சனி, 17 டிசம்பர், 2011

பெண் பூப்பெய்ததாக விழா கொண்டாடும் மானங்கெட்டவர்களே இதை கொஞ்சம் படியுங்கள்


 


நமக்கு வருகின்ற அழைப்புகளில் பெரும்-பாலும், உறவினர் வீட்டுத் திருமணங்களின் அழைப்பிதழாக இருக்கும். அதற்கடுத்து, பூப்புனித நன்னீராட்டு விழா அழைப்-பிதழ்களாகத்தான் இருக்கும். போக்குவரத்து வசதிகள் இல்லாத காலக்கட்டத்தில் தோன்றிய ஒரு அநாகரிகமான விழாவாகவே இதை சொன்னாலும் குற்றமில்லை. வசதி வாய்ப்-புக்கள் குறைந்திருந்த காலக் கட்டத்தில் என் மகள் பருவமடைந்து விட்டாள், திருமணத்-திற்குத் தயார் எனும் விளம்பரப்படுத்தும், ஒரு விழாவாகவே செய்யப்பட்ட ஒரு குடும்ப விழா இது. காலங்கள் மாறி, அறிவியல் ஆட்சி செலுத்தும் இன்றைய காலக் கட்டத்திலும் இவ்விழா கொண்டாடப்படுவதென்பது மகளிரை இழிவு செய்யும் நிகழ்வேயாகும். இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு-கூட பெண் பருவமடைந்து விட்டால், பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். வாசலில் நிற்க விடமாட்டார்கள். பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்குக்காலத்தில் சொந்த வீட்டிலேயே, ஒரு பாயும், அலுமினியத் தட்டும் கொடுத்து, மூலையில் உட்கார வைத்து விடுவார்கள். அவர்களை யாரும் தொடக் கூடாது. அவர்களும் யாரையும் தொடக் கூடாது என்ற ஒருவகை தீண்டாமை!

சற்றேறத்தாழ சொந்த வீட்டிலேயே ஒரு பிச்சைக்காரியைப் போல பெண்கள் நடத்தப்-படும் நிலையெல்லாம் இருந்தது. ஏறக்குறைய வீட்டையே பெண்ணுக்கு, சிறையாக மாற்றி விடும் அவல நிலையெல்லாம் இருந்தது. திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் தான் இவ்வளவு அவல நிலையும் ஒழிந்து, பெண்கள் எல்லாத் துறைகளிலும் சாதனைகளைப் புரிந்து வருகின்றனர். ஆணுக்கும், பெண்ணுக்-கும் உடல் ரீதியாக ஒரு சில வித்தியாசங்கள் தவிர, வேறு வேறுபாடு இல்லை என பெரியார் முழங்கினார். அதன் விளை-வையன்றோ இன்று மகளிர் அறுவடை செய்து வருகின்றனர். இயல்பாக நிகழும் இந்தப் பருவமடைதலையும், மாதவிலக்கையும் பற்றிப் பார்ப்போம்.
பெண்கள் பிறக்கும் பொழுதே சினை முட்டைகளை உருவாக்கும் கருப்பையுடனும், கர்ப்பப்பையுடனும் தான் பிறக்கின்றனர். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பை (Ovaries) செயல்படாமல் இருக்கும். 11 வயதிலிருந்து 15 வயதிற்குள் பெண் பருவடை-கிறாள். மூளையின் அடிப்பகுதியில் உள்ள பிட்யூட்டரி (Pitutary) நாளமில்லா சுரப்பி-களிலிருந்து சுரக்கும் கருப்பை தூண்டும் சுரப்பு (Follicular Stimulating Hormone) கள் சுரந்து கருப்பையில் உள்ள சினை முட்டையின் (Ovum) வளர்ச்சியைத் தூண்டுகிறது. இந்தச் சுரப்பு, பெண்களுக்கு எட்டாவது வயதிலேயே சுரக்கத் துவங்கினாலும் ஏறக்குறைய இரண்டு மூன்று ஆண்டுகளில் தான் கருப்பையில் உள்ள சினை முட்டை வளர்ச்சி தூண்டப்படுகிறது. அடிப்படையில் சினை முட்டை வளர்ச்சி-யடைந்த நிலையில் உள்ள பொழுது, ஆண் உற்பத்தி அணு (Sperm) இணைந்தால், கருத்தறித்தல் நிகழ்ந்துவிடும். பெண் கருத்-தறிக்கும் இந்த நிலையில், கருத்தரித்தல் நிகழாவிட்டால் இரத்தப் போக்கு ஏற்படும். முதல் முதல் ஏற்படும் இந்த இரத்தப் போக்-கையே பெண் பருவமடைந்ததாக குறிப்-பிடுகிறோம்.
ஆண் கருவோடு சேர்ந்து கருவுறும் சினை முட்டை, கருக்குழாயிலிருந்து (Fellopian Tubes) கர்ப்பப்பைக்கு வரும். அங்கு கர்ப்பப்பையின் உட்சுவரில் பதிந்து, மெதுவாகக் குழந்தையாக வளரத்துவங்கும் அப்படி கருவுறுதல் நிகழா-விடில் கர்ப்பப் பையிலிருந்து இரத்தப் போக்கு ஏற்படும். இதையே மாத விலக்கு என்கிறோம். கருப்பைத் தூண்டும் சுரப்பு, கருப்பையை தூண்டுகிறது. கருப்பையில் ஈஸ்ட்ரஜன், புரொஜெஸ்ட்ரான் (Oestrogen, Progestron) என்ற சுரப்புகள் சுரக்கின்றன. இவை கரு முட்டையின் வளர்ச்சிக்குக் காரணமாகின்றன.
சாதாரணமாக 28 நாட்களுக்கு ஒரு முறை நிகழும் மாதவிலக்கு சுழற்சி, சிலருக்கு 30 நாட்கள், 35 நாட்கள் என்றுகூட நிகழும். 28 நாட்களுக்கு ஒரு முறை நிகழும் இந்த சுழற்சி, மாத விலக்கின் முதல் நாளிலிருந்து கணக்-கிடப்படும். மாத விலக்கு சுழற்சியின் முதல் நாளிலிருந்து கருப்பையில் மாற்றங்கள் நிகழும். கருப்பப்பையின் உட்சுவரின் (Endometrium) செல்கள் சிதிலமடைவதால் உதிரப் போக்கு ஏற்படும். கருப்பப்பை சுருங்கும். ஏற்பட்ட உதிரப்போக்கு வெளியேறும். கர்ப்பப்பை சுருங்குவதால்தான், சில பெண்களுக்கு மாத-விலக்கின் போது வயிறு வலி உண்டாகிறது. மாத விலக்கு சாதாரணமாக 3 முதல் 5 நாட்களுக்கு நீடிக்கும். மாத விலக்கு முடிந்த நாளிலிருந்தே கருப்பப்பை அடுத்த சுழற்சிக்கு தயாராகும். கருப்பையில் (Ovaries) சினை முட்டை வளரும். பருவமடையும் பொழுது 3,00,000 முதல் 4,00,000 கருப்பைகளும், முட்டைகளும் இருந்தாலும், மாதம் ஒரு முட்டை தான் வளர்ச்சியுற்று, கருப்பையை கிழித்துக் கொண்டு, கருக்குழாயை அடையும். அதே நேரத்தில் கருவைத் தாங்கும் நிலையை கருப்பப்பையின் உட்சுவர் அடையும். கருப்பப்-பையின் உட்சுவரின் செல்கள் வளர்ந்து கருப்பப்-பையின் உட்சுவர் கெட்டிப்படும். ஒரு வேளை ஆண் அணுவோடு சேர்ந்து கருத்தரித்-தால் கருவுற்ற சினைமுட்டை கருப்பைக்கு வந்து, கருப்பையின் உட்சுவரில் பதியும் வண்ணம், உட்சுவர் வளர்ச்சியடையும். சாதாரண நிலையில் மாதவிலக்கு ஏற்பட்டு 14-ஆம் நாள் சினை முட்டை முழு வளர்ச்சி அடைந்து கருக்குழாயை அடையும். அந்த நேரத்தில் உடல் உறவு ஏற்பட்டால் கருவுறுதல் நிகழ்ந்து விடும். கரு முட்டையின் வாழ்க்கை 12 மணி நேரம்தான். ஆனால் விந்தில் இருக்கும் ஆண் கருவின் வாழ்க்கை 24 முதல் 48 மணி வரை. அதனால் தான் மாதவிலக்கு நிகழ்ந்து 10 முதல் 20 நாள் வரை உடலுறவு கொள்ளும்-பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் கருவுறும் வாய்ப்புகள் அதிகம். மருத்துவர்கள் மாதவிலக்கு துவங்கிய நாளை ஒன்றாம் நாளாக கணக்கிட்டு, மாதவிலக்கு முடிந்த நாளிலிருந்து, பத்தாம் நாள் வரையிலும், மீண்டும் இருபது முதல் இருபத்து எட்டாம் நாள் வரையிலும், பாதுகாப்பான நாட்களாக (Safe Perios) கூறுவர். பத்து முதல் இருபது நாட்களை கருவுறும் நாட்களாக (Risk Period) கணக்கிடுவர்.
கருவுறும் திறனையடைந்தும், முழுமையான வளர்ச்சியடைந்தும் உள்ள கருமுட்டையில், கருவுறும் தேவை நிகழாவிட்டால்,கரு சிதையத் தொடங்கும். கருவுறாத முட்டை, கருப்பையில் ஒட்டாது. அதனால் முதல் 14 நாட்களில் கருவைத் தாங்கும். வளர்ச்சியுற்ற கருப்பையின் உட்சுவர் சிதைந்து, பழைய நிலையை அடையும். இந்த சிதைந்த நிலை 14 நாட்களில் முற்று பெற்று, சிதைவடைந்த கருப்பையின் உட்சுவரிலிருந்து இரத்தப் போக்கு ஏற்படும். இதுதான் மாதவிலக்கு.
சாதாரணமான, இயல்பான ஒரு நிகழ்வு இது. சிறுநீர் கழிப்பது போல், மலம் கழிப்பது-போல், கரியமில வாயுவை (ஊடிசடி - னு- டீஒனைந) வெளியேற்றுவதுபோல் ஒரு நிகழ்வுதான். கரியமில வாயுவை, நம் நுரையீரல் நிமிடத்திற்கு இருபது முறை வெளியேற்றுகிறது. பெருங்-குடல் மலத்தை ஒரு நாளைக்கு, ஓரிரு முறை வெளியேற்றுகிறது. சிறுநீரகம், சிறுநீரை ஒரு நாளைக்கு, 4,5 முறை வெளியேற்றுகிறது. கருப்பை சிதைவுற்ற செல்களை மாதத்திற்கு ஒரு முறை இரத்தப் போக்காக வெளியேற்று-கிறது. மற்றதற்கெல்லாம் நாம் என்ன விழாவா கொண்டாடுகிறோம். பருவமடையும் நிகழ்வு-க்கு மட்டும் எதற்கு இவ்வளவு பெரிய ஆர்ப்-பாட்டம்? பெண்மையை இழிவுபடுத்தும் இந்த விழாவை பெண்களே அதிக ஆர்வத்துடன் முன் நின்று நடத்துவதுதான் மிக மிகக் கேவலமாகத் தெரிகிறது. இனியாவது இது-போன்ற பெண்களைக் கொச்சைப்படுத்தும், பெண்களைக் கேவலப்படுத்தும் இவ்விழா-வினைத் தவிர்ப்போம்! தடுப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக