வியாழன், 15 டிசம்பர், 2011

துடைப்ப அடியை வாங்கும் பக்தர்கள்.பக்தர்கள் காசு கொடுத்து விளக்கமாற்று அடி வாங்குகின்றன. துடைப்ப அடியை எந்தப் பார்ப்பான் வாங்குகிறான்? 

திருப்பதி செல்லும் பார்ப்பனர் அல்லாத நீங்களோ, மொட்டை அடித்துக் கொண்டீர்கள். தாலியை அறுத்துக் கொடுத்தீர்கள்.! 

சாட்டை அடிகளை எந்தப் பார்ப்பனப் பெண்ணாவது வாங்குவது உண்டா? 
நாமக்கல் அருகே வெள்ளாளப்பட்டி அச்சப்பன் கோயில் விழாவில் பெண்களை சாட்டையால் அடித்துப் பேய் விரட்டும் ஒரு அகோர காட்சியை, ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பியது. ஏடுகளிலும் செய்தி வெளிவந்துள்ளது.

இவ்வாறு சாட்டையால் பெண்ணை அடித்தால், அந்தப் பெண்ணைப் பிடித்த பேய் ஓடிவிடுமாம். அந்தப் பெண்ணுக்குக் குழந்தைப் பேறு இல்லாதிருந்தால் குழந்தையும் பிறக்குமாம்; இப்படி ஒரு பித்தலாட்டம் இந்த 2009 ஆம் ஆண்டிலும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

இத்தகு மூடத்தனத்துக்கும், மூர்க்கத்தனத்துக்கும் காரணம் மத மூட நம்பிக்கை என்று ஒரு பக்கத்தில் சொன்னாலும், ஆன்மிகச் சிறப்பிதழ்களை வெளியிடும் நவீன ஏடுகளும், இதழ்களும் இதற்கான பொறுப்பினை மரியாதையாக ஏற்றுக்கொண்டுதான் தீரவேண்டும்.

மாட்டுக்குத் தார்க்குச்சி போட்டாலே குற்றம் என்று சட்டம் உள்ள ஒரு நாட்டில், மனிதர்களை இப்படி மதத்தின் பெயரால் சித்திரவதை செய்கிறார்களே, இதனை அனுமதிப்பது எப்படி என்று ஊடகங்கள் குரல் கொடுக்கவேண்டாமா?

ஏன் கொடுப்பதில்லை? மக்களுக்கு நல்ல புத்தி வந்துவிட்டால் இதுகளை யார் காசு கொடுத்து வாங்குவார்கள்? மடமையில் ஆழ்த்தி வைத்திருந்தால்தானே அவர்களைச் சுரண்டிட முடியும்?

சேலம் பக்கத்தில் அன்னதானப்பட்டியில் அங்காளம்மன் கோயில் திருவிழா எப்படி தெரியுமா?

பக்தர்களைத் துடைப்பத்தால் அடிப்பார்கள். எம்.ஏ. படித்த முண்டங்கள்கூட காசு கொடுத்து விளக்கமாற்று அடி வாங்குகின்றன என்றால், இதன் பொருள் என்ன?

கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று சொன்ன தந்தை பெரியார் அவர்களின் ஒவ்வொரு எழுத்துக்கும் எவ்வளவுப் பெரிய மதிப்பு என்பதை எளிதில் தெரிந்துகொள்ளலாமே!

மொட்டைத் தலையில் தேங்காய் உடைக்கிறார்கள். இரத்தம் பீறிடும் காட்சியைக்கூட தொலைக்காட்சிகள் அப்படியே காட்டுகின்றன.

இதனால் மூளை நரம்புகள் பாதிக்கப்படுகின்றன என்று மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். ஆனாலும், மொட்டையாகிவிட்ட மூளை கொஞ்சமும் சிந்திப்பதில்லையே! பக்தி வந்தால் புத்தி போயே போகிறதே!

பேய் என்றால் என்ன அப்படி ஒன்று இருக்கிறதா? பிள்ளைப் பேறு இல்லை என்றால், சாட்டையால் அடித்தால் மலட்டுத்தனம் பறந்து ஓடிவிடுமா?

சரி, இதுபோல சாட்டை அடிகளை எந்தப் பார்ப்பனப் பெண்ணாவது வாங்குவது உண்டா? துடைப்ப அடியை எந்தப் பார்ப்பான் வாங்குகிறான்?

பக்தியில்கூட வெஜிட்டேரியன், நான் வெஜிடேரியனா? சிந்திப்பீர்!-- மயிலாடன் அவர்கள் 30-9-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை.
 
திருப்பதி போகின்ற பிராமணரல்லாத சகோதரர்களே சற்றுப் பகுத்தறிவை உபயோகப்படுத்துங்கள்! 

திருப்பதிக்கு நீங்களும் போகின்றீர்கள். பிராமணர்களும் போகின்றார்கள்! பிராமணர்கள் ஒழுங்காக நாகரிகத்தோடு ரயிலேறி நேரே திருப்பதிக்குப் போகின்றார்கள்!

பிராமணரல்லாத நீங்களோ! சடை வளர்த்துக் கொண்டு, தாளை குத்திக் கொண்டு, குடும்பத்தோடு மஞ்சளுடை உடுத்திக் கொண்டு, மேளதாளத்தோடு ஊர்ஊராக வீதிவீதியாக கோவிந்தா! கோவிந்தா என்று கூவிப் பிச்சை தட்டேந்தி இரந்து நடந்து திருப்பதிக்குச் செல்லுகின்றீர்கள்! 

பார்ப்பனர்களை மாத்திரம் நாகரிகமா வரும்படி அந்த வெங்கடாஜலபதி லைஸன்ஸ் கொடுத்திருக்கின்றாரா? 

உங்களை இந்த இழிகோலத்தோடு வந்தாலொழிய காட்சி கொடேனென்கிறாரா? யோசியுங்கள்! பகுத்தறிவோடு நடந்து கொள்ளுங்கள்!

பார்ப்பனரும் பார்ப்பனரல்லாத நீங்களும் சாமியைத் தரிசித்து விட்டு வருகின்றீர்கள்! 

அவர்கள் வீட்டில் புறப்பட்டது போலவே கடவுளைத் தரிசித்து விட்டுத் திரும்பி விட்டார்கள்! 

நீங்களோ, மொட்டை அடித்துக் கொண்டீர்கள். தாலியை அறுத்துக் கொடுத்தீர்கள். கையிலுள்ள காசை எல்லாம் உண்டியலில் போட்டு விட்டீர்கள்! 

எல்லாம் இழந்துவிட்டு உராங். உடாங் (ஒரு வகைக் குரங்கு) மாதிரி கோவிந்தா! கோவிந்தாவென்று கூவிக் கொண்டே மொட்டைத் தலையோடு பல நாமங்களைப் போட்டுக் கொண்டு திரும்புகின்றீர்கள்! 

அந்தோ உங்களைப் பார்த்து பார்ப்பனப் பெண்கள் நகைக்கின்றார்கள். நீங்கள் கோவிந்தம் போடுகின்றீர்கள்!

அய்யா! அந்த மலையில் வாழ் வெங்கடேசன் பிராமணரல்லாததாராகிய உங்கள் மயிரைத்தானா பிடிங்கித் தரச் சொல்லுகின்றார்! 

உங்கள் மனைவிகளின் தாலிகளைத்தானா அறுத்துப் போடச் சொல்லுகின்றார்! 

பிராமணத்தி மயிரும், பிராமணத்தி தாலியும் அந்த வெங்கடேசனுக்கு வேண்டாமா? 

அய்யய்யோ பிராமணரல்லாத சகோதரர்களே, நன்கு யோசித்து இந்த புரட்டாசியிலிருந்து ஒழுங்காய் நடந்து கொள்ளுங்கள்! 

இதுவரை மூட பக்தியில் அழுந்தியிருந்ததற்குக் காரணம் பிராமண புரோகிதர்களின் துர்ப்போதனையேயாகும்! ஆகையால் கண் விழியுங்கள்! மூட பக்தியை ஒழியுங்கள்! பிராமணரல்லாதாரின் மானத்தைக் காப்பாற்றுங்கள்.-- திராவிடர் கழகம், சின்னக்காஞ்சிபுரம்.-அறிஞர் அண்ணாவின் திராவிட நாடு, 19.9.1943, பக்கம் 3. 
SOURCE: http://thamizhoviya.blogspot.com/2011/02/blog-post_1813.html
-------------- 
பார்ப்பனரும் அல்லாதாரும்ஆண்களும் பெண்களும் கோயில்களுக்குச் சென்று தலை மொட்டை அடித்துக் கொள்வதும், காவடிக் கட்டையைத் தூக்கிக் கொண்டு தெருவில் குதிப்பதும் புண்ணியக் காரியம் என்கிறார்கள். 

எந்தப் பார்ப்பனராவது பார்ப்பனப் பெண்ணாவது மொட்டை அடித்துக் கொள்ளவோ, தெருவில் குதிக்கவோ வருகிறார்களா? 

சாட்டை அடிகளை எந்தப் பார்ப்பனப் பெண்ணாவது வாங்குவது உண்டா? 

துடைப்ப அடியை எந்தப் பார்ப்பான் வாங்குகிறான்? 

சம்மட்டி அடித்த பிராமணன் உண்டா? உழுதுண்ணும் பிராமணன் பற்றி கேட்டதுண்டா?- 
SOURCE: viduthalai news. 01.01.2008 .
------ கிராம மக்கள் கவுரி பண்டிகை அன்று தங்கள் குடும்பங்களை காப்பாற்றும் பசுவை தாயாக அல்லது தெய்வமாக மதித்து பூஜைகள் செய்கின்றனர்.

இந்த பண்டிகை தீபாவளிக்கு மறுநாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் கிராமத்தினர் தங்களது பசுக்களை நன்கு குளிப்பாட்டி அவற்றை மஞ்சள் குங்குமம் இட்டு அலங்கரிக்கின்றனர். பின்னர் அங்குள்ள கோவர்தன் கோயிலுக்கு அழைத்து வந்து பூஜைகள் செய்கின்றனர்.

பூஜைகள் செய்தபின்னர் தங்களது பசுக்கள், அதன் கன்றுகளுடன் கோயிலை 5 முறை வலம் வருகின்றனர். 

இதில் மிக முக்கிய விஷயம் என்னவென்றால் பசுக்களும், கன்றும் கோயிலை சுற்றி வரும் பாதையில் மக்கள் விழுந்து பசுக்களை வணங்கியபடி படுத்துக் கொள்கின்றனர். 

பசுக்களும் கன்றுகளும் அவர்களின் உடலை மிதித்துக் கொண்டே செல்கின்றன. அப்போது பசுக்களை நோக்கி கோமாதா என்று அவர்கள் கோஷமெழுப்புகின்றனர் . 
SOURCE: viduthalai news 15.12.2007 
------ பஞ்சகவ்யம் என்று சொல்லி மாட்டு மூத்திரம், சாணி, பால், தயிர், வெண்ணெய் அய்ந்தையும் ஒன்றாகக் கலக்கி, `சூத்திரன் வீட்டில் நடக்கும் திதி முதலிய காரியங்களில், வீட்டுப் பெரியவர்களைக் குடிக்கச் செய்வார்கள். 

அதற்குத் தட்சணையும் கொடுத்து பயபக்தியோடு குடிப்பார்கள் சூத்திரர்கள். 

இதனை திருமண நிகழ்ச்சிகளிலும், புதுமனை புகுவிழா நிகழ்ச்சிகளிலும், நீத்தார் நினைவு போற்றும் நிகழ்ச்சிகளிலும் தந்தை பெரியார் எடுத்துக்காட்டி மானங்கெடப் பேசுவார்கள். 

பஞ்சகவ்யத்தை முகம் சுளிக்காமல் குடிக்கிறானா என்று பார்ப்பான் பார்ப்பானாம். அப்படி முகம் சுளிக்காமல் குடித்தால் பார்ப்பான் கணக்குப் போடுவானாம்! 

`பரவாயில்லை இன்னும் நூறு வருஷங்களுக்கு இவாளைச் சுரண்டலாம்! என்று கணக்குப் போடுவானாம் - தந்தை பெரியார் கூறுவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக