ஞாயிறு, 11 டிசம்பர், 2011

குரானிய படைப்புக் கொள்கை


குரானிய படைப்புக் கொள்கை

பரிணாம்க் கொள்கையை அதிகம் விமர்சிப்பவர்கள் கிறித்தவ,இஸ்லாமிய மத பிரச்சாரகர்கள் என்றால் மிகையாகாது.மழைக்கு பள்ளிக்கு ஒதுங்காத ஆளில் இருந்து ,முனைவர் பட்டம் பெற்ற மதவாதிவரை இக்கொள்கை தவறு என்று இடும் கூக்குரல் தாங்க முடியவில்லை.ஏன் இப்படி?.கிறித்தவ வேதத்தில் ஒரு பாராட்டத்தக்க விஷயம் அவர்கள் மொழி பெயர்ப்பை அதிகம் திரிப்பது இல்லை,கிறித்தவ வேதத்தில் கூறியது போல் உலகம் தோன்றி 6000 வருடமே ஆகிறது என்று கூறி வேறு விதமாக வாதிடுவார்கள்.அவர்களை இன்னொரு பதிவில் பார்ப்போம்.

இஸ்லாமிய ,மதவாதிகளுக்கு ஒரு வினோத்மான தந்திரம் ,பெரு வெடிப்பை ஏற்போம் ,பரிணாம்த்தை மறுப்போம் என்பது.இது எப்படி என்றால் அப்படித்தான். அறிவியலோடு முற்று முதலாய் மோத மதவாதிகளுக்கு ஆசையா என்ன ?அறிவியல் அவர்களோடு மோதும் போது பரிணாம‌த்தை எதிர்ப்பது அவ்ர்களின் இருத்தலுக்க்கான போராட்டம் மட்டுமே. பெரு வெடிப்புக் கொள்கையை குரான் கூறுகிறது என்று சொல்கிறார்கள்.வேறு வழி?,சரி என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள் .பூமியும் வானமும் சேர்ந்து இருந்தன,நாம் இதனை பிரித்தோம் என்பதே குரானிய பெரு வெடிப்பு கொள்கை ஆகும்.
குரானில் காட்டப்படும் ஒவ்வொரு அறிவியல் கொளகையையும் குரான் சொல்லும் படி வரையறுக்கும் ஒரு சிறு முயற்சியே.
******************
21:30நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?
******************************

வானம் என்பதை பூமி அல்லாத பிரபஞ்சம் என்று பொருள் கொள்ள வேண்டுமே?வேறு வழி வானம் என்று ஒன்று இல்லை அல்லவா!!!!!!!.அதே வார்த்தை சொர்க்கம்,மேகம் என்றும் உபயோகப் படுத்தப்படும் இங்கு பூமியல்லாத பிரபஞ்சம் .மத அரசியலில் இதெல்லாம் சகஜம்தானே.பிரபஞ்சம் தோன்றியதி 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்,அதில் உள்ள கோடிக்க்கணக்கான் நட்சத்திரங்களில் சூரியனும் ஒன்று,அதை சுற்றி வரும் ஒரு கோள் பூமி,ஆக பூமி என்பது பெரு வெடிப்பின் போது இருந்திருக்க வாய்ப்பு இல்லை,அதில் சுமார் 0.000000000001%பங்கு என்று வேண்டுமானால் கூறலாம்?). ,பிரிக்க மிகவும் சிரமப்பட்டு பூமி 5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது..பிரிக்க 10_5 =5 பில்லியன் ஆண்டு.[dividing].

குன் என்றால் ஆகும் என்று இன்னொரு இடத்தில் கூறுகிறது..எதற்கு இத்தனை காலம்.இறைவனும் கால இயற்கை சூழ்நிலைகளுக்கு கட்டுப்பட்டவரா?
*******************************

2:117(அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் “குன்” - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது.
3:59அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.


************************************

முதல் வசனத்தை கூறுபவர்கள் ,பூமியும் வானமும் இணைந்து பிரிந்தது பெரு வெடிப்பு என்று பெருமிதம் காட்டுபவர்கள்,உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரில் இருந்து படைத்தோம் என்பதை விளக்க் மாட்டார்கள்.ஆதம் கூட நீரில் இருந்துதான் தோன்றினாரா? குரானும் பரிணமத்தை ஏற்கிறதா?.பூமியும் வானம் இணைந்திருந்தன என்று கூறி நீரில் இருந்து உயிர்கள் தோன்றியது என்று ஏன் கூற வேண்டும்..காஃபிர்கள் எப்படி இதனை பார்த்திருக்க முடியும்?

http://islamickids.tripod.com/id105.htm

பரிணாமம் இல்லாமல் பெரு வெடிப்புக் கொள்கை முற்றுப்பெறாது.இப்படி சொல்லி பாருங்கள்.பெரு வெடிப்பின் மூலம் குரானிய கடவுள் 13.6 பில்லியன் ஆண்டுகளுக்கு படைக்க ஆரம்பித்து சுமார் 5 பில்லியன் ஆண்டு முன் வ்ரை வேலை செய்து கொண்டே இருந்தார். பிறகு நீர்ல் இருந்து உயிர்களை 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவாக்கினார்.மனிதனை மட்டும் அப்போதே 90 அடி உயரத்தில் களிமண்ணால் படைத்தார்,அவ்ரிடம் இருந்தே அவரது மனைவியை படைத்தார்,அவரிடம் இருந்தே அனைத்து இனத்தவரும் பிறந்து ,பிரிந்தனர்.முகமதுவிற்கும் ,ஆதமுக்கும் சுமார் 42 த்லைமுறை என்று பல் இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகின்ற‌னர்.. அங்கும் கணக்கு உதைக்கிறதே.அய்யா குரானிய விஞ்ஞானிகளே எப்படியாவது ஒரு குழப்பமில்லாத குரானிய படைப்புக்கொள்கை தயார் செய்யுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!..பிறகு பரிணாமத்தை விவாதிப்போம்..

பாருங்கள்.முந்தைய பதிவையும் இதையும் ஒப்பிட்டு எது சரியாக தோன்றுகிறதோஅதை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக