இறை நம்பிக்கையாளர்கள் வழக்கமாக இறைவனை பார்க்க் முடியுமா என்னும் கேள்விக்கு அவரை [மனதில்] உணர மட்டுமே முடியும் என்று கூறுவர். இந்த கூற்றினை பல மதங்களின் பார்வையில் ஆய்வோம் .
உணர்தல் என்றால் என்ன?
ஐம்புலன்களின் மூலம் பெறப் படும் தகவல்கள் மனதில்[மூளை] ஏற்படுத்தும் மாற்றம்.சில சமயம் மனதில் நடந்த சம்பவங்களை நினைத்தோ,கற்பனை செய்தும் கூட இந்த மாற்றம் ஏற்படலாம்.
_________
From Webster's Dictionary
Definition of FEELING
1
a (1) : the one of the basic physical senses of which the skin contains the chief end organs and of which the sensations of touch and temperature are characteristic : touch (2) : a sensation experienced through this sense
b : generalized bodily consciousness or sensation
c : appreciative or responsive awareness or recognition
2
a : an emotional state or reaction <a kindly feeling toward the boy>
b plural : susceptibility to impression : sensitivity <the remark hurt her feelings>
3
a : the undifferentiated background of one's awareness considered apart from any identifiable sensation, perception, or thought
b : the overall quality of one's awareness
c : conscious recognition : sense
4
a : often unreasoned opinion or belief : sentiment
b : presentiment
5
: capacity to respond emotionally especially with the higher emotions
6
: the character ascribed to something : atmosphere
7
a : the quality of a work of art that conveys the emotion of the artist
b : sympathetic aesthetic response
______________
இறைவன் என்பது என்ன?
இப்பிரபஞ்சத்தை படைத்து,வழிநடத்துவதாக கருதப்படும் சக்தி(கள்).ஆண் ,பெண் ,ஒருமை,பன்மை என்று பலவித தன்மைகள் இதற்கு மதங்களால் சூட்டப் படுகின்றது.
இறைவனை உணர்வது என்றால் என்ன?
மேற்கூறிய இரண்டு விஷயங்களையும் இணைத்து பார்த்தால்,அந்த இறைவன் மனிதனின் உணர்வில் வேறு எதுவும் தர இயலாத ஒரு மாற்றத்தை சிந்தனையில் கொண்டு வருகின்றது,.எப்படியெனில் சில சமயம் ஐம்புலன்களின் மூலமாகவோ,அல்லது விளகக முடியாத தகவல் தொடர்பாகவோ மூளைக்கு செய்தி வருகின்றது .இந்த இறைவனோடு தொடர்பு கொள்ள முடிந்ததாக கூறிய பலரை இறைவனின் பிரதிநிதிக்களாக பலர் ஏற்கின்றனர்.இந்த இறைவனை உணர்தல் பல மதங்களில் பல வகைகளில் கூறப்படுகின்றது.
___________
இறை மறுப்பாளர்கள் இந்த பிரபஞ்சத்தின் படைப்பு, நடக்கும் செயல்கள் அனைத்தையும் அறிவியலின் துணை கொண்டு விளக்கி கொண்டிருகின்றார்கள்.இன்று விளக்க முடியாத ஒவ்வொரு இயற்கையின் புதிரும் நாளை விளக்கப் படும்.இதற்கான தெடலில் பல்வித ஆய்வுகள் மூலமே ஒரு ஏற்றுக் கொள்ளப் பட்ட கருத்திற்கு வருகின்றார்கள். அக்கருத்தும் பல்வித ஆய்வுகளுக்கு உட்படுத்தப் பட்டு மற்றி அமைக்கவும் படலாம்.
இறை மறுப்பாளர்கள் இறைவனின் இருப்பை உறுதி செய்ய அறிவியல் ரீதியான முறைகளையே பயன் படுத்துவார்கள்.அறிவியலின் மூலம் இறைவனை உணர முடியுமா?
இந்த சரியாக வரையறுக்கப் பட்ட நிலைதான் இறை மறுப்பாளர்களின் கருதுகோள் ஆகும்.
________________
இந்து மதம்:
இது பல மதங்களின் சங்கமம் என்பதால்,இறைவன் மனித அவதாரம் எடுப்பதும்,இன்னும் சிலர் அவதாரங்களாக போற்றப் படுவதும்,இறைவனை உணர்வது மிக எளிதான செயலாக கூறலாம்.ஒரு கோயிலின் உள்ளே செல்லும் போது பக்தி பரவச நிலையை அடைவதையே அவர் இறைவனை உணரும் நிலையாக கூறும் போது அதற்கு மறுப்பில்லை.கனவில் இறைவன் வந்தார்,சாமியாடி மூலம் பேசினார் என்பதெல்லாம் நடைமுறை வழக்கமாக எடுத்துக் கொள்ளப் படுகின்றது.ஒவ்வொரு உணர்தலும் சிலருக்கு நம்பிக்கைக்கு ஆதாரமாகின்றது..
மத புத்தகம் சாராத மதம். ஆகையால்,வாழ்வில் தொன்று தொட்டு நிலவும் அனுபவங்களின் அடிப்படையிலேயே இறைவனை உணர்தல் என்னும் பிரச்சினை இங்கே அணுகப் படுகின்றது.சங்கரரின் அத்வைதத்தின் மனிதன் கடவுளை அடைய முயற்சிக்க வேண்டுமென்பதும்,இரமானுஜரின் விசிஷ்டாத்வைதத்தில் மனிதனும் கடவுளும் ஒன்று என்பதும் கூட முக்கியமான் கொள்கையாக்கங்கள்.
ஆக இந்து மதம் என்று சொல்லப்படும் மத தொகுப்பில் பெரும்பாலானோருக்கு கடவுளிடம் நேரடியாகவே தொடர்பு கொள்ளும் உணர்வை பெற இயலுவதாக நம்புகிறார்கள்.இறைவனின் சிலையையோ,புகைப்டத்தையோ,தூரத்தில் ஒரு மலையையோ பார்க்கும் போது கூட ஒருவர் உணர்வு நிலை அடைவதும்,அது இறைவனிடம் வந்த வெளிப்படுத்தலாக் அவர் எடுத்துக் கொள்வதும் இங்கு மிக இயல்பானது.இந்த உணர்வுகளை பெறவே சிலர் விரதம்,பூஜை,சடங்குகள் செய்கிறார்களா என்பதும் ஆய்வுக்குறியது.இது பற்றி நிறை விவாதிக்க இயலும் என்றாலும் பதிவின் த்லைப்பான இறைவனை உணர முடியும் என்ற கேள்விக்கு ஐயந்திரிபர முடியும் என்றே பதில் அளிக்கிறது என்று கொள்ள முடியும்..ஒரு விஷயத்தை[திருமணம்,புதுமன புகுதல்...] செய்யும் முன் ஆருடம் பார்ப்பது போன்ற செயல்கள் இறைவனின் விருப்பு/வெறுப்பை தெரிந்து கொள்ளும் முயற்சியே ஆகும். உணர முடிவதாக் மட்டுமல்ல தகவல் பரிமாற்றம் கூட செய்ய முடியும் என்றே இந்துக்கள் நம்புகிறார்கள் என்பதே நம் முடிவு.
இன்னும் கொஞ்சம் மாறுபட்ட விளக்கங்களுக்கு இந்த பதிவுகளை பார்க்கலாம்.
http://hayyram.blogspot.com/2010/12/blog-post_17.html
http://www.eegarai.net/t37366-topic
*************
கிறித்தவம்
இம்மத கொள்கையாககத்தின் படி மூவரில் ஏகன்[Trinity] என்ற பிதா,குமாரன்,பரிசுத்த ஆவி என்ற மூன்று நிலைகளில் இருக்கிறார். பைபிளின் பல வசனங்கள் இப்போது மனிதன் பரிசுத்த ஆவிஎனப்படும் இறைவனின் வெளிப்படுத்துதல்,அல்லது தேவனை உணரும் நிலையை இப்போதும் கூட அடைய முடியும் என்றே கூறுகின்றது.ஏதேனும் கிறித்தவ பிரச்சாரகர்கள் நடத்தும் கூட்டத்திற்கு சென்றால் இறைவனுடன் பலவித மொழிகளில் பேசுவதாக சத்தமிடுவதும்,சில பிரச்சாரகர்கள் ஒருவரை பேர் சொல்லி அழைக்கிறேன் என்பதும், இங்கும் இறைவனை உணர்வது மட்டுமல்ல,தகவல் பரிமாற்றமும் இயல்பான காரியமாக் கிறித்தவர்களால் ஏற்றுக் கொள்ளப் படுகின்றது.
http://lord.activeboard.com/index.spark?aBID=134574&p=3&topicID=34536300
_____________
இஸ்லாம்
இப்போது மத பிரச்சாரம் அதிக அளவில் செய்யும் நண்பர்கள் நிறைந்த மதம்.இகேள்விக்கு குரானில் இருந்து மட்டுமே கூற முயல்கிறேன்.ஏனெனில் ஒவ்வொரு பிரிவினரும் ஒவொரு ஹதிதுகளை பின் பற்றுவதும்,அவர்களே இது வலிமை வாய்ந்தது,பல்கீனமானது என்று குழப்புவதால் இந்த நிலை.
க்டவுளை இருப்பை அறிய குரான் கூறும் வழி என்ன? இப்போது குரானின் படி அறிய முடியுமா?
குரானின் கடவுள் ஒருவர், குரான் அவரை ஆண் பால் விகுதியிலேயே அழைக்கிறது.
5:40. நிச்சயமாக அல்லாஹ் - அவனுக்கே வானங்கள், பூமி இவற்றின் ஆட்சி சொந்தமானது என்பதை நீர் அறியவில்லையா, தான் நாடியவரை அவன் வேதனை செய்கிறான்; இன்னும் தான் நாடியவருக்கு மன்னிப்பு அளிக்கிறான்; அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்.
இங்கு கொள்கையாக்கம் இறைவன் படைக்கும் போதே ஒருவர் சொர்க்கம்,நரகம் செல்வார் என்று தீர்மானிக்கப் பட்டதாக கூறுகின்றது.நாடியவர்களை வழிநடத்துவதும் நாடாதவர்களை நரகத்திற்கும் அனுப்புகிறார்.இறைவன் நாடாதவர்கள் நிச்சயம் உணர முடியாது.
இறைவனின் இருப்பை பல வித இயற்கை நிகழ்வுகளை அத்தாட்சிகளாக காட்டுகிறது குரான்.
3:190. நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.
2:159. நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும்-அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்.
நிச்சயம்
நாடியவர்கள் மட்டுமாவது கூட இறைவனை உணர முடியுமா?
இதுகுறித்து தெளிவான செய்தி இல்லை.இறைவன் இறைத்தூதர்கள் என்ற்ழக்கப் படும் சில தேர்ந்தெடுக்கப் பட்ட மனிதர்களுக்கு சில செய்திகளை அளித்து அவற்றில் நம்பிக்கை கொள்ள வேண்டுமென்று குரான் கூறுகின்றது. நம்பினால் சொர்க்கம்,நம்பாவிட்டால் நரகம் என்றே கூறுகின்றது.சுய சிந்தனை,பழக்க வழக்கங்கள் செயல்கள் அங்கீகரிக்கப் பட்ட மத புத்தகங்களின் படி மட்டுமே இருக்க வேண்டும்.
இறைமறுப்பு நம்பிக்கை கொள்ள மனதற்ற, பிற மதங்களின் கருத்தாக்கங்களில் விருப்பமற்றவர்கள் குரானிய கருத்தாக்கம் பிடித்து நம்பிக்கை கொண்டால் இஸ்லாமிய நம்பிக்கை [ஈமான்] கொண்டவ்ராகிறார். நம்பிக்கை கொண்டாலும் இது அவருடைய சுய செயலாக இருக்க முடியாது எற்கெனவே தீர்மானிக்கப் பட்டது.
முகமது இறுதி தூதர் ,குரான் இறுதி செய்தி என்பது சுன்னி பிரிவு இஸ்லாமியர்களின் கொள்கையாகக்ம் என்பதால் இறைவனை தொடர்பு கொள்ள இயலாது.குரான் படிக்கும் போது உணர்வதாக உணந்தால் அத்னை ஏற்றுக் கொள்வார்கள் என்று தோன்றுகிறது.
____________
இந்து,கிறித்தவர்கள் இறைவனை தொடர்பு கொள்வதை அறிவியல் ஆய்வு செய்வதும் இல்லை,அதனை ஏற்பதும் இல்லை.இஸ்லாமில் குரானை படிக்கும் இறைவன் நாடியவர் மட்டுமே உணர முடியும்.இறை நம்பிக்கையாளர்கள் படித்து உணரவில்லையென்றால் இறைவன் நாடவில்லை என்று கூறிவிடுவார்கள்.. இன்னும் பல விஷயங்களை கூற இயலும்.அவசியமெனில் இன்னொரு பதிவில் விவாதிப்போம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக