ஞாயிறு, 6 நவம்பர், 2011

குரான் வசனங்கள் முகமதுவின் உளறலே - 6




குரானைப்படித்தால் அல்லாவின் காமெடிக்கு அளவே இல்லாமல் இருக்கிறது. உங்களுக்கு மனச்சோர்வு ஏற்பட்டால் தமிழ் குரானை படியுங்கள் , மனம் விட்டு சிரிக்கலாம்.



   கீழே உள்ளவை அல்லாவின் காமெடியான வசனங்கள்.

6:42. (நபியே!) உமக்கு முன்னர் இருந்த சமூகத்தாருக்கும் நாம் (நம்) தூதர்களை அனுப்பினோம்; அச்சமூகத்தாரை நோயைக் கொண்டும் வறுமையைக் கொண்டும் பிடித்தோம் அவர்கள் பணிந்து வரும் பொருட்டு.

6:43. நம்மிடமிருந்து அவர்களுக்கு வேதனை வந்தபோது அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? அதற்கு மாறாக அவர்களுடைய இருதயங்கள் இறுகிவிட்டன; அவர்கள் செய்து கொண்டிருந்ததையே, ஷைத்தான் அவர்களுக்கு அழகாகக் காட்டிவிட்டான்.

6:44. அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட நற்போதனைகளை அவர்கள் மறந்துவிட்ட போது, அவர்களுக்கு (முதலில்) எல்லாப் பொருட்களின் வாயில்களையும் நாம் திறந்து விட்டோம் - பின்னர், அவர்களுக்கு கொடுக்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்த வேளை (நம் வேதனையைக் கொண்டு) அவர்களை திடீரெனப் பிடித்துக் கொண்டோம்; அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக ஆகிவிட்டனர். 

6:45. எனவே, அக்கிரமம் செய்து கொண்டிருந்த அக்கூட்டத்தார் வேரறுக்கப்பட்டனர்; “எல்லாப் புகழும் உலகங்கள் யாவற்றுக்கும் இரட்சகனான அல்லாஹ்வுக்கே ஆகும்.”

இந்த அடுத்தடுத்த வசனங்களை படியுங்கள் . அல்லாவின் இயலாமை தெரிகிறது. அல்லாவுக்கு என்ன நடக்கப்போகிறது என்று தெரியாது போல.  அல்லா சொல்வது , மனிதர்களை பணிய வைப்பதற்காக நோய்,வறுமையை குடுத்தானாம்.  ஆனால் வேதனையை குடுத்த போதும் மனிதர்கள் பணியவில்லை.  அதனால் அல்லா கேட்பது ”அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா?”    அப்படி என்றால் அல்லாவுக்கு முதலில் தெரியாது , தெரியாமலே மனிதர்கள் பணிவார்கள் என்று நோய்,வறுமையை குடுத்தான் ஆனால் அவர்களின் இருதயம் பணிவதற்கு மாறாக இறிகிவிட்டது என்கிறான், அதனால் தான் பாவமாக இந்த கேள்வியை கேட்கிறான். அது மட்டுமல்ல ஷைத்தான் மக்களூக்கு அவர்கள் செய்து கொண்டு இருந்ததை அழகாக காட்டிவிட்டானாம். அதன் பின் ஒரு உளறல் வசனம் , அதுக்கு அடுத்தது , அந்த கூட்டத்தையே அழித்தானாம்.  என்ன நடக்கப்போகிறது என்று கூட தெரியாதவனுக்கு எதுக்கு இந்த உளறல். முகமது கடவுளை இந்த அளவு கேவலப்படுத்தி இருக்கவேண்டாம்.




6:68. (நபியே!) நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும்; (இக்கட்டளையைவிட்டு) ஷைத்தான் உம்மை மறக்கும்படிச் செய்துவிட்டால்நினைவு வந்ததும், அந்த அநியாயக்கார கூட்டத்தினருடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம்.

இந்த வசனத்தைப்பார்த்தால் அல்லாவுக்கு அவனது சக்தியின் மீதே நம்பிக்கை இல்லை போல.    வசனங்களைப்பற்றி விவாதம் செய்தால் அதை நிருபிக்கவேண்டியது அல்லாவின் கடமை அல்லவா.  அவன் தான் எல்லாம் தெரிந்தவன் , எதையும் செய்ய முடிந்தவன். அப்படி இருக்க அவன் முகமதுவுக்கு கூறும் அறிவுரை , அந்த இடத்தில் இருந்து போய்விடும் படி . (இதைத்தான் முஸ்லிம் பதிவர்கள் செய்கிறார்கள்- இந்த பக்கம் தலைவைத்து படுக்கமாட்டார்கள் )  “ ஷைத்தான் உம்மை மறக்கும்படிச் செய்துவிட்டால்நினைவு வந்ததும் ”  ஷைத்தான் அப்படி செய்துவிட்டால் , அல்லாவுக்கு ஷைத்தான் செய்வானா மாட்டானா என்று கூட தெரியவில்லை.
இது முகமதுவின் உளறலே, அதாவது இந்த உளறலை அந்த காலத்திலேயெ தர்க்க ரீதியாக விவாதித்து இருக்கிறார்கள் . அவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியாத முகமது அவர்களிடம் இருந்து தப்பிக்க அல்லாவின் பெயரால் உளறியது தான் இந்த வசனம்.                            

6:105. நீர் (பல வேதங்களிலிருந்து) காப்பி அடித்து இருக்கிறீர் என்று அவர்கள் கூறுவதற்காகவும் அறியக்கூடிய மக்களுக்கு அதனை நாம் தெளிவு படுத்துவதற்காகவும் (நமது) வசனங்களை இவ்வாறே விளக்குகிறோம்.

இது தான் சரியான காமெடி,  அல்லா மறந்து விட்டான் என்று நினைக்கிறேன். அவன் தான் அனைத்து வேதங்களையும் குடுத்தவன் என்று குரானில் கூறியிருக்கிறான் ? அப்படி என்றால் என்ன சொல்லி இருக்கவேண்டும் , இது காப்பி அல்ல , முன்னர் நான் குடுத்த வேதத்தில் இருந்து கூறுகிறேன்,எல்லாமே எனது வேதம் தான் என்று அல்லவா கூறியிருக்க வேண்டும். இது முகமதுவாக யூதர்களின் நூலை காப்பி அடித்து கூறியதால், இதற்கு என்ன மறுப்பு கூறுவது என்று தெரியாமல் அல்லாவின் பெயரில் அவன் கூறிய வசனம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக