சனி, 26 நவம்பர், 2011

திருமணத்துக்கு முன் மனைவி கன்னியா? இல்லாவிட்டால் அவளைக் கல்லெறிந்து கொல்?

 

பிர‌ச்சினை வ‌ந்தால் திருமணத்துக்கு முன் பெண் க‌ன்னியாக தான் இருந்தாள் என கன்னிமையின் அடையாளத்தை ஊரார் முன்னிலையில் பெற்றோர்கள் நிரூபிக்க வேண்டுமாம்.

திருமணத்துக்கு முன் மனைவி கன்னியாக இல்லாவிட்டால் என்ன தண்டணை? அவளுடைய பட்டணத்து மனிதர் அவளைக் கல்லெறிந்து கொல்ல க்கடவர்கள்.-- பைபிள்.

*****

பதிவில் உள்ள‌வை திரிப்பும் அல்ல‌. கிறிஸ்த‌வ‌ வெறுப்பும் அல்ல‌.

பெரும்பான்மையான அப்பாவி கிறிஸ்துவ‌ர்களே அறியாத அப்பட்டமான உண்மைக‌ள்......

பைபிள் வ‌ச‌ன‌ங்க‌ள் சுட்டி >>>  “பரிசுத்த வேதாகமம் தமிழில்” “HOLY BIBLE IN TAMIL LANGUAGE”   <<<   என்னும் கிறிஸ்துவர்களின் அதிகாரப்பூர்வமான‌ த‌ள‌த்திலிருந்தே பெறப்பட்டிருக்கின்ற‌ன‌......


 BIBLE: Deuteronomy  22 VERSES 13 TO 21
பைபிள்: உபாகமம் 22 அதிகாரம் ஸ்லோகம் 13 to  21

13. ஒரு ஸ்திரீயை விவாகம் பண்ணின ஒருவன் அவளிடத்தில் பிரவேசித்த (உடலுறவு கொண்ட) பின்பு அவளை வெறுத்து:

13.If any man take a wife, and go in unto her, and hate her,

14. நான் இந்த ஸ்திரீயை விவாகம் பண்ணி, அவளிடத்தில் சேர்ந்தபோது கன்னிமையைக் காணவில்லை என்று அவள் மேல் ஆவலாதியான விசேஷங்களைச் சாற்றி, அவளுக்கு அவதூறு உண்டாக்கினால்;

14.And give occasions of speech against her, and bring up an evil name upon her, and say, I took this woman, and when I came to her, I found her not a maid:

15. அந்த ஸ்திரீயின் தகப்பனும் அவள் தாயும் அவளுடைய கன்னிமையின் அடையாளத்தைப் பட்டணத்து வாசலிலுள்ள மூப்பரிடத்தில் கொண்டுவரக்கடவர்கள்.

15.Then shall the father of the damsel, and her mother, take and bring forth the tokens of the damsel's virginity unto the elders of the city in the gate:

16. அங்கே அந்தப் பெண்ணின் தகப்பன்: என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகக் கொடுத்தேன், இவன் அவளை வெறுத்து,

16.And the damsel's father shall say unto the elders, I gave my daughter unto this man to wife, and he hateth her;

17. நான் உன் மகளிடத்தில் கன்னிமையைக் காணவில்லையென்று ஆவலாதியான விசேஷங்களை அவள்மேல் சாற்றுகிறான்; என் மகளுடைய கன்னிமையின் அடையாளம் இங்கே இருக்கிறது என்று மூப்பரிடத்தில் சொல்வானாக; பின்பு பட்டணத்து மூப்பருக்கு முன்பாக அந்த வஸ்திரத்தை விரிக்கக்கடவர்கள்.

17.And, lo, he hath given occasions of speech against her, saying, I found not thy daughter a maid; and yet these are the tokens of my daughter's virginity. And they shall spread the cloth before the elders of the city.

18. அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர் அந்த மனிதனைப் பிடித்து, அவனைத் தண்டித்து,

18.And the elders of that city shall take that man and chastise him;

19. அவன் இஸ்ரவேலில் ஒரு கன்னியை அவதூறு பண்ணினதினாலே, அவன் கையில் நூறு வெள்ளிக்காசை அபராதமாக வாங்கி, பெண்ணின் தகப்பனுக்குக் கொடுக்கக்கடவர்கள்; அவளோ அவனுக்கு மனைவியாயிருக்க வேண்டும்; அவன் தன் ஜீவனுள்ளளவும் அவளைத் தள்ளிவிடக்கூடாது.

19.And they shall amerce him in an hundred shekels of silver, and give them unto the father of the damsel, because he hath brought up an evil name upon a virgin of Israel: and she shall be his wife; he may not put her away all his days.

20. அந்தப் பெண்ணிடத்தில் கன்னிமை காணப்படவில்லையென்னும் சங்கதி மெய்ப்பட்டதேயானால்,

20.But if this thing be true, and the tokens of virginity be not found for the damsel:

21. அந்தப் பெண்ணை அவள் தகப்பனுடைய வீட்டுவாசலுக்கு முன்பாகக் கொண்டுவந்து, அவள் இஸ்ரவேலில் மதிகெட்ட காரியத்தைச் செய்து, தன் தகப்பன் வீட்டிலே வேசித்தனம் பண்ணினபடியினாலே, அவளுடைய பட்டணத்து மனிதர் அவளைக் கல்லெறிந்து கொல்லக்கடவர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.

21.Then they shall bring out the damsel to the door of her father's house, and the men of her city shall stone her with stones that she die: because she hath wrought folly in Israel, to play the whore in her father's house: so shalt thou put evil away from among you.

Thanks to Source: http://www.tamil-bible.com/lookup.php?Book=Deuteronomy&Chapter=22&Verse=13-21&Kjv=2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக