சனி, 17 டிசம்பர், 2011

இஸ்லாமிய மதத்தினர் பெருவாரியாக வாழும் நாடுகளில், பிற மதத்தினர் அச்சுறுத்தலின்றி வாழும் நிலை இருக்கிறதா ?

 


இக் கட்டுரையில் நாம் முதலும் முக்கியமான கருத்துமாக சொல்வது என்னவென்றால், இந்தியாவில் சிறுபான்மையினர்என அழைக்கப்படும் இஸ்லாமியர், கிறிஸ்துவர் …. உள்ளிட்ட எந்த ஒரு மனிதரும் அச்சுறுத்தப் படக் கூடாது, சிநேகத்துடன் , அன்புடனுமே அணுகப் பட வேண்டும் என்பதாகும். உலகில் உள்ள மக்கள ஒவ்வருவருக்கும் முழுப் பாதுகாப்பு, சம உரிமை, முழு சுதந்திரம், மத சுதந்திரம், சம வாய்ப்பு…வழங்கப் பட வேண்டும் , அதுதான் நாகரிக சமுதாயம் என்பதை பலமுறை சொல்லி இருக்கிறோம். இன்னும் பலமுறை அதை சொல்ல நமக்கு தயக்கமில்லை. அதோடு, உலகில் உள்ள எந்த கோட்பாட்டையும், மார்க்கத்தையும் ஆக்கபூர்வமாக அணுகி அவற்றில் உள்ள நல்ல கருத்துக்களை வெளிக் காட்டி நல்லிணக்கப் பாதையில் செல்வதும் நமது கொள்கை. ஆனால் பிற மதங்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சி கருத்துக்களை மனதில் வைத்தவர்கள் , தன் மார்க்கம் மட்டுமே உலகில் எல்லோராலும் பின்பற்றப் படவேண்டு ம் என்கிற ஆவேச உணர்ச்சியால் உந்தப் பட்டவர்கள்-  தங்களை மார்க்கத்தில் உள்ள மத வெறிக் கருத்துக்களை கண்டித்து எதுவும் சொல்வதில்லை- மாறாக தங்களின் மத வெறிக் கோட்பாடுகளில் எந்த ஒரு தவறும் இல்லாதது போலவும், தங்கள் கோட்பாடுகள்  யாருக்கும் இன்னல் இழைக்காத கோட்பாடுகள் போலவும், மதவெறி விடத்தின் மேல் தேன் பூசி மறைக்கப் பார்க்கிறார்கள். இதை வெளிச்சம் போட்டுக் காட்ட நாம் என் தயங்க வேண்டும். என்னுடைய மார்க்கத்தை உலகில் உள்ள ஒவ்வொருவரிடமும் எத்தி வைக்கும் கடமை எங்களிடம் இருக்கிறது என்பார்கள். அதே போல பிற மார்க்கத்தவனுக்கும்  தன்னுடைய மதத்தை உலகில் உள்ள எல்லோரிடமும் எத்தி வைக்கும் உரிமையை வழங்கக் விருப்பமா? தங்கள் நாட்டில் பிற  மார்க்க பிரச்சாரங்களை சட்டபூர்வமாக தடை செய்து, கடும் தண்டனை அளிக்கும் நாடுகளை கண்டிக்க தயாரா என்றால் அதற்கு பதிலே வராது. அது விடயமாக பேசவே மாட்டார்கள். அதாவது என் மார்க்கம் மட்டும் தான் உலகில் எல்லோராலும் பின்பற்றப் பட வேண்டும். பிற மார்க்கங்கள் இல்லாமல் போக வேண்டும் என்பதுதான் இவர்களின் கனவு. பிற மதங்களை சகித்துக் கொள்ள மறுப்போர் நிறைந்த நாட்டில் மற்ற மதத்தினர் அச்சமில்லாமல் வாழ முடிகிறதா என்று மக்கள் சிந்திக்கிறார்கள். http://news.bbc.co.uk/2/shared/spl/hi/picture_gallery/07/south_asia_hindus_in_pakistan/html/5.stm இந்த நிலையில் இந்தியாவில் தங்கள் மார்க்கம் மட்டுமே உண்மையான மார்க்கம், தங்கள் கடவுள் மட்டுமே உண்மையான கடவுள் என்று பிற மதங்களை கடித்து அவர்களின் வழிபாட்டு முறைகளை இகழ செய்யும் மத வெறி கோட்பாட்டு பிரச்சாரகர்கள், வெளி நாட்டில் இருந்து வரும் வசதிகளால்  இந்திய மக்களை மத வெறிக் கோட்பாட்டுக்கு இழுத்து வருகின்றனர்- இதையும் நாங்க ரொம்ப நல்லவங்க , நம்ப கோட்பாடு ரொம்ப நல்லது என்று மத வெறியை நியாயப் படுத்தும் போக்கை மக்கள மனதில் விதைக்கின்றனர். இதே நிலையில் சென்றால் இந்தியா இன்னும் எத்தனை நாளைக்கு மத சகிப்புத் தன்மை கொண்ட நாடாக இருக்கும்? இந்தியாவும் பாகிஸ்தான் போல ஆகிவிடுமா, ஈரான் போல, இஸ்ரேல் போல ஆகி விடுமா என்ற கவலையை பலர் கேள்விகளாக எழுப்புகின்றனர். எனவே நாகரீக சமுதாயத்தை நிலை நிறுத்த விரும்பவோர் செய்யக் கூடியது என்னவென்றால், இஸ்லாமிய , கிறிஸ்தவ, இந்து மதங்கள் உட்பட … இந்தியாவில் உள்ள எலா மதங்களை சேர்ந்த சிறுவர் சிறுமியர்களையும்  அணுகி அவர்களிடம், “மத வெறி அபாயகரமானது, பிற மதங்களை அளிக்க நினைப்பது காட்டுமிராண்டித தனத்தை விட அநாகரீகமானது” .. என்பது போன்ற கருத்துக்களை பிரச்சாரம் செய்வதுதான் . “உங்கள் மார்க்கத்தில் மத வெறிக் கோட்பாடுகள் இருந்தால் அவற்றை கை  விடுங்கள், அக்கருத்துக்களை தொடர்ந்து பிரச்சாரம் செய்ய வேண்டாம். உங்கள் மார்க்கத்தில் உள்ள அமைதியான ஆன்மீக முறைகளை பின்பற்றுங்கள், நாங்கள் உங்களுடன் நல்லிணக்கமாக இருக்கிறோம்” என்பதை தெளிவாக எடுத்து சொல்ல வேண்டும். இந்தியாவில் மத சகிப்புத் தன்மையை அழித்து, மத வெறியை பரப்ப முயலும் பிரச்சாரத்தை எதிர் கொண்டு அவர்களின் மத வெறியை வெளிச்சம் போட்டுக் காட்டுவது நாட்டு நன்மைக்கு  அவசியமே. குறிப்பு: இக்கட்டுரைக்கு பின்னூட்டம் அளிக்கும் அன்புக்குரிய நண்பர்கள் தயவு செய்து இஸ்லாமியருக்கோ, இஸ்லாத்துக்கோ எதிரான வெறுப்புணர்ச்சியைஉருவாக்கும்  வகையில் பின்னூட்டங்களை எழுத வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். இக் கட்டுரை யானது மத வெறிக்கு சமரசம் வீசும் நண்பர்களை சகிப்புத் தன்மைப் பாதைக்கு கொண்டு வருவதற்காக வே எழுதப் பட்டது என்பதை நினைவுறுத்துகிறோம் – இஸ்லாமிய சகோதர சகோதரர்கள் மீதோ, இஸ்லாத்தின் மீதோ வெறுப்பு பாராட்ட அல்ல. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக