ஞாயிறு, 11 டிசம்பர், 2011

சோதிடமும், சந்திரனும்!

பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர், பூமியின் மீது ஏற்பட்ட விண்கல்லின் மோதலில் தோன்றியது தான் நிலா என்ற துணைக்கோள், இந்த சூரிய குடும்பத்தில் பூமியை விட பெரிய துணைகோள்கள் சுற்றி வருகின்றன, ஆனால் பாருங்கள் தம்மாத்துண்டு புதன் கிரகம் நம் மீது செலுத்தும் கதிரியக்கத்தை அவைகள் நம் மீது செலுத்தாது!, ஆனால் உண்மையில் சூரியனை தவிர வேறு எந்த கோள்களும் கதிரியகத்தை ஏற்படுத்த முடியாது!. சந்திரன் பூமியை சுற்றி கொண்டு தம்மை தாமே சுற்றி வரும் ஒரு சிறு கிரகம், அதனால் பூமியில் low tide, high tideஏற்படுவது உண்மை தான், ஆனால் அதற்கு மிக முக்கிய காரணம் பூமியை, நிலா சுற்றுவதோடு மட்டுமில்லாமல், பூமியின் வேகத்தில் அதனோடு இணையாக நிலா சூரியனையும் சுற்றி வருகிறது, அந்த வேகம் தான் பூமிக்கும் ஈர்ப்பு விசையை தருகிறது, மற்ற கோள்களுக்கும் ஈர்ப்பு விசை தருகிறது!


அதை தவிர பத்து பைசாவுக்கு பெருமானமுள்ள சிறு செயலைக்கூட சந்திரனால் ஏற்படுத்த முடியாது, அதனால் ஏற்படும் ஒரே நன்மை சுப்பையா வாத்தியாரின் பதிவில் இருப்பது போல் கதையளந்து காசு சம்பாரிக்கலாம்!, சரி சந்திரன் மட்டும் தான் எனக்கு எதிரியா என்றால், பதில் சந்திரன் மட்டுமல்ல, மொத்த சோதிடத்துக்கும் நான் எதிரி, ஏன் என்று விளக்க முயற்சிக்கிறேன்!

மனிதன் நாகரிக வளர்ச்சி பெற்றாலும் அவனுக்கு புரியாத புதிராக இருந்தது, இயற்கை சீற்றங்களும், மாறுதல்களும். ஒரு பகல்,ஒரு இரவு சேர்ந்து ஒருநாள் என கணக்கில் கொண்டு ஒவ்வொரு மாறுதல்களுக்கும் ஆகும் கால அளவை அவர்கள் குறித்து வைத்திருந்தனர்!,அவர்களுக்கு மனிதர்களின் வருங்காலத்தையோ, குணாநலன்களையோ தெரிந்து கொள்ளும் ஆர்வம் சிறிதும் இருந்ததில்லை, ஆனால் பின்னாள் வந்த சில பொறம்போக்குகள், அனைவருக்கும் பொருந்துவது போல் சில பலன்களை எழுதி காசு சம்பாரிப்பது மட்டும் அல்லாமல், அதை பயன்படுத்தி எப்போதும் மக்கள் சுயசிந்தனையில்லாமல் வாழ செய்து விட்டார்கள்!


நான் ஒன்பதாவது படிக்கும் போது ஒரு நோட்டின் பத்து பக்கத்தில் பத்து விதமன பலன்களை எழுதி, ஒவ்வொன்றிற்கும் நம்பர் கொடுத்து, பத்து துண்டு சீட்டில் நம்பர் எழுதி யாரைவாது எடுக்க சொல்வேன், அந்த நம்பருக்குண்டான பலன் அப்படியே பொருந்துகிறது என்பார்கள், அதை பல பேரிடம் நான் சோதித்திருக்கிறேன், கிட்டத்தட்ட கிளி சோதிடம் மாதிரி தான், யாராவது மறுமுறை சோதித்திருந்தால் அந்த பலனும் பொருந்தியிருக்கும், அவர்களும் எப்படியென்று கேள்வி கேட்டிருப்பார்கள், ஆனால் யாருக்கும் அப்படி கேள்வி கேட்க தோன்றுவதில்லையே என்பது தான் பெரும் வருத்தம்!
எனக்கிருக்கும் வாய்க்கு குடும்ப சோதிடம் என்ற புத்தகத்தை மட்டும் வைத்து கோண்டு மாதம் ஐம்பதாயிரம் சம்பாரிப்பேன், ஆனால் அந்த பொழப்புக்கு...................

பொதுவாக இரண்டு சாத்தியகூறுகள் தான் உலகில் உண்டு, நடக்கும், அல்லது நடக்காது, நான் மூணாவது ஒரு ஆப்ஷன் தருகிறேன், நல்லது நடக்கும். கெட்டது நடக்கும் அல்லது எதுவுமே நடக்காது!, ஆக இந்த மூன்றிம் எதாவது ஒன்று உங்களுக்கு நடந்தாக வேண்டும் இல்லையா, சோதிடம் என்றால் என்னவென்று தெரிந்த பகுத்தறிவுவாதி இதை துவைத்து காயப்போடுவான்!, உங்களுக்கு ராகுதிசை நடக்கும் அதனால் நல்லது நடக்கலாம், நடக்கலையா இன்னும் உள்ளே போங்கள் கேது புத்தி அதற்கு கெட்டது, அதற்கும் ஒன்னும் ஆகலையா என்ன ஹோரை என்று பாருங்கள், ஆக உங்களுக்கு இருக்கும் மூன்று ஆப்ஷனுக்கு எதாவது ஒன்றில் பலன் வருவது போல் திறைமையான ஒருவனால் அல்லது, வளரும் கேள்விகளுக்கேற்ப பலரால் மாற்றம் செய்யபட்டு உருவாக்கப்பட்டதே சோதிடம் என்னும் டுபாக்கூர்!
(சின்ன இடைச்சொருகல்:இரண்டாயிரம் வருடத்திற்கு முன்னாலேயே இப்படி ஒன்றை உருவாக்கி இருக்கும் போது, அதற்கு பின் வந்த மக்கள் ஏன் பைபிள், குரான் போன்ற புத்தகங்களை உருவாக்கியிருக்க முடியாது)

12 ராசியில் எந்த ராசி என்று தெரியாத ஒருவனுக்கு எதாவது ஒரு ராசியை எடுத்து காட்டுங்கள், சரியாக இருக்கிறது என்பான், இந்த உலகில் ஒரே குணநலனுடன் யாரும் பிறப்பதில்லை, கோபம், சந்தோசம், அழுகை, இரக்கம் போன்ற அனைத்தும் கலந்தது தான் மனிதன், அவைகளின் கலவை தான் சோதிடம், இதை மிக எளிதாக புரிந்து கொள்லலாமே, பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னாள், இரும்பு தொழில் செய், எண்னை தொழில் செய்யுன்னு எழுதிட்டு போயிட்டாங்க, அப்ப கம்பியூட்டர் இருந்துச்சா, காம்ப்ளான் இருந்துச்சா, ஏன்யா இன்னும் அதை கட்டிகிட்டு அழுறிங்க! ஒழுங்கா புள்ளகுட்டிகளை படிக்க வைக்கிற வேலைங்கள பாருங்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக