சற்றேறகுறைய ஆறு மாதங்களுக்கு முன் ஒரு இஸ்லாமிய பெண் தடகள போட்டியில் வெற்றி பெற்றார், சிறப்பு என்னவென்றால் ஸ்கூபா டைவிங்கிற்கு பயன்படுத்தும் இறுக்கமான உடை அணிந்திருந்தார், அதே போன்ற தலைகவசம் கூட இருந்தது,(படத்தில் பார்க்க)இந்த செய்தியை புர்கா போட்டு போட்டியில் ஒரு பெண் வெற்றி பெற்றார் என்று பீர் அண்ணன் பதிவு போட்டு சொறிந்து கொண்டார்!(இது தான் புர்காவா!?)
ஏறக்குறைய 1700 வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்டது தான் குரான், அதில் தான் புர்கா பற்றி எழுதியிருக்கிறது, அதற்கு முன்னாலும் கடவுள் நிறைய தூதர்களையும், கூடவே வேதம் என்ற பெயரில் சில கட்டுபாடுகளையும் அனுப்பியிருக்கிறார், ஆனால் அதிலெல்லாம் பெண்களின் உடை பற்றி ஒன்றுமில்லை, இஸ்லாமியர்களை பொறுத்தவரை குரானே இறுதி வேதம், அதனை அவரே!? சொல்லியிருக்கிறார், ஒரு முழுமையான வேதத்தை கொடுக்க இம்புட்டு டெஸ்டுகள் செய்யும் கடவுள் இதை தான் முழுமையான வேதம் என்று எப்படி அறிவிக்க முடியும், முதல் முயற்சியிலேயே சரியானவற்றை செய்யமுடியாதவர் எப்படி கடவுளாக இருக்க முடியும்!
கடவுள் மறுப்பாளர்கள் எப்போதும் தாங்கள் சொல்லவதை சரி என்றும், நீங்கள் நம்பி தான் ஆகவேண்டும் என்றும் சொன்னதில்லை, அந்த புத்தகத்துல போட்ருக்கு, அவர் சொன்னால் சரியாக தான் இருக்கும் என்று யாரிடமும், எதனிடமும் எங்கள் மூளையை நாங்கள் அடகு வைத்ததில்லை, நாங்கள் முன் வைப்பதெல்லாம் உண்மையின் அதிகபடியான சாத்தியகூறுகள், அதை சரியான வாதத்திற்கு எடுத்து கொள்ளாமல் சேனை கட்டிய குதிரையாக இருப்பது தான் உங்கள் விருப்பமென்றால் நாங்கள் ஒருபோதும் வருத்தப்பட போவதில்லை, நாங்கள் உலகை திருத்த வந்த அவதாரங்கள் கிடையாது!.
நாங்கள் என்ன சொன்னாலும் நீங்கள் அதை மறுபரீசிலனைக்கு எடுத்து கொள்ள மாட்டீர்கள் என எங்களுக்கும் தெரியும், இஸ்லாமிய பெண்களுக்கு பர்தா போடுவது பிடித்திருக்கிறது, எங்கள் பார்வையில் இஸ்லாமிய பெண்களுக்கு அடிமையாக அல்லது அடங்கி இருப்பது பிடித்திருக்கிறது, இஸ்லாமிய ஆண்களுக்கு பெண்களை அடிமையாக வைத்திருப்பது பிடித்திருக்கிறது, அதற்கு ஒரு சாக்கு “குரானில் இருக்கிறது” என்பது!, புர்கா அணிவது உங்கள் உரிமை தான், இல்லையென்று எந்த கடவுள் மறுப்பாளனும் சொல்லமாட்டான், ஆனால் அதனை கேள்விகுள்ளாக்க யாருக்கும் உரிமை இல்லை என்பது கேள்விக்கு பதில் சொல்லத்தெரியாதவர் மழுப்புவதற்காக சொல்வது!
திருட்டு டி.வி.டி, சாலையோர படுகொலை என எப்படி உங்களுடய சமுதாய அக்கறைகளை காட்டுகிறீர்களோ, அது தான் நாங்களும் செய்கிறோம், கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லையென்றால், தெரியவில்லை என்று பின் வாங்கி கொள்ளவேண்டும், அதை விட்டு எங்களை கேள்வி கேட்கும் உரிமை யாருக்குமில்லை, நீ அடைச்சுக்கோ, அமுக்கிகோ என்பது, நாங்கள் செய்வதெல்லாம் சரி, மற்றவர்கள் செய்வதெல்லாம் தவறு என்பதற்கு சமம்! நாங்கள் ஆரம்பித்தால் எல்லா ஓட்டையும் கார்க் புடிங்கி வெளி வரும்! இதுவரை நீங்கள் எந்த கேள்விக்கும் ஒழுங்காக பதில் சொல்லவில்லை என்பதை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக