வியாழன், 15 டிசம்பர், 2011

புத்தம் சரணம் கச்சாமி...சங்கம் சரணம்...Photobucket - Video and Image Hosting

30 லட்சம் இந்துக்கள் புத்த மதத்திற்கு மாறினர்.. இது தூய மார்க்கத்தை தழுவிய இறைநேசன் என்ற நண்பருக்கு மிகுந்த மகிழ்சியை அளித்துள்ளது. இதை ஒரு பதிவாக போட்டு என் பெயரையும் அதில் ஈடுபடுத்தி என் கருத்து என்ன என் கேட்டிருக்கிறார்.

என் கருத்து :

தலித்துகள் நல்ல காரியம் செய்தார்கள். இந்தியாவில் தோன்றிய புத்த மதத்திற்கு மாறினார்கள். நல்ல வேளை கொள்ளைகாரர்களும் வியாபாரிகளும் கொண்டுவந்த ஆப்ரகாமிய மதங்களுக்கு மாறவில்லை

அறிவாளி அரசனால் தோற்றிவித்த புத்த மத வளர்ச்சிக்கு உபயோகமாய் இருப்பார்கள்.

நல்ல தியானம் செய்து அறிவாளி ஆவார்கள்.

பெண் விடுதலைக்கு வழி வகுப்பார்கள்.

அன்பை பேணி அமைதி காப்பார்கள்.

புலால் உணவை தவிர்த்து உடல் நலத்தை பேணுவார்கள்.

இந்தியாவில் புத்த மத மக்கள் எண்ணிக்கை அதிகமாகி திபெத்தில் நடக்கும் சீன அடக்கு முறையை எதிர்க்க வழிவகுப்பார்கள்.

இலங்கையின் புத்த பிக்குகளை கேட்டுக் கொண்டு அங்கே தமிழர்கள் சுய மரியாதையிடன் வாழ வழி வகுப்பார்கள்.

புத்த மதம் பிடிக்கவில்லை என்றால் திரும்பவும் இந்து மதத்திற்கு வரவும் வழியிருக்கிறது அவர்களுக்கு

இப்படி பல சமூக மற்றும் அரசியல் ஆதாயம் இந்தியாவிற்கு இருப்பதால், அவர்கள் புத்த மதத்திற்கு மாறியதில் எனக்கு சந்தோசமே

இப்போது என் கேள்வி:

ஒரு இந்து முஸ்லிமாக மாறி.... பிடிக்கவில்லையென்றால் திரும்பவும் பகிரங்கமாக இந்துவாக மாற முடியுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக