ஞாயிறு, 11 டிசம்பர், 2011

ஒழுங்காக வடிவமைகப் பட்ட பிரபஞ்சக் கொள்கை மீதான விமர்சனம்

இணையத்தில் மத விளம்ப்ர பிரச்சாரம் நடைபெறுவது நாம் அறிந்ததே.விவாதத்தில் சகலத்தையும் விள‌க்குவோம் என்பதே கொள்கையாக கொண்டவர்கள்.இவர்களை கண்டு கொள்ளாமல் செல்வதே நல்லது என்றாலும் என்ன சொல்கிறார்கள் அதற்கு நாமும் பதில் சொல்லி பார்ப்போமே என்ற சிறு முயற்சிதான் இது.

இந்த பதிவில் பார்த்த கேள்விகளுக்கு பதில் இது
மதம் என்பது நம்பிக்கை மட்டுமே சார்ந்த விஷயம்.ஒருவருக்கு பிடித்த மதத்தை பின்பற்றும் உரிமை அனைவருக்கும் உண்டு. உண்மையான அன்மீகம்,இறைமறுப்பு என்பது முடிவற்ற தேடல் என்பதை பல பதிவுகளில் அலசி இருக்கிறோம்.ஆனால் நாங்கள் அனைத்தும் அறிந்து புரிந்து விளக்குவோம் எனில் விளக்கத்தையும் பார்த்து விடுவோம்.இது ஒரு பதிவுக்கு இன்னொரு பதிவு அவ்வளவுதான்.!!!!!!!!!!!

 சிவப்பு நண்பரின் கேள்விகள்.கருப்பு நம் பதில்கள்

____________
நாத்தீகரா நீங்கள்? அப்போ இந்த கேள்விகளெல்லாம் உங்களை பார்த்துதான்..

இதுதான் இப்பதிவு எழுத காரணமான் வரிகள்.

இந்த பிரபஞ்சம்,இந்த பூமி,அதில் உள்ள உயிரினங்கள்(மனிதன் உட்பட),அதுவல்லாது,உயிர் வாழத்தேவையான நீர்,காற்று ஒளி,இவைகளின் வடிவமைப்பு என ஆதி முதல் அந்தம் வரை அத்துனையும் இயற்கையாகவே உருவானதாக கருதுகிறீர்களா???

பிரபஞ்ச‌த் தோற்றத்தை விளக்க இறைவன் தேவையில்லை.இயற்பியல் போதும்.இத்னை ஸ்டீஃபன் ஹாக்கிங் விள்க்குகிறார்.தவறு என்றால் ஒரு மின்னஞ்சல் அல்லது  இதே மாதிரி படைப்புக் கொள்கையில் இந்த சான்றுகளை எல்லாம் விளக்கி ஒரு புத்தகம் எழுதலாம்.அறிவியல் கொள்கை என்பது சான்றுகளுக்கு விளக்கம் அளிக்கிற‌து.மதக் கொள்கை புத்தக்த்தின் கூற்றுகளுக்கு சான்று ஏற்படுத்த பார்க்கிரது.

இப்போதைய அறிவியல் கருத்தியலின் படி பல பிரபஞ்சங்க்ள்.நமது பிரபஞ்சம்  மிகப் பெரியது அதாவது 46 மில்லியன் ஒளி வருடங்கள்.இது 13.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.அதில் கண்டுபிடிக்கப்ப்ட்ட வரை உள்ள் 200 பில்லியன் கேலக்ஸிகளில் நமது காலக்ஸியும் ஒன்று,இதன் பெயர் பால் வீதி மண்டலம்.(milky way) இதனை ஒரு வட்டமாக வரையறுக்கிறார்கள்.விட்டம் 10,000 ஒளி வருடங்கள்.இதன் கன அளவு 7.85 ட்ரில்லியன் ஒளி வருடம் .

.இதில் உள்ள 200_400 பில்லியன் நட்சத்திரங்களுல் ஒன்றுதான் நம் சூரியக் குடும்பம்.சூரியக் குடும்பத்தின் மொத்த எடையில் 99.86% சூரியன் ஆகும்.பிற கோள்கள் எல்லாம் மிச்சம் மீதி மட்டுமே.இதில் நம் பூமி ஒரு தூசு. நமது நம்து பூமி 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியடு.இதன் விட்டம் சுமார் 12,000 கி.மீ.இந்த உருவாதலுக்கு இயற்கை விதிகள் மீது விளக்கம் அளிக்கப் படுகின்ற‌ன்.


இயற்கை விதிகளுக்கு மாறாமல் மெதுவாகவே பிரபஞ்சங்க்ள்  உருவாதல் நடந்திருக்கிறது.இன்னும் பல விஷயங்கள் உள்ளது படைப்பு இன்னும் நடந்து கொண்டே இருக்கிறது.புதிய நட்சத்திரங்கள் தோன்றுவதும்,பழையவை அழிவதும் நடந்து கொண்டே இருக்கின்ற‌ன.


இது அனைத்தையும் இறைவன் இயற்கை விதிகளுக்கு மாறாமல் மெதுவாஆஆஆஆஆஆஆஅகாஆஆஆஆஅ படைத்துக் கொண்டே இருக்கிறாஆஆஆஆஆஆர் என்றால் என்று நீங்கள் நம்பினால் அது உங்கள் உரிமை.கடவுளும் இயற்கை விதிகளுக்கு கட்டுப் பட்டவர் என்றால் அவர் ஒரு ஓரமாக இருந்து விட்டு போகட்டும்.இயற்கை விதிகளை மீறும் கடவுள்(கள்) தேவையில்லை.

ஆனால் பாருங்கள் பிரபஞ்ச படைப்பு என்பது மத புத்தகங்களின் படி முடிந்து போன விஷயம்.
**********
ஆம்! பகுத்தறிவு...அல்லவா? எந்த ஒரு பொருளும் ஒரு படைப்பாளி இல்லாது தானாக வந்துவிடாது என்ற அறிவு.வீடல்ல,ஒரு குருவிக் கூடானாலும், எறும்பு தங்கும் புற்றானாலும்,அதை ஒருவர் உருவாக்காமல் வந்து விடுவதில்லை என்பதில் திண்ணமாக இருக்கும் நீங்கள்....முழு மனித சமுதாயமும் முயன்றாலும் முடிந்திடாத,கற்பனைக்கும் எட்டிவிடாத டிஸைனில் இந்த உலகத்தை ஒரு படைப்பாளன் இல்லாது தானாக உருவாகிவிட்டது என வாதிடுவது விந்தையாகவும்,கருத்துமுரணாகவும், பின் முட்டாள்தனமாகவும் இருக்கிறதே

இதற்கு பெயர் முதல் காரணி கொள்கை.(first cause argument) கடவுளுக்கு மட்டும் பொருந்தாது.ஒரெ கடவுள் எப்போதும் எதுவும் இலாமல் இருப்பார் என்பதை விட இயற்கை எப்போதும் இருக்கிற‌து என்பதே அறிவார்ந்த சிந்த்னையாக தெரிகிறது.கடவுள் வடிவமைப்பு(design) என்பது இயற்கை விதிகளுக்கு கட்டுப்பட்டதால் கடவுளும் இயற்கையின்(உண்மையில் மனிதனின் படைப்பு) படைபாகவே இருக்க முடியும்.


இறை மறுப்பாளர்களாகிய நாங்கள் தேடியவரை இயற்கை விதிகளுக்கு மேலான சக்தி எதையும் கண்டறிய முடியவில்லை என்று ஆய்வு பூர்வமாக் கூறுகிறோம்.எல்லையற்ற தேடல் மட்டும் தொடர்கிறது.

உங்கள் வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளும் இயற்கையாக உருவானது என சொன்னால் நம்பி விடுவீர்களா?? ம்ம்ஹும் இல்லை..இதை யாராவது உருவாக்கி இருக்க வேண்டும் என எதை வைத்து ஆணித்தரமாக சொல்கிறீர்கள்?

உங்கள் வீடு என்றாலே உங்களால் உருவாக்க‌ப் பட்டது.தானே.மனிதர்கள் வாழ்வது கடந்த 2 இலட்சம் ஆண்டுகள் மட்டுமே.பிரபஞ்சம் தோன்றி 99.9999% காலம் கடந்து ஒரு வீட்டை உருவாக்க கூடிய மனித்ன உருவானான்.பல விலங்குகள் இல்லாமல் போய் விட்டன.அது போல் மனிதன் இல்லாமல் போகும் காலமும் வரும் அப்போதும் பூமி இருந்தால் பிற உயிர்கள் வாழும்.

பூமி மனிதனுக்காக‌ படைக்கப் பட்டது என்பதை இக்கூற்றுகளின் மேல் நம்ப முடியுமா?

இயற்கையாகவேதான், இந்த பூமி 100% பெர்ஃபெக்‌ஷனுடன் வந்துவிட்டது என உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா???ஒன்றும் இல்லை..கையில் பத்துவிதமான பொருட்களை வைத்துக்கொள்ளுங்கள்.ஒவ்வொன்றும் உங்களின் மேசையில் இன்ன இன்ன இடத்தில் இன்னின்னவாறு இருக்க வேண்டும் என முடிவு செய்து கொள்ளுங்கள் பின் அதை மேசையில் சிதரவிட்டுவிடுங்கள்... அவையாவும் தாங்கள் விரும்பிய பெர்ப்க்‌ஷனை பூர்த்தி செய்யும் சதவிகிதம் எத்தனை என நீங்களே யூகித்துக்கொள்ளவேண்டியதுதான்...அது ஒன்றில் இருந்து ஐந்து சதவிகிதத்தை கூட எட்டமுடியாது என்பது உறுதி..இதுதான் நீங்கள் சொல்லும் இயற்கையால் கொடுக்கப்பட முடிந்த பெர்ஃபெக்‌ஷன்...நீங்கள் விரும்பிய, அல்லது, குறைந்த பட்ச ஒழுங்கை எட்டவேண்டும் என்றால் கூட உங்களின் கைவைக்கப்படாமல் அங்கு ஒன்றும் நடக்காது.

 இந்த வாதத்தின் பெயர் ஃபைன் ட்யூனிங் வாதம்(fine tuning argument) உல்கம் தோன்றிய போதே இப்படி வாழவதற்கு ஏற்றதாக இருந்தது என்றால் மட்டுமே இக்கூற்று சரி.ஆனால் அப்ப்டி இல்லை.நண்பர்களே மதவாதிகள் இம்மாதிரி விதண்டாவாதம் செய்து மூளை சல்வை செய்வதில் இருந்து விலகுங்கள்.மதத்தில் உள்ள நல்ல விஷயங்களை பின்பற்றலாம்.சர்சசைகுறிய நடைமுறைகளை நியாயப் படுத்தாதீர்கள்.இது நமது வேண்டுகோள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக