இப்பதிவுகளில் மனிதம்,மதம் சார்ந்த கருத்துகளை விவாதித்து வருகிறோம்.மதம் என்பது மத புத்தகங்களின் அடிப்படையிலேயே கருத்தாக்கமாக,வாழ்வியல் நடை முறையாக பின்பற்றுபவர்களுக்கு மத குருக்களால் கூறப்படுகிறது.
ஒரு மனிதனுக்கு தான் விரும்பும் மதத்தை பின்பற்ற எல்லா உரிமைகளும் உண்டு என்றாலும் சில விதிகளுக்கு உட்பட்டே மதம் பின்பற்றப்படுகிறது.
1.கடவுளை நேரடியாக பார்க்க முடியாது.
2.கடவுள் சில மனிதர்களிடம் சில தகவல்களை கூறிiயுள்ளார்.
3.அந்த தக்வல்கள் தொகுக்கப் பட்டு மத புத்தகங்கள ஆக்கப்பட்டுள்ள்ன.
மத புத்தகங்கள் மூலமாகவே கடவுள் மனிதனை வழிநடத்துகிறார் என்பது எல்லா மதங்களின் கருத்தாகும்.அது கூறும் வழியில் நடந்தால் மட்டுமே மறுமை வாழ்வு அடைய முடியும் என்பதும் அனைவரும் அறிந்ததே.. மதத்தை பின் பற்றுபவர்கள் பெரும்பாலோர் மத புத்தகங்களை படிப்பது இல்லை. .மத குருக்கள் கூறுவதை அப்படியே எடுத்துக் கொள்வது அறிவார்ந்த செயல் ஆகாது. ஆகவே மத நம்பிக்கை உள்ளவர்களௌம்,இல்லாதவர்களும் மத புத்தகங்களை படிப்பது மிகவும் இன்றியமையாதது.
ஒருவர் பின்பற்றும் கருத்துகள் உண்மையிலேயே மத புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளதா என்று சரி பார்ப்பது மிகவும் அவசியமானது.
மத புத்தகத்திலேயே சில அறிவுக்கு,நாகரிக வாழ்வுக்கு ஒவ்வாத கருத்துகள் இருப்பதையும் அதனை மத வாதிகள் மூடி மறைப்பதோ அல்லது அதற்கு சுற்றி வளைத்து நியாயப்படுத்துவதும் கண்டறிய முடியும்.
இணைய்த்தில் மின் நூல்களாக இந்து,இஸ்லாம்,கிறித்தவ,சிக்கியம்,பவுத்த வேத புத்தகங்களை இபதிவில் அளிக்கிறேன்.பதிவிறக்கம் செய்து படிக்குமாறு வேண்டுகிறேன்.
இந்து மதம்
நன்கு வேதங்கள்(ரிக் யஜூர்,சாம,மற்றும் அதர்வண) ஆங்கில மொழி பெயர்ப்பு.
தமிழ் மொழி பெயர்ப்பு இன்னும் மின் நூலாக கிடக்கவில்லை.கிடைத்தால் அளிக்கிறேன்
இஸ்லாம்
குரான்,புஹாரி,தமிழ் மொழி பெயர்ப்பு
கிறித்தவம்
பழைய,புதிய ஏற்பாடுகள் தமிழ் மொழிபெயர்ப்பு
பவுத்தம்
தம்மபதா ஆங்கில மூலம்
சிக்கியம்
கிரந்த் சாஹிப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக