ஞாயிறு, 11 டிசம்பர், 2011

பூமியும் பலவித படைப்பு வாத கொள்கைகளும்

அறிவியல் மனித வாழ்வில மகத்தான பங்கு ஆற்றிவருவதும்,மனிதனின் பலவித தேவைகளுக்கு ஏற்ப புதிய கண்டு பிடிப்புகள் வருவதும், இன்றைய வாழவை எளிதாக்க‌கவும் இன்னும் இதன் பயன்களை அடுக்கி கொண்டே போகலாம்.

நமது முன்னோர்களால் நினைத்து பார்க்க முடியாத பல செயல்களை நம்மால் எளிதில் செய்ய முடிகிறது.அறிவியல் விதிகள் என்பது ஒரு மனிதரின் கற்பனையில் தோன்றுவது இல்லை.

அறிவியல் விதி(கருத்தாக்கம்)இயற்கையின் நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து அதன் காரணிகளை அறிந்து,ஒரு செயல் நடப்பது குறிப்பிட்ட சூழ்நிலையில்,குறிப்பிட்ட காரணிகள மூலம் மட்டுமே என்பதை கண்டறிவதாகும்.

ஒவ்வொரு விதிக்கும் சில எல்லை கள் இருப்பதும்.அந்த எல்லைகளை குறித்து இன்னொரு விதி கண்டுபிடிக்கப் படுவதும் அறிவியலை ஒரு தொடர் பயணமாகவே வைத்துள்ளது..
இந்த வரிசையில் நமது பூமி உருவானது பற்றி அறிவியல் கருத்தாக்கம் பெரு வெடிப்பு கொள்கை என்று அழைக்கப் படுகிறது.

இதன் முக்கியமான கருத்துகள்

பிரபஞ்சம் சுமார் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது.

பூமி சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது.

முதல் உயிரினம் ஒரு செல் உயிரி சுமார் 3.8 பில்லியன் ஆண்டுகள்
.
.
.
.
.
.
ஹொமொ சேபியன்கள் எனப்படும் மனித இனம் சுமார் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது.

இதெல்லாம் தெரிந்த விஷயம் தானே என்று கூறுகிறீர்கள் அல்லவா?
இபோதுதான் பதிவுக்கே வருகிறேன். இது சும்மா முன்னோட்டம் தான்.

அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் எங்கள் மத புத்தகத்தில் கூறப்பட்டு உள்ளது என்பது என்பது மதவாதிகளின் வழக்கமான கூற்றுதான் என்றாலும்.இந்த பூமி மற்றும் மனிதனின் தோற்றம் பற்றிய அறிவியலின் கருத்தாக்கம் அவர்களை மிகவும் நடுங்க வைத்டு விட்டது.

அறிவியலை முழுமையாக எதிர்தால் நிச்சயம் தோல்வி என்பதும் மத்ம் காணாமல் போய்விடும் என்பது அவர்களுக்கு தெரியும்.ஆகவே அவர்களும் பரிணாமம் நீங்கலாக பெரு வெடிப்பு கொள்கையை ஆத்ரித்து பூமி மனித தோற்றங்களுக்கு மத புத்தகங்களில் இருந்து கருத்துகளை சொல்லி தப்பித்து கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.
.
அதனால் பரிணாமத்தை எதிர்த்து படைப்பியல் கொள்கை என்ற கருத்தாக்கத்தை உருவக்கினர்.
கடவுளுக்கு கூட பெரு வெடிப்பு போன்ற செயல் உலகை படைக்க அவசியமாகிறது என்றால் கடவுளும் இயற்கையின் விதிகளுக்கு கட்டுப் பட்டவராகிறார் என்பதும் ஒரு நகைசுவையான விஷயமே.

இந்த படைப்பியல் கொள்கை என்றால் என்ன அதன் பல பிரிவுகளை பற்றி இப்பதிவ்ல் பர்ப்போம்.

படைப்பியல் கொள்கை என்பதை கடவுள்(கள்) பிரபஞ்சம்,பூமி,மற்றும் உயிரினங்கள்(மனிதன் உட்பட)  உருவாக்கினர் என்பதாகும்.பிறகு என்ன சிக்கல் கடவுள் படைத்தார் என்று சொல்லிவிட்டால் கதை முடிந்தது அல்லவா என்றால் நீங்கள் கொஞ்சம் அவர்கள் பிரச்சிஅனைகளை ப்ருந்து கொள்ள மறுக்கிறீர்கள்.

பிரபஞ்சமும் படைக்கப்பட்டது என்றால் கடவுள்(கள்) எங்கே இருந்தார் என்ற கேள்வியும் வருகிறது.ஆகவே இந்த பிரபஞ்சம் அல்லாத பல பிரபஞ்சங்கள் உண்டு.அதனால் படைபியல் கொள்கை நமது பிரபஞ்சம் பற்றி மட்டுமே கூறுகிறது. மத புத்தகங்களில் வார்த்தை விளையாட்டு செய்வது எளிது ஆகையால் அறிவியலை முற்றும் மாறுபடாமல் மத புத்தகத்தில் கூறும் விதமாக கொள்கைகளை அமைக்கிறார்கள்.


படைப்பியல் கொளையில் பொதுவாக இரண்டு வ‌கை உண்டு.

1.பழைய பூமி கொளகை


பழைய பூமி என்றால் பூமி முன்ன்ரே படைக்கப்பட்டது(சுமார் 4.5 பில்லியன் ஆண்டு முன்பு?)

விலங்குகள் மனிதனுக்கு சற்று முன்பு படைக்கப்பட்டன(காலம் அவசியைல்லை)

மனிதர்கள் சுமார் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு படைக்கப்பட்டனர்.

அறிவியலோடு ஒத்துப்போகிறதா இல்லையா?


ஆனால் பூமியை மனிதர்களுக்காக படைத்தாரா ?இல்லையா? பூமி படைக்கப்பட்டு 99.9% நேரம் கடந்து மனிதனை படைக்கிறார் இறைவன்(கள்).

பெரும்பாலும் மத புத்தகங்களில் இடம் காலம்,பொருள் சரியாகவே 
சொல்லப் பட்டு இருக்காது.புத்தகம் எழுதப் படும்போது உள்ள அறிவு செயல்களே குறிப்பிடப் பட்டு இருக்கும். இருந்தாலும் இதற்கு பொருந்துமாறு ஏதாவது வசனம் சொல்லி விடலாம் ஏடாகூடமாக் ஏதாவது வசனம் இருந்தால் அது ஒரு குறியீடு என்றும் கூறிவிடுவார்கள். பல கிறித்தவ,இஸ்லாம மத பபிரச்சாரகர்கள் இக்கொள்கையை வலியுறுத்துகிறார்கள்.

இவர்கள் ஆறு நாட்கள் படைப்பு என்பதை பலவிதமாக விளக்குவார்கள்.இறைவனின் ஒரு நாள் என்பது பூமியின் 24 மனி நேரம் அல்ல என்றும் அது ஒரு நெடுங்காலம் என்பர்.
இவர்களின் இணைய தளம் ஒன்று தருகிறேன்.இவர்களும் நிறைய வேலை பார்க்கிறார்கள் என்றே தோன்றுகிறது. பொழுது போகவில்லை என்றால் இத்தளத்திற்கு செல்லலாம்.
_2.இளைய‌ பூமி கொள்கை

கிறித்தவ பைபிளில் ஆதம் முதல் இயேசு வரை ஒவ்வொருவரின் வயது குறிப்பிட்டு வம்ச வரலாறு உண்டு.இதின்படி உலகம்,உயிரினங்கள் படக்கப்பட்டது சுமார் 6000 வருடங்களுக்கு முன்பு.


கிறித்தவத்தின் சில பிரிவின்ர் பைபிளில் குறிப்பிட்ட ஒவ்வொரு வார்த்தையும் அப்படியே உண்மை பூமி பழையது போல தோன்றினாலும் அது படைக்கப்பட்டு 6000 வருடங்கள் மட்டுமே ஆகின்றது என்று கூறுபவர்கள் இவர்கள்.

இந்த இளைய பூமி கொள்கையாளர்கள் எல்லா விலங்குகளும் டைனோசார் உட்பட மனிதனுடன் படக்கப் பட்டன என்றே நம்புகிறார்கள்.டைனோசார்கள் எல்லாம் நோவாவின் வெள்ளப் பெருக்கில் அழிந்துவிட்டன என்ற கருத்தும் உண்டு.டைனோசார் அழிந்து பல ஆண்டுகளுக்கு பிறகு மனித இனம் தோன்றியது என்றால் நம்மை பார்த்து ஒரு புன்முறுவல் புரிவார்கள்.

-------

எதற்கு இப்படி உங்களுக்கு எதிரான கொள்கைகளை விளக்கம் கொடுக்கிறீர்கள் என்றால் படித்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளவே இப்பதிவுகளை எழுதுகிறேன்.பாவம் படைபியல்வாதிகளும் ஏதோ சொல்கிறார்கள் என்று படித்தால் அவர்கள் சொல்வது எல்லாம் முந்திய பதிவுகளில் எழுதியபடி வார்த்தை விளையாட்டாகவே உள்ளது.ஆனால் அவர்கள் சொல்வது எல்லாமே முன்னுக்கு பின் முரணாகவே இருக்கிறது.கருத்துகளை தவிர எந்த ஒரு ஆய்வும் மேற் கொள்ளப் படவில்லை.

தமிழிலும் சில படைப்பியல்வாதிகள் சிலர் இணையத்தில் எழுதுகிறார்கள். அவர்கள் பரிணாம் குறித்து விமர்சனம் எழுதுவதை மட்டுமே செய்கிறார்கள்.இந்த இணைய தளங்கள் மாதிரி ஏதாவது படைபியல் பற்றி எழுதினால் நமக்கு மறுப்பு எழுத வேலை வரும் என்பதற்காகவே இப்பதிவு. 
ஒரு பரிணாமவாதி மற்றும் இரு படைப்பியல்வாதிகளின் விவாதம் ஒன்று இணைக்கிறேன்.பிறகு பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக