சனி, 17 டிசம்பர், 2011

செயற்கை முறையில் ஓ நெகட்டிவ் இரத்தம்.

 
இரத்தம் என்பது மருத்துவ உலகில் இன்றியமையாத ஒன்று. குறிப்பாக சத்திர சிகிச்சைகளின் போது இவற்றின் தேவை அதிகம். இப்போது வரை மக்கள் வழங்கும் குருதிக் கொடை அல்லது இரத்த தானத்தை நம்பியே இரத்த வங்கிகளும் மருத்துவ உலகும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் ஏதேனும் மாறுதலை உருவாக்க முடியுமா என்று சிந்தித்த பிரித்தானிய ஆய்வாளர்கள் IVF முறையில் உருவாக்கப்படும் மனித முளையத்தில் இருந்து பெறப்படும் மூலவுயிர்க்கலங்களை (stem cells) பாவித்து செயற்கை முறையில் இரத்தத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கவுள்ளனர்.

ஏலவே அமெரிக்க நிறுவனம் ஒன்று இந்த வழிமுறையில் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களான செங்குருதிக் கலங்களை (Red blood cells) பெரும் எண்ணிக்கையில் உற்பத்தி செய்து வெற்றி கண்டுள்ளன.

இந்த ஆய்வு பூரண வெற்றியடைந்து செயற்கை முறையில் இரத்த வகை ஓ நெகட்டிவ் (O negative - சர்வதேச வழங்கி) இரத்தத்தை மருத்துவ உலகில் பாவனைக்கு விட 5 தொடக்கம் 10 ஆண்டுகள் காலமாவது பிடிக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஓ நெகட்டிவ் இரத்த வகைகளைக் கொண்ட மக்கள் மொத்த சனத்தொகையில் வெறும் 7% ஆக மட்டுமே உள்ளனர். இவர்களின் குருதியை எவருக்கும் ஒவ்வாமைப் பயமின்றி வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமன்றி இந்த ஆய்வு முறையில் உருவாக்கப்படும் செயற்கை இரத்தம் இயற்கையில் மனிதர்களிடமிருந்து பெறப்படும் இரத்தத்தை விட தொற்றுக்கள் குறைந்ததாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதற்கிடையே இவ்வகையான ஆய்வுகளில் மனித முளையங்கள் உருவாக்கப்பட்டு மூலவுயிர்கலங்கள் பெறப்பட்ட பின் அழிக்கப்படும் நிலை காணப்படுவதால் பல தொண்டு அமைப்புகள் இவ்வகையான ஆய்வுகளை எதிர்க்கவும் விளைகின்றன.செயற்கை முறையில் இரத்தம் உருவாக்கும் வழிமுறை.

1. Embryo created from IVF is tested for O-negative blood group, then allowed to develop for several days until stem cells can be extracted

2. Stem cells are cultured in laboratory with nutrients to stimulate red blood cell creation

3. Nuclei are removed in final stage to produce oxygen-carrying mature blood cells. Trillions of these will be needed to build up a blood bank

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக