ஞாயிறு, 11 டிசம்பர், 2011

பெரியார்தாசன்

இதுவரை எழுதிய பொதுபுத்தி பதிவிலும் சரி, இப்பொழுது எழுதுகின்ற பொதுபுத்தி பதிவிலும் சரி! மதவாதிகளின் தர்க்கம் கொஞ்சமும் மாறப்போவதில்லை என்பது மூன்று வருட வலையுலக அனுபவம் முழுமையாக உணர்த்திவிட்டது! ப்ளாக்கை படிக்கவே வேண்டியதில்லை, வால்பையன் பதிவா, பின்னூட்டத்தில், உங்களால் இந்துமதத்தை மட்டும் தான் கேலி செய்ய முடியும், கிறிஸ்துவத்தையும், இஸ்லாத்தையும் கேள்வி கேட்டு பாருங்களேன் என்று வரும்! மந்தையில் இருப்பதும், தனிதன்மையுடன் இருப்பதும் அவரவர் வாழ்வியல் சூழலையும், அவரவர் விருப்பு வெறுப்புகளையும் சார்ந்தது! நான் வழக்கம் போல புலம்பிட்டு போறேன்!

பயம் என்ற ஆதாரம் தான் கடவுள் நம்பிக்கையின் வேராக இருக்கிறது! எந்த ஒரு மதவாதியியையும் வெங்காயம் உரிப்பது போல் கேள்வி கேட்டு கொண்டே போனால் இறுதியில் இறைபயமும், மறுமையின் வாழ்க்கை பயமும் நிற்கிறது! பூச்சாண்டி வந்துரும் ஒழுங்கா சாப்பிடு என்று குழந்தையை பயமுறுத்துவதற்கும், இதற்கும் பெரிய வித்தியாசமில்லை! இரண்டிலுமே யாரோ ஒருவரின் சுயநலம் நிச்சயமாக ஒழிந்திருக்கிறது! பொதுபுத்தியில் உள்ளவர்கள் தன்னைவிட வயதில் குறைந்தவர்கள், கல்வியில் குறைந்தவர்கள் கருத்துகளை காதில் போட்டு கொள்வதில்லை! அவர்களது சமூக விருப்பு வெறுப்புகள் அவர்கள் பெற்றோர்களாலேயே திணிக்கப்படுகிறது!

அவர்களை சொல்லியும் பிரயோசனமில்லை, அவர்களும் அப்படியே வளர்க்கபட்டார்கள், உதாரணமாக ஒரு சினிமா எடுக்க நல்ல கதை, நல்ல நடிகர்கள், சிறந்த உழைப்பு வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனாலும் ஆரம்பிக்கும் முன் ஒரு பூசை போடுவார்கள், தயாரிப்பாளருக்கும் தெரியும் இது வெட்டி செலவென்று ஆனால் என்ன செய்வது எவ்வளவோ செலவு செய்யுறோம், இதையும் பண்ணிடுவோமோ என்ற எண்ணம் இவ்வாறு வளர்த்து விடுகிறது! பூசை போடுவதினால் ஒரு விசயம் வெற்றியடைய முடியுமா என்ற சந்தேகம் அனைவருக்கும் உண்டு, ஆனால் அதுவே நிலைத்து விட்டால் பூசாரிகளுக்கும், சாமியார்களுக்கும் வேலையில்லையே! அதனால் உங்களை சிந்திக்கவிடாமல் மழுக்கட்டையாக வைத்திருப்பதே அவர்களது வேலையாக இருக்கிறது! ஒரே மந்தை போல தோன்றினாலும் அதில் மேய்ப்பவன் பூசாரி வேடத்திலும், சாமியார் வேடத்திலும் தனியாக தெரிகிறான்!. பலரின் வேடம் கலைந்தும் இன்னும் சப்பைகட்டு கட்டி கொண்டிருப்பவர்களின் பூர்வீகத்தை கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள் அவர்களும் உங்களை மேய்க்க ஆசைப்படுபவர்கள் தான், உங்களை என்றுமே அடிமையாக வைத்திருக்க நினைப்பவர்கள் தான்!


நித்தியானந்தரின் லேட்டஸ்ட் பேட்டி பற்றி அறிந்தேன்! மனிதர் செக்ஸ் பற்றி ஆராய்ச்சி செய்தாராம், இந்த விசாரணையில் இன்னும் எத்தனை பேரிடம் செக்ஸ் ஆராய்ச்சி செய்தார் என்று வெளிவரலாம்! பொண்டாட்டி, குழந்தைகளை இம்மாதிரி ஆசிரமத்திற்கு அனுப்புபவர்கள் தயவுசெய்து இனிவாவது மாறுங்கள், ஏமாறுபவன் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுபவன் குறையப்போவதில்லை, எல்லாம் வல்ல கடவுள் என்று தானே கடவுளை நம்புகிறீர்கள், கடவுளுக்கும், உங்களுக்கும் இடையில் எதற்கு புரோக்கர் வைத்து கொள்கிறீர்கள், அந்த புரோக்கர்களை சாமியார்களுக்கு புரோக்கர் வேலை செய்ய அனுப்புங்கள்! எல்லாம் வல்ல கடவுள் உங்கள் மொழியையும் புரிந்து கொள்வார் என நம்புங்கள், தேவ பாஷை என்று ஒன்றும் இல்லை, அவையனைத்தும் உங்களை காலங்காலமாக ஏமாற்றி கொண்டிருப்பதற்கே என்பதை உணருங்கள், கடவுள் கோவிலில் மட்டும் இருப்பார் என்ற கூற்றை உங்கள் கோவில் நுழைவு எதிர்ப்பின் மூலம் கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என காட்டுங்கள்(என்னடா பல்டி அடிக்கிறானேன்னு பாக்குறிங்களா, ஊசி போடும் முன்னர் டிஞ்சர் தடவுவாங்கல்ல அது மாதிரி இது மற்றும் நண்பர்கள் வேண்டுகோளுகினங்க மென்மையாக)


இஸ்லாமிய சகோதரர்கள் வலையில் பெரியார்தாசன் இஸ்லாமிராக மாறிவிட்டார் என எழுதியிருந்தார்கள், எனக்கு இது ஒரு சாதாரண நிகழ்வு தான் ஆனால் நண்பர்களுக்கு உலகத்தையே புரட்டி போட்டது போல் ஒரு சந்தோசம், இருந்துட்டு போகட்டும், இதையே தான் மைக்கேல்ஜாக்ஸன் செய்த போது செய்தார்கள், ஜாக்ஸனின் பாலியல் குற்றசாட்டுகள், போதை பழக்கம் அதனால் மாறிவிட்டதா என்ன!? பெரியார்தாசன் என்பவர் யார், முதலில் அவரது இயற்பெயர் என்ன என்பது யாருக்காவது தெரியுமா!?
அவரது உண்மையான பெயர் சேஷாசலம் அது எங்கேயாவது குறிப்பிடுகிறார்களா இல்லை, மதவாதிகளுக்கு கடவுள்மறுப்பின் கதவை உடைத்துவிட்டது போல் ஒரு மகிழ்ச்சி! சேஷாசலம் ஒரு நாத்திகவாதியே அல்ல என்பது உங்களுக்கு தெரியுமா!?கண்ணனுக்கு தாசன் கண்ணதாசன் என்றால் நான் கண்ணனை எனது தலைவனாக ஏற்றுக் கொள்கிறேன் என்று அர்த்தம், அதுவே தான் பெரியார்தாசனுக்கும் பொருந்தும்! பெரியார் தன்னை என்றுமே தோழராக தான் அறிவித்து கொண்டாரே தவிர தலைவர் என்று அல்ல! இவர்களது கொள்கை திரிபுக்கு பெரியார் என்னய்யா பண்ணுவார்! பெரியாரின் கருத்துகளை நயம்பட மேடைகளில் பேசி வந்ததனால் அவரை பெரியார்தாசன் என்று அழைத்தார்கள், அதுவும் அவரே காசு கொடுத்து கூவ சொன்னாரானு தெரியல, இரண்டு வருடங்களுக்கு முன்னரே பெயரியல் பேரரசர்!? ராஜராஜசோழனுக்கு(அந்த பெயர் தானே) சொம்பு தூக்கி மரியாதையை இழந்தார்!
அந்த பெயரியல் பேரரசர் தான் டீ.ராஜேந்தர் என்ற பெயரை மாற்றி விஜய டீ. ராஜேந்தர் என்று மாற்றியது! என்ன மாற்றம் நிகழ்ந்ததென்று நாடறியும்! அப்படிபட்ட ஒரு ஏமாற்றுகாரனுக்கு சொம்புதூக்கியாக இருந்த சேஷாசலம் நல்லவேளையாக பகுத்தறிவு பிரச்சாரம் செய்யாமல் இஸ்லாத்திற்கு சென்றது எனக்கு தான் முதல் மகிழ்ச்சி! பாவம் இஸ்லாமியர்களுக்கு தான் எவ்வளவு செலவாச்சின்னு தான் தெரியில!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக