வியாழன், 15 டிசம்பர், 2011

அம்பேத்கர் சிந்தனைகள்


(இன்று அம்பேத்கருடைய 121வது பிறந்தநாள்)
யாகங்களில் பலியிடுவதை அங்கீகரிப்பது மதமாகாது.

எனக்கு எது அறிவூட்டுவதாக உள்ளதோ அதுதான் எனக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது.

எந்த மக்களிடையே நான் பிறந்தேனோ அந்த பட்டியல் சாதியினரின் மேம்பட்ட நிலைக்காக, சிறுவயது முதலே நான் என்னை அர்ப்பணித்துக் கொண்டேன்.

நமது வெளியுறவுத் துறை கொள்கையை நினைக்கும் போது பிஸ்மார்க்கும் பெர்னார்ட் ஷாவும் கூறியதை நான் நினைத்துப் பார்க்கிறேன். “அரசியல் என்பது லட்சியத்தை அடைவதற்கான பந்தய ஆட்டமல்ல; மாறாக அரசியல் என்பது சாத்தியக் கூறுகளை எய்தும் பந்தய ஆட்டமாகும்” என்று பிஸ்மார்க் கூறியுள்ளார். “நல்ல குறிக்கோள்கள் சிறந்தவைதான். ஆனால் அவை மிகவும் நல்லவையாக இருப்பது, பல நேரங்களில் ஆபத்தானவையாக இருக்கும் என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது’ என்று அண்மையில் பெர்னார்ட் ஷா கூறினார். உலகின் இரு பெரும் மேதைகள் கூறிய இந்த விவேகமிக்க கருத்துகளுக்கு முற்றிலும் எதிரானவையாக நமதுவெளியுறவுக் கொள்கை உள்ளது.

இஸ்லாமும் கிறித்தவமும் வெளிநாட்டிலிருந்து வந்த மதங்கள். அவை பார்ப்பனீயத்தை எதிர்க்க உருவான மதங்கள் அல்ல. ஆனால் பௌத்தம் பார்ப்பனியத்தை எதிர்த்தே உருவான மதம்

சமூக பொருளாதாரத் தளத்தில் இன்னும் எத்தனை நாளைக்கு நாம் சமத்துவத்தை மறுக்கப் போகின்றோம்? இதுபோன்ற மறுப்புகள் தொடர்ந்து நீடித்தால், அரசியல் ஜனநாயகம் வீழ்வதைத் தடுக்க முடியாது. இந்த முரண்பாடுகளை நாம் மிக விரைவில் களைந்தாக வேண்டும். இல்லையெனில், சமத்துவமின்மையால் அல்லுறும் அடித்தட்டு மக்கள் கடும் உழைப்பால் கட்டமைக்கப் பட்டுள்ள இந்த அரசியல் ஜனநாயகத்தையே தகர்த்துவிடுவார்கள். நாம் ஒரு தேசம் என்று நம்புவதே ஒரு போலித் தோற்றமாகும். பல்லாயிரக்கணக்கான சாதிகளாகப் பிரிந்து கிடக்கும்மக்கள், எப்படி ஒரு தேசமாக முடியும்? நாம் சமூக அளவிலும் மனதளவிலும் ஒரு தேசமாக இல்லை என்ற உண்மையை எவ்வளவு விரைவில் உணர்கிறோமோ, அந்த அளவிற்கு நல்லது.

இந்து மதம் பாசிச, நாசிச சித்தாந்தங்களைப் போன்ற ஓர் அரசியல் சித்தாந்தமாகும் என்பதையும், அது முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதையும் காங்கிரஸ் மறந்து விடுகிறது.

புனிதமற்ற விலங்குகளைத் தொடுவதை அனுமதிக்கும் ஒரு மதம் அதே சமயம் மனிதனுக்கு மனிதன் தொடுதல் கூடாது என்று தடுக்குமானால் அது மதம் அல்ல; மடமை.
கல்வி அறிவற்றவன் அதே நிலையில் இருக்க வேண்டுமென்றும் ஏழை ஏழையாகவே நீடிக்கவேண்டுமென்றும் வலியுறுத்துகின்ற மதம் மதமே அல்ல; அது ஒரு தண்டனை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக