ஞாயிறு, 11 டிசம்பர், 2011

மதங்கள் கூறும் கடவுளின் தன்மைகள் இருக்க முடியுமா?







இங்கு மதங்கள் என்பதை ஆபிரஹாமிய‌ மதங்களின் முக்கியமான பிரிவுகளை குறிப்பிடுகிறேன். ஆபிரஹாமிய மதங்கள் கடவுளை த்ன்மைகளை பற்றி என்ன கூறுகின்றஅன அது சாத்தியமான ஒன்றா என்பதை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.


கடவுளின் தன்மைகள்.


1.ஏகன்,தொடக்கமும் முடிவும் இல்லாதவர்,
2.எங்கும் இருப்பவர்,அனைத்தும் அறிந்தவர்.
3.இறைவன் ஆண் என்றே இம்மதத்தினர் கருதுகின்றன.
3.பிரபஞ்சம்,உயிரினங்கள்(மனிதன் உட்பட),தூதர்கள்  அனைத்தையும் படைத்தவர்
4.எதிரிறைவனையும் படைத்தவர்,அத‌னால் அவரை விட சக்தி வாய்ந்தவர்.
5.இறைவன்,எதிரிறைவன் இருவருக்கும் ஆதரிக்கும் தூதர்கள் கூட்டம் உண்டு


ஓரிறைக் கொள்கை அல்லது ஏகத்துவம் என்ற கொள்கை ஆபிரஹாமிய மதங்களில் மிக முக்கியமான் தத்துவமாகும். அதாவது ஒரே இறைவன் அவருக்கு இரத்த உறவுகளோ,சமமானவரோ கிடையாது என்பதாகும்.


கிறித்தவத்தில் மூவரில்(பிதா,குமார்ன்,ஆவி) ஏகன் என்பது மிகவும் குழப்பமான விஷயம். இதனை பிறகு பார்ப்போம்.இங்கு ஆபிராஹாமிய மதங்களின் பொதுவான ஏகத்துவ ஆராய்வோம்.


எப்படி ஏக இறைவன் என்று கூறுகிறார்கள்?


எங்கள் வேதங்களில் அவ்வாறு குறிப்பிட பட்டு உள்ளது.


சரி வேதங்களை எப்படி நம்புகிறீர்கள்?


அது ஏக இறைவனால் வழங்கப்பட்டு பாதுகாக்கப் படுவதால்.


அதாவது அவர்களிடம் உள்ள புத்தகத்திற்கு எவ்வளவு நம்பகத்தன்மை உள்ளதோ ஏகத்துவ கொள்கைக்கும் அவ்வளவு நம்பகத் தன்மை மட்டுமே இருக்கும்.


இது அவர்களின் நம்பிக்கை மட்டுமே சார்ந்த விஷயம் என்றே தோன்றுகிறது. நான் சொல்லுவது இதுதான் யாராவது  ஒரு இறைவன் மட்டுமே இருக்க முடியும் என்று ஏதாவது ஒரு வழியில் நிரூபிக்க முடியுமா? வேதத்தில் சொல்லி இருக்கிறது மற்றும் எனது நம்பிக்கை என்று கூறக்கூடாது.ஏன் கடவுளுக்கு குடும்பம் குழந்தை குட்டிகள் இருக்க கூடாது?


இறைவனை நம்புபவர்கள்,எதிரிறவனையும் நம்புகிறார்கள் அப்போது இது ஈரிறை கொள்கையாகிவிடாதா?


இறைவனை நம்புபவர்கள்,தூதர்களையும் நம்புகிறார்கள் அப்போது இது ஈரிறை குழுக் கொள்கையாகிவிடாதா?




மனித குலத்திற்கு தொடக்கம் முடிவு(நியாய தீர்ப்பு நாள்) என்று இருப்பதாக இம்மதத்தினர் நம்புகின்றனர். மனிதன் உலகை படைக்கும் முன்,அவர் என்ன செய்து கொண்டு இருந்தார்? அப்போது எதிரிறைவன்,தூதர்கள்,பிரபஞ்சம் எதும் கிடையாது. இச்சூழ்நிலையில் ஒருவர் பல காலம் இருந்தார் என்பது நம்ப முடியுமா?.இதற்கு முன்பும் பல பிரபஞ்சங்கள்,எதிரிறைவன்கள் படைத்து திருவிளையாடல்கள் நடத்தி வருகின்றாரா?. இந்த உலகம்,மனிதர்கள் அவருக்கு ஒரு விளையாட்டு என்றால் மட்டுமே இக்கூற்று உண்மையாகும்.


6.மனிதர்கள் தன்னை வணங்குவதை விரும்புபவர்.
7.குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே தகவல் பரிமாற்றம் செய்பவர்.
8.பல வெளிப்பாடுகள்(வேதங்கள்) கொடுப்பவர்.சொல்வதைஅடிக்கடி  மாற்றுபவர்.
9.வணங்ககுபவர்களை நேசிப்பார்,வணங்காதவர்களை தண்டிப்பார்.
10.இறுதி நாளில் வணங்குபவர்களில் சில்ருக்கு மட்டும் சொர்க்கம் தந்து மற்ற அனைவருக்கும் நரகத்தின் தண்டனை கொடுக்க காத்திருக்கும் அன்பானவர்.


இந்த தன்மைகள் நமது தமிழக அரசியல் தலைவ்ர்களின் கொள்கைகளை போல் உள்ளது.


கட்சியினர் தன்னை புகழ்பாடுவதை விரும்பாத தலைவர் உண்டோ?

குடும்பத்தினர்,விசுவாசிகளிடம் மட்ட்டுமே தகவல்கள் பரிமாறப்படும்.


சூழ்நிலைக்கு தகுந்தபடி வாரிசுகள்,கொள்கைகள் மாறும்,கூட்டணி மாறும்,அதற்கான விளக்கங்களும் மாறும்.


தலைவருக்கும்,அவர் வாரிசுகளுக்கும் விசுவாசமாக  இருந்தால் பதவி இல்லையேல் கட்சியை விட்டு நீக்கி விடுவார். எதிர் கட்சினரின் மீது வழக்குகள் போட்டு சிறையில் தள்ளுவார்.
____________


முதலில் சொன்ன 5 தன்மைகள் குழப்பமான் விடுகதை,அடுத்த 5 தன்மைகள் எரிச்சலான உண்மை. 


___________


இந்த தன்மைகளை பற்றி கொஞ்சம் சிந்திப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக