ஞாயிறு, 11 டிசம்பர், 2011

இறைமறுப்பாளர்கள் ஒழுக்கமற்றவர்களா?


இறைமறுப்பாளர்கள் ஒழுக்கமற்றவர்களா?



மதவாதிகளால இறை மறுப்பாளர்கள் மீது வைக்கப் படும் குற்றச்சாட்டுகளுல் ஒன்று அறிவியல் ஒழுக்கத்தை[Moral] பற்றி எதுவும் கூறுவதில்லை.ஆகவே அறிவியலை மட்டும் பின்பற்றுவதாக் கூறுபவர்கள் ஒழுக்கமான்வர்களாக் இருக்க முடியாது என்பர்.இன்னும் 'வல்லது வாழும்(survival of the fittest)' என்பதே இயற்கைத் தேர்வின்[natural selection] அடிப்படை, ஆக்வே எது செய்தாவது வாழ வேண்டும் என்பத்தான் இறைமறுப்பின் கொள்கை என்றும் கூறுகின்றனர்.

இன்னும் ஒரு விவாதத்தில் ஒரு நண்பர் இறை மறுப்பாளர்கள் நெருங்கிய  உறவுமுறைகளில் கூட பாலுறவில் ஈடுபடுவார்கள்,ஓரின‌ புணர்ச்சியாளராக இருப்பார்கள் என்றும் கூறினார். ஏனெனில் இறை மறுப்பாளர்களுக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது என்றார்.இந்த கூற்றுகளை இப்பதிவில் ஆய்வோம்.

இறுதியாக கூறிய கூற்றுகளை நண்பர் இக்பால் செல்வனின் பதிவில் நன்றாக அலசிவிட்ட படியால் அதன் சாரத்தை மட்டுமே அளிக்கிறேன்.

அ) நெருங்கிய இரத்த பாலுறவு:இந்த உறவு குறையுள்ள சந்ததிகளையே உருவாக்கும் என்பதை உணர்ந்தே சமூக கட்டுப்பாடுகள் ஆனது.ஆக்வே இது அறிவியலின் படி தவறு.அறிவியல் இன்னும் ஒரு படி மேலே போய் ஒன்று விட்ட சொந்தங்களுடன் மணம் புரிவது கூட இதே விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் நிரூபிக்கிறார்கள்.இப்படிப்பட்ட திருமணங்கள் மதங்களால் அங்கீகரிக்கப் பட்ட ஒன்று என்பதை உணர்க. 

ஆ) ஓரிணப் புணர்ச்சி என்பது ஜீன் குறைபாடுகளால் ஏற்படுவது.இம்மாதிரி குறைபாடுள்ளவர்கள் பிறப்ப்தும் பரிணாம்த்தின் நிரூபணம்.
பழக்க வழக்கத்திகன் காரணமாக் இச்செயலில் ஈடுபவர்களை மருத்துவ, உளவியல் ரீதியான் சிகிச்சை அளித்து மாற்ற முடியும்.. மாற்ற முடியாத பிறவி குறை உள்ள‌வர்களுக்கும் கல்வி,வேலை வாய்ப்பு, சமூக அங்கீகாரம் கிடைக்க வேண்டுமெபன்தே இறை மறுப்பாளர்களின் நிலை. .ஒருவேளை இம்மாதிரி குறையுள்ளவர்கள்,மத நம்பிக்கையாளராகவோ அல்லது,இறை மறுப்பாள‌ராகவோ இருந்த போதும் ஈடுபடலாம்.ஒன்றும் வித்தியாசம் இல்லை.இவற்றை பல செய்திகளில் படித்திருக்கிறோம் அல்லவா.
 **********************
இப்போது பதிவின் முக்கிய கேள்வியான ஒழுக்கம் பற்றிய இறை மறுப்பாளர்களின் கொள்கை பற்றி விவாதிப்போம். ஒழுக்கம் என்பதை முதலில் வரையறுப்போம்.விக்கிபேடியாவில் இருந்து
Moral:A moral (from Latin morālis) is a message conveyed or a lesson to be learned from a story or event. The moral may be left to the hearer, reader or viewer to determine for themselves, or may be explicitly encapsulated in a maxim

ஒழுக்கம் என்பது ஒரு அனுபவத்தில் கற்றுக் கொண்ட உண்மை(செய்தி).இதை செய்தால் இது நடக்கும் என்று உணர்ந்து நடப்பதுதான் ஒழுக்கம்.ஒருவர் இறந்து விட்டால் திருப்பி உயிர் பெற முடியாது என்பதெலேயே கொலை என்பது பெரிய குற்றம் ஆனது.அக்கொலையே தற்காப்பிற்காக் செய்யப் படும்போது வேறு விதமாக பர்க்கப் படுகின்றது. ஒரு செயல் நடந்த போது அது நடந்த சூழ்நிலையும் இப்போது முக்கியமாக் கருதப் படுகின்றது.

ஆக ஒழுக்கம் என்பது அனுபவத்தில் கற்றுக் கொண்டு நடைமுரை படுத்தப்பட்ட இடம்,காலம்,சூழ்நிலை சார்ந்த சமூக கட்டுப் பாடுகள்..அறிவியல் என்பதைஒரு ஆய்வுக்கூடத்தில் அமர்ந்து இரு பொருள்களை இந்த விகிதத்தில் ,குறிப்பிட்ட சூழ்நிலையில் கல்ந்தால் புதிய பொருள் கிடைக்கும் என்பது மட்டுமல்ல. மானுட வியல்,உளவியல் ,வரலாறு,சட்டம்,மத ஆய்வு போன்ற்வையும் அறிவியலில் வரும் என்பதை கவனத்தில் எடுத்துக் கொண்டால் அறிவியல்தான் ஒழுக்கத்தை வரையறுக்கிற‌து என்பது புரியும்.

அறிவியல் புத்தக்த்தில் படிப்பது மட்டுமே அறிவியல் என்ற மற்ற விஷயங்கள் அறிவியல் ஆகாது என்ற கருத்தை மதவாதிகள் கொண்டிருப்பதால் மட்டுமே அறிவியல் ஒழுக்கத்தை தராது என்பவர்கள் மத புத்தக்த்தில் சொலப் பட்ட விஷயங்களுக்கே கால அட்டவனை தந்தது அறிவியல் என்பதை மறந்து  பேசுகிறார்கள்.
ஆக மனிதன் தோன்றிய போது விலங்கு போலத்தான் வாழ்ந்தான்,மூளை வளர்ச்சி அடைய ஆரம்பித்தபின் அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்ல ஆரம்பித்தான், அது குழுக்களாக வாழும் போது நடை முறைப் படுத்தப் பட்டது.இசூழ்நிலையில் த்னக்கு புரியாத இயற்கை சக்திகளை மேற்பட்ட சக்தியாக தெய்வங்களாக் அஞ்சி,அவைகளுக்கு பிரியமாக் நடக்க முடியுமா என்றும் யோசிக்க ஆரம்பித்தான்.
இப்படி நடைமுரையில் கற்றுணர்ந்த உண்மைகளை குழு தலைவர்கள் கூறும் போது தனக்கு இறைவன் அளித்த கட்டளை என்று கூறி விட்டால் மறு பேச்சு கேட்காமல் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.சொல்வதை கேட்டால் சொர்க்கம்,கேட்காவிட்டால் நரகம் என்று எளிய முரையில் எடுத்து சொல்ல ஆரம்பித்தார்கள்.

அவையனுத்தும் தொகுக்கப் பட்டே மத புத்தகங்கள் ஆன‌தும்,மதங்கள் பரப்புவதும் தோன்றியது.ஆக அறிவியலே மனித சமுதாயத்திற்கு ஒழுக்கம் கற்று கொடுத்தது.தமிழில் பாருங்கள் கட்வுள்=கட+உள் உண்மையை ஆய்ந்து அறிதல். புத்தர் யோசித்தே 'ஆசையே துன்பத்திற்கு காரணம்' என்னும் அரிய தத்துவத்தை கண்டு பிடித்தார். ஒரு கேள்விக்கு தர்க்க ரீதியாக விடை தேடுவது அறிவியலே.. மத புத்தக்த்தில் பல இடங்களில் விவாதம் போல் கேள்வி பதில்கள் ஆய்வுரீதியாக விடை தேடும் முயற்சி ஆகும்.மத புத்தங்களில் பல்ர் கற்று அறிந்த உண்மைகள் அப்ப்டியே ,அல்லது கொஞசம் மாற்றமாக்  கூறப்டுவதையும் அறிந்திருக்கிறோம்.


மதவாதிகள்தான் சட்டம் கடுமையாக்கப் பட வேண்டும் என்று கூக்குரல் இடுகிறார்கள்.கடுமையான சட்டங்களின் மூலமே அனைத்து குற்றங்களும் தடுக்கப் படும் என்கிறார்கள்.ஒருவர் தவறு செய்யும் போது குற்ற உணர்ச்சி ஏற்படுவதை கட்வுளால் செய்ய முடியாதா?.ஆனால் ஒழுங்கான புரிதல் உள்ள ஒருவன் சந்தப்ப்ம் கிடைத்தால் கூட தவறு செய்யும் வாய்ப்பு குறைவு.அப்புரிதல் மத் வாதிகளிடம் கூட இருக்க்லாம்.இறை மறுப்பாளர்களிலும் இருக்கலாம். அறிவியலின் வாடையே அடிக்காத ப்ழங்குடி மக்களில் கூட சில ஒழுக்க விழுமியங்கள் உல்ளது எப்படியெனில்,இதே விளக்கம்தான் அவர்கள் நடைமுரையில் தலைமுறை தலைமுறையாக் கடைப்பிடிக்கும் கோட்பாடுகள்.அதுவும் அறிவியலே முதல் தலைமுறைக்கு எப்படி கோட்பாடு கிடைத்தது என்றால் செய்து கற்றுக் கொள் தத்துவம்[Trial and Error] மட்டுமே அன்றி வேறில்லை.ஒரு தலைமுறையின் கற்றுணர்வு,அடுத்த தலைமுறையின் மத கோட்பாடு ஆகிறது.

மற்றவர்களை பற்றிய புரிந்துணர்வை வளர்க்கும் அற்வியலே மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையான ஒழுக்கத்தை  ஏற்படுத்தி,பண்படுத்திக் கொண்டிருக்கிறது. .எப்படி பண்படுத்துகிறது என்றால் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் வரை அடிமை முறை வழக்கத்தில் இருந்தது,அதனை மத புத்தகங்கள் அங்கீகரிப்பதால் மத்வாதிகள் ஆமோதித்தனர்.ஆபிரஹாம் லிங்கன் போன்ற பலர் போராடியே இதனை ஒழித்தனர்.

ஒருவேளை கடவுள் கொடுத்த சட்டம் எனில் எக்காலத்திற்கும் பொருந்தும் வண்னம் இருக்க வேண்டும்.அதில் அனுமதிக்கப் பட்ட பல செயல்கள் இப்போது ஒதுக்கப் படுகின்ற‌ன.ஆக அறிவியலாளர்கள் ஒழுக்கத்தை அறிவியல் என்றே ஏற்கிறார்கள்.அதன் மீதான சட்டங்களை மதித்தே நடக்கிறார்கள்.மாற்ற வேண்டிய சட்டங்களை எதிர்த்து குரல் கொடுகிறாகள்.சடங்களை மீறினால் அதற்குறிய தண்டனையையும் ஏற்கிறார்கள்.ஒழுக்கம் என்பதும் அறிவியல் மட்டுமே.ஆகவே அறிவியல் என்பதும் அற இயலே. இது குறித்த ஒரு காணொளி 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக