ஆதியாகமத்தின் மூல மொழி ஹீப்ரு,அதில் இருந்தே பிற மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டது. நீங்கள் பார்க்கும் அனைத்து பைபிள்களிலும் இது மூல மொழியாகிய ஹீப்ருவில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டது என்று குறிப்பிட பட்டு இருக்கும். கிறித்தவர்க்ள் ஹீப்ரு மொழி கற்க வேண்டிய அவசியம் இருப்பதாக கருதுவது இல்லை ஆகவே மொழி பெயர்ப்புகளையும் அப்படியே புனித நூல்களாக கருதுகின்றனர்.ஆனால் மொழிபெயர்ப்புகளில் சில குழப்பங்கள் இருப்பதை மறைத்து மத கொள்கைகளுக்கு முரண்படாத வகையிலேயே மொழி பெயர்ப்பு செய்யப் படுகின்றது. இதனை விளக்க ஒரே ஒரு வசனத்தின் மொழிபெயர்ப்புகளை பற்றிய சிறு ஆய்வு.
.
கிறித்தவர்களின் வேதத்தின் முதல் வசனம் அனைவரும் அறிந்த ஒன்று
ஆதியாகமம் 1:1 ஆதியிலே தேவன் வானத்தையும் ,பூமியையும் சிருஷ்டித்தார்.
இந்த வசனம் பற்றிய ஒரு கட்டுரையில் கூறப் பட்ட விவரங்களை இப்பதிவில் கூறுகிறேன்.
கட்டுரையின் ஆசிரியர் திரு டேனியல் பெர்ரி பற்றி சிறு குறிப்பு.
டேனியல் பெர்ரி ஒரு கணிப்பொறி பேராசிரியர்.கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைகழகத்தில் க்ணிணி துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு மத புத்தகங்களை ஆரார்வதிலும் ஈடுபாடு உண்டு.இவர் யூத இனத்தில் பிறந்தவர். ஹீப்ரு மொழியில் புலமை பெற்றவர்.
இபோது பதிவின் கருத்துக்கு வருவோம்.இந்த ஆதியாகமம் 1.1 வசனம் ஹீப்ரு மொழியின் ஆங்கில எழுத்துகளில் இவ்வாறு குறிப்பிட படுகிறது.
1:1, b'reshit bara elohim et hashamayim v'et ha'aretz,
In the beginning, God created the heavens and the earth
இந்த முதல் வார்த்தையான ப்'ரேஷிட் என்கிற வார்த்தைக்கு ஆதியிலே என்பது அர்த்தமாக அனைத்து தமிழ் பைபிள்களிலும் குறிப்பிட பட்டு ஊள்ளது.
b'reshit -In the beginning-ஆதியிலே-ஆதி காலத்தில்
திரு டேனியல் பெர்ரி இது சரியான அர்த்தம் அல்ல இந்த வார்த்தைக்கு சிறிது வேறுபட்ட அர்த்தம் என்கீறார். அதாவது
b'reshit -In a beginning- ஒரு ஆதி காலத்தில்
ஒரு ஆதி காலம் என்றால் பல ஆதி(தொடக்க) காலங்கள் இருந்ததாக பொருள் விளங்குகிறது. இதை இன்னும் எளிதான மொழிபெயர்ப்பாக முந்தி ஒரு காலத்தில் என்று கூறலாம்.
___________
elohim-God(s)-தேவன்தேவர்கள்
பிறகு மூன்றாவது வார்த்தையான ஏலோஹிம் எனபதை சிறிது ஆராய்வோம்.தேவன் என்ற அர்த்தம் கூறப்படுகிறது. இது ஒரு பன்மை வார்த்தை,இதன் ஒருமை ஏல் என்பதாகும்.இயேசு ஏலீ,ஏலீ,லாமா சபக்தானி என்று கடவுளை கூப்பிட்டார் என்பதும் அனைவரும் அறிந்ததே.கடவுளை மரியாதை நிமித்தம் பன்மையில் அழைப்பதாக கூறுவதும் மதவாதிகளின் விளக்கங்களுல் ஒன்று.
கர்த்தர் என்று வரும் இடங்களில் எல்லாம் இந்த ஏலோஹிம் என்றா வார்த்தையே பெரும்பாலும் வருகிறது
ஆகவே இந்த முதல் வசனத்திற்கு இவ்வாறு பொருள்கள் கொள்ள இயலும்.
.
.
1.ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.(இப்போது இருப்பது).
2.ஒரு ஆதி காலத்தில் தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
(இறைவன் பல கால்ங்களில் படைத்தல்,காத்தல்,அழித்தல் செய்கிறார்)
3.ஆதியிலே தேவர்கள் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தனர்.
பல கடவுள்கள் சேர்ந்து ஒரே ஒரு முறை படைத்தனர்.
4..ஒரு ஆதி காலத்தில் தேவர்கள் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தனர்..
(பல கடவுள்கல் பல கால்ங்களில் படைத்தல்,காத்தல்,அழித்தல் செய்கிறார்கள்)
_____
இந்த வார்த்தை ஏல் என்பது ஹீப்ருவில் எழுதும்போது மாட்டின் தலை மற்றும் கோல்(தடி,கலப்பை) போல் தோற்றம் அளிக்கிறது.
இது ஏன் என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.இப்பதிவின் ஆங்கில மூலக்கட்டுரையின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக