ஞாயிறு, 11 டிசம்பர், 2011

பரிணாமம் - முட்டையா? கோழியா?

கடந்த வாரம் உலகளாவிய பிரச்சனை ஒன்று முடிவுக்கு வந்தது, அது பல நூற்றாண்டுகளாக இருந்த ஒரு கேள்விக்கான விடை,கோழியிலிருந்து முட்டை வந்ததா?, முட்டையிலிருந்து கோழி வந்ததா? என்ற கேள்வியே அது, நான் சிறு வயதிலேயே தர்க்க ரீதியாக அது கோழி தான் என்று விவாதித்தாலும், கடந்த வாரம் வந்த ஆராய்ச்சியின் முடிவு விஞ்ஞான ரீதியாக அதை உறுதி செய்துவிட்டது, ஆனாலும் சில நண்பர்கள் அதை தர்க்க ரீதியாக ஏற்க மறுக்கிறார்கள், கோழி தான் முதல் என்றால் அது படைப்புவாத கொள்கைக்கு ஆதரவாக இருக்கிறது என்கிறார்கள், இன்னும் சிலர் ஒருபடி மேலே போய் அது ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது என்கிறார்கள்!, கடவுளையே நோண்டி நொங்கெடுக்கும் போது கோழியை மட்டும் விட்டு வைக்கலாமா!?

ஊர் வாயை அடைக்கனும் என்றால், ஊருக்கு என்ன வாயா இருக்கு என்று கேட்பது போலத்தான் கோழி என்றால் நேரடியாக கோழியை விவாதத்துக்கு எடுத்து கொள்வது, கோழி என்றால் முதல் முட்டையிட்ட உரியினம் என்று தான் எடுத்து கொள்ள வேண்டும், அது பறவையாகவும் இருக்கலாம், பல்லி போன்ற ஊர்வனவையாகவும் இருக்கலாம், மீனாகவும் இருக்கலாம், அல்லது விதையை உற்பத்தி செய்த தாவரமாகவும் இருக்கலாம், சென்ற பதிவிலேயே தாவர விதைக்கும், முட்டைக்கும் இருக்கும் அடிப்படை ஒற்றுமைகள் பற்றி எழுதினேன், சரி இங்கே தாவரம் எதுக்கு என்கிறீர்களா!? அது தான் நான் பத்து வருடம் முன்னால் செய்த விவாதமே!


ஒருசெல் உயிரினங்கள் தனது பிரதியை நகலெடுத்து இனப்பெருக்கம் செய்தன, அவைகளின் வாழ வேண்டிய நிர்பந்தம், அவைகளை பல செல் உயிரினங்களாக மாற்றியது. அவைகளுக்கு இனபெருக்கம் அப்பொழுதும் தேவைபட்டது, சில தாவரங்கள் வேர் வழியாகவே தனது பிரதியை நகலெடுத்தன! கிழங்கு வகைகளை நாம் உணவாக உட்கொண்டாலும் அவை சற்றே தடித்த வேர் தான் என்பதை ஒப்பு கொள்வீர்கள் என நம்புகிறேன், அதில் ஏற்பட்ட மாற்றம் மூடிய வேர்கள் கடலை போன்ற விதைகளை உருவாக்கியது, அவைகளை அப்படியே விட்டுவிட்டாலும் அருகில் அந்த வேர் மூலம் அடுத்த கடலை செடி வந்துவிடும்!


அடுத்த வானம் பார்த்த விதைகளை உருவாக்கும் முயற்சி ஆரம்பித்தது, அதன் காரணம் ஒரே இடத்தில் அருகருகில் முளைக்கும் செடிகளுக்கு தேவையான ஊட்டசத்து கிடைப்பதில்லை, அப்படியே வானம் பார்த்த விதைகளை உருவாக்க நினைத்தாலும் இன்னும் அதில் முழுபரிணாமம் அடையாத செடிகள் தான் ரோஜா, மல்லிகை போன்ற செடிகள், நன்றாக பார்த்துள்ளீர்களா!? அந்த பூக்களில் விதைகள் உருவாகாது, ஆனால் கனகாம்பரம், சூரியகாந்தி போன்ற பூக்கள் காய்க்காமலேயே தனக்குள் விதைகளை உருவாக்கி கொள்கிறது. முன்னரே சொன்னது தான் காய்கள் அனைத்தும் மூடப்பட்ட விதைகளே அதை தாவர முட்டைகள் என்று அழைக்கலாம்!   




தனது உடலிலேயே தனது கருவை முழு காலமும் வளர்க்க முடியாத உடல் வளர்ச்சியை தான் ஆரம்ப கட்ட உயிரினங்கள் பெற்றிருந்தன!, சில உயிரினங்கள் அப்படியே முட்டையிலும் கூட முழு வளர்ச்சி அடைய முடியாதவைகளாக இருக்கின்றன, அது முட்டையின் மீதான தவறல்ல, அந்த உயிரினத்திற்கு முழு வளர்ச்சியடைய இன்னும் அதிக காலம் தேவைப்படுவதே, அதற்கு உதாரணங்களாக லார்வா புழுக்களை காட்டலாம், எறும்பு, தேனி, பட்டாம்பூச்சியில் ஆரம்பித்து பரிணாமத்தின் அடுத்த உதாரணமான தவளையும் காட்டலாம்!.


தனது உடலுகுள்ளாகவே முழு வளர்ச்சியும் கொடுக்க முடிந்த உயிரினம் பாலூட்டியாக மாறியது, தனது வாரிசுகள் தனியாக உணவை தேடும் வரை அதை பாதுகாப்பது பெரும்பாலும் அனைத்து உயிர்களுக்கும் உள்ளன, ஆயினும் பாலூட்டியாக இருப்பது அதிகபட்ச பாதுகாப்பு எனவே பரிணாமம் பாலை சுரக்க வைத்தது, அவை இருபாலருக்கும் பொதுவானது என்பதால் தான் ஆண்களுக்கும் முலைகாம்பு உள்ளது, அதற்கான சுரப்பிகள் தேவையான அளவு சுரப்பதில்லை ஆண்களுக்கு, பாலூட்டியாக ஒரு பறவை மாறியதற்கான உலகம் முழுவதும் ஒப்புகொண்ட ஆதாரம் ப்ளாட்டிபஸ், அது அடிப்படையில் வாத்து குடும்பத்தை சேர்ந்தது!


தொடரும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக