ஞாயிறு, 6 நவம்பர், 2011

அல்லாஹ் தான்நாடியோரை வழிதவறச் செய்கின்றான்……


வழித்தவறச் செய்யும் “அல்லா”

உலகில் வழிதவறுவோர் எல்லோரும் அல்லாவே வழிதவறச் செய்வதாக குர் ஆன் கூறுகின்றது……………!)
குர் ஆனை வாசித்த எனக்கு ஆச்சரியம்!!!!!!! ஏனென்றால் வழிதவறுவதிலிருந்து சண்டை மூட்டுவதிலிருந்து நரகத்திற்கு அழைத்து சென்று அங்கு போடுவது வரைக்கும் எல்லா காரியங்களையும் அல்லா என்னும் இஸ்லாமிய கடவுள் தான் நாடியோருக்கு மட்டும் தான் செய்கின்றாராம். சில காரியங்களை மட்டும் நான் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.
வழிதவறச் செய்வதும், நேர்வழியில் நடத்துவதும், குறிப்பிட்ட சிலரை மட்டும் தேர்ந்தெடுப்பதும், சிலருக்கு மட்டும் அருட்கொடையைஅருளி செய்வதும், மக்களை கஷ்டத்திற்குள்ளாக்குவதும், சண்டை செய்ய செய்வதும், சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள் (தடுக்காமலிருப்பதும்), சிலருக்கு மட்டும் இரட்டிப்பாய் கொடுக்கிறதும், சிலருக்கு மட்டும் ஞானத்தை கொடுப்பதும், சிலருக்கு மட்டும் மன்னிப்பதும், தான் நாடியவரை வேதனை அளிப்பதையும், பலப்படுத்துவதும், கண்ணியப்படுத்துகிறதும்,  இழிவு  படுத்துவதும், சிலருக்கு மட்டும் உணவளிக்கின்றதும்,  அழிவுகளை ஏற்படுத்தவும், தவறு செய்யும் சிலரை மட்டும் தண்டிக்கிறதும்,  அ(த் துன்பத்)தை தான் நாடினால் நீக்கிவிடுவான் (நீக்காமலிருப்பதும்), அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இணை வைத்திருக்கவே மாட்டார்கள் (இணை வைப்பதை தடுக்காமலிருப்பதும்), அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள் (நம்பிக்கையை ஏற்படுத்தாதிருப்பதும்), உம்முடைய இறைவன் நாடியிருந்தால் இவ்வாறு அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் (நரகத்திற்கு தள்ளாதிருக்கவும்), அவன் நாடியிருந்தால் உங்கள் யாவரையும் அவன் நல்வழியில் செலுத்தியிருப்பான் (நல்வழியில் செலுத்தாதிருப்பதையும்), தான் நாடியவருக்கு மன்னிப்பளிக்கின்றான்(சிலருக்கு மாத்திரம் மன்னிப்பு வழங்குதலையும்), உம் இறைவன் நாடியிருந்தால் பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள் (எல்லாருக்கும் நம்பிக்கையை செய்யாதிருப்பதையும்), அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது; தான் நாடியவரைத் தாக்குகின்றான்; (தீமையை செய்ய தூண்டுகிறதையும், அதை நீக்கவும் செய்யாதிருக்கவும்) செய்பவராக அல்லா என்னும் இஸ்லாமிய கடவுள் திகழ்கின்றார்.
அதற்கான குர் ஆன் வசனங்களை படித்து பாருங்கள். என்னை பாதிப்புக்குள்ளாக்கிய முக்கிய குர் ஆன் வசனங்கள் இவை தான்….
48:11. “அல்லாஹ் உங்களுக்கு ஒரு கெடுதியை நாடினாலும் அல்லது அவன் உங்களுக்கு ஒரு நன்மையை நாடினாலும், அதில் எதையும் அவனுக்கெதிராக உங்களுக்குத் தடுக்கக் கூடிய) அதிகாரம் பெற்றவர் யார்!
அதாவது கெடுதியை எனக்கு ஏற்படுத்துபவராக அல்லா திகழ்கின்றார். அக்கெடுதியிலிருந்து யாரும் என்னை மீட்க முடியாது……! கடவுளே……!!
76:30. எனினும், அல்லாஹ் நாடினாலன்றி, நீங்கள் நாட மாட்டீர்கள்;
நான் அல்லாவை நாடுவதென்றால் முதலில் அவர் தான் நாட வேண்டும்…. அப்போ நான் நாடாவிட்டால் யார் காரணம்????
74:56. இன்னும், அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் நல்லுபதேசம் பெற முடியாது.
நான் நல்லுபதேசம் பெற வேண்டுமென்றால் முதலில் அவர் தான் நாட வேண்டும்…. அப்போ நான்  நல்லுபதேசம் பெறாவிட்டால் யார் காரணம்????
இவைகள் சில……… எல்லா அல்லாவின் நாடல்களையும் கீழே பாருங்கள்….அதாவது எல்லாவற்றிற்கும் அல்லா தான் காரணம்…..!!
14:4. அல்லாஹ் தான்நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்;
(நேர் வழியில் செல்லாதோருக்கு யார் காரணம்?)
24:46. மேலும் தான்நாடியோரை அல்லாஹ் நேர்வழிப் படுத்துகிறான்.
(நேர் வழியில் செல்லாதோருக்கு யார் காரணம்?)
28:68. (தூதராகத் தான்நாடியோரைத்) தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்.
(சைத்தான்கள் உருவாக யார் காரணம்?)
2:20.  அல்லாஹ் நாடினால் அவர்களுடைய கேள்விப் புலனையும், பார்வைகளையும் போக்கிவிடுவான்;
(எவ்வளவு நல்லவர்களாயிருந்தாலும் சரி அவர் குருடாக்கிவிட்டுருவாராம்)
2:90. தன் அடியார்களில் தான் நாடியவர் மீது தன் அருட்கொடையை அல்லாஹ் அருளியதற்காக ………
(உலகிலுள்ள பிச்சைக்காரர் அனைவருக்கும் யார் காரணம்?)
2:142.  தான் நாடியவரை அவன் நேர்வழியில் நடத்திச் செல்வான்” என்று.
(நேர் வழியில் செல்லாதோருக்கு யார் காரணம்?)
2:213.  அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகின்றான்.
(நேர் வழியில் செல்லாதோருக்கு யார் காரணம்?)
2:220.  அல்லாஹ் நாடியிருந்தால் உங்களைக் கஷ்டத்திற்குள்ளாக்கியிருப்பான்;
(இவ்வுலகத்தில் கஷ்டப்படுகின்றவர்களுக்கெல்லாம் யார் காரணம்?)
2:253. அல்லாஹ் நாடியிருந்தால், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள் (தங்களுக்குள்) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான்.
(சண்டை இங்கு ஏற்படுவதற்கு யார் காரணம்?)
2:261.  அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்;
(உலகிலுள்ள பிச்சைக்காரர் அனைவருக்கும் யார் காரணம்?)
2:269. தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்;
(உலகத்தில் பரீட்சையில் பாஸ் பண்ண கடின முயற்சி தேவையில்லை…. பாஸ் ஆகின்றவர்கள் எல்லோருக்கும் அவர் தான் ஞானம் கொடுக்கின்றார்)
2:272. தான்நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான்;
(நேர் வழியில் செல்லாதோருக்கு யார் காரணம்?)
2:284.  இன்னும், தான்நாடியவரை மன்னிப்பான்; தான் நாடியவரை வேதனையும் செய்வான்.
(உலகத்தில் வேதனைபப் படுகின்றவர்களே இதற்கெல்லாம் அவர் தான் காரணம்….!!)
3:13.  இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான்
(ஒல்லிக்குச்சிகளையெல்லாம் அவர் நாடவில்லை….)
3:26.  நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீநாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்;
(உலகத்தில் இழிவுக்குள்ளாவோர் அனைவருக்கும் யார் காரணம்?)
3:27.  நீ நாடியோருக்குக் கணக்கின்றிக் கொடுக்கின்றாய்.
(உலகிலுள்ள பிச்சைக்காரர் அனைவருக்கும் யார் காரணம்?)
3:37.  நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்”
(சோமாலியாவில் பஞ்சம் ஏற்பட யார் காரணம்?)
3:40.  அல்லாஹ் தான் நாடியதைச் செய்து முடிக்கின்றான்” என்று கூறினான்.
3:73. நிச்சயமாக அருட்கொடையெல்லாம் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது; அதை அவன் நாடியோருக்கு வழங்குகின்றான்;
(உலகிலுள்ள பிச்சைக்காரர் அனைவருக்கும் யார் காரணம்?)
3:74. அவன் தன் ரஹ்மத்தை(அருளை)க் கொண்டு தான் நாடியோரைச் சொந்தமாக்கிக் கொள்கின்றான்;
3:129.  தான்நாடியவர்களை அவன் மன்னிக்கின்றான்; இன்னும் தான் நாடியவர்களை வேதனைப்படுத்தவும் செய்கின்றான்.
(மன்னிப்பு பெறாதவர்களுக்கு யார் காரணம்?)
4:48.  இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்;
(மன்னிப்பு பெறாதவர்களுக்கு யார் காரணம்?)
4:49.  அல்லாஹ் தான் நாடியவர்களைப் பரிசுத்தம் ஆக்குவான்.
(பரிசுத்தம் இல்லாவதவர்களுக்கு யார் காரணம்?)
4:116.  இது அல்லாத (பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான்;
(மன்னிப்பு பெறாதவர்களுக்கு யார் காரணம்?)
4:133. மனிதர்களே! அவன் நாடினால், உங்களை அழித்துவிட்டு (உங்களுடைய இடத்தில்) வேறு மனிதர்களைக் கொண்டு வருவான்;
(நினைத்தால் எல்லோரையும் அழித்தும் போடுவாராம்)
5:18. தான் நாடியவர்களை அவன் மன்னிக்கிறான். தான்நாடியவர்களைத் தண்டிக்கவும் செய்கிறான்..
(மன்னிப்பு பெறாதவர்களுக்கு யார் காரணம்?)
5:40. நிச்சயமாக அல்லாஹ் – அவனுக்கே வானங்கள், பூமி இவற்றின் ஆட்சி சொந்தமானது என்பதை நீர் அறியவில்லையா, தான் நாடியவரை அவன் வேதனை செய்கிறான்; இன்னும் தான்நாடியவருக்கு மன்னிப்பு அளிக்கிறான்;
(மன்னிப்பு பெறாதவர்களுக்கு யார் காரணம்?)
5:52.  அல்லாஹ் (தான் நாடியபடி) தன்னிடமிருந்து (உங்களுக்கு) ஒரு வெற்றியையோ அல்லது ஏதாவது ஒரு (நற்) காரியத்தையோ கொடுத்து விடலாம்;
5:54.  இதை அவன் நாடியவருக்குக் கொடுக்கின்றான்;
(அருட்கொடை கி்டைக்காதோருக்கு யார் காரணம்?)
5:64.  அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன; தான் நாடியவாறு (தன் அருட்கொடைகளை) கொடுக்கிறான்;
(அருட்கொடை கி்டைக்காதோருக்கு யார் காரணம்?)
6:35. அன்றியும் அல்லாஹ் நாடினால் அவர்கள் அனைவரையும் நேர் வழியில் ஒன்று சேர்த்து விடுவான்;
(எல்லோரையும் நேர் வழியில் செல்ல விடாதிருப்பவர் யார்?
6:39. அல்லாஹ் தான் நாடியவர்களைத் தவறான வழியில் செல்ல விட்டு விடுகிறான்; இன்னும் அவன் நாடியவரை நேர்வழியில் செலுத்துகின்றான்.
(நல்வழியிலிலும் தீய வழிகளிலும் மனிதர்கள் செல்ல யார் காரணம்?)
6:41.  அ(த் துன்பத்)தை தான் நாடினால் நீக்கிவிடுவான்.
(துன்பத்தை நீக்காமலிருப்பதற்கு யார் காரணம்?)
6:107. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இணை வைத்திருக்கவே மாட்டார்கள்;
(இணைவைப்பதை தடுக்காமலிருப்பது யார் காரணம்?)
6:111. நிச்சயமாக நாம் அவர்களிடம் மலக்குகளை இறக்கிவைத்தாலும், இறந்தவர்களை அவர்களிடம் பேசும்படிச் செய்தாலும், இன்னும் எல்லாப் பொருட்களையும் அவர்களிடம் நேருக்குநேர் கொண்டுவந்து ஒன்று சேர்த்தாலும் – அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
(எத்தனை அத்தாட்சிகளை கொடுத்தாலும் அவர் நாடினால் தான் ஈமான் கொள்வார்கள் என்றால் அதற்கு என்ன அர்த்தம்?)
6:133அவன் நாடினால் உங்களைபோக்கி உங்களுக்கு பிறகு, உங்களை அவன் இதர மக்களின் சந்ததியிலிருந்து உற்பத்தி செய்தது போன்ற – தான் நாடியவரை உங்களுக்கு பதிலாக ஆக்கி விடுவான்.
(நினைத்தால் உங்களை போக்கியும் விடுவாராம்….)
6:137. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் அப்படிச் செய்திருக்க மாட்டார்கள்.
(அவர் நாடாததற்கு இவர்கள் மேல் குற்றம் சாட்டுவது சாரியா?)
6:148. (அல்லாஹ்வுக்கு இணை வைக்கும்) முஷ்ரிக்குகள் “அல்லாஹ் நாடியிருந்தால், நாங்களும் எங்கள் மூதாதையர்களும் இணை வைத்திருக்க மாட்டோம்; நாங்கள் எந்தப் பொருளையும் (எங்கள் விருப்பப்படி) ஹராமாக்கியிருக்கவும் மாட்டோம்” என்று கூறுவார்கள்.
(இணை வைப்பதை தடுப்பதற்கு அவர் நாடாமல் இருந்தால் இணை வைத்ததிற்கு யார் காரணம்?
6:149. அவன் நாடியிருந்தால் உங்கள் யாவரையும் அவன் நல்வழியில் செலுத்தியிருப்பான்” என்று நீர் கூறும்.
(தீய வழியில் செல்லும் போது தடுக்காமல் இருந்தது யார்?)
7:89. “உங்கள் மார்க்கத்தை விட்டு, அல்லாஹ் எங்களைக் காப்பாற்றி விட்டபின், உங்கள் மார்க்கத்திற்கு நாங்கள் திரும்பினால், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்க்கற்பனை செய்தவர்களாகி விடுவோம்; எங்கள் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நாங்கள் அதற்கு திரும்பவே மாட்டோம்;
7:155. நீ நாடியவர்களை வழிதவற விடுகிறாய்; இன்னும் நீ நாடியவர்களை நேர் வழியில் நடத்துகிறாய்.
(நேர் வழியில் செல்லாதோருக்கு யார் காரணம்?) 
7:156 ”என்னுடைய வேதனையை கொண்டு நான் நாடியவரை பிடிப்பேன்;
(வேதனையுறுவோருக்கு யார் காரணம்?)
7:164. “அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்த கூட்டத்தார்களுக்கு ……………….
(வேதனைப்படுத்தவும் ஒரு கூட்டத்தாரை ஆயத்தப்படுத்தி உள்ளாராம்….)
9:15. தான் நாடியவரின் தவ்பாவை (மன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்கிறான்.
(மன்னிப்பு கோருவோரிலும் தான் நாடியவரை மட்டும் தான் மன்னிப்பு வழங்கப்படும்…..)
9:27. அல்லாஹ் இதற்குப் பின்னர், தான் நாடியவருக்கு (அவர்கள் மனந்திருந்தி மன்னிப்புக் கோரினால்) மன்னிப்பளிக்கின்றான்;
(மன்னிப்பு கோருவோரிலும் தான் நாடியவரை மட்டும் தான் மன்னிப்பு வழங்கப்படும்…..)
9:28. அல்லாஹ் நாடினால் – அவன் அதி சீக்கிரம் அவன் தன் அருளால் உங்களைச் செல்வந்தர்களாக்கி
(உலகிலுள்ள பிச்சைக்காரர் அனைவருக்கும் யார் காரணம்?)
9:109.  அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர் வழியில் நடத்த மாட்டான்.
(நேர் வழியில் செல்லாதோருக்கு யார் காரணம்?) 
10:25.  அவன்நாடியவரை நேர் வழியில் செலுத்துகிறான்.
(நேர் வழியில் செல்லாதோருக்கு யார் காரணம்?) 
10:99. மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்;
(இந்த வேலையை செய்திருந்தால் ஒரு பிரச்சனையும் வந்திருக்காது)
10:107. அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது; அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை; தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் -
(அதாவது கெடுதியை எனக்கு ஏற்படுத்துபவராக அல்லா திகழ்கின்றார். அக்கெடுதியிலிருந்து யாரும் என்னை மீட்க முடியாது……! கடவுளே……!!)
11:33. (அதற்கு) அவர், “நிச்சயமாக அல்லாஹ் நாடினால், அதை உங்களிடம் கொண்டு வருபவன் அவனே ஆவான்; அதை நீங்கள் தடுத்து விடக்கூடியவர்களும் அல்லர்” என்று கூறினார்.
11:34. “நான் உங்களுக்கு நல்லுபதேசம் செய்யக்கருதினாலும், உங்களை வழிகேட்டிலேயே விட்டு வைக்க அல்லாஹ் நாடியிருந்தால், என்னுடைய நல்லுபதேசம் உங்களுக்கு (யாதொரு) பலனும் அளிக்காது;
11:107. உம் இறைவன் நாடினாலன்றி, வானங்களும் பூமியும் நீடிக்கும் காலமெல்லாம் அவர்கள் அ(ந்நரகத்)திலேயே நிலைபெற்று விடுவார்கள்; நிச்சயமாக உம் இறைவன் தான் நாடியதைச் செய்து முடிப்பவன்.
11:108.  உம் இறைவன் நாடினாலன்றி, வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் காலமெல்லாம் அவர்கள் அ(ச்சுவனத்)திலேயே நிலைபெற்று விடுவார்கள்
11:118. உம் இறைவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருப்பான்; (அவன் அப்படி ஆக்கவில்லை.) எனவே, அவர்கள் எப்போதும் பேதப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.
12:56.  இவ்வாறே நாம் நாடியவருக்கு நமது அருள் கிடைக்கும் படிச் செய்கின்றோம்.
12:100.  நிச்சயமாக என் இறைவன், தான் நாடியவற்றை மிக நுட்பமாகச் செய்கிறவன்,
12:110.  நாம் நாடியவர்கள் காப்பாற்றப்பட்டனர்.
13:11.  இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை – அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.
13:13. மேலும் இடி அவன் புகழைக் கொண்டும், மலக்குகள் அவனையஞ்சியும் (அவனை) தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றனர். இன்னும் அவனே இடிகளை விழச்செய்து, அவற்றைக் கொண்டு, தான் நாடியவரைத் தாக்குகின்றான்;
13:26. அல்லாஹ் தான் நாடியவருக்கு சம்பத்தை விசாலமாக்குகிறான்; (தான் நாடியவருக்கு) அளவிட்டுக் கொடுக்கின்றான்;
13:27.  “நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிகெடச்செய்கிறான்; தன் பால் எவர் திரும்புகிறாரோ அத்தகையோருக்கு நேர் வழிகாட்டுகிறான்” என்று
13:31.  அல்லாஹ் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டியிருப்பான் என்பதை ஈமான் கொண்டவர்கள் அறியவில்லையா?
13:39. (எனினும்,) தான் நாடியதை (அதிலிருந்து) அல்லாஹ் அழித்து விடுவான். (தான் நாடியதை அதில்) நிலைத்திருக்கவும் செய்வான் -
14:4.  அல்லாஹ் தான்நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்;
(நேர் வழியில் செல்லாதோருக்கு யார் காரணம்?) 
14:11.  அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர் மீது அருள் புரிகிறான்;
16:2. அவன் மலக்குகளிடம் வஹீயைக் கொடுத்துத் தன் அடியார்களில் தான் நாடியவர் மீது (அனுப்பி வைத்து,) “நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன், என்னைத்தவிர வேறுயாருமில்லை; ஆகையால் நீங்கள் எனக்கே அஞ்சுங்கள் என (மக்களுக்கு) எச்சரிக்கை செய்யுங்கள்” என்ற கட்டளையுடன் (மலக்குகளை) இறக்கி வைக்கிறான்.
16:9.  அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் நிச்சயமாக நேர்வழியில் சேர்த்துவிடுவான்.
16:35. “அல்லாஹ் நாடியிருந்தால் அவனையன்றி வேறு எந்தப் பொருளையும், நாங்களோ, எங்களுடைய தந்தையர்களோ வணங்கியிருக்கமாட்டோம்;
16:93. மேலும், அல்லாஹ் நாடியிருந்தால் உங்களை ஒரே சமுதாயத்தவராய் ஆக்கியிருப்பான்; என்றாலும் தான் நாடியவர்களை வழி கேட்டிலே விட்டு வைக்கிறான் – இன்னும் தான்நாடியவர்களை நேர் வழியில் சேர்ப்பான்;
17:30. நிச்சயமாக உம்முடைய இறைவன் தான் நாடியவருக்கு விசாலமாக உணவு (சம்பத்து)களை வழங்குகிறான்; (தான் நாடியவருக்கு) அளவாகவும் கொடுக்கிறான் -
17:54.  அவன் நாடினால் உங்களுக்கு கிருபை செய்வான்; அல்லது அவன் நாடினால் உங்களை வேதனை செய்வான்;
17:86. (நபியே!) நாம் நாடினால் உமக்கு நாம் வஹீயாக நாம் அறிவித்ததை (குர்ஆனை) போக்கிவிடுவோம்; பின்னர், நமக்கெதிராக உமக்குப் பொறுப்பேற்கக் கூடிய எவரையும் நீர் காணமாட்டீர்.
22:16.  மேலும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களை (இதன் மூலம்) நேர்வழியில் சேர்ப்பான்.
(நேர் வழியில் செல்லாதோருக்கு யார் காரணம்?) 
22:18. அன்றியும், எவனை அல்லாஹ் இழிவுபடுத்துகின்றானோ அவனை கண்ணியப்படுத்துபவன் எவனுமில்லை; நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான்.
24:21.  உங்களில் எவரும் எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையடைந்திருக்க முடியாது – எனினும் தான்நாடியவர்களை அல்லாஹ் தூய்மைப் படுத்துகிறான்
24:35.  அல்லாஹ் தான்நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான்.
(நேர் வழியில் செல்லாதோருக்கு யார் காரணம்?) 
24:38.  அல்லாஹ் தான்நாடியவர்களுக்குக் கணக்கின்றிக் கொடுக்கிறான்.
24:43.  அதைத் தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான் – தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் -
24:46.  மேலும் தான்நாடியோரை அல்லாஹ் நேர்வழிப் படுத்துகிறான்.
(நேர் வழியில் செல்லாதோருக்கு யார் காரணம்?) 
25:51. மேலும், நாம் நாடியிருந்தால், ஒவ்வொரு ஊரிலும், அச்சமூட்டி எச்சரிக்கும் ஒருவரை நாம் அனுப்பியிருப்போம்.
27:87. அல்லாஹ் நாடியவர்களைத் தவிர, வானங்களில் இருப்பவர்களும், பூமியில் இருப்பவர்களும் திகிலடைந்து விடுவார்கள்;
28:56. (நபியே!) நீர் நேசிப்பவர்களை(யெல்லாம்) நிச்சயமாக நேர்வழியில் செலுத்திவிட உம்மால் முடியாது; ஆனால், அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான்
28:68.  (தூதராகத் தான்நாடியோரைத்) தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்.
28:82. அல்லாஹ் தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு ஆகார வசதிகளைப் பெருக்குகிறான், சுருக்கியும் விடுகிறான்
29:21. தான் நாடியவரை அவன் வேதனை செய்கிறான்; இன்னும் தான் நாடியவருக்குக் கிருபை செய்கிறான்
29:62. “அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு உணவை விசாலமாக்குகிறான், தான் நாடியவருக்கு சுருக்கியும் விடுகிறான்;
30:5. அல்லாஹ்வின் உதவியினால் (வெற்றி கிடைக்கும்); அவன்தான் நாடியவர்களுக்கு உதவி புரிகிறான் –
30:37. நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியோருக்கு ரிஸ்க்கை – ஆகார வசதிகளை – விசாலமாக்குகிறான்; (தான் நாடியோருக்குச்) சுருக்கியும் விடுகிறான்
32:13. மேலும் நாம் நாடியிருந்தால், ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதற்குரிய நேர்வழியை நாம் கொடுத்திருப்போம்; ஆனால் “நான் நிச்சயமாக நரகத்தை – ஜின்களையும், (தீய) மனிதர்களையும் – ஆகிய யாவரையும் கொண்டு நிரப்புவேன்” என்று என்னிடமிருந்து (முன்னரே) வாக்கு வந்துள்ளது.
33:17. “அல்லாஹ் உங்களுக்குக் கெடுதியை நாடினால், அவனிடமிருந்து உங்களைப் பாதுகாப்பவர் யார்? அல்லது அவன் உங்களுக்கு ரஹ்மத்தை நாடினால் (அதை உங்களுக்குத் தடை செய்பவர் யார்?)
33:24. அவன் நாடினால் முனாஃபிக்குகளை வேதனையும் செய்வான், அல்லது அவர்களை மன்னிப்பான் -
34:36. “நிச்சயமாக என்னுடைய இறைவன் தான் நாடியவர்களுக்கு, செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும், (அதை, தான் நாடியவர்களுக்கு சுருக்கியும் விடுகிறான்
34:39. “நிச்சயமாக என் இறைவன் தன் அடியார்களில் யாருக்கு நாடுகிறானோ, அவருக்கு செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும் தான் நாடியோருக்கு சுருக்கியும் விடுகிறான்;
35:8. நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிதவறச் செய்கிறான்; மேலும் தான் நாடியவரை நேர்வழியில் சேர்க்கிறான்;
(நேர் வழியில் செல்லாதோருக்கு யார் காரணம்?) 
35:16. அவன் நாடினால், உங்களைப் போக்கிவிட்டு, (வேறொரு) புதியபடைப்பைக் கொண்டு வருவான்.
35:22.  நிச்சயமாக அல்லாஹ்தான் நாடியவர்களைச் செவியேற்கும்படி செய்கிறான்,
(நேர் வழியில் செல்லாதோருக்கு யார் காரணம்?) 
36:66. நாம் நாடியிருந்தால், நாம் அவர்களுடைய கண்களைப் போக்கியிருப்போம்; அப்பொழுது (அவர்கள் தப்பும்) வழிதேடி ஓடினால் அவர்கள் எதைப் பார்ப்பார்கள்?
36:67. அன்றியும், நாம் நாடியிருந்தால், அவர்களுடைய இடத்திலேயே அவர்களை உரு மாற்றியிருப்போம். அப்போது, அவர்கள் முன் செல்லவும் சக்தி பெறமாட்டார்கள்; இன்னும் அவர்கள் மீளவும் மாட்டார்கள்.
36:82. எப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; “குன்” (ஆய்விடுக) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது.
37:98. (இவ்வாறாக) அவர்கள் அவருக்குச் சதி செய்ய நாடினார்கள்; ஆனால், நாம் அவர்களையே இழிவுபடுத்தி விட்டோம்.
37:102. அல்லாஹ் நாடினால் – என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.”
39:23.  தான்நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான். ஆனால், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர்வழியில் நடத்துவோர் எவருமில்லை.
(நேர் வழியில் செல்லாதோருக்கு யார் காரணம்?) 
39:38 “அல்லாஹ் எனக்கு ஏதேனும் ஒரு கெடுதி செய்ய நாடினால் நீங்கள் (பிரார்த்தித்து) அழைக்கும் அல்லாஹ் அல்லாதவை அக்கெடுதியை நீக்கிவிட முடியுமா?
(கெடுதி செய்கின்றவர் யார் என்பதை உறுதிப்படுத்துகின்றது மேற்கூறிய வசனம்)
39:52. நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு உணவு (சம்பத்து)களை விசாலமாக்குகிறான்; சுருக்கியும் விடுகிறான் என்பதை அவர்கள் அறியவில்லையா?
39:68. ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டால் உடன் வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் – அல்லாஹ் நாடியவர்களைத் தவிர – மூர்ச்சித்து விடுவார்கள்; பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து, எதிர் நோக்கி நிற்பார்கள்.
40:15. தன் அடியார்களில் தான் நாடியவர்கள் மீது தன் கட்டளையை வஹீ மூலம் இறக்கி வைக்கிறான்.
(நேர் வழியில் செல்லாதோருக்கு யார் காரணம்?) 
42:8. அல்லாஹ் நாடியிருந்தால், நிச்சயமாக அவர்கள் (யாவரையும்) அவன் ஒரே உம்மத்தாக – சமுதாயமாக ஆக்கியிருப்பான்; எனினும் அவன் தான் நாடியவர்களைத் தன்னுடைய ரஹ்மத்தில் – கிருபையில் – நுழைவிப்பான்;
(தாம் நாடியவர்கள் மட்டும் தான் ரஹ்மத்தில் நுழைவிப்பான் என்றால் நுழையாதவர்களை நாட வில்லையோ?)
42:12.  தான்நாடியவர்களுக்கு அவனே உணவு வசதிகளைப் பெருகும் படி செய்கிறான், (தான் நாடியவர்களுக்கு அவனே அளவு படுத்திச்) சுருக்கிவிடுகிறான்.
(உணவு கிடைக்காதோருக்கு யார் காரணம்?)
42:13தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் – (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்.
(நேர் வழியில் செல்லாதோருக்கு யார் காரணம்?) 
42:19.  தான் நாடியவர்களுக்கு (வேண்டிய) உணவளிக்கிறான்;
(உணவில்லாதோருக்கு யார் காரணம்?)
42:24. அல்லாஹ் நாடினால் அவன் உம் இருதயத்தின் மீது முத்திரையிட்டிருப்பான்;
47:4. போர்(ப் பகைவர்கள்) தங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரையில் (இவ்வாறு செய்யுங்கள்) இது (இறை கட்டளையாகும்) அல்லாஹ் நாடியிருந்தால் (போரின்றி அவனே) அவர்களிடம் பழிவாங்கியிருப்பான்; ஆயினும், (போரின் மூலம்) அவன் உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கின்றான்; ஆகவே, அல்லாஹ்வின் பாதையில், யார் கொல்லப்படுகிறார்களோ அவர்களுடைய (நற்) செயல்களை அவன் பயனற்றுப் போகுமாறு செய்யமாட்டான்.
(இங்கு போர் நடப்பதற்கு யார் காரணம்?)
48:11. “அல்லாஹ் உங்களுக்கு ஒரு கெடுதியை நாடினாலும் அல்லது அவன் உங்களுக்கு ஒரு நன்மையை நாடினாலும், அதில் எதையும் அவனுக்கெதிராக உங்களுக்கு(த் தடுக்கக் கூடிய) அதிகாரம் பெற்றவர் யார்!
(அதாவது கெடுதியை எனக்கு ஏற்படுத்துபவராக அல்லா திகழ்கின்றார். அக்கெடுதியிலிருந்து யாரும் என்னை மீட்க முடியாது……! கடவுளே……!!)
57:21.  அதனை அவன் நாடியவருக்கு அளிக்கின்றான்.
(நேர் வழியில் செல்லாதோருக்கு யார் காரணம்?) 
74:31. இவ்வாறே அல்லாஹ் தான் நாடியவர்களை வழிகேட்டிலும் விடுகிறான்; இன்னும் தான் நாடியவர்களை நேர்வழியிலும் செலுத்துகிறான்;
(நேர் வழியில் செல்லாதோருக்கு யார் காரணம்?)
74:56. இன்னும், அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் நல்லுபதேசம் பெற முடியாது.
(நான் நல்லுபதேசம் பெற வேண்டுமென்றால் முதலில் அவர் தான் நாட வேண்டும்…. அப்போ நான்  நல்லுபதேசம் பெறாவிட்டால் யார் காரணம்????)
76:30. எனினும், அல்லாஹ் நாடினாலன்றி, நீங்கள் நாட மாட்டீர்கள்;
(நான் அல்லாவை நாடுவதென்றால் முதலில் அவர் தான் நாட வேண்டும்…. அப்போ நான் நாடாவிட்டால் யார் காரணம்????)
81:29. ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள்.
(நான் நல்லுபதேசம் பெற வேண்டுமென்றால் முதலில் அவர் தான் நாட வேண்டும்…. அப்போ நான்  நல்லுபதேசம் பெறாவிட்டால் யார் காரணம்????)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக