ஞாயிறு, 11 டிசம்பர், 2011

குரானா? இல்லை குரான்களா?





இஸ்லாமிய மத பிரச்சாரகர்களால் ஆணித்தரமாக கூறப்படும் இன்னொரு விஷயம் எங்கள் மத புத்தகம் காலம் காலமாக மாறாமல் அப்படியே இருக்கிற்து.
இறைவனால் வழங்கப்ப்ட்ட முந்தைய வேதங்கள் எல்லாம் மாறி விட்டன.இது இறுதி வேதம் என்பதால் இறைவனால் பாதுகாக்கப் படுகிறது. இந்த கூற்றுகளை இப்பதிவில் ஆராய்வோம்.
___________
இஸ்லாமியர்களின் குரான் வரலாறு

1.ஜிப்ரீல் என்னும் வானவர் திரு முகமதுக்கு 610 ல் இருந்து 632 வரை இறை செய்தி வழங்கினார்.முகமது எழுதப் படிக்க தெரியாதவர்.ஜிப்ரீல் சொன்னதை ஞாபகத்தில் வைத்து தன்னை பின் பற்றியவர்களுக்கு கூறி அவர்களையும் மனன்ம் செய்ய வைத்தார்.குரான் வசனங்கள் வெளிப்படும்போதெல்லாம் அதனை சிலர் தோல் சுருள்,எலும்புகள்,தகடுகள் போன்றவற்றில் எழுதி வைத்தனர்.

2. முகம்துக்கு பிறது அபு பக்கர் ,உமர்,உதுமானால் குரான் மன‌னம், செய்த எழுதி வைத்தவர்களிடம் இருந்து பெற்று ஒரே புத்தகமாஅக தொகுக்கப் பட்டது.

3.  அந்த புத்தகம்தான் உலக முஸ்லிம்கள் அனைவராலும் இன்று வரை பின் பற்ற‌ப் பட்டு வருகிறது.
__________

மேலே கூறிய விவரங்களின் நமபகத்தன்மை குறித்து வரும் பதிவுகளில் ஆராய்வோம். இந்த ஹதிதுகள்(புஹாரி) மேலே கூறிய கருத்துகளை பிரதி பலிக்கிறதா என்பதை உங்கள் கருத்துக்கே விட்டு விடுகிறேன்.
_______________

4986. (வேத அறிவிப்பை எழுதுவோரில் ஒருவராக இருந்த) ஸைத் இப்னு ஸாபித் அல் அன்சாரி(ரலி) கூறினார் 
யமாமா போர் நடைபெற்ற பின் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி), எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்து வரச் சொன்)னார்கள். (நான் சென்றேன்.) அங்கே அவர்களுடன் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) கூறினார்: உமர்(ரலி) என்னிடம் வந்து, 'இந்த யமாமா போரில் ஏராளமான குர்ஆன் அறிஞர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். (இறை மறுப்பாளர்களுடன் போர் நடக்கும்) பல்வேறு இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டு, அதனால்குர்ஆனின் பெரும்பகுதி (நம்மைவிட்டுப்) போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன். (எனவே,) தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்று சேர்க்க உத்தரவிட வேண்டுமென நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நாம் எப்படிச் செய்வது?' என உமர் அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது) நன்மை(யான பணி)தான்' என்று கூறினார்கள். இதற்காக என் மனத்தை அல்லாஹ் விரிவாக்கும் வரை இது விஷயத்தில் (தொடர்ந்து) அவர்கள் என்னிடம் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். (முடிவில்) உமர் அவர்கள் கருதியதை(யே) நானும் (பொறுத்தமானதாகக்) கண்டேன். (இதை அபூ பக்ர் அவர்கள் என்னிடம் தெரிவித்தபோது உமர்(ரலி) ஏதும் பேசாமல் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு அருகில் அமர்ந்துகொண்டிருந்தார்கள்.) .

(பிறகு) அபூ பக்ர்(ரலி) (என்னிடம்) '(ஸைதே!) நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும்) சந்தேகப்படமாட்டோம். நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக 'வஹீ' (வேத வசனங்களை) எழுதக்கூடிய வராயிருந்தீர்கள். எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து(ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள்' என்று கூறினார்கள்.அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது. குர்ஆனை ஒன்றுதிரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி) தான்' என்று பதிலளித்தார்கள். இதையே அன்னார் என்னிடம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். முடிவில் எதற்காக அபூ பக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். (குர்ஆனை ஒன்றுதிரட்ட முன் வந்தேன்.) எனவே, (மக்களின் கரங்களிலிருந்த) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை போPச்ச மட்டைகள், ஓடுகள்மற்றும் (குர்ஆனை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகளிலிருந்து திரட்டினேன். (இவ்வாறு திரட்டியபோது) 'அத்தவ்பா' எனும் (9 வது) அத்தியாயத்தின் கடைசி (இரு) வசனங்களை அபூ குஸைமா அல் அன்சாரி(ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன்; அவரல்லாத வேறெவரிடமிருந்தும் இதனை நான் பெறவில்லை. (அவை:) 'உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் சிரமமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்களின் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கிறார். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கிறேன். மேலும், அவன் மகத்தான அரியாசனத்தின் அதிபதியாயிருக்கிறான்.' (திருக்குர்ஆன் 09:128, 129) 
(என் வாயிலாக) திரட்டித் தொகுக்கப்பட்ட குர்ஆன் பிரதிகள் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்(து வந்)தது. பின்னர் (கலீஃபாவான) உமர்(ரலி) அவர்களிடம் அவர்களின் வாழ்நாளில் இருந்தது. (அவர்களின் இறப்பிற்குப்) பிறகு உமர்(ரலி) அவர்களின் புதல்வி ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் இருந்தது. 
Volume :5 Book :66
_____________
4984. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் 
(மூன்றாவது கலீஃபா) உஸ்மான்(ரலி) (நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஹஃப்ஸா(ரலி) வசமிருந்த குர்ஆன் பதிவுகளை வாங்கி வரச்செய்து), ஸைத் இப்னு ஸாபித், ஸயீத் இப்னு ஆஸ், அப்துல்லாஹ் இப்னு ஸுபைர், அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம்(ரலி) ஆகியோரை (அழைத்து வரச்செய்து அவர்களிடம்) அவற்றை ஏடுகளில் பிரதியெடுக்கப் பணித்தார்கள். மேலும், உஸ்மான்(ரலி) (அன்சாரியான ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களைத் தவிர இருந்த குறையுயரான மற்ற மூவரிடமும்), 'நீங்கள் மூவரும் ஸைத் இப்னு ஸாபித்தும் குர்ஆனின் ஏதேனும் ஓர் அரபி மொழி (எழுத்திலக்கணம்) விஷயத்தில் கருத்து வேறுபட்டால், குறையுயரின் மொழி வழகம்லேயே அதைப் பதிவு செய்யுங்கள்! ஏனெனில், குர்ஆன் குறையுயரின் மொழி வழக்கில்தான் அருளப்பெற்றது' என்று கூறினார்கள். அம்மூவரும் அவ்வாறே செய்தனர். 
Volume :5 Book :66
___________________

4987. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் 
ஹுதைஃபா யமான்(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான்(ரலி), அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றிகொள்வதற்கான போரில் கலந்துகொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்தார்கள். ஹுதைஃபா(ரலி) அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்துவேறுபாடுகொண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனவே, ஹுதைஃபா(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம், 'யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களின் வேதங்களில்) கருத்து வேறுபாடுகொண்டது சூபால் இந்தச் சமுதாயமும் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே!' என்று கூறினார்கள். எனவே, உஸ்மான்(ரலி) (அன்னை) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் ஆளனுப்பி 'தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள்! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம்' என்று தெரிவித்தார்கள். 
எனவே, ஹஃப்ஸா(ரலி) தம்மிடமிருந்த குர்ஆன் பதிவை உஸ்மான்(ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி), ஸயீத் இப்னு ஆஸ்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம்(ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். மேலும், உஸ்மான்(ரலி) (அந்த நால்வரில்) குறையுக் குழுவினரான மூவரை நோக்கி, 'நீங்களும் (அன்சாரியான) ஸைத் இப்னு ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபட்டால் குறையுயரின் (வட்டார) மொழிவழககுப்படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறையுயரின் மொழிவழக்குப்படியே இறங்கிற்று' என்று கூறினார்கள். அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள். (ஹஃப்ஸா(ரலி) அவர்களிடமிருந்த) அந்தக் குர்ஆன் பதிவை பல பிரதிகளில் படியெடுத்தார்கள். பிறகு உஸ்மான்(ரலி) அந்தப் பிரதியை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுவல்லாமல் (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்து விடும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். 
Volume :5 Book :66
__________________

4989. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) கூறினார் 
(கலீஃபா) அபூ பக்ர்(ரலி) எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்து வரச் சொன்)னார்கள். (நான் அவர்களிடம் சென்றேன். என்னிடம்) அவர்கள் 'நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்ற 'வஹீ' (வேத வசனங்)களை எழுதிவந்தீர்கள். எனவே, குர்ஆன் வசனங்களைத் தேடுங்கள்!' என்று கூறினார்கள். எனவே, நான் குர்ஆன் வசனங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டேன். இறுதியாக 'அத்தவ்பா' எனும் (9 வது அத்தியாயத்தின் கடைசி இரண்டு வசனங்களை அபூ குஸைமா அல்அன்சாரி(ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன். அவரல்லாத வேறு எவரிடமும் அவற்றை நான் காணவில்லை. (அவ்விரு வசனங்களாவன:) 'உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குச் சிரமமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்களின் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கிறார். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வேறு இறைவன் யாருமில்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கிறேன். 
மேலும், அவன் மகத்தான அரியாசனத்தின் அதிபதியாயிருக்கிறான். '(திருக்குர்ஆன் 09:128, 129)13 
Volume :5 Book :66
_________________

2807. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.
நான் திருக்குர்ஆனைப் பல ஏடுகளில் பிரதியெடுத்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்த, 'அல்அஹ்ஸாப்' அத்தியாயத்தைச் சேர்ந்த இறைவசனம் ஒன்று (அதில்) இல்லாதிருப்பதைக் கண்டேன். நான் அதை குஸைமா இப்னு ஸாபித் அல் அன்சாரீ(ரலி) அவர்களிடம் தான் பெற்றேன். (ஒரு வழக்கின் போது) அவரின் சாட்சியத்தை இரண்டு மனிதர்களின் சாட்சியத்திற்குச் சமமாக நபி(ஸல்) அவர்கள் கருதியிருந்தார்கள். அந்த இறைவசனம் இதுதான்:
அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை மெய்ப்படுத்திவிட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர். அவர்களில் சிலர் (இறை வழியில் மரணமடைய வேண்டும் என்ற) தம் இலட்சியத்தை நிறைவேற்றிவிட்டார்கள். அவர்களில் சிலர் (அதை நிறைவேற்றத் தருணம்) எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். (திருக்குர்ஆன் 33:23) 


6830. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
........................
.............................
அப்போது உமர்(ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்தார்கள். பாங்கு சொல்பவர் பாங்கு சொல்லி மெளனமானதும் உமர்(ரலி) அவர்கள் எழுந்து இறைவனை அவனுக்குத் தகுதியான பண்புகளைக் கூறி புகழ்ந்தார்கள். பிறகு, 'நான் (இன்று) எதைச் சொல்ல வேண்டுமென்று ஏற்படுத்தப்பட்டுள்ளதோ அதை நான் உங்களுக்குச் சொல்லவிருக்கிறேன். இது என் இறப்புக்கு சமீபத்திய பேச்சாக இருக்கக்கூடும்; (உறுதியாக) எனக்குத் தெரியாது. இதை (கேட்டு) விளங்கி நினைவில் நிறுத்திக் கொள்கிறவர் தம் வாகனம் செல்லும் இடங்களிலெல்லாம் இதை எடுத்துரைக்கட்டும்! இதை(ச் சரியாக) விளங்க முடியாது என அஞ்சுகிற (அவர் மட்டுமல்ல் வேறு) யாரும் என் மீது பொய்யுரைப்பதை நான் அனுமதிக்கமாட்டேன்' (என்று கூறிவிட்டுப் பின்வருமாறு பேசினார்கள்:)
நிச்சயமாக அல்லாஹ், முஹம்மத்(ஸல்) அவர்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பினான். மேலும், அவர்களுக்கு குர்ஆன் எனும்) வேதத்தையும் அருளினான். அல்லாஹ் அருளிய (வேதத்)தீல் கல்லெறி தண்டனை (ரஜ்கி) குறித்த வசனம் இருந்தது. அதை நாங்கள் ஓதியிருக்கிறோம். அதைப் புரிந்து மனனமிட்டுமிருக்கிறோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மண முடித்தவர் விபச்சாரம் புரிந்தால் அவருக்குக்) கல்லெறி தண்டனை (ரஜ்கி) நிறைவேற்றியுள்ளார்கள். அவர்களுக்குப் பிறகு நாங்களும் அந்தத் தண்டனையை நிறைவேற்றியுள்ளோம். காலப்போக்கில் மக்களில் சிலர் 'அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவேதத்தில் கல்லெறி தண்டனை குறித்த வசனத்தை நாங்கள் காணவில்லை' என்று கூறி, இறைவன் அருளிய கடமை ஒன்றைக் கைவிடுவதன் மூலம் வழி தவறிவிடுவார்களோ என நான் அஞ்சுகிறேன். மணமுடித்த ஆணோ, பெண்ணோ விபசாரம் புரிந்து அதற்கு சாட்சி இருந்தாலோ, கர்ப்பம் உண்டானாலோ, ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது இறை வேதத்தில் உள்ளதாகும். பிறகு, நாங்கள் ஓதிவந்த இறைவேதத்தில் இதையும் ஓதி வந்தோம்: உங்களுடைய (உண்மையான) தந்தையரைப் புறக்கணித்து(விட்டு வேறொரு வரை தந்தையாக்கிவிடவேண்டாம். அவ்வாறு உங்கள் தந்தையரைப் புறக்கணிப்பது நன்றி சொல்லலாகும்.
அறிந்துகொள்ளுங்கள்:
....................................

Volume :7 Book :86
இங்கே நாம் சொல்வது இபோது உல்க மக்கள் அனைவரும் ஒரே குரானையே அதாவது எல்லா உலகில் பயன்படுத்தப் படும் குரான்களும் ஒரு புள்ளி ,கோடு கூடமாறாமல் அப்படியே ருக்கிறது என்பது தவறு என்பதை மட்டும்தான்.  
உதுமான் மற்ற குரான்களை அழித்துவிட உத்தரவிட்டார் என்பதை இந்த ஹதிது கூறுகிறது.
_________

உதுமான் மற்ற‌ பிரதிகளை அழிக்க உத்தரவிட்டதின் காரணம் என்ன? 
பிற குரான் பிரதிகள் உதுமான் குரானில் இருந்து வேறுபட்டு இருந்திருக்க வேண்டும். இந்த ஹதிதுகளை பற்றி நிறைய விவாதிக்க முடியும் என்றாலும் நான் எனது கருத்துகளாக எதையும் கூறுவதை விட உங்களுக்கு தகவல்கள் அளித்து உங்களுக்கு சரியென்று படும் கருத்தையெ ஏற்றுக் க்ள்ளுமாறு கூறுகிறேன்.
உதுமான் குரான் ஹாஃப் குரான் என்று அழக்கப் படுகிறது இந்தியாவில் மற்றும் உலகின் பல பகுதிகளில் இப்பிரதியே பயன் படுத்தப் படுகிறது.
இன்னும் சில குரான்கள்களை அழிக்காமல் பயன் படுத்தப் படுகின்றன என்றால் இந்த உதுமான் குரானில் இருந்து வேறு பட்ட குரான்கள் இப்போதும் உலகில் பயன் படுத்தப் பட்டு வருகின்றன.அதனை பற்றிய ஆய்வு செய்த திரு ஆலன் அட்ரியம் ப்ராக்கட்(Adrian Alan Brockett) என்பவரின் ஆய்வுக் கட்டுரையும் வார்ஸ் குரான் எனப்படும் ஒரு குரான் மின் பிரதியும் உங்களுக்கு அளிக்கிறேன்.





.இந்த வார்ஸ் குரான் பற்றி ஆங்கிலத்தில் வந்த ஒரு கட்டுரையும் அதற்கு மறுப்பாக இஸ்லாமிய அறிஞர்கள் அளித்த விளக்கத்தின் சுட்டியும் அளிக்கிறேன்.



இந்த ஹாஃப் மற்றும்  வார்ஸ்  குரான்கள் பற்றியுமவைகளில் உள்ள  வித்தியாசங்கள் பற்றி ஒரு இஸ்லாமிய அறிஞர் எழுதிய கட்டுரை இது. ஆனால் இது குரான் முட்டும் என்ற இஸ்லாமிய பிரிவை சேர்ந்த அறிஞர்.(இவர்களை பற்றி தனி பதிவு இடுவேன்)



இந்த வார்ஸ் குரான் வட ஆப்பிரிக்க நாடுகளில்(அல்ஜீரியா,சுடான்,லிபியா) போன்ற நாடுகளில் இன்றும் பயன் படுத்தப் படுகிறது.இந்த வித்தியாசமான வேத மூல பிரதிகள் எல்லா மதங்களிலும் உண்டு.ஒரு கருத்து பரவும் போது அது பல வித்தியாசமான் மாற்றங்களை அடைவது வரலாற்றில் மிக இயல்பான செயல்.

யேமன் நாட்டின் சானா என்னும் இடத்தில் ஒரு வழிபாட்டு இடத்தை மராமத்து செய்த போது அங்கு பல பழைய குரான் பிரதிகள் கிடைத்தன.இது குறித்து ஒரு ஆய்வாளர் ஜெரார்ட் புய்ன் புகைப்ப்ட பிரதி எடுத்து ஆய்வு செய்கிறார்.மதக் கட்டுப்பாடு காரணமாக இது குறித்து ஒரு விஷயமும் வெளி வரவில்லை.யெமன் அரசு இது குறித்து மௌனம் சாதிக்கிறது.


மதத்தை அதில் பிறந்ததற்காகவோ அல்லது ஒரு பிரச்சாரகரின் கருத்துகளை முழுமையாக ஏற்றுக் கொண்டோ அதில் சொல்லப் பட்டது எல்லாமே சரி ,அதனை காப்பாற்ற எதையும் செய்வேன் என்ற மன்ப் போக்கை எல்லாரும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே நமது விருப்பம். மதத்தை பற்றி தெரிந்து கொள்ளவும் அதில் உள்ள நாகரிகமில்லாத விஷ்யங்களை ஒதுக்கி விடவுமே இப்பதிவுகளை எழுதுகிறேன்.

இப்பதிவில் கூறப்பட்டவற்ரை ஏதேனும் ஒரு பிரச்சாரகர் கூறியிருந்தால் எவரும் எங்கள் புத்தகம் சர்வ ரோஹ நிவாரணி என்றும் ,மதம் எங்கள் உயிரிலும் மேலானது என்று கூற மாட்டார்கள்.

     





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக