வருந்தினர். கிளைவ், ஜெனரல் டயர் போன்ற ஆங்கிலேயர்களைப் பற்றி மோசமாக எழுதினால், பேசினால் ஒரு கிறித்துவனுக்கும் கோவம் வந்ததாக நான் இதுவரை பார்க்கவில்லை. அதைப் பற்றிய ஒரு பதிவில் நான் சொன்னதைப் புரிந்து கொள்ளும் இஸ்லாமியப் பதிவர்களையும் நான் பார்க்கவில்லை. ஆக்கிரமித்த ஒளரங்கஜேப் ’மிகவும் நல்ல’ இஸ்லாமியனாம்; சொல்கிறார்கள். தொப்பி தைத்து அதன் வருமானத்தில்தான் சாப்பிட்டானாம். ரொம்ப நல்லது. ஆனால் அதனால் எனக்கென்ன? என்னை எப்படி ஆக்கிரமித்தான்; எப்படி ஆண்டான் என்பதுதானே என் கேள்வி.
சில / பல இஸ்லாமிய மன்னர்கள் ‘குடியும் கூத்தியுமாக’ வாழ்ந்தார்கள். அது தவறுதான் என்றும் சில பதிவர்கள் ‘பாவமன்னிப்பு’ கேட்டுள்ளார்கள். அதற்காக இங்கு யாரும் அழவுமில்லை; கவலைப்படவுமில்லை.
நம் வரலாற்று நூல்களிலும், பாடப் புத்தகங்களிலும் இஸ்லாமிய அரசு, ஆட்சி பற்றித் தவறான செய்திகளைப் பரப்பி விட்டார்கள் என்பதும் ஒரு குற்றச்சாட்டு. அதை நினைவில் வைத்து நம் நாட்டைச் சேராத வரலாற்றாளர்கள் கொடுத்த செய்திகளையும் தொகுத்து விடலாமே என்று இந்த நூலில் கண்டுள்ளவற்றைக் கொடுத்துள்ளேன்.)
Schumpeter (1883-1950) - அராபியர்கள் ஒரு போரிடும் சமூகம். போர் என்பது மிகவும் சாதாரணமான ஒரு வழக்கம். சமூகத்தின் அமைப்பே போரில் வெல்வது மூலமே உறுதிப்பட்டது. இஸ்லாம் இல்லாவிட்டாலும் இந்த போர் முறை அவர்களிடம் இயங்கியே வந்திருக்கும். முகமது அமைதியையும், தாழ்ந்து இருப்பதையும் பற்றிப் பேசியிருந்தால் அவரை அந்தச் சமூகத்தினர் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள்.
இஸ்லாமின் புதிய தலைமுறையில் இருந்த பெரும் தலைவர்கள் பலரும் இஸ்லாமில் அதிக நாட்டமில்லாதவர்கள். Khalid என்பவர் பைஸாண்டினின் நடந்த போரில் பெரும் தலைவராக இருந்தவர்; அவரைப் பற்றிய குறிப்பில் அவர் ‘போரைத் தவிர வேறெதுவிலும் அவருக்கு ஆர்வமில்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப் போலவே எகிப்தை வென்ற Amr b. al-As என்பவரும், போரில் அடித்த கொள்ளைகள் மூலம் மிகவும் பெரிய செல்வரான Othman b. Taliba என்பவரும் அடுத்த சான்றுகள்.
முதல் வெற்றிகள்:
634 - அபு பக்கர் - 4000 பேர் - யூதர்கள், கிறித்துவர்கள், சமாரியர்கள்
கொல்லப்பட்டனர். காஸா கைப்பற்றப் பட்டது.
635 & 642 - மெஸோபட்டோமியாவில் கிறித்துவ மடங்கள் கொள்ளையடிக்கப்பட்டு, Monophysite Arabs-களால் கட்டாய மத மாற்றம் நடந்தது. Amr b. al-As எகிப்தில் படையெடுத்தபோது அங்குள்ள Behnesa என்ற நகரத்தின் மக்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள். பெண்கள், குழந்தைகள் யாருமே தப்பவில்லை. இதே போன்று ஆர்மேனியாவில் உள்ள Euchaita என்ற நகரின் மக்கள் அனைவரும் இதே போல் கருவறுக்கப்பட்டனர்.
642, 643 ஆண்டுகளில் வடக்கு ஆப்ரிக்காவின் ட்ரிபோலி, அனடொலிய, மெஸொபட்டோமியா, சிரியா, ஈராக், ஈரான் போன்ற இடங்களும் போரில் இஸ்லாமியரால் தோற்கடிக்கப்பட்டன.
இந்தியா:
712 - ஈராக்கின் கவர்னரான ஹஜாஜ் (Hajjaj) என்பவரால் திட்டமிடப்பட்டு, முகமது காசிம் (Muhammad b. Qasim) என்பவரின் தலமையின் கீழ் முதல் படையெடுப்பு நடந்தது. ஹஜாஜ் கொடுத்த கட்டளையே ‘இஸ்லாமிய நம்பிக்கையற்றவர்களைக் கொன்று விடுங்கள்’ என்பதே,
டேபால் (Debal) என்ற கோட்டையைப் பிடித்த இஸ்லாமியர் மூன்று நாட்கள் தொடர்ந்து அந்த நகரின் மக்களைக் கொன்று குவித்தார்கள். அதன்பின் காசிம் மனம் இறங்கி ( ! ) மீதியிருந்தோரை அவரவர் பணிகளில் ஈடுபடவும், தங்களது மதத்தில் தொடரவும் சம்மதித்தான். ஆனால் இது ஹஜாஜூக்குப் பொருத்தமானதாகத் தெரியவில்லை. அவர் காசிமிற்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் “குரானில் 47:4-ல் நம்பிக்கையில்லாதவர்களைக் காணும்போது அவர்களின் தலைகளைக் கொய்துவிடுங்கள்” என்று கூறப்பட்டுள்ளது. கடவுளின் இந்தப் பெரிய கட்டளையை மதிப்பதும் நடைமுறைப்படுத்துவதுமே சரியானது. நீங்கள் இரக்கம் காட்டுவது தவறு’ என்று எழுதுகிறான்.
மீண்டும் ஹஜாஜ் திரும்பி வந்து Brahminabad என்ற நகரிலுள்ள 6000 ஆண்களைச் சிரச்சேதம் செய்கிறான். 6000 அல்ல 16000 என்ற கூற்றும் உண்டு. மற்றவர்கள் மன்னிக்கப்பட்டார்கள்.
Mahmud of Ghazni (971 - 1030)
Turco-Afghan என்ற சமூகத்து முகமது கஜினி 1000 ஆண்டில் முதல் முறையாகச் சூறாவளி போல் இந்தியாவினைச் சூரையாடி, மக்களைக் கொன்று, கொள்ளையிட்டுச் சென்றான். ஒவ்வொரு வருடமும் குரானின் இந்தக் கட்டளையைச் செய்து தன்னை அவன் ‘புனிதப்ப்டுத்திக் கொண்டான்’.
Vincent Smith என்ற ஆசிரியர் கஜினி பற்றி, ’அவன் ஆழ்ந்த இஸ்லாமியன்; மற்ற மதத்தினரைக் கொல்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். மிகவும் பேராசை பிடித்தவனாகவும் இருந்தான்’ என்கிறார்.
Alberuni என்ற அறிஞர், ’மகமூது பதினேழு முறை படையெடுத்து இந்த நாட்டை முழுவதுமாகச் சுரண்டினான். அவனது வெறியாட்டத்தில் இந்துக்கள் தூசி அணுக்கள் போல் எங்கும் சிதறடிக்கப்பட்டனர்’ என்கிறார்.
முகமூது முதலில் ஜெய்பால் என்ற பஞ்சாப் மன்னனைச் சிறைப் பிடித்தான். பின், முல்தான் என்ற இடத்தை 1004-ல் கைப்பற்றினான். அங்கேயிருந்த Ghur என்ற இடத்திலுள்ள அனைவரையும் இஸ்லாமியராக மாற்றினான்.
அவனது அடுத்த பலி மதுரா நகர். ‘அந்த ஊரின் நடுவில் வர்ணிக்கவோ, வரையவோ முடியாத அழகுடன் ஒரு கோவில் இருந்தது. முகமூது அந்தக் கோவிலைக் கட்ட 200 ஆண்டுகளாவது ஆகும் என்றானாம். அங்கு ஐந்து கெஜ உயரத்தில் இருந்த செம்பொன் சிலைகளின் கண்கள் மிகவும் உயரிய கற்களால் ஆனது.’
அந்தக் கோவிலை முழுவதுமாக எரிக்க கஜினி உத்தரவிட்டு, இந்தியாவின் மிகப் பழமையான, அழகான, கலைநயம் மிகுந்த கோவிலை நிர்மூலமாக்கினான்.
அடுத்து சோமநாத் என்ற இடத்தில் இருந்த இடத்தில் 50,000 பேர் கொல்லப்பட்டு, அந்த நகரையும் கொள்ளையடித்தான்.
இஸ்லாமிய வரலாற்றாளர்கள் முகமூதுவை இஸ்லாமின் மதிப்பிற்குரியவனாகக் கருதுவதுண்டு. ஆனால் உண்மையில் அவன் எந்த வித புகழுக்கும் காரணமில்லாதவன்; மிகப்பெரும் கொள்ளைக்காரன்.
Firuz Shah 1351-ம் ஆண்டு வட இந்தியாவில் அரியணையேறினான். படித்துப் பலவும் கற்றவன்; ஆனால் மத இணக்கம் என்பது கொஞ்சமும் இல்லாதவன். அடிமை வணிகத்தில் தேர்ந்தவன். 1,80,000 அடிமைகளை தன் நகரத்தில் வைத்திருந்தான்.அவர்கள் அனைவரும் இஸ்லாமியர்களாகி விட்டார்கள்!
இந்துப் பண்டிகை நடந்த இடத்திற்குச் சென்ற இந்த மன்னன் தனது குறிப்பில், ‘இந்தப் பண்டிகையைக் கொண்டாடுபவர்கள், அவர்களுக்கு உதவுவர்கள் எல்லோருக்கும் அவர்கள் செய்த அநீதிக்காக மரண தண்டனை அளித்தேன். ஆனாலும் கொண்டாடிய இந்துக்களுக்குப் பெரிய தண்டனைகள் கொடுக்கவில்லை. ஆனல் சிலைகள் இருந்த அந்தக் கோவில்களை அழித்து, அதற்குப் பதிலாக மசூதிகளை எழுப்பினேன்’ என்று எழுதியுள்ளான்.
தனியே தன் மத வழக்கங்களைச் செய்துகொண்டிருந்த ஒரு பிராமணனை அந்த இடத்திலேயே நெருப்பூட்டினான்.
கடுமையான ஜிஸ்யா வரி செலுத்தியவர்களில் பலரை, பிராமணர்களையும் சேர்த்து, பலருக்குப் பணம் கொடுத்து இஸ்லாமியராக்கினான்.
Vincent Smith, ‘ Firuz Shah தன் நாட்டின் இயற்கையையும், மக்களுக்கான கல்வியையும் செவ்வனே கொடுத்தாலும், சமயங்களைப் பொருத்தவரை எந்த விதப் பொறுமையும் இல்லை’.
14-ம் நூற்றாண்டு இஸ்லாமியர்கள் பழைய முதல் இஸ்லாமியர்கள் போலவே சிலை வடிவங்களை வணங்குவது பொறுக்க முடியாத பெரிய பாவம் என்று கருதினார்கள்.(222)
AKBAR, THE GREAT (1542 - 1605)
இஸ்லாமிய வழியில் வளர்ந்தாலும் அக்பர் மற்ற சமயங்கள் மீதும் ஆர்வம் காட்டினார். தனது அரசவையில் Abu Fazl போன்ற விரிந்த சிந்தனையாளர்களை வைத்திருந்தார். இவரோடும் மற்றும் மற்ற சமயத்தினரையும் இணைத்து ஒரு ’தியான மண்டபம்’ அமைத்தார். அங்கு சமயங்கள் பற்றிய உரையாடலை நடத்தினார். இதில் முதலில் இஸ்லாமியர் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால் அவர்களின் முட்டாள்தனமான செய்கைகளால் அக்பருக்கு இஸ்லாமின் மீதிருந்த மரியாதை குறைவதாகக் கண்டார்; அதனால் அவர்கள் மீதும் எரிச்சலடைந்தார். இதன் பின் இந்து, ஜெயின், ஜோராஸ்ட்ரியன், யூதர், இவர்களோடு கோவாவில் இருந்த சேசு சபைக் கிறித்துவ சாமியார்கள் மூவர் -- இவர்கள் எல்லோரையும் அக்பர் தன் குழுவில் இணைத்தார். எல்லோரும் மரியாதையாக நடத்தப்பட்டனர். அக்பர் கிறித்துவ விவிலியத்தை மரியாதையோடு முத்தமிட்டார்.
இது மட்டுமல்லாது வேறு சிலவும் இஸ்லாமியருக்கு அக்பர் மேல் கோவம் கொள்ள ஏதுவாயிற்று. அதில் முதலாவதாக ”தவறா வரம்” என்ற ஒன்றினைக் கொணர்ந்தார். இஸ்லாமில் எழும் கேள்விகளுக்கு குரானின் துணையோடு அரசர் தரும் பதில் தவறாதது என்ற ஆணையைக் கொணர்ந்தார். அதோடு அபுல் பாஸ்லின் சகோதரர் Faisi இயற்றிய சில பாடல்களைப் பள்ளிவாசலில் மேடையேறி அக்பரே பாடினார்.
வங்காளத்தில் இருந்த முகமதிய குருமார்கள் அக்பருக்கு எதிராக ஒரு போராட்டத்தை ஆரம்பித்தார்கள். அந்த போராட்டத்தை முற்றாக அடக்கிய அக்பருக்கு இப்போது முழு சுதந்திரம் கிடைத்தது. இதைப் பற்றி V.Smith, ‘இஸ்லாமிய மதத்தின் மேலுள்ள தன் விருப்பமின்மையை அக்பர் காண்பித்தார்’ என்று சொல்கிறார்.
அக்பர் அதுவரை வழங்கி வந்த கால அட்டவணையையும் புறக்கணித்தார். இஸ்லாமிய கால அட்டவணைக்குப் பதில். தன் அரசாட்சியின் காலத்தை வழங்குமாறு செய்தார். அதைவிடவும் அவர் வெளியிட்ட நாணயங்களில் ‘அல்லாஹூ அக்பர்’ என்ற சொற்கள் உண்டு. இது கடவுள் மிகப் பெரியவன் என்ற பொருளிலா, அக்பரே கடவுள் என்ற பொருளிலா என்ற ஐயம் பலருக்கும் எழுந்தது.
தன் ஆட்சிக்காலம் முழுமைக்கும் பெரும்பான்மையான இந்துக்களைப் புறந்தள்ளாதவாறு இருந்து வந்தார். ஓர் அரசன் தன் குடிமக்கள் அனைவரையும் ஒன்றாக நினைக்க வேண்டும் என்ற கருத்தோடு, இந்து, பார்ஸி இனத்தவரின் பண்டிகைகளில் ஈடுபட்டார். அக்பரின் கோட்பாடே பொதுவான சமய நல்லெண்ணம். இதனாலேயே எல்லா மதத்தினரும் மரியாதையோடும், மத சுதந்திரத்தோடும் இருக்க முடிந்தது. இந்துப் பெண் ஒருவரை மணந்தார். இந்துக்கள் பலரும் அரசியலின் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டனர். இவரது ஆட்சியின் கீழுள்ள அம்பர், மார்வார், பிக்கானீர் அரசகுமாரர்கள் தங்கள் மதத்திலேயே இருக்க முடிந்தது. இந்த இளவரசர்கள் உயர்ந்த ஆட்சிப் பொறுப்பிலும், படைகளில் பெரும் பதவிகளிலும் இருக்க முடிந்தது. (233)
AURANGZEB (1618 -1707) :
அம்பரின் கொள்ளுப் பேரனான ஒளரங்கஜேப் இதற்கு நேர் எதிரானவர். அவர் முழுமையான இஸ்லாமிய நம்பிக்கையாளர்.இவர் இஸ்லாமியத்தின் பழைய கட்டுப்பாட்டிற்குள் வாழ்ந்தவர். இவரது காலத்தில் இந்துக் கோவில்கள் அழிக்கப்பட்டன. 1679-80களில் உதய்ப்பூரில் 123 கோவில்களும், சித்தோரில் 63-ம், ஜெய்ப்பூரில் 66-ம் அழிக்கப்பட்டன. இஸ்லாமியரல்லாதவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக தங்கள் நாட்டிலேயே ஆக்கப்பட்டனர்.
இந்துக்களுக்கு அக்பர் மிகப் பெரிய இஸ்லாமிய அரசராகவும், ஒளரங்கஜேப் மிக மோசமான அரசனாகவும் தெரிந்தது. இஸ்லாமியருக்கோ இதற்கு எதிர்மறையான கொள்கையாகவும் இருக்கும். (இப்போதைய இஸ்லாமியருக்கும் இதே கொள்கைதான் இருக்கும்! ) அக்பருக்கு இந்தியா ஒரு
இஸ்லாமியரல்லாதவரின் நாடு என்பது தெரியும். ஒளரங்கஜேபுக்கு இந்தியாவும் ஒரு இஸ்லாமிய நாடுதான்.
** ** **

புத்த மதம்:
Edward Conze - 1000 முதல் 1200 வரை புத்த மதம் இந்தியாவிலிருந்து மறைந்தது. இதற்கான காரணங்களில் ஒன்று - இஸ்லாமும் இந்துத்துவாவும் இணைந்த முயற்சியின் விளைவு அது. (224)
12வது நூற்றாண்டில் Qutb ud din Aibak என்ற ’இரக்கமற்ற, தீவிரவாதியான’ மன்னன் தன் படையின் தலைவனான Muhammad Khilji -யை பீகாரை வென்று வர அனுப்பித்தான். அப்போது அங்கு புத்த மதமே தழைத்திருந்தது. புத்த சந்நியாசிகள் விக்கிரக ஆராதனை செய்பவர்கள் என்பதால் அவர்களை அவன் கொன்றொழித்தான். அதுவும் மட்டுமின்றி அங்கிருந்த பெரும் நூலகத்தை எரித்து அழித்தான். (இது இந்த மதத்தோடு பிறந்த வியாதியோ?)
** ** **
திம்மி (dhimmis) - இஸ்லாமை நம்பாதவர்கள். இந்த திம்மிகளைப் பற்றிய வரலாற்று நூல்கள் பல உண்டு.Norman Stillman என்பவரது நூல் The Jews of Arab Lands: A History and Source Book (1979).அந்நூலில் -- மத்திய கிழக்கில் அரேபியர்கள் நுழைந்தது மகிழ்ச்சிகரமான காரியமல்ல. இறப்புகளும் அழிவுகளும் பெருமளவில் நடந்தன. அந்நாட்டினரின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன; பலரும் கொல்லப்பட்டார்கள். ஜிஸ்யா, ஹராஜ் (jisya & kharaj ) என்ற இரு வரிகளும் வறுமையில் வாடிய விவசாயிகளுக்கு முதுகை முறிக்கும் பெருஞ்சுமைகளாக ஆகின. (226)
1165,1678-ல் யேமனில் யூதர்கள் , 1198-ல் ஏடனில் , 1291.1318-ல் டப்ரிஸில் (Tabriz) , 1333-1344-ல் பாக்தாதில் , 1617, 1622-ல் பெர்சியாவில் , 1653 -1666-ல் ஷா அப்பாஸ் காலத்தில் பெர்சியாவில் - இந்த ஆண்டுகளில் யூதர்கள் இஸ்லாமிற்கு கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டார்கள்.
யூதர்களைத் தவிர கிறித்துவர்கள், இந்துக்கள், ஜோராஸ்ட்ரியன்கள், போன்ற மற்ற மதங்களிலிருந்தும் இஸ்லாமிற்கான கட்டாய மாற்றம் நடந்தன.
Lewis எழுதிய The Jews of Islam (1984) நூலில் ‘இஸ்லாமியருக்கும் அல்லாதாருக்கும் எப்போதும் ‘சம்நிலை’ என்பதே இல்லை. பாரம்பரிய இஸ்லாமிய சமூகங்களில் இந்த சமநிலை எப்போதும் கொடுக்கப்படுவதேயில்லை. (227)
** ** **
முஸ்லீமல்லாதவர்களுக்கான தனி வரிகள்:
KHIRAJ -- நிலங்கள் உரிமையாளர்களிடமிருந்து பறிக்கப்பட்டு அந்த நிலங்களுக்கான வரியே இது. போரின் தோல்வியடைந்தவர்களுக்கு நிலத்தில் மேல் எந்த உரிமையும் கிடையாது என்பது இஸ்லாமியக் கோட்பாடு.
JISYA -- குரன் 9:29-ல் சொல்லப்பட்ட இந்த வரியை தண்டிக்கும் முறை மிகக் கேவலமானது. 9:29-ல் சொல்லப்பட்டதற்கான விளக்கத்தில் இந்த வரி வரிகொடுப்பவனை மிகவும் தரம் தாழ்த்தி, வெட்கப்படுத்தி, கழுத்தில் ‘துண்டைப் போட்டு’ வரி கொடு என்று உரக்கக் கத்தி வசூலிக்க வேண்டும்.
மற்ற வரிகள்: வியாபார வரி, பயண வரி இதுபோன்ற பல வரிகள் திம்மிகளை நசுக்கப் பயன்பட்டன.
எந்த திம்மியும் ஒரு இஸ்லாமியன் மேல் எந்த வித உரிமையையும் கோர முடியாது. குரான் 3:28 மூலம் திம்மிகளுக்கு எந்த வித சமூகப் பொறுப்பும் மறுக்கப்படும்.
ஆளுக்கொரு சட்டம்:
* எந்த ஒரு வழக்கிலும் ஒரு இஸ்லாமியனுக்கு எதிரான திம்மியின் எந்த சாட்சியமும் எடுபடாது.
* இஸ்லாமியர்கள் திம்மிகளை விட மேம்பட்டவர்கள்.
* ஒரு இஸ்லாமியனுக்குச் சட்டப்படி ஏதேனும் தண்டம் விதித்தால், அந்தக் குற்றம் ஒரு திம்மிக்கு எதிரான குற்றம் என்றால் தண்டம் ஏதும் இல்லை.
* திம்மி ஒரு இஸ்லாமியனாக ஆனால் அவனது சாட்சி வழக்கில் கேட்கப்படும். (229)
* ஒரு இஸ்லாமியன் கிறித்துவ, யூதப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளலாம். ஆனால் ஒரு திம்மி ஒரு இஸ்லாமியப் பெண்ணைக் கல்யாணம் செய்யக்கூடாது. (இன்னும் இந்த வழக்கம் நமம ஊர்ல இருக்கே. )
* ஒரு இஸ்லாமியனுக்கு ஏதாவது ஒரு குற்றத்திற்கான தண்டனை விதித்தால், அவன் அக்குற்றத்தை ஒரு திம்மிக்குச் செய்திருந்தால் அந்தக் குற்றம் பாதியாகக் குறைக்கப்படும்.
* தேவ தூஷணத்திற்கான எந்த சாட்சியும் நீதிமன்றங்களில் கேட்கப்படுவதில்லை. திம்மி தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இஸ்லாமியனாவதே ஒரே வழி. (229)
* 717-720-ல் ஆட்சி செய்த உமார் அபிட் அல் அஸிஸ் (Umar b.Abd al-Aziz) 8-வது நூற்றாண்டில் திம்மிகளுக்கு விதிக்கப்பட்ட விதிகள் நிறைய ... எல்லாமே ரொம்ப interesting!(ஏறத்தாழ தலித்துகளுக்கு வேத காலத்தில் விதிக்கப்பட்ட விதிகளைப் போலவே நிறைய உள்ளன.)
அவைகளில் ஒரு சில ...
* இஸ்லாமியர் வந்தால் எழுந்து நின்று மரியாதை தரவேண்டும்.
* குதிரையில் சேணம் இல்லாமல் ஓட்ட வேண்டும். (செருப்பு போடாதே என்று சில சாதியினரை இங்கே இன்னும் சில “சாதி இந்துக்கள்” சொல்கிறார்களே, அதுபோல்.)
* எந்த வித ஆயுதங்களையும் வைத்திருக்கக் கூடாது.
* தலையின் முன் முடியை சிறைத்திருக்க வேண்டும்.
* இஸ்லாமியரின் வீடுகளை விட பெரிதாகக் கட்டக் கூடாது ....... இப்படி இன்னும் பல ......... (230)
அடிமைப்படுத்துதல் .. இது ஒரு பெரிய நீண்ட அட்டவணை .. சில வரலாற்றுச் சான்றுகள் ---
* 881 - 7000 கிரேக்கர்கள்
* 903 - தெஸோலினிக்கா - 22,000 கிறித்துவர்கள்
*1064 - ஜார்ஜியா, ஆர்மினியா ... திம்மிகள் அனைவரும் கொல்லப்பட்டார்கள்.
* 300 ஆண்டுகளாக கிறித்துவர்கள் மீது "devshirme" என்ற ஒரு சட்டத்தை சுல்தான் ஓர்க்ஹான் (1326-1359) ஏற்படுத்தினான். இதன் மூலம் கிறித்துவக் குழந்தைகளில் ஐந்தில் ஒரு பகுதியை கட்டாயமாக இஸ்லாமிற்கு மாற்றி அவர்களைப் போர்ப்படை வீரர்களாக மாற்றியுள்ளார்கள். ஒரு குறிப்பிட்ட நாளில் இஸ்லாமில் இல்லாதவர்கள் தங்கள் பிள்ளைகளோடு வந்து பொது இடத்தில் நிற்க வேண்டும். அதிலிருந்து பிள்ளைகளை இஸ்லாமியர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். இதில் கையூட்டும் நிறைய நடந்ததாக வரலாறு சொல்கிறது. 1656-ல் இந்த சட்டம் நிறுத்தப்பட்டது.
வணங்குமிடங்கள்:
* 853-ல் காலிப் முட்டாவக்கில் எல்லா கிறித்துவ கோவில்களையும் தரைமட்டமாக்கினான்.
* 1321-. எகிப்தில் உள்ள எல்லா கிறித்துவ கோவில்களுக்கும் அதே கதி.
* ஆர்மீனியன் கிறித்துவர்கள் 704-705 ஆண்டுகளிலும், பின் 852-855 ஆண்டுகளிலும் இஸ்லாமியரின் கட்டுக்குள் கஷ்டப்பட்டார்கள்.
ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒவ்வொருவகையான பயங்கரங்கள் நிகழ்த்தப்பட்டன.
8-ம் நூற்றாண்டு - சிந்துவில் ..
9-ம் நூற்றாண்டு - ஸ்பெயின் கிறித்துவர்கள் ...
10-ம் நூற்றாண்டு - காலிப் அல் ஹக்கிமின் ஆளுகையில் திம்மிகள் ...
11-ம் நூற்றாண்டு - க்ரினடா, பெஸ் (Grenada & Fez) இங்குள்ள யூதர்கள் .... இதே காலத்தில் இந்துக்கள் இந்தியாவில் மகமுதுவினால் (Mahmud) தொல்லையை அனுபவித்தார்கள்...
12-ம் நூற்றாண்டு - Almohads of North Africa தொல்லை கொடுத்தனர்.
13- நூற்றாண்டு - டமாஸ்கஸ் கிறித்துவர்கள்
14 & 15-ம் நூற்றாண்டு - பயங்கரவாதி Timur the Lame - இவனது ’திருவிளையாடல்’ வரலாற்று ஆசிரியர்களையே பயத்தில் உறைய வைத்தது.
'Zafer Nameh' என்ற நூலே தைமூரின் முரட்டுத்தனத்தை இன்றும் நமக்குப் புரிய வைப்பது. இந்நூலில் ‘குரானில் நம்பிக்கையில்லாதவர்களின் மீது படையெடுத்து அவர்களை அழிப்பவர்களுக்கு மிக மதிப்பான சுவனம் கிடைக்கும்’ என்பது சொல்லப்பட்டுள்ளது. தைமூர் இந்தியாவை ஆண்ட இஸ்லாமிய அரசர்கள் இந்துக்கள் மீது சிறிது இரக்கத்தோடு இருந்தது பிடிக்காது போயிற்று. அதற்காகவே அவன் இந்தியா மீது படையெடுத்து வந்தான். ஆயிரக்கணக்கான இந்துக்களைச் சிறைப் பிடித்த பின் அவர்களால் தன் படைகளுக்கு எதிர்ப்பு வரலாமென்ற அச்சத்தில் பிடிபட்ட அத்தனை இந்துக்களையும் சிரச்சேதம் செய்து, அவர்களின் தலைக்குவியலின் மீது தன் வெற்றிக் கொடியை நட்டான்.
** ** **
ஜோராஸ்ட்ரியர்கள்: 'Tarikh-i Bukhara' 944-ல் Bukhara-வைப் பற்றி எழுதப்பட்ட நூலில் புக்காராவில் இருந்த மக்கள் ஒவ்வொரு முறை இஸ்லாமியப் படையெடுப்பை ஒட்டி இஸ்லாமுக்கு மதம் மாறுவார்கள். இவ்வாறு நான்குமுறை மதம் மாறிய மக்கள் உண்டு.
Khurasan, Bukhara என்ற இடங்களில் உள்ள ஜோராஸ்ட்ரியர்களின் நெருப்புக் கோவில்கள் - fire temples - முற்றிலுமாக அழிக்கப்பட்டு, மசூதிகள் கட்டப்பட்டன.
ஈரானில் முதலில் நடந்த போர்களில் ஜோராஸ்ட்ரியர்கள் தோற்ற போது வழக்கமான உயிர்ச்சேதங்கள் நடந்தன. சான்றாக Raiy என்ற நகர் இஸ்லாமியரை எதிர்த்து நின்றது; ஆனால் மீதியாக உயிரோடு இருந்தது வெறும் சில மனிதர்களே. Sarakh என்ற நகரில் வெகு சிலர் மட்டும் மன்னிக்கப்பட்டனர். பெண்களும் குழந்தைகளும் இஸ்லாமியரிடம் ஒப்படைக்கப்பட்டனர். (235)
Sus என்ற நகரிலும் இதே நிகழ்வே நடந்தது.
Manadhir என்ற நகரிலும் ஆண்கள் வாளுக்கும், பெண்களும் குழந்தைகளும் அடிமையாக ஆனார்கள்.
Istakhr 40,000 ஈரானியர்கள் கொல்லப்பட்டார்கள்.
Kariyan, Kumm, Idhaj போன்ற நகரங்களிலும் நெருப்புக் கோவில்கள் எறிந்தன; அங்குள்ள குருமார்கள் கொல்லப்பட்டார்கள்.
ஜோராஸ்டரே நட்டதாகக் கருதப்படும் புனித மரத்தை காலிப் அல்-முட்டாவக்கில் வெட்டிச் சாய்த்தான்.
இதனால் ஜோராஸ்ட்ரியர்களும் சில முறை இஸ்லாமியரை எதிர்த்து நிற்கத் முனைந்தனர். Shirz நகரில் 979-ல் அத்தகைய போராட்டம் நடந்தது. ஆனாலும் இஸ்லாமியரின் அடக்குமுறையை எதிர்கொள்ள முடியாத ஜோராஸ்ட்ரியர்கள் ஈரானிலிருந்து இந்தியாவிற்குக் குடி பெயர்ந்தனர். பார்ஸி என்ற பெயரில் சிறுபான்மையராக இன்னும் பெருமையுடன் இந்தியாவில் உள்ளார்கள்.
17-ம் நூற்றாண்டிற்குப் பிறகு ஜோராஸ்ட்ரியர்களின் நிலை மிக மோசமானதாக இருந்தது. 18-ம் நூற்றாண்டில் ’Encyclopaedia of Islam' கூறுவது போல் அவர்கள் எண்ணிக்கையிலும் குறைந்து, மத மாற்றத்திற்கோ, அடுத்த நாட்டிற்குச் செல்வதற்கோ என்று தங்களைக் காப்பாற்றிக் கொண்டார்கள். 19-ம் நூற்றாண்டில் அவர்கள் பாதுகாப்பற்ற ஏழ்மை நிலையில் இருந்தனர்.(236)
ஆர்மீனியர்கள் :
Armenian Christians ஆர்மீனிய கிறித்துவர்கள் இஸ்லாமியரின் தாக்குதலுக்கு அடிக்கடி ஆளானார்கள். 1894,1895, 1896-களில் நடந்த கொலைவெறித் தாக்குதல்களின் போது துருக்கிக்கும் ரஷ்யாவிற்கும் இருந்த மோசமான அரசியல் தொடர்புகளால், ஆர்மீனியர்கள் ரஷ்யாவிடம் தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டினார்கள். ஆனால் பயனில்லை. 2,50,000 ஆர்மீனியர்கள் Sasun, Trapezunt, Edessa, Biredjik, Kharput, Niksar, Wan போன்ற நகரங்களில் கொல்லப்பட்டார்கள். பல கிராமங்கள் சுத்தமாகத் தீக்கிரையாயின. தேவாலயங்கள் சூறையாடப்பட்டு, எரிந்தன.1896-ல் வெளிவந்த Revue Encyclopedique என்ற நூலில் ’1894-1896 ஆண்டுகளில் நடந்த வெறிச்செயல்கள் திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்டன’ என்கிறது.
1904, 1909- களில் 30,000 ஆர்மீனியர்கள் Adana என்ற நகரில் உயிரிழந்தனர். துருக்கியில் 1915-ல் நடந்த மனிதக் கொலைகள் இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய இனக்கொலை என்று கருதப்படுகிறது. மொத்தம் பத்து லட்சம் ஆர்மீனிய கிறித்துவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இந்தக் கொலைகள் எல்லாவற்றிற்குமே ’இஸ்லாமியர் அல்லாதாரை அழியுங்கள்’ என்று ’கடவுளே’ அளித்த கோட்பாடே காரணமாக உள்ளது. இந்தக் கொலைகளால் பயனடைந்தவர்கள் இஸ்லாமியரே. இதுதான் அவர்களது ஜிகாத்.(
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக