இப்போது பல மத பிரச்சாரகர்கள் தங்கள் பிரச்சாரத்தில் எங்கள் வேதத்தில் அறிவியல் அன்றே கூறப்பட்டு உள்ளது என்று கூறுவது வழக்கமாகி வருகிறது.இதில் எல்லா மதத்தினரும் செய்கிறார்கள் என்றாலும் மிக அதிகமாக கேட்பது இஸ்லாமிய பிரச்சாரகர்களின் குரலே.
இதற்கு ஆதாரமாக அவர்கள் சில அமெரிக்க,ஐரோப்பிய விஞ்ஞானிகளை குறிப்பிட்டு அவர் எங்கள் வேதத்தை ஆராய்ச்சி செய்து குரானில் அறிவியல் என்று புத்தகங்கள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார் என்றும் கூறுகிறார்கள்.
அப்படிப்பட்ட விஞ்ஞானிகளை பற்றி சில பதிவுகள் எழுதலாம் என்று முடிவு செய்து என்று அவர்களால் அடிக்கடி சுட்டிக்காட்டப் படும் திரு மௌரிஸ் புகைல் பற்றி தெரிந்து கொள்வோம்.
இது மௌரிஸ் புகைல் என்ற தனி மனிதருக்கு எதிரான பதிவு அல்ல ஆனால் அவர் குறிப்பிடது என்ன ? அது சரியா? என்பதையே ஆராய்கிறோம்.
* * *
திரு மௌரிஸ் புகைல் ப்ரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் 1920 ஆம் ஆண்டு பிறந்தவர். மருத்துவரான இவர் 1945_ 1982 உணவு செரிமான துறையில் நிபுணராக பணியாற்றியவர். 1973 ஆம் ஆண்டு முதல் சவுதி அரேபிய அரசர் ஃபைசல் அவர்களின் குடும்ப மருத்துவராக பணியாற்றியவர். எகிப்திய அதிபர் சதாத் கூட இவரிடம் சிகிச்சைக்க்காக வருவது உண்டு.
* * *
1976ஆம் ஆண்டு இவர் எழுதிய புத்தகம் தான் பைபிள் , குரான்,மற்றும் அறிவியல்.இந்த புத்தகத்தை பற்றி இதில் அவர் கூறும் அறிவியல் என்ன என்பதை பார்ப்போம்.இப்புத்தகத்தை
இந்த இணைப்பில் பதிவிறக்கம் செய்து கொள்லலாம்.
இவர் புத்தகத்தில் கூறப்படும் அறிவியல் தத்துவங்கள்(pages 92 to 98)
1.உலகம் படைக்கப் பட்டது ஆறு காலங்களில்(குரான் 7:54)
. நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில்()yaum) வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான்..."
அதாவது உலகம் ஆறு நாட்களில் படக்கப் பட்டது என்று கிறித்தவர்கள் கூறுவதை இவர் குரானில் சொல்லப்பட்டது ஆறு காலங்கள் என்று கூறுகிறார்.மேலும் ஒரு காலம் என்பது சில குரான் வசனங்களில் வரையறுக்கப் படுகிறது.
குரான் 32:5 காலம் என்பதை 1000 வருடங்கள் என்று கூறுகிறது.(1)
. வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்; ஒரு நாள்(yaum) (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்.
குரான் 70:4 காலம் என்பதை 50,000 வருடங்கள் என்று கூறுகிறது.(2)
. ஒரு நாள் (yaum)மலக்குகளும், (ஜிப்ரீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்; அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்
* * *
இப்பதிவை படிக்கும் நீங்கள் என்ன மேற்கூறிய இரண்டு வசனங்களும் முரண்படுகிறதே என்று யோசிக்க கூடாது. யோசித்தால் அறிவியல் தெரியாதுஅரபி வார்த்தையான யாம்(yaum) என்பது நாள் மற்றும் காலத்தை குறிக்கும். காலம் என்பதை எவ்வளவு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளமலாம்,1000 ,50,000 அல்லது 1 பில்லியம் ஆண்டுகள்.
பெரு வெடிப்பு கருத்தாக்கத்தின் படி பிர பஞ்சம் சுமார் 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது. சூரியக் குடும்பம் 8 பில்லியன்,பூமி 4.6 பில்லியன் ஆண்டுகள். ஒரு செல் உயிர்கள் தோன்றியது 3.8 பில்லியன் ஆண்டுகள்,பரிணாம வளர்ச்சி அடந்த மனிதன்(ஹோமோ சேபியன்) தோன்றியது சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு.
ஆகவே நாட்கள் என்பது பொருந்தாது ஆகையால் ஆறு காலங்கள் என்று பொருள் கொண்டு ஒவ்வொரு காலத்தையும் எவ்வளவு வேஎண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். வைத்தால் அறிவியல் கூறும் அளவிற்கு பக்கத்தில் கொண்டு வந்து விடலாம் அல்லவா?
இதுதான் திரு மௌரிஸ் புகைலின் கண்டு பிடிப்பு.
********
நீங்கள் கேட்கக் கூடாத கேள்விகள்
1.ஏன் அறிவியல் கண்டிபிடிப்பு நடந்து உறுதிப்படுத்த பின்பே வேதங்களில் அறிவியலை கண்டுபிடிக்கிறார்கள்?.
2.இவர் ஏன் சவுதி ,எகிப்து அரச குடும்பத்து தொடர்பு ஏற்பட்ட பிறகே குரானில் அறிவியல் என்று எழுத ஆரம்பித்தார்?
3.மருத்துவரான இவர் எப்படி உலகம் தோன்ற்லை குறித்து ஆராய்சி செய்ய முடியும்?.இது குறித்து இவர் வேறு ஏதாவது ஆய்வுக்கட்டுரை எழுதி உள்ளாரா?
4. இவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டாரா?( இதுவரைக்கும் சரியாக தெரியவில்லை)
இவர் தனது 50வது வயதில் (1970)அரபி கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். அதற்குள் எப்படி 1976ல் அரபி வார்த்தைகளை வெவ்வேறு அர்த்தங்களில் ஆய்வு செய்யும் அளவிற்கு முன்னேறினார்?. திரு முகமதுவிற்கு 610ல் முத்லாக வெளிப்பாடு வந்த போது எழுதப் படிக்க தெரியாது என்று இஸ்லாமியர்களால் கூறப் படுகிறது.
அதன் பிறகு 632 வரை சுமார் 23 வருடங்களாக அவரால் எழுதப் படிக்க கற்றுக் கொள்ள முடிந்ததா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் மௌரிஸ் புகைல் அதை விட குறைந்த காலத்தில் அரபி புலமை பெற்று விட்டார்.
இன்னும் அவரின் அறிவியலை வரும் பதிவுகளில் பார்ப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக