சென்ற பதிவில் இன்னும் கொஞ்சம் கேள்விகள் மீதம் இருப்பதால் அதற்கும் பதில் அளித்து விடலாம்.நமக்கு இதுவரை பரிச்சயம் இல்லாத நண்பர்களின் கேள்விகளுக்கு மட்டும் விடையளிக்கிறேன்.பழைய விவரங்களை கிளர விரும்பவில்லை. மீதம் இருப்பவர்களுக்கு ஏற்கெனவே பல் பதிவுகள் விவாதங்களில் பதில் சொல்லியாகிவிட்டது.அவர்களுக்கு நான் சொல்லும் பதில் குரான் 109ஆம் சூரா(ஸூரத்துல் காஃபிரூன்) 6 வசனங்களே.இந்த வசனங்கள் காஃபிர்களுக்கு கூறப்படுகிரது.அரபி வார்த்தை காஃபிர் என்றால் நம்பிக்கை மறுப்பாளர்.ஆகவே உங்களுக்கு நான் காஃபிர் என்றால் நீங்கள் எனக்கு காஃபிர்.இப்போது படியுங்கள் 109ஆம் சூரா.
The Qur'an uses the words Kafir, Kuffar, and Kufr 470 times in 451 different verses.
******************************************
உங்கள் கேள்விகளுக்கு விடையளிக்கிறேன்
உங்கள் கேள்விகளுக்கு விடையளிக்கிறேன்
hajamydheen[at]gmail.com
நண்பரே
இந்த பகுத்தறிவுவாதி என்பதை விட மத விமர்சகன் என்ற பெயரையே விரும்புகிறேன்.அனைவருக்கும் பகுத்து அறியும் அறிவு உண்டு.திராவிட பாணி இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கும் பட்டம் எனக்கு தேவையில்லை.நான் எந்த மதத்திலும்,நாட்டிலும் உள்ள மனித விரோதக் கொள்கைகளை எதிர்ப்பவன்.இந்து மதத்தில் பொருள்முதல் வாதம் சார்வாகம்என்று அழைக்கப் படுகிறது.சமண மதத்தில் கடவுள் இல்லை.இப்போது கெள்விகள்&பதில்கள்.
1 /அதாவது தமிழ் கலாச்சாரத்தில் ஒருவன் (பகுத்தறிவாதி) வளர்க்கப்பட்டால் அவன் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்வான், ஆந்திர கலாச்சாரத்தில் ஒருவன் (பகுத்தறிவாதி) வளர்க்கப்பட்டால் அவன் ஆந்திர முறைப்படி திருமணம் செய்து கொள்வான். தமிழ் நாட்டு பகுத்தறிவாதிக்கு ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டில் நம்பிக்கை இருக்கலாம். ஆந்திர பகுத்தறிவாதிக்கு நம்பிக்கை இல்லாமல் போகலாம். இப்போது தமிழ் நாட்டு பகுத்தறிவாதி ஆந்திர பகுத்தறிவாதியை திருமணம் செய்து கொண்டால் பகுத்தறிவாதிகளுக்குள் பிரச்சனை வருமா? வராதா?/
தமிழ்நாடும் , ஆந்திராவும் இந்தியாவில்தான் உள்ளன.இந்தியா முழுவதும் சமுக சட்டங்கள் மத ரீதியாக உள்ளன.ஆகவே இருவரும் இருவரும் பிறப்பால் இந்து மதத்தை சேர்ந்தவர் எனில் இந்து திருமண சட்டம் செல்லும். பல் கிறித்தவர்,முஸ்லிம்கள் தங்களை வெளிப்படையாக மதம் விட்டு வெளி வருவதில்லை.
***********************
2 / அடுத்து தமிழ் நாட்டு கலாச்சாரத்தில் வளர்ந்த ஒரு பகுத்தறிவாதி Living together கலாச்சாரத்தை பற்றி என்ன முடிவு சொல்வான். அது நன்று என்று கூறுவானா? அல்லது தீமை என்று கூறுவானா? தீமை என்று சொன்னால் என்ன காரணம் சொல்வான்? ஓரினப்புணர்ச்சி பற்றி பகுத்தறிவாதிகளின் முடிவு என்ன?/
Living together என்பது திருமண பதிவு இல்லாமல் ஆண் பெண் சேர்ந்து வாழ்வதாகும்.இது பெண்ணுக்கு பல பாதகங்களை தரும் என்றாலும் தானாக ரிஸ்க் எடுப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது.மேலை நாடுகளில் மிக இயல்பான ஒன்று. விருப்பப்படும் இருவர் சேர்ந்து வாழும் போது அதன் சாதக் பாதகங்களை அறிந்து எதனை எதிர்கொள்ளத் துணியும் போது சட்ட ரீதியாக தடை நமது மேலை நாடுகளில் இல்லை.இது தனிப்பட்ட விஷயம்.என்னை பொறுத்த்வரை சுய மரியாதை திருமணம் செய்து பதிவு செய்வது பெண்ணுக்கும்,குழந்தைகளுக்கும் சட்ட ரீதியாக பாதுகாப்பு..ஓரிணப் புணர்சியில் ஈடுபடும் சிலரை மனரீதியாக் குணப்படுத்த முடியும்.சிலரை முடியாது இது ஜீன் குறைபாடு.அவர்களுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம், பாதுகாப்பு வேண்டும்.
***********************
3./இந்தியாவில் சொத்து விவகாரங்களில் அவர்கள் எந்த சட்டத்தை பின்பற்றுவார்கள்? விவாகரத்து போன்ற விஷயங்களில் அவர்களின் நிலைபாடு என்ன? விவாகரத்து பண்ணினால் just like that விட்டுவிடுவார்களா? அல்லது பாதிக்கப்பட்டவருக்கு உதவித்தொகை கொடுக்க வேண்டுமா? விவாகரத்து செய்வதற்கு என்ன காரணங்கள் சொல்லலாம்? அதன் அளவுகோல் என்ன? அதை எவ்வாறு வழிவகுத்தார்கள்./
இறைமறுப்பாளர்கள் தனியாக் நட்த்தப்படாமல் பிறந்த மதங்களை சேர்ந்தவர்களாகவே நம் நாட்டில் நடத்தப் படுகிறார்கள்.அப்படி ஒருவேளை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருந்தால் ஆண்,பெண்களுக்கு இந்து சொத்து முறை சட்டமே சிறந்தது.இஸ்லாமியர்களையும்,அவர்கள் உரிமைகளையும் மதிக்கும் மனிதர்கள் இந்தியாவில் பெரும்பான்மையாக இருப்பதால் அவர்களுக்கு(muslim personnel law) தனி சமூக சட்டம் இருக்கிறது.இதனை ஒழித்து அனைவருக்கும் பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று சில கட்சிகள் போராடுகின்றன.குற்றவியல் நடைமுறைகளில் அனைவரும் சமமே.
**************************
4/இது போன்ற மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு எந்த பகுத்தறிவாதிக்கு எந்த சட்டம் தன் மன்சாட்சிக்கு சரியன படுகின்றதோ அதை செய்தால், கண்டிப்பாக பிரச்சனைகளுக்கான சரியான தீர்வாக பகுத்தறிவாதிகளின் சட்டம் இருக்காது, தவிர இது மேலும் குழப்பங்களையும், சச்சரவுகளையுமே ஏற்படுத்தும். மதங்கள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்று கூக்குரலிட்ட போலி பகுத்தறிவாதிகளே, முதலில் வாழ்க்கை வாழ்வதற்கு நீங்கள் அமைத்த கொள்கைகள் என்ன என்பதை கூறுங்கள். பின்னர் கடவுளை பற்றி பேசலாம்./
மத விமர்சகர்கள் எந்த சமூகத்தில் வாழ்கிறார்களோ அச்சமூக நடைமுறையில் காலத்திற்கு ஏறறவற்றை பின்பற்றுவர்.மாற்ற வேண்டியதை மாற்றுவர்.மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது.
____________
B)
G u l a m
/நாத்திகம் மறுக்கும் கடவுளுக்கு இலக்கணம்..?
*பொதுவாக, இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்களாகிய நாங்கள் வாழ்வின் எல்லா நிலைகளிலும் மார்க்கப் போதனைப்படி ஏவல்/விலக்களை பின்பற்றுகிறோம் இஸ்லாமல்லாத ஏனைய மதங்களை பின்பற்றுவோர் தங்களது வாழ்வுமுறையே அவர்களது மதத்தின் படி (சரியோ/ தவறோ) பின்பற்றுகிறார்கள்., எந்த மத வழிமுறைகளையும் பின்பற்றா நீங்கள் எதன் அடிப்படையில் வாழ்வை அமைத்துள்ளீர்கள்?., குறிப்பாக "ஒருவனுக்கு ஒருத்தி" என்ற திருமண பந்தத்தை எந்த நாத்திக சட்ட்த்தில் எடுத்தீர்கள்..?
*ஒருவன் ஏன் இறை மறுப்பாளானாக இருக்க வேண்டும்..?/
உங்கள் கருத்து தவறு. இஸ்லாம் தவிர்த்த பிற மதத்தினர் தங்கள் மத புத்தக்த்தில் சொல்லிய அனைத்தையும் பின்பற்றுவது இல்லை.இந்து மதம் என்பதே வாழ்வியல் நடைமுறைதான்.அது காலத்திற்கேற்ற படி மாற்றம் அடைந்து கொண்டே இருக்கிறது.நேற்றைய தவறுகளுக்கு இன்று பரிகாரம் செய்யப் படுகின்றது.நியாய படுத்தப் படுவது இல்லை.
இறை மறுபாளர் என்ற் தனி சட்டத்தின்.நடைமுறை அவசியம் இங்கு இல்லை.இந்துமதம் இறை மறுப்பாளர்களையும் ஒதுக்குவது இல்லை.இறைமறுப்பாளர்கள் சீர் திருத்தப் பட்டுக் கொண்டிருக்கும்
இந்து (இந்திய) நடைமுறை சட்டங்களை பினபற்றுகிறார்கள் என்று கூறலாம். ஒருவனுக்கு ஒருத்தி என்பது இந்து திருமண சட்டம் அம்பேத்கார் (1955) தலைமையில் தொகுக்கப் பட்டது.
________________
C)
சகோதரி,
அஸ்மா.
costblog[at]gmail.com
/1) உலகில் காணப்படும்/பேசப்படும் ஒவ்வொன்றையும் அறிவியல் ரீதியாக மட்டுமே நிரூபிக்க வேண்டும் என்று சொல்லும் நீங்கள் உங்கள் மனைவி, மக்கள், குடும்பத்தார் அனைவரும் உங்களை நேசிக்கிறார்கள் என்றால், அதை அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா?/
நல்ல கேள்வி.ஒவ்வொன்றையும் அல்ல..அறிவியல் நிரூபிப்பதை ஏற்கவேண்டும் என்கிறோம். நம் குடும்பத்தினர் நம்மை நேசிப்பதை உண்ர முடியாதா? பெற்றோர் குழந்தைகளை நேசிப்பதால் அவர்களுக்கு பொருளாதார,மன் ரீதியான பாதுகாப்பு தருகின்றனர்.இறை மறுப்பாளர் தங்கள் குழந்தை வேற்று மதத்தவரை காதல் திரும்ணம் செய்வது என்று முடிவெடுத்தால் ,அத்துணை சரியாக் இருக்கும் எனில் அனுமதிப்பர்.மத நம்பிக்கையாளர்கள் என்ன செய்வார்கள் என்பதை சொல்ல விரும்பவில்லை.
2) விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்க முடியாத எத்தனையோ விஷயங்கள் பகுத்தறிவுப் பூர்வமானதாக இருப்பதை நீங்கள் மறுக்கிறீர்களா?
உங்களுக்கு சரியாகப் படுவது எனக்கு தவறாக படலாம்.ஒரு புத்தக்த்தில் சொல்லி இருக்கிறது,அத்னை ஒரு மத்வாதி ஒர் விளக்கம் தருகிறார் என்பதற்காக எதனையும் ஏற்று கொள்ள முடியாது.சரியென்று பட்டால் மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும்.
3) கடவுளின் பெயரால் மக்கள் சுயமாக நடத்தும் அனாச்சாரங்கள்/அக்கிரமங்கள்/சமூக அவலங்களை வைத்து 'கடவுளே இல்லை' என்று முடிவு செய்வது எந்த வகையான பகுத்தறிவு?
கடவுள் பெயரில் அக்கிரமங்கள் நடக்கிறது.நடக்கும் வாய்ப்பு உண்டு.இத்னை பெரும்பாலான் மதவாதிகள் நியாயப் படுத்துகிறார். இதனை நான் சொன்னால் பிரச்சினை ஆகியிருக்கும் நன்றி. .இது மட்டும் காரணமில்லை மத புத்தகங்கள் கூறும் கடவுள்கள் உண்மையாக் இருக்கமுடியாது என்பதற்கு பல ஆய்வுகள்,பதிவுகள் எழுதியாயிற்று..மத புத்தகங்கள் தொகுப்பே அரசியல் சார்ந்தது.
/4) 'கடவுள்' என்ற சூப்பர் பவர் இருக்கிறான் என்று சொல்வது மூடத்தனம் என சொல்லிக் கொண்டு தங்கள் முன்னோர்களுக்கு கற்சிலைகளை உண்டாக்குவதும், அதற்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதும் மட்டும் பகுத்தறிவுதானா/
இது திரவிட பிரிவு கேள்வி என்றாலும் பரவாயில்லை.
இந்த கற்சிலைகளுக்கு மாலை அணிவிப்பது, அவர்கள் மீதுள்ள மரியாதை காட்டுவதற்காக், அவர்கள் வந்து உதவி செய்வார்கள் என்பதற்காக் அல்ல. அப்படி என்றால் ஃபோட்டோ எடுப்பது கூட தவறுதான்.
5) பகுத்தறிவின் ஊற்றாக தங்களை எண்ணிக் கொண்டிருப்பவர்கள், காலம் முழுதும் கருப்புச் சட்டையே கதி என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பதில் உள்ள அறிவியல் தத்துவம்தான் என்ன?
இதுவும் திராவிட கேள்வி.ஒரு அடையாளம்தான் அதற்காக கருப்புச்சட்டை அணிபவர் எல்லாம் நாத்திகரா?.ஒரு அரசியல் இயக்கம் என்னும் போது இவை போன்ற விஷயங்கள் தவிர்க்க இயலாது.
6) நேற்று ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்த விஷயங்களை 'விஞ்ஞானக் கண்டுபிடிப்பு' என அறிவிக்கும்போது ஏற்றுக்கொள்ளும் நீங்கள், அதே விஷயத்தை 14 நூற்றாண்டுகளுக்கு முன் தெளிவாக சொல்லப்பட்டிருந்தும் அதை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுப்பது உங்கள் பகுத்தறிவுக்கு உட்பட்டதா?
7) பூமி உருண்டை வடிவமானது என்பதையும் ஒவ்வொரு கோள்களும் அதன் துணைக் கோள்களும் தன்னைத் தானே சுழன்றுக் கொண்டே சுற்றி வருகின்றன என்பதையும், அவற்றின் ஈர்ப்பு விசை குறித்து அறிவித்து தந்த விஷயங்களையும், இன்றைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வரும்/அந்த விஞ்ஞானிகளைக் கூட வியப்படையச் செய்த இன்னும் பற்பல விஷயங்களை அன்றைக்கே முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதை வைத்தும், 'இது முஹம்மது நபியின் சொந்தக் கூற்று அல்ல' என்றும்'முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த மற்ற யாரும் அன்றைய மக்களின் விஞ்ஞான அறிவைக் கொண்டு இவ்வளவு துல்லியமாக நிச்சயம் கூற முடியாது' என்றும், 'அது முக்காலத்தையும் அறிந்துள்ள பேராற்றல் மிகுந்த/மகத்தான இறைவனின் வார்த்தைதான்'என்றும் பகுத்தறிவைப் பயன்படுத்தி இஸ்லாமியர்களாகிய நாங்கள் நம்புகிறோம். விஞ்ஞானம் முன்னேறி இராத அந்தக் காலக் கட்டத்தில் இவற்றையெல்லாம் முஹம்மது நபி(ஸல்) அவர்களால் எப்படிக்கூற முடிந்தது என்பதற்கு, கடவுளை மறுக்கும் உங்களின் அறிவியல் பூர்வமானபதிலென்ன?
மன்னிக்கவும். மத புத்தகத்தில் அறிவியல் என்பது வார்த்தை ஜால ஏமாற்று
வேலைஉங்களுக்கு என்பதிவு ஒன்றை பரிந்துரைக்கிறேன்.
_________
மதத்தில் அறிவியல என்ற பரப்புரையை எதிர்கொள்வது எப்படி?.
8) 'பரிணாம வளர்ச்சி'யென கற்பனையாக உருவாக்கப்பட்ட டார்வின் தத்துவம் 'பொய்' என்பதற்கு அறிவியல் ஆதாரங்கள் அதிக அளவில் பெருகிய பிறகும், அதையே மீண்டும் மீண்டும் உங்கள் வாதத்திற்கு ஊன்றுகோலாக பயன்படுத்திக் கொண்டிருப்பதும் பகுத்தறிவுதான் என்கிறீர்களா?"
இது கிறித்தவ,இஸ்லாமிய மத நம்பிக்கையாளரின் கொள்கை.பரிணாம்த்திற்கு எதிரானவர்கள் மதவாதிகள். அதுவும் அரசியல் பொருளாதாரம் சார்ந்த எதிர்ப்பு மட்டுமே.பரிணாம்ம் முற்றும் முழுதும் த்வறென்று கூறும் சில விஞ்ஞானிகளின் கட்டுரைகளை கொடுங்கள்.
நன்றி சகோதரி.
********************************************************
D) /ஏனைய உயிரின தொடர்ச்சியின் விளைவாக மனிதன் உருவானான் என்றால் ஏன் மனிதன் பரிணாமம் அடைந்து வேறு நிலைக்கு இன்னும் மாற வில்லை? ஏனெனில் சூழ் நிலைக்கு தகுந்தவாறு ஒரு உயிரினம் மெல்ல மெல்ல மாற்றமடைவதே பரிணாமம். ஆக ஏனைய அஃறிணை உயிரினங்களின் மாற்றத்தை விட அறிவு மிகுந்த மனித உயிரி வாழும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாற்றமடைய வேண்டியது அவசியமான ஒன்று., அஃது மாற்றடைவதற்கான அறிகுறீகள் கூட ஏற்படவில்லை என்பது ஆச்சரியமான ஒன்று..! /
சபாஷ் சரியான் கேள்வி.இதன் காரண்மாக் மதம் பின்பற்றுகிறீர்கள். see this
********************************************************
E) நாத்திகர்களாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் முதலில் தாங்கள் என்ன கொள்கையுடையவர்கள் என்று விளக்குவார்களா..? .ஏனெனில் பெரியார் தொண்டனாக இருந்தால் அவர்களது கள்ளத்தனங்கள், கயமைத்தனங்கள், முட்டாள்தனங்களின் அடையாளங்களை வெளிப்படுத்தியும், கம்யூனிசத்திற்கு சப்போர்ட் செய்பவர்களாக இருந்தால் அவர்களது கொலைப்பட்டியலுடன் ஏராளமான கொள்கை ஓட்டைகளை குறித்தும், இதல்லாமல் எந்த கொள்கையுமின்றி வெறும் இறை மறுப்பாளர்களாக இருப்பவர்களை அவர்கள் பானியில் அதாவது விஞ்ஞான ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும் குறித்தும் விவாதிக்கலாம்.
-Mohamed Ihsas
இஹ்சாஸ் ஓன்லைன்
mohamedihsas786[at]gmail.com
அப்படியா இஸ்லாமியர்களில் அனைவரும் மிக நல்லவர்கள்.அமைதி அன்பு சகோதரத்துவம் அனைத்து இஸ்லாமியர்களிடமும் பெருக்கெடுத்து ஓடுகிறது.இந்த காஃபிர்கள்தான் எல்லா தவறுகளையும் செய்கிறார்கள்.
நன்றி.
**********************************************************
சகோதர ச்கோதரிகளே மதம் அதன் கோட்பாடுகளில் நம்பிக்கை இலாதவனே இறை மறுப்பாளன். இறை மறுப்பாளன் என்பதற்காக என்ன செய்யலாம்?. மதத்தினால் வரும் பிரச்சினைகளை மட்டும் தவிர்க்க முடியும்.சமூக சூழலில் , நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து வாழ வேண்டிய கட்டாயம் அவனுக்கும் உண்டு.ஜனநாயம்,மதச்சர்பின்மை தொடர,மேம்பட முயற்சிக்கிறோம். அவ்வளவுதான்!!!!!!!!!!!
எல்லா மதங்களும் நம்பிக்கை மட்டுமே.எத்தனையோ மதம் ,கடவுள்கள், கொள்கைகள் காண்மல் போனது உண்டு. அரசியல்,பொருளாதார பலம் உள்ள மதங்கள் மட்டுமே நீடிக்க முடியும்.என்னாலும் பல் கேள்விகள் கேட்க முடியும். ஆனால் உங்கள் மதத்தை பொறுத்தவரை எனது தேடல் முடிந்து விட்டது.அவசியம் என்றால் மட்டுமே விவாதிப்பேன்.ஆக்வேதான் இப்பதிவில் இறைமறுப்பை பற்றி மட்டும் விள்க்கினேன்.
மறுமை வாழ்வில் நம்பிக்கை அற்ற ஒருவனுக்கு மதம் என்பது தேவையற்றது.உங்கள் கேள்விகளில் உள்ள பெருமிதம் எனக்கு நகைச்சுவையாக் படுகிறது.நாகரிகமாக் விவாதிப்பதில் தவறில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக