சனி, 17 டிசம்பர், 2011

அகிலமா கருந்துளையா முதல் வந்தது..?! விடை இங்கு.

 
முட்டையா.. கோழியா முதல் வந்தது என்ற தர்க்க ரீதியான கேள்விக்கு விடை காண முடியாவிட்டாலும் கருந்துளையா (Black hole) அகிலமா (Galaxy) முதல் வந்தது என்ற கேள்விக்கு விண்ணியலாய்வாளர்கள் விடை கண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரண்டப் பெருவெடிப்புக்குப் (Big bang) பின்னர் அகிலம் ஒன்றுக்கான சுற்றயல் திண்மக் கூறுகள் தோன்ற முதலே அல்லது galactic bulge தோன்ற முதலே அகிலத்தின் மையத்தில் இருக்கும் கருந்துளை தோன்றி வளர்ந்து வந்திருக்க வேண்டும் என்று அதி நவீன ரேடியோ தொலைநோக்கிக் கருவிகள் கொண்டு நடத்தப்பட்ட விகித ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டி இருக்கின்றன.

எனினும் அகிலத்தின் கருந்துளைக்கும் bulge க்கும் இடையேயான செல்வாக்குகள் பற்றிய மேலதிக விபரங்கள் விண்ணியலாய்வாளர்களால் தொடர்ந்து கண்டறியப்பட வேண்டிய நிலையிலேயே இருக்கின்றன. அதற்கான மர்ம முடிச்சுக்கள் இன்னும் அவிழ்க்கப்படவில்லை.

மிக அண்மையிலேயே எமது பூமி இருக்கும் பால்வீதி அகிலத்தின் கருந்துளையின் அமைவிடம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்பது இங்கு நினைவு கூறத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக