ஞாயிறு, 11 டிசம்பர், 2011

பதிவுலகின் மத பெருமிதங்களும் ,மன பேதங்களும்
இணைய உலகில் தமிழ் மொழி அதிகமாக பயன்படுத்த‌ப் பட்டு வருவது தமிழர்களாகிய நமக்கு மகிழ்ச்சிதான்நாளொரு மேனியும் ,பொழுதொரு வண்னமுமாக புதிய பதிவர்கள் தோன்றுவதும்,பலவிதமான கருத்துகள்,விவாதங்கள் போன்ற்வை நடை பெறுவதும் வழக்கமாகி வருகிறது.


எந்த ஒரு சாதனமும் சரியான முறையில் பயன்படுத்தப்பட்டால் சமுதாயத்தை வளர்ச்சி பாதையில் வழிநடத்தும்.பதிவுலகில் சில பதிவர்கள் தங்கள் மதம் சார்ந்த கருத்துகளை எழுதி வருகிறார்கள்.

சில சமயம் அப்பதிவுகளை படிக்க நேரிடும் போது அந்த எழுத்துகளில் தெரியும் பெருமிதம் முதலில் ஆச்சரியத்தையே கொடுத்தது.கடவுள் என்பது ஒரு நம்பிக்கை சார்ந்த விஷயம்.கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதும் ஒரு விடை தெரியா கேள்வியே.

அப்படி கடவுள் என்பது அனைத்திற்கும் அப்பாற்பட்ட சக்தியாக இருக்கின்றார் என்று கருத்தளவில் ஒத்துக் கொண்டால் கூட ,மதங்களால் வரையறுக்கப்பட்ட கடவுளின் செயல்கள்,கொள்கைகள் எல்லாவற்றையும் அந்த சக்திதான்  செய்தது என்று நிரூபிக்கவே முடியாது.

இந்த மதப்பதிவர்கள் தங்கள் மதம் குறித்து நடுநிலையான ஆய்வுகள், மொழிபெயர்ப்புகள், கருத்துகள்,பிரச்சினைகளுக்கு தீர்வுகள் என்று ஏதாவது உபயோகமாக‌ பதிவிட்டால் அந்த மதம் சாராதவர்கள் கூட அந்த கருத்துகளை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

ஆனால் என்ன நடக்கிறது.?

1. எங்கள் மதம் மட்டுமே உண்மையானது.இந்த மதத்திற்கு மாறினால் மட்டுமே மறுமை வாழ்வு இல்லையேல் நரகம்.

2.எங்கள் மத புத்தகம் மட்டுமே இறைவனால் வழங்கப் பட்டது.மற்ற‌ புத்தகங்கள் எல்லாம் இறைவனால் வழங்கப்படவில்லை அல்லது மாற்றப்பட்டு விட்டன.

3. பல அறிவியல் உண்மைகள் முன்பே எங்கள் புத்தக்த்தில் கூறப்பட்டு உள்ளன.

4.எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு எங்கள் மத புத்தகத்தில் அன்றே கூறப்பட்டு உள்ளது.

இபடியே பல பதிவுகள் எழுதப்படுகின்றன.சரி போகட்டும் என்றால் இப்பொழுது வேறு ஒரு பிரச்சினை.

நமது நாடு சுதந்திரம அடைவதற்கு முன் ,பல பகுதிகளாக ப்ரிந்து இருந்ததும் 
அதனை பல மன்னர்கள் ஆண்டது அனைவருக்கும் தெரியும்.

பெரும்பாலான மன்னர்கள் குடிமக்களை பற்றிய கவலை இல்லாமல் சொகுசாக காலம் ஓட்டியவர்கள்.பொழுது போகவில்லை என்றால் அருகில் உள்ள பகுதியை ஆளும் அரசனுடன் போர் புரிவார்கள்.போரில் படைகள் என்ற பெயரில் மக்களை கூட்டமாக மோதவிட்டு,அதில் பல இறக்க ,வெற்றி பெறும் மன்னன் தோற்ற நாட்டை அடிமை படுத்துவான்.கொள்ளையடிக்கும் சொத்தை கொண்டு பல திருமணம்,அரண்ம்னை வாழ்க்கை,கேளிக்கை என்று காலத்தை ஓட்டுவான்.அவனை சிலர் புகழ்ந்து பாடி புலவர்கள் என்று பேர் வாங்கியதும்.சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால்,திரைபடத்தில் ஒரே ஒரு 23ஆம் புலிகேசி.ஆனால் உண்மையில் பல இலட்சம் புலிகேசிகளே உலகம் முழுவதிலும் அரசாட்சி செயதனர். 

பெரும்பாலும் மன்னர்கள் மக்களின் உழைப்பை உறிஞ்சும்  அட்டைப்பூச்சிகளாக்வே வாழ்ந்து வந்தனர்.ஜூனியர் விகடனில் சில ஆண்டுகளுக்கு முன் அந்தப் புரம் என்று ஒரு தொடர் வ்ந்தது.அதில் இந்த மன்னர்களின் வாழ்க்கையை நன்றாகவே விளக்கி இருந்தார்கள்.

இப்போது பல மன்னர்களின் செயல்கள் மதங்களின் ஊடாக பார்க்கப்டுவது மிகுந்த கவலைக்குறிய விஷயமாகும்.

ஒரு குறிப்பிட்ட மன்னன் செய்லை சில பதிவர்கள் வராற்று ஆதாரத்துடன் இப்படி செய்தான் என்று பதிவிட்டால்,இன்னொரு பதிவர் குழு (அந்த மன்னனின் மதத்தை சேர்ந்ததாக நினைத்துக் கொண்டு) அதற்கு ஒரு விளக்கம்.
இன்னும் கொஞ்ச பதிவர்கள் எங்கள் சாதி மன்னர்கள் ஆண்டனர்.ஆகையால் நாங்கள் ஆண்ட பரம்பரை என்கிறார்கள்.

சில மன்னர்கள் தேசத்தொண்டர்களாகவும்(மதத்தின் காரணமாக) சிலர் தேசத்துரோகிகளாகவும்(அதேதான்) சித்தரிக்கப் படுவது வேடிக்கையான விஷயம் அல்ல.

சரி நாம் சொல்வது என்ன?

1.இந்திய வரலாற்றில் எந்த மன்னனும்,தன்,தன் குடும்பம்,சாதி,போனால் போகிறது அவனுடைய எல்லைக்குட் பட்ட பிரதேசம் இவற்றில் மட்டுமே ஈடுபாடு காட்டினார்கள்.

2.தேவையில்லாமல் போர்கள்,வரிச்சுமை,சாதி ,மதம் சார்ந்த கட்டுப்பாடுகளை ஊக்குவித்தன்ர்.

3.சுதந்திரம் அடைந்த போது கூட பல மன்னர்கள் தங்கள் நாட்டை திரும்ப பெற முயற்சி எடுத்து பலிக்கவில்லை.பலர் தங்கள் சொத்துகளுடன் வெளி நாடுகளுக்கு புலம் பெயர்ந்தன்ர்.

ஒவ்வொருவரும் மதத்தை தனக்கு இணக்கமான் வழியிலேயே பின்பற்றுகிறோம்.மதத்தில் சொல்லியிருகிறது என்பதாலேயே எதையும் செய்வதில்லை.முந்தைய‌ காலத்தின் பண்பாடு என்று கருதப் பட்ட பல விஷயங்கள் எல்லாம் இபோது தூக்கி எறியப்பட்டு பல நாட்களாகிறது.

இவற்றை மறைத்து பதிவிடுவதுதான் இப்பதிவிற்கே காரணம்.

இரண்டு மன்னர்கள் போரிட்டது தம் செல்வத்தை பெருக்கவும்,பாதுகாக்கவுமவே தவிர அவர்களிடம் தேசப் பற்று,மதப் பற்று மிகுந்ததால் அல்ல.

ஒருவருக்கு நல்லவராக தெரிபவர் இன்னொருவருக்கு கெட்டவராக தெரிவது சாதாரண விஷயம்.
.
ஒரு எடுத்துக் காட்டுடன் இப்பதிவை முடிக்கலாம் என்று எண்ணுகிறேன்.
இராஜராஜ சோழன் என்றால் தமிழர்களுக்கு பெருமையும்,மதிப்பும் ஒருங்கே வரும்.சிங்களர் வரலாற்றில் அவர் ஒரு ஆக்கிரமிப்பாளர்,கோயில்களை இடித்தவர்,கொலைகாரர் என்றெல்லாம் கூறுகிறார்கள்.
.

இதன ஏன் கூறுகிறேன் என்றால் மன்னர்கள் தங்கள் சுய இலாபத்திற்காகவே செயல்களை செய்தனர்.அதை இப்பொதைய நிலவரத்திற்கு விளக்கம் சொல்வது சரியான செயலாகாது.இந்த பெருமித பேச்சுகள்தான் இலங்கை பிரச்சினைக்கு வித்திட்டன.

மன்னர்கள் அவர்கள் காலத்தில்,அவர்களுக்கு சரியென்று பட்டதை,நன் தருவதை மட்டுமே செய்தார்கள்.அவர்களும் இபோதைய ஆட்சியாளர்களை போலவே இருந்தார்கள்.

மதங்களின் கருத்துகளை விவாதியுங்கள்,இறந்த மனிதர்களின் செய்லை அல்ல.மத பெருமிதங்கள் பதிவுலகில் மன் பேதங்களை வளர்க்க வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக