புதன், 9 நவம்பர், 2011

பரமசிவன் விந்து கீழே சிந்தியிருந்தால் அதனால் நாட்டுக்கு, மக்களுக்கு மிகப் பெரிய பிரச்சினையா? – ப‌குதி‍ 1!

இந்துக்க‌ள் வ‌ழிப‌டும் மிக‌  முக்கிய‌ தெய்வ‌ங்க‌ளில் ஒருவ‌ராக‌ ப‌ர‌ம‌சிவ‌ன் இருக்கிறார்.
முப்ப‌த்து முக்கோடி தேவ‌ர்க‌ளும் , பிர‌ம்மா, விஷ்ணு…உள்ளிட்ட‌ தெய்வ‌ங்க‌ளும் ப‌ட்டுப் பீதாம‌ப‌ர‌ம், ஆடை அணிக‌ல‌ன் சுக‌ந்த‌ புஷ்ப‌ம் அணிந்து காட்சி அளிக்கும் போது,
சிவ‌ன் புலித் தோலை உடுத்திக் கொண்டு, சுடுகாட்டு சாம்ப‌லை அணிந்து கொண்டு, ஆடி அட‌ங்கும் வாழ்க்கைய‌டா ஆர‌டி நில‌மே சொந்த‌மடா, ஆடாத‌டா ஆடாத‌டா ம‌னிதா.. போன்ற‌ தத்துவ‌ங்க‌ளை உண‌ர்த்தும் வ‌கையில் இருக்கிற‌து அவ‌ர‌து தோற்ற‌ம்.
ப‌ள்ளியிலே எட்டாம் வ‌குப்பிலே, த‌மிழ் இல‌க்க‌ண‌த்துக்கு உதார‌ண்மாக‌ ஒரு பாட‌லை சொல்வார்க‌ள்.
பொன்னார் மேனிய‌னே
புலித்தோலை அரைக்கு அசைத்து
மின்னார் செஞ்ச‌டை மேல்
மிளிர் கொன்றை அணிந்த‌வ‌னே
அரையில் அசைத்து என்ப‌த‌ற்க்கு ப‌திலாக‌ அரைக்கு அசைத்து என்றும் எழுத‌லாம். இப்ப‌டி “கு” நான்காம் வேற்றுமை உருபு என்று பாட‌ம் எடுப்பார்க‌ள்.
இர‌ண்டு ஆண்டுக‌ளுக்கு முன் த‌மிழ்இந்து இத‌ழில் முனைவ‌ர் கோ. நா. முத்துக் குமார‌ சாமி ஐயா அவ‌ர்க‌ள் பேராற்ற‌லின், பெருங்க‌ருணையின் சின்ன‌ம் என்று ஒரு க‌ட்டுரை எழுதி இருந்தார்.
அதிலே சிவ‌பெருமானின் கோட்பாட்டைப் ப‌ற்றி ஒரு முக்கிய‌ ப‌குதியை விள‌க்கி இருந்தார். மக்களைக் காக்கும் முய‌ற்சியில் எந்த‌ ஆப‌த்தையும் பொருட்ப‌டுத்தாம‌ல் சிவ‌பெருமான் செய‌ல் ப‌ட்டு இருந்த‌தை ப‌ற்றிய‌து அது.
பாற்க‌ட‌ல் என்ற‌ ஒன்றை க‌டைந்தால் அதில் இருந்து அமிர்த‌ம் கிடைக்கும் என்றும் , அந்த‌ அமிர்த‌ம் உண்டால், இள‌மை மாறாது, முதுமை வ‌ராது, ம‌ர‌ண‌ம் வ‌ராது என்றும் சொல்ல‌ப் ப‌டுகிற‌து.
அடாமிக் ப‌வ‌ர் பிளான்டிலே மிக‌ குறைந்த‌ எடையுள்ள‌ யுரேனிய‌ம் தாதுவில் இருந்து மிக‌ அதிக‌ மின் ச‌க்தி கிடைக்கிற‌து, ஆனால் அதில் இருந்து ம‌க்க‌ளைப் பாதிக்கும் க‌திர் வீச்சை த‌ரும் அணுக் க‌ழிவும் வ‌ருகிற‌து அல்லவா. அது போல‌ சில‌ நேர‌ங்க‌ளில் ந‌ன்மை ஒன்று கிடைத்தால் அதோடு பை புராட‌க்டாக‌ ஆப‌த்தும் வ‌ரும் போல‌ இருக்கிற‌து!
இந்த‌ க‌திர்வீச்சுள்ள‌ அணுக் க‌ழிவை டிஸ்போஸ் செய்ய‌ ப‌டாத‌ பாடு ப‌டுகிறார்க‌ள். காங்கிரீட் க‌ல‌ங்க‌ளுக்குள் அதைக் கொட்டி இறுக‌ மூடி, கட‌லுக்குள் அதை போடுவ‌தாக‌ ப‌டிக்கிறோம் அல்ல‌வா. அணுக் க‌ழிவை சும‌ந்து வ‌ரும் க‌ப்ப‌ல்க‌ளை, ப‌ல‌ நாடுக‌ள் த‌ங்க‌ள் க‌ட‌ல் எல்லைக்குள் அனும‌திப்ப‌தில்லை.
அமிர்தம் என்கிற மரணத்தை தவிர்க்கும் பொருளுக்கு பை புராடக்டாக ஆலாகால விஷம் என்னும் மிகக் கொடிய நஞ்சும் வந்ததாம். தேவர்கள் எல்லாம் தலையை அமிர்தம் கிடைத்தது ஓகே, இந்த ஆலகால விஷத்தை எங்கே வைப்பது, இது எல்லோரியும் அழிக்கும் நஞ்சு ஆயிற்றே என்று எண்ணி கலக்கம் அடைந்தனர்.
அந்த நேரத்திலே பரம சிவன் எல்லோரையும் காக்கும் பொருட்டு , அந்த விடத்தை எடுத்து விழுங்கினார் என்கின்றனர். இப்படி எல்லோரும் அமிரத்தை அருந்தி மகிழும்போது சிவன் நஞ்சை உண்டு இருக்கிறார். இதையே பேராற்றளின் சின்னம், பெருங்ககருணை யின் சின்னம் , தியாத்தின் சின்னம் என்று எல்லாம் அறிஞர்கள் சொல்லுகின்றனர்.
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால் எல்லோரும் எப்படியோ, அந்த விஷம் ஒரு வழியாக டிஸ்போஸ் ஆனால் சரி என்று அமுதத்தை சுவைக்கும் நேரத்திலே, ஒருவர் மட்டும் துடிக்கிறார். அவர் தான் சிவனாரின் மனைவி பார்வதி. அந்த விசத்தில் இருந்து தன கணவனுக்கு பாதிப்பு வந்து விடுமோ  என்ற துடிப்பிலே பார்வதி தாயார், சிவனின்  தொண்டைக்கு கீழே நஞ்சு இறங்காத படிக்கு அதை தொண்டையிலே நிறுத்துகிறார்.
இந்திய சமுதாயத்திலே ஒருவனுக்கு சொத்து , சுகம், பேர், புகழ், பதவி, அந்தஸ்து,… எதை இழந்தாலும் சரி , தூய்மையும் அன்பும், சுறுசுறுப்பும் உள்ள மனைவி இருந்தால் போதும்  அவன் ர க்ஷ ப பட்டு விடுவான். பார்வதி, சீதை, கண்ணகி, நளாயினி, சாவித்திரி …. இவர்கள் மட்டுமல்ல, இன்றைக்கு வாழும் தெய்வங்களாக உள்ள அன்பு மனைவியறாலே இந்திய சமுதாயம் வாழுகிறது. இதைப் பற்றி இன்னொரு கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.
இன்றைய கட்டுரையில் நாம் ஆராய தொடங்கி இருப்பது என்னவென்றால், இப்படி அனைவரின் நன்மைக்காக விடத்தை அருந்திய நீலகண்டன் என்னும் பரமசிவன் மேல் ஒரு குற்றச்சாட்டு வைக்கப் பட்டுள்ளது.
அது  என்னவென்றால் அவர் புணர்ச்சி செய்யும் போது விந்து கீழே   சிந்தி விட்டதாம். என்னய்யா இது இண்டீசென்ட் டா இருக்கு, புணரும்போது விந்து சிந்தர மாறியா புணருவது என்று , இவரை போய் கும்பிடராங்களே என்கிறார்கள்.
என்னா அண்ணே, கடவுளுக்காக கோட்பாட்டை உருவாக்கும் போது அவர் பொறாமைக் காரர், வேற ஒருத்தரை கும்பிட்டா அவனுக்கு நெருப்புதான்,  உடன் படிக்கை செயாமல் இன அழிப்பு செஞ்சுடுங்கனு … எல்லாம் கோட்பாட்டை உருவாக்கி வைச்சிக்கிட்டு, இவ்வளவு தியாகம் பண்ண ஒருத்தரை கும்பிடக் கூடாதுங் கிரீங்களே,
அட போப்பா உனக்கு சொன்னா புரியுதா… விந்து சிந்தினா அது டீசன்டாவா இருக்கு … அந்தக் காரணம் காட்டி அவரை கடவுள் பதவியிலிருந்து இறக்குங்க, என்கிறார்கள்….இன்னும் சில கருத்துக்கள், கொஞ்சம் நஞ்சமா, கேலன் கணக்கிலா விந்து கொட்டிப் போச்சு என்ற வகையிலே சொல்லப் படுகின்றன.
ஏம்பா பிற மதங்ககளே கூடாது என் மதம் தான் இருக்கணும்கிற படியான சமரச மறுப்பு,  சகிப்புத் தன்மை   மறுப்பு, நல்லிணக்க மறுப்புக் குணாதிசயங்களி உடைய மத வெறிக் கோட்பாட்டுப்  பிரச்சாரத்தால் மக்களிடையே பிரச்சினை வந்து பல பேர் கொல்லப் படுவதும், இனங்கள் அழிக்கப் படுவதுமாக உள்ளதே, இதனால் மக்களுக்குப் பாதிப்பா, இல்லை விந்து சிந்தியதால் மக்களுக்குப் பாதிப்பா?
அட போப்பா, எவ்வளவு கஷ்டப்ப பட்டு இந்த சிவன் கிற வரை கடவுளா கும்பிடக் கொடாது சொல்றதுக்கு ஒரு நல்ல காரணத்தை கண்டு பிடிச்சிருக்கோம், நீ குறுக்கால புகுந்து இன படுகொலை, மத வெறி, பொறாமைக்கார கோட்பாடு அப்படின்னு பாட ஆரம்பிக்காதே, விந்து சிந்துவதுதான் இன்று உலகத்தில் இருக்கும் மிகப் பெரிய பிரச்சினை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக