ஞாயிறு, 11 டிசம்பர், 2011

பரிணாமம் - ஆரம்பம்


தினந்தோறும் புதுபுது தகவல்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன! அறிவியல் கூட தேவையில்லை, நம் சுற்றுசூழலை கொஞ்சம் ஆர்வத்தோடு கவனித்தால் போதும், ஒவ்வொரு உயிரனத்திற்கும் உள்ள தொடர்புகளை அறிந்து கொள்ளலாம்! ஆனால் நம் மதவாதிகளுக்கு “குரங்கு ஏன் இன்னும் குட்டபாவாடை போடல”என்ற கேள்வியை தவிர வேறு தெரியாது!, டார்வீன் பரிணாமத்தின் ஆரம்பம் மட்டுமே, அவரது காலத்தில் இவளவு நுண்ணிய விஞ்ஞானம் வளரவில்லை, ஆனால் இப்போதும் டார்வினை வைத்தே விவாதத்தை கொண்டு செல்வது சிறுபிள்ளை தனமான விவாதம், சமகாலத்தில் கண் முன் இருக்கும் உயிரினங்களை வைத்தே விவாதிப்போம்!


பரிணாமவளர்ச்சி என்பது உள்ளது சிறத்தல் என்ற பொருள் தரும் சொல்!, தன் தேவைகேற்ப ஒரு உயிரினம் சிறப்பாக இருப்பது போல் தோன்றினால் அவைகளுக்கு உருவ மாற்றம் தேவையில்லை, பல லட்சம் ஆண்டுகளாக கரப்பான்பூச்சி ”ஹிமோகுளோபின்” இல்லாமல் வாழ்வது, சுறா உருவத்தில் பெரிய மாற்றம் அடையாமல் இருப்பது இதற்கு சாட்சி! வளர்ச்சி மாற்றத்தில் அனைத்தும் அந்த உயிரினத்திற்கு சாதகமாக தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை! சில நேரங்களில் புலன்கள் செயலற்று போகலாம், அதற்கு பதிலாக வேறு புலன்கள் சிறப்பு தகுதி பெறலாம்! கண்பார்வை குறைவான விலங்குகளுக்கு நுகரும் சக்தி அதிகமாக இருப்பது இதற்குச் சான்று!


ஒரு உயிரினத்தின் பரிணாம வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணிகளாக இருப்பது சுயதேவை மற்றும் சுற்றுபுற காரணிகளால் ஏற்படும் மரபணு மாற்றம், ஆம் பரிணாம வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் மரபணு மாற்றம் அல்லது மரபணு குறைபாடு! வம்சாவழியாக பெற்றோர்களிடமிருந்து பெறப்படும் ஜீன்களில் இருந்து பெறப்படும் தகவல்கள் அப்படியே மாறாமல் இருப்பதால் இந்த மாற்றமும் இல்லாமல் உயிரினங்கள் உள்ளன! தற்பொழுது இருக்கும் சுற்றுசூழல் கூட மரபணு மாற்றத்திற்கு காரணமாக இருந்தாலும் அவை நடைபெறும் காலம் மிக மிக மெதுவானது! ஒரு செல் ஒருநாளைக்கு ஆறிலிருந்து எட்டு முறை பிரிந்து அழியலாம், ஆனால் அதில் மாற்றம் ஏற்பட லட்சம் வருடங்கள் கூட ஆகும்!


குரங்குகளுக்கும், மனிதனுக்கும் முந்தய வம்சாவழியில் வந்த மனிதன் பூமியில் எல்லா இடங்களிலும் கால்வைத்து விட்டான், அவனது தோற்ற வேறுபாட்டிற்ற்கு காரணமே அது தான்! ஒன்றினைத்த கண்டமாக பூமியில் நிலபரப்பு இருந்த போது தோன்றிய உயிரினங்கள் இடபெயர்ச்சி செய்தவை கண்டங்கள் பிரியும் போது ஆங்காங்கே தங்கியது! ஆப்பிரிக்காவில் தங்கிய இனம் மரபுவழியாக மாற்றம் ஏற்படாமல் இருந்ததால் முந்தய தோற்றத்திலிருந்து சிறிதே மாறியது, குறிப்பாக உடல் முழுவது இருந்த ரோமத்தை இழந்ததை கூறிப்பிடலாம்! கிழக்கு ஆசிய பகுதிகளில் பனியுக காலத்திலிருந்தே வாழ்ந்து வரும் மங்கோலிய இனமக்கள் வேர்த்திருக்க அதிக வாய்ப்பு இல்லாததால், ”புருவமேட்டு கண் பாதுகாப்பு” அமைப்பு பெரிதாக தேவைப்படவில்லை!, ஒரு ஆப்பிரிக்க இனமும், ஐரோப்பிய இனமும் இணையும் போது புதிய தோற்றத்துடன் சந்தததி உருவாகுவது மரபணு மாற்றத்திற்கான ஆதாரம், அதுவும் பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டம் எனலாம்!

கிழக்கு ஆசிய நாடுகளில் சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் வாழ்பவர்கள் ஒரே மாதிரியான உருவ ஒற்றுமை பெற்றிருப்பது அவர்கள் ஒரே இனத்திலிருந்து பிரிந்தவர்கள் என்பதற்கு ஆதாரம், சித்திர எழுத்து வழக்கம் கொண்டவர்கள், சூரியன் என்பதை சூ ரி ய ன்என்று பிரித்து எழுத வேண்டியதில்லை, அவர்களது ஒரே ஒரு எழுத்து சூரியன் என்ற அர்த்தத்தை தரும்! உலகிலேயே அதிக மக்களால் பேசப்படும் மான்ட்ரின் என்ற சீனமொழியை போலயே ஜப்பனிஷ், கொரியன் இருந்தாலும் அவைகளுக்குள் மலையளவு வித்தியாசம் இருப்பது நமக்கு தெரியாது!, அவர்களது மொழியின் உருவ ஒற்றுமை அவர்கள் ஒரே இனத்திலிருந்து பிரிந்தவர்கள் என்பதற்கு மற்றொரு ஆதாரம்!

இயற்கை சுற்றுசூழல் மாற்றத்தின் மூலமே பரிணாம மாற்றம் கண்டுகொண்டிருந்த உயிரினங்கள் தற்போதைய நாகரிக உலகின் மூலமும் மாறி கொண்டிருப்பது கண்டறியபட்டுள்ளது!, அலாஸ்கா பகுதியில் குட்டைகளில் வாழும் தவளை இனங்கள் அனைத்தும் கால் வளர்ச்சியில் குறைபாடுடனும், சிலவற்றிற்கு நான்குக்கும் மேற்பட்ட கால்கள் இருப்பதும் கண்டறியபட்டுள்ளது!, பயிர்களுக்கு உபயோகிக்கும் பூச்சிகொல்லிகளால் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என கண்டறிந்தாலும் மாற்றம் எங்கே ஆரம்பிக்கிறது என்பது இன்றைய விஞ்ஞான உலகில் கண்டறிவது பெரிய கடினமல்ல, உயிரினத்தில் பரிணாம வளர்ச்சியின் பாதி கட்டத்தில் இருக்கும் தவளை மீன் போன்று தலைபிரட்டை வாழ்க்கை சிறிது நாட்கள் வாழ்ந்து பின் கால்கள் முளைத்து தவளையாகிறது, அப்பொழுது தான் அவற்றிக்கு வெளிப்புற ஆக்சிசனை சுவாசிக்கும் நுரையீரலும் வளருகிறது என்பதும் முக்கியமானது!, பூச்சிகொல்லிகளால் தலைபிரட்டைகள் முழுமையான தவளையாக முடியாமல் கால்கள் வளருவது தடைபட்டு மாற்று திறனுடன் உருவாகிறது!


மரபணு மாற்று விதையின் பாதிப்புகள் எவ்வாறு இருக்கும் என அதிகாரபூர்வ ஆதாரம் நம்மிடம் இல்லையென்றாலும், அவற்றால் மரபணு குறைபாடு ஏற்பட நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது! பரிணாம வளர்ச்சியை நம்பமறுக்கும் மதவாதிகள் கண்முன் மாற்றத்தை பார்ப்பார், கை, கால் இல்லாமல் குழந்தைகள் பிறக்கலாம், மீண்டும் ஊர்ந்து பழகி, வால் முளைத்து நாக்கை நீட்டி மனிதனும் ஒரு வகை பாம்பாகலாம்! மரபணு விதைகளை தடை செய்யவில்லை என்றால் எந்த கடவுளும் உயிரின அழிவை தடுக்க முடியாது என்பதே உண்மை!

முடிந்த அளவு ஆதாரங்கள் கொடுத்திருக்கிறேன்! எதை தேர்தெடுப்பது என்பது உங்கள் பொறுப்பு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக