ஞாயிறு, 11 டிசம்பர், 2011

பரிணாமம்,படைப்புக் கொள்கை

பரிணாமம் ,படைப்புக் கொள்கை பற்றியெ சில பதிவுகளை இட்டு வருகிறேன்.இதுவரைக்கும் ஆபிரஹாமிய மதத்தவர்[குறிப்பாக இஸ்லாமிய] பரிணாமத்தை முற்றும் முதலாக எதிர்ப்பவர்கள் என்ற கருத்தையே பல் இஸ்லாமிய பிரச்சாரக பதிவர்கள் பிரதிபலித்தனர்.  இன்று பார்த்த ஒரு காணொளி அக்கருத்தை கொஞ்சம் மாற்றி விட்டது.

திரு அகம்து குட்டி என்னும் இஸ்லாமிய அறிஞர் கேரளாவில் பிறந்து ,கனடா குடியுரிமை பெற்று அங்கேயே வசித்து வருகிறார்.சவுதி மதினா பல்கலை கழகம்,கனடா மெக்கில் பல்கலைகழகம் போன்றவற்றில் பட்டங்கள் பெற்றவர்.ஷாரியாவின் முனைவர் பட்டம் பெற்றவர்.உலகின் முக்கிய 500 முஸ்லிம்களுல் ஒருவராக குறிப்பிடப் படுபவர்.இவர் பற்றி இங்கே நிறைய அறியலாம்.
இவர் எழுதிய ஒரு புத்தகம்தான் நம் பதிவின் சாரம் ஆகும் .
ஆடம் ஜீன்அன்ட் மைட்டொகான்ட்ரியல் ஈவ் என்னும் புத்தம்தான் அது.அதில் இவர் பரிணம்த்திற்கும்,படைப்புக் கொள்கைக்கும் பாலம் அமைக்கிறார்.இயற்கை தேர்வு மூலம் நடக்கும் பரிணாம் வளர்ச்சியை ஒத்துக் கொள்கிறார்.ஆதமிற்கு முன் மனிதர்கள் இருந்ததாக கூறி (இன்ப)அதிர்ச்சி அளிக்கிறார்.அதாவது பரிணாம வளர்ச்சி படி உயிரினங்கள் உருவாகின்றது,சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன் ஆத்மை இரைவன் படைத்தார் .அவரை படைத்து ,பிற மனிதர்களுக்கு தலைவர்களாக் வழிகாட்ட அவ்ருக்கு ஆலோசனைகள் வழங்கியதாக கூறுகின்ரார்.இப்படி கூற இயலும் என்பது நம் கருத்து.குரான் 21:30  படி பெரு வெடிப்பு,பிறகு நீரில் இருந்து முதல் செல்[3 million years] உயிரினம்,படிப்படி பரிணாம வளர்ச்சி,2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நகரிகமற்ற ஹோமோ செஃபியன்கள் என்று வந்து கொண்டிருகிறது.
சரியாக 12,000 ஆண்டுகளுக்கு முன்[எப்படி எல்லம் அவர்களின்  மூத்த சகோ வேதங்கள் தோரா,பைபிள் கணக்குதான்] ஆதம்,ஹவ்வா படைக்க்ப் பட்டனர்.அவர்கள் இரைவனால் படைக்கப் பட்டதல் ஞானம் மிக்கவர்களாய் இருந்தனர்,இத்னால் பூமியில் ஒழுங்கு வந்தது.ஆதமின் மக்கள் பிற மனிதர்களோடு மண உறவு கொண்டார்கள் என்று அப்ப்டியே போகிறார்.

இப்பொழுது இவர் சொல்வதை தவறென்று நிரூபிக்க முடியாது.மனிதன் பரிணாம்த்தின் படி கிழக்கு ஆப்பிரிக்காவில் தொன்ன்றினான்,ஆதம்,ஹவ்வா மெக்காவில் தோன்றினார், காயீன்,ஆபேலை கொன்று விட்டு எகிப்து போய் அங்கே ஒரு பெண்ணை திருமண‌ம் செய்தார் என்றால் திரைக்கதை வசனம் வெகு ஜோர்!!!!!!.எல்லாம் தெளிவாக இருக்கும் எதை சொன்னாலும் எதிர் வாதம் செய்வது கஷ்டம்.யூத கிறித்தவ்ர்களும் இக்கதைகளை கொஞ்சம் மாற்றங்களோடு பிரச்சாரம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். இதுதான் 22ஆம் நூற்றாண்டின் மத அறிவியல்.நாம் முதலிலேயே கூறிவிட்டோம்!!!!!!!!
இவையெல்லாம் உண்மையா என்று கேட்டால்.இல்லையென்றே கூறுவேன்.இப்படி ஒரு உடன்பாடு ஏறபட மதவாதிகள் முயல்வார்கள் என்பது எதிர்பார்த்ததுதான்.ஏனெனில் பரிணாமம் நிரூபிக்கப் பட்ட ஒன்று.இன்னும் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு அனைவருக்கும் புரியும் படி எளிமைப் படுத்தப்படும்.

அச்சமயத்தில் எதிர்க்கும் கொள்கைகள் சுத்தமாக ஒதுக்கப் படும்.ஆக்வே இப்போதே இப்படி சொல்லி வைத்தால் பிறகு பிரச்சினை இருக்காஅது.ஒரு பக்கம் எதிர்ப்போம்,இன்னொரு பக்கம் ஆதரிப்போம் எது சரியோ அது இறைவன் நாடியது என்று கூறி விடுவார்கள்.இதிலின்னொரு இலாபமும் உண்டு.நம்ம பழைய கேள்விதான் காயீனின் மனைவி யார்? என்பது.அச்சமயத்தில் வேறு யாரும் உலகில் இல்லாததால் அவர் யாரை திருமணம் செய்தார்,சகோதர மண உறவு என்பதை ஜீரணிக்க பல மத வாதிகளுக்கு இருந்த சிக்கல் தீர்ந்து விடும்.[ஒரு கல் இரு மாங்காய்!!!!!!!!]
முதலில் சூரிய மையக் கொள்கையை எதிர்த்தவரகள் பிறகு தங்கள் மதப்புத்தக்த்தில் அன்றே கூறப் பட்டுள்ளது என்ற நகைச்சுவை பொன்றதுதான்.ஆகவே பரிணாமம்,படைப்புக் கொள்கை பாய் பாய்[சகோதர்கள்]..நம் தமிழ் சகோதரர்கள் இப்படி ஒரு கல் இரு மாங்காய் அடிக்க கற்றுக் கொள்ள வேண்டுகிறோம்.
ஆக்வே அனைவருக்கும் சாந்தியும்,அமைதியும் உண்மையிலேயே உண்டாகட்டும் என்று வாழ்த்துவோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக