வியாழன், 15 டிசம்பர், 2011

கடவுளே.....நீங்கள் நல்லவரா? கெட்டவரா?







ஒரு நாள் கடவுள் சிறிது களிமண்ணை எடுத்து மனிதன் போல் ஒரு உருவத்தை செய்தார், அந்த உருவத்துக்கு மென்மையான சுவாசத்தைத் தந்து அவனுக்கு உயிர் அளித்தார். அவனை ஆதாம் எனப் பெயரிட்டார். அவனுக்காக தோட்டம், மிருகங்கள், இத்யாதி..இத்யாதி வகைகளைப் படைத்துவிட்டு கடைசியாக ஏவாளைப் படைத்தார். இருவரிடமும் இத்தோட்டத்தில் உள்ள எல்லா மரங்களிலிருந்தும் பழங்களை உண்ணுங்கள் ஆனால் அந்த ஞானவிருட்சத்திலிருந்து மட்டும் பழங்களை உண்ணாதீர்கள் எனக் கூறி மறைந்து போனார்.

ஒரு நாள் சாத்தான் பாம்பு வடிவில் வந்து ஏவாளிடம் "கடவுள் எல்லா மரங்களின் கனிகளை உண்ணசொன்னரா? ஞானவிருட்சத்திலிருந்து மட்டும் பழங்களை உண்ணாதீர்கள் என்று சொல்லியிருப்பாரே? நான் சொல்கிறேன் அம்மரத்திலிருந்து பழங்களை சாப்பிட்டால் நீங்களும் ஞானம் பெற்று கடவுள் போல் ஆகிவிடுவீர்கள்" என உசுப்பேற்றிவிட்டு மறைந்து போனான். ஏவாளும் ஆதாமும் அந்த மரத்திலிருந்து கனிகளை உண்டு கடவுளிடம் சாபம் பெற்று சாவை சம்பளமாகப் பெற்றார்கள்.


அந்த பாம்பு ஆதாமிடம் சொல்லாமல் ஏன் ஏவாளிடம் சொல்லவேண்டும். ஆதாம் ஒரு ஆண்மகன். அவனிடம் இயற்க்கையாகேவே ஆணவமும் செருக்கும் இருக்கும். மேலும் செருக்கு உள்ள இடத்தில் வெற்றி அல்லது தோல்வி என்ற இரண்டு மட்டுமே சாத்தியம். உண்மையறிய அவன் மூர்க்கத்தனம் ஒரு தடையாய் இருக்கும். ஒரு பாம்பிடம் பேச அவன் ஆணவம் அவனுக்கு தடையாய் இருக்கும். ஏவாள் என்ற பெண்ணிடம் உண்மையறிய வேண்டும் ஒரு ஆவலும் மற்றவர் மனது புண்படுமே என்ற மனநிலை இயற்க்கையாகவே இருக்கும். அதானால்தான் பேசுவதற்க்கு அந்த பாம்பு ஏவாளைத் தேர்ந்தெடுத்தது.


ஒரு கொடிய தகப்பன்கூட தன் பிள்ளைகள் அறிவோடும் நீண்ட ஆயுளோடும் வாழ விரும்புவான். ஆனால் அந்த தந்தைக்கும் மேலான கடவுளோ தன் குழந்தைகள் ஞானம் பெறுவதையோ சாகாவரம் பெறுவதையோ விரும்பவில்லை. எங்கே எனக்கு போட்டியாக வந்துவிடுவான் என்ற பயத்தில் ஞானவிருட்ச்சதின் கனிகளை உண்ண அனுமதி மறுக்கிறான். மனிதன் ஞானம் பெற்று கடவுளைப் போல ஆகிவிட்டால் அங்கே கடவுளுக்கு வேலையில்லை. கடவுளேக்கே வேலை இல்லையென்றால் இந்த மதத்தலைவர்க்ளின் கதி என்ன? கோயில்கள்,சர்ச்கள், மசூதிகள், புண்ணியஸ்தலங்கள் யாருக்கு வேண்டும்?

சாத்தான் இருந்திருக்கவிட்டால் கூட மனிதன் தானாகவே ஒரு நாள் அக்கனிகளை உண்டு ஞானம் அடைந்திருப்பான். கடவுளே அப்பழங்களை உண்ணாதே என்று கூறிவிட்டானே. அடங்க மறுப்பவன் தானே மனிதன். ஒரு நாள் அத்துமீறி அக்கனிகளை உண்டு கடவுளுக்கு போட்டியாக வளர்ந்திருப்பான், உண்மையில் மனிதன் தெய்வமாவதற்க்கு தடையாய் இருந்த கடவுளே சாத்தான்


எனவே நான் கடவுளைக் கண்டால் கவுண்டமணி ஸ்டைலில் " கடவுளே..கடவுளே...நீங்கள் நல்லவரா? கெட்டவரா?" என்று கேட்பேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக